செவ்வாய், 7 ஏப்ரல், 2015

சாப்பிட வாங்க: சூர்மா லட்டு.....இன்னாம்மா கண்ணு, மூணு வாரத்துக்கு முன்னாடி சாப்பிட வாங்கன்னு சொல்லி பேட்மி பூரி கொடுத்தது! அப்பால ஆளையே காணோமே!ன்னு தேடிட்டு இருக்கறதா டி.வி.ல நியூஸ் வரதுக்கு முன்னால, நாமே வந்துடுவோம்னு இதோ வந்துட்டேன்!

ஃபிப்ரவரி மாசம் Garden of Five Senses-ல் 28-வது Garden Tourism Festival நடந்தது பற்றியும் அங்கே சென்று வந்தது பற்றியும் பூக்களின் நடுவே கட்டிப்பிடி வைத்தியம் என்றும் பூமகள் ஊர்வலம் என்றும் இரண்டு பதிவுகள் எழுதி இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  அன்று சென்றபோது அங்கே ராஜஸ்தானிய உணவு வகைகளை விற்றுக் கொண்டிருந்தார்கள். அங்கே சாப்பிட்ட ஒரு உணவு தான் இன்று நாம் பார்க்கப் போகும் [ch]சூர்மா லட்டு! இரண்டு லட்டு வாங்கினோம் – சுளையா ஐம்பது ரூபாய் வாங்கி கல்லால போட்டுக் கொண்டார்!  நாங்கள் மூன்று பேர் என்றாலும் இரண்டு லட்டு மட்டுமே வாங்கினோம். கொஞ்சம் பெரிய அளவில் இருந்தது என்பதாலும், எப்படி இருக்கும் என்பது தெரியாததாலும் இரண்டு! வாங்கிச் சாப்பிட்ட பிறகு இன்னும் கூட வாங்கியிருக்கலாம் எனத் தோன்றியது! ஆனாலும் அக்கடையின் பணியாளரையும், சூர்மா லட்டு அடுக்கி வைத்ததையும் நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்போது முறைத்துப் பார்த்த அந்த தலைப்பாக்காரர் நினைவில் வந்து கொஞ்சம் பயமுறுத்தவே வாங்கவில்லை!  அந்த சூர்மா லட்டு எப்படி செய்யறதுன்னு பார்க்கலாமா?

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு [400 கிராம்], ரவை [100 கிராம்], நெய் [500 கிராம்], [B]புரா [எ] [t]ட[g]கார் [700 கிராம்], மாவா [எ] கோயா [250 கிராம், முந்திரி [100 கிராம்], பாதாம் [50 கிராம்], Dried Resin [50 கிராம்] மற்றும் ஏலக்காய் [20 – பொடி செய்து கொள்ளுங்கள்].  

அது சரி இதுல என்னமோ [B]புரா [எ] [t]ட[g]கார் அப்படின்னு சொல்லி இருக்கே அது என்ன என்று கேட்பவர்களுக்கு, கம்பி பதத்தில் சர்க்கரைப் பாகு செய்து, அடுப்பு நிறுத்தியபிறகு அதை கலக்கியபடியே இருந்தால் சர்க்கரைப் பொடியாக கிடைக்கும். அது தான் இந்த [B]புரா [எ] [t]ட[g]கார்.  வடக்கில் இது கடைகளில் கிடைக்கும். வேறு இடங்களில் கிடைக்குமா எனத் தெரியவில்லை. எப்படிச் செய்வது எனும் காணொளி இங்கே இருக்கிறது

எப்படிச் செய்யணும் மாமு?

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவும் ரவையும் போட்டு கலந்து கொள்ளுங்கள். அதில் நான்கில் ஒரு பங்கு நெய் சேர்த்து கலக்குங்கள்.  பின்னர் சப்பாத்திக்கு மாவு பிசைவது போல பிசைந்து கொள்ளுங்கள். இங்கே தண்ணீருக்குப் பதில் 100 மி.லி. பால் சேர்த்துப் பிசைந்து கொண்டால் நல்லது! கெட்டியாகப் பிசைந்து ஒரு மணி நேரம் தனியாக விட்டு விடுங்கள்! அந்த நேரத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய சீரியல்களிலோ அல்லது வலைப்பூக்களையோ படிப்பதிலோ கவனம் செலுத்தலாம்! தவறில்லை!

இந்த ஒரு மணி நேரத்தில் எத்தனை பதிவுகள் படித்தீர்கள் என எனக்குச் சொல்லி விட்டு அடுத்த வேலைக்கு தயாராகுங்கள். ஒரு வாணலியில் 250 கிராம் நெய் விட்டு சூடாக்குங்கள். பிசைந்து வைத்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக்கி, அதை தட்டையாக்கி [வடை போல] சூடான நெய்யில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுங்கள். இப்படி எடுத்தவற்றை ஒரு தட்டில் வைத்து அது சூடு போகும் வரை காத்திருங்கள். காத்திருக்கும் நேரத்தில் மேலும் ஒரு பதிவு படியுங்கள் என்பதை மீண்டும் சொல்லத் தேவையில்லை! இப்படிப் பொரித்த எடுத்ததற்கு ராஜஸ்தானில் “[b]பாட்டி என்று பெயர். பாட்டி இல்லைங்க! [b]பாட்டி!

சூடு குறைந்த பிறகு [b]பாட்டிகளை சிறு துண்டுகளாக்கி, மிக்சர்-க்ரைண்டரில் நன்கு பொடியாக்குங்கள். கட்டிகள் இருக்ககூடாது. இப்போது மீதமிருக்கும் ஒரு பங்கு நெய்யில் இந்தப் பொடியை போட்டு சற்றே வறுத்து எடுங்கள்.  மாவா/கோவாவையும் வறுத்து பொடியுடன் சேருங்கள்.  அதனோடு [b]புரா, முந்திரி, பாதாம், Dried Resin மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்குங்கள்.  கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து லட்டுவாக பிடித்து தட்டில் வையுங்கள். சுடச்சுட சூர்மா லட்டு தயார்.

இத்தனை மெனக்கெட்டு தயார் செய்து சாப்பிடப் பொறுமை இருப்பவர்களுக்கு ஒரு பூங்கொத்து!

அடப் போய்யா! இவ்வளவு வேலை செய்யணுமா இதுக்கு..... இந்த நேரத்துல நான் நிறைய பதிவுகள் படிச்சு இருப்பேன், வீட்டு வேலைகள் செய்திருப்பேன், என்று சொல்லும் ஆளா நீங்க! என்னைப் போலவே இருக்கீங்களே! :) நீங்கள் கவலைப் படத் தேவையில்லை. பெரும்பாலான வட இந்திய கடைகளில் இந்த சூர்மா லட்டு கிடைக்கிறது. விலை தான் கொஞ்சம் அதிகம்! ஒரு முறை வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்களேன் இந்த சத்தான் சூர்மா லட்டுவை!

மீண்டும் வேறு ஒரு அனுபவம்/உணவு வகையோடு விரைவில் உங்களைச் சந்திக்கிறேன்.

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

44 கருத்துகள்:

 1. புகைப்படத்தில் இருப்பவரைப் பார்த்தால் தமிழ்நாட்டுக்காரர் ராஜஸ்தான் தலைப்பா கட்டிக்கொண்டு போஸ் தருவது போலிருக்கிறது!

  புரா டகார்? அபுரி! ஓ... பின்னால் விளக்கம் வருகிறது!

  கோயா = கோவா?

  இவ்வளவு வேலை இருக்கா? சென்னைல சூர்மா லட்டு எங்க கிடைக்கும்?

  பதிலளிநீக்கு
 2. மிக மிக எளிய குறிப்பு இல்லையா ! அதான் இதோ சூர்மா லட்டு பிடிக்கத் தயாராயிட்டேன். ஆனால் ஏலக்காய் அளவுதான் கொஞ்சம் பயமுறுத்துது.

  கடையில் பார்த்தால் பதிவை நினைத்துக்கொண்டே வாங்கி சாப்பிட்டுப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   இவ்வளவு அளவிற்குச் செய்யும் போது 15-20 ஏலக்காய் சரியாக இருக்கும். கொஞ்சமா செய்தால் அதற்குத் தகுந்த மாதிரி குறைத்துக் கொள்ளலாமே!

   நீக்கு
 3. சென்னையில் வட இந்திய கடைகளில் கேட்டு பாருங்க ஸ்ரீராம். கிடைக்கலாம். கொஞ்சம் வேலை ஜாஸ்தி தான்!

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 4. என்னைப் போலவே இருக்கீங்களே! :) நீங்கள் கவலைப் படத் தேவையில்லை. பெரும்பாலான வட இந்திய கடைகளில் இந்த சூர்மா லட்டு கிடைக்கிறது.////அவ்வ்வ்வ்வ்வ்!!! இங்கே கடைகளில் வட இந்திய இனிப்புகள்(மட்டும்)தான் கிடைக்கும், அவற்றில் இப்படி ஒரு லட்டு-வை நான் பார்த்ததே இல்லீங்க..இம்புட்டு வேலையெல்லாம் செய்ய ஏலாது!! ;) நான் படத்தில மட்டும் பார்த்துக்கறேன்.

  //மிக மிக எளிய குறிப்பு இல்லையா ! அதான் இதோ சூர்மா லட்டு பிடிக்கத் தயாராயிட்டேன். ஆனால் ஏலக்காய் அளவுதான் கொஞ்சம் பயமுறுத்துது. // சித்ராக்கா..என்ர முகவரி;) உங்கள்ட்ட இருக்குதுல்ல, ஒரு டஜன் லட்டு மறக்காம அனுப்பிருங்கக்காஆஆஆஆவ்!! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா... சித்ராக்காவுக்கு முகவரி அனுப்பிட்டீங்களா! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.

   நீக்கு
  2. "மகி முகவரி கிடைச்சுட்டுது, என்ன, விலைதான் கொஞ்சம் கூஊஊடுதலா இருக்கும், பரவாயில்லையா ? "

   "அதுக்கு ராஜஸ்தானுக்கே போய் வாங்கிட்டு வந்திடுவோமாக்கும்"னு முணுமுணுப்பது யாரு ?

   நீக்கு
 5. பதிவுகள் படிப்பதோடு இதுபோன்றவற்றை சுவைப்பதிலும் சுகம்தானே? ரசித்தேன்.
  களப்பணியில் நாட்டாணி சென்ற அனுபவத்தைக் காண அழைக்கிறேன்.வருக. http://ponnibuddha.blogspot.com/2015/04/blog-post.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   உங்கள் பதிவு படித்தேன். கருத்துரையும் இட்டேன். தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 6. சமயம்(கடையில் ) கிடைக்கும் போது சாப்பிட்டு பார்க்கிறேன்..............

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிடைக்கும்போது சாப்பிட்டு பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்.

   நீக்கு
 7. சூர்மா லட்டு..... இனிமையான சுவையான பதிவு. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 8. பேட்மி பூரி செய்து பார்த்தோம் . ஆனால் இதைத் தயார் செய்யும் அளவு பொறுமைஇல்லை. கடைகளில் கிடைத்தால் பார்க்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 9. சுவையான சுவாரசியமான பதிவு.
  செய்முறை விளக்கத்திற்கு நன்றி. கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது செய்முறை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   நீக்கு
 10. தில்லியில்,ஹரியானாவில்,உ.பியில்.மகாராஷ்ட்ராவில் எல்லாம் இருந்திருக்கிறென்.ஆனால் நான் சாப்பிட்டதெ இல்லையே!மிஸ் பண்ணிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது ராஜஸ்தான் ஸ்பெஷல். என்றாலும் தில்லியிலும் கிடைக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தமிழ் மணம் நான்காம் வாக்கிறகு மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 12. சுர்மா லட்டு நம்ம வீட்டுல சும்மா அப்பப்போ அதுவும் வெண்ணைக் காய்ச்சும் போது, குறிப்பாகக் கோகுலாஷ்டமியின் போது செய்வதுண்டு. தற்போது வீட்டில் எல்லோரும் பெரியவர்கள்...நாங்களே ரொம்ம்ம்ம்ம்ம்ப ஸ்வீட்ட்டுங்கோ....ஸ்வீட்டுக்கே ஸ்வீட்டா என்ற கேள்விகள் எழுவதால்.....கண்ணீருடன்.... செய்வதை நிறுத்திவிட்டேன்...ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும்....இப்போ சென்சார்ட். இங்க அந்தப் படத்தைப் பார்த்ததும்.....வாயில் ஜொள்ளு. வீட்டுல யாருக்கும் தெரியாம ஏதாவது கடைல கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா. பலருக்கு இந்த சக்கரை இருக்கறதால இதெல்லாம் சாப்பிட முடியாது போயிடுது......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா.

   நீக்கு
 13. சூர்மா லட்டு!..
  படத்தைப் பார்க்கும் போதே இனிக்கின்றது..
  இங்கே கிடைக்கின்றதா.. தெரியவில்லை!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   நீக்கு
 14. ஆஹா லட்டு பார்ப்பதற்க்கே எவ்வளவு அழகாக இருக்கிறது.
  6 லட்டு எடுத்துக்கொண்டேன் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 15. வணக்கம்
  ஐயா
  குறிப்பு எடுத்தாச்சி நிச்சயம் செய்து பார்க்கிறோம் ஐயா பகிர்வுக்கு நன்றி த.ம7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்--

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 16. நல்லா இருக்கும் என்று நம்புகிறேன். கிடைத்தால் சாப்பிட்டுப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 17. எனக்கும் உங்களைப் போல் சாப்பிட்டு பார்க்க மட்டும் தான் ஆசை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 18. வணக்கம் சகோதரரே.!

  சுவையான லட்டு படங்கள். விபரங்களை சொல்லிய விதமும் அருமை. எப்படி செய்ய வேண்டுமென குறிப்பெடுத்துக் கொண்டேன். ஆனால் எப்போது என்பதுதான் ?.. அதற்கு முன் இங்கு வடஇந்திய உணவு கடைகளை கண்டால், அதில் இந்த லட்டு கிடைத்தால், ஞாபகமாய் வாங்கி ருசித்து விட்டு தங்களுக்கு தெரிவிக்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி.

  என் தளம் வந்து பதிவுகளுக்கு கருத்திட்டு வாழ்த்தியமைக்கு என் மனமார்ந்த நனறிகள்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 19. புரா சக்கரைன்னே நான் சின்னப்பிள்ளையா இருந்த காலத்தில் கடையில் கிடைச்சது இப்போ ஞாபகம் வருது. இப்பதான் சக்கரையே உடம்புக்கு பஹூத் புரான்னு ஆகிப்போச்சே:(
  இதைத்தான் Pபூரிலாடுன்னு மீனாட்சியம்மாள் புத்தகத்துலே போட்டுருக்கே!

  அடுத்தமுறை சென்னை சௌக்கார்பேட்டை கடைகளில் தேடிப்பார்க்கிறேன்.

  எங்களுக்கு இங்கே சோஹன் ஹல்வா கிடைக்குது!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   புரா சர்க்கரை தமிழகத்திலும் கிடைத்தது என்பது எனக்குத் தகவல். நான் முதன் முதலில் தில்லியில் தான் பார்த்தேன்.

   நீக்கு
  2. டீச்சர் - பூரி லாடு என்ற பெயரைத் தான் யோசித்துக் கொண்டேயிருந்தேன். மீனாட்சியம்மாள் புத்தகத்தில் படித்த நினைவு. பெயர் மறந்து விட்டது....:) நன்றி.

   நீக்கு
  3. முதன் முதலில் மோர்க்குழம்பு செய்யக் கற்றுக் கொண்டது மீனாட்சியம்மாள் புத்தகம் பார்த்து தான் - அம்மா, அப்பா, சகோதரிகள் என அனைவரும் ஏதோ ஊருக்குச் செல்ல, நான் வீட்டில் தனி ஆவர்த்தனம்! பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயம் அது.......

   நீக்கு
 20. புராச் சர்க்கரை பத்திச் சொல்லணும்னு நினைக்கிறதுக்குள்ளே துளசி வந்து சொல்லி இருக்காங்க. இப்போல்லாம் பல மளிகைக்கடைக்காரங்களுக்கு இது பத்தித் தெரியலை. அம்பத்தூரில் ஒரே ஒரு கடையிலே கிடைச்சு ஒரு தரம் வாங்கி இந்தச் சூர்மா லட்டு செய்திருக்கோம். :) தால் பாட்டியும் சூர்மா லட்டுவும், அதுக்கப்புறமா மீடா லஸ்ஸியும் சாப்பிட்டால் நேரே சொர்க்கம் தான்! :) தால் பாட்டி செய்வதும் கொஞ்சம் மெனக்கெடணும். வேலை வாங்கும்!

  பதிலளிநீக்கு
 21. பேட்மீபூரி செய்தேன். நல்லாவே வந்தது; எனக்கும் பிடிச்சது. ஆனால் நம்ம ரங்க்ஸ் மார்க் போடலை என்பதால் பகிரவில்லை. :) சூர்மா லட்டு அடிக்கடி பண்ணறது தான்!

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....