எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, April 13, 2015

இசையும் நடனமும்தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 8

தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 1 2 3 4 5 6 7


புகைப்படம் எடுக்கச் சொன்ன பெண்மணி

ஒரு வழியாக நிகழ்ச்சியை நடத்தும் குழுவினர் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் ஈடுபட, நாங்களும் எங்களால் ஆன உதவிகளைச் செய்தோம். எல்லோரும் சேர்ந்து பணி புரிவது நல்லது தானே. அப்போது தானே நிகழ்ச்சியும் எவ்வித தடையும் இன்றி காலாகாலத்தில் முடிவடையும். ஒரு பெரியவரும் அவரது மனைவியும் வந்திருந்தார்கள். மனைவி, தனது கணவரிடம் அலைபேசி மூலம் புகைப்படம் எடுக்கச் சொல்ல அவர் தடுமாறினார். பக்கத்தில் இருந்த என்னைப் பார்த்து, அந்த பெண்மணி, “மகனே, அவருக்கு ஒண்ணும் தெரிவதில்லை! நீ கொஞ்சம் கற்றுக்கொடு....எனச் சொல்ல, அவருக்கு அலைபேசி மூலம் புகைப்படம் எடுக்கச் சொல்லிக் கொடுத்தேன். அப்படியே எனது கேமராவிலும் ஒரு படம் எடுத்தேன்.

 இசைக் கலைஞர்கள்

முழுவதும் பெண்களுக்கான நிகழ்ச்சி என்பதால் எங்களுக்கு அவ்வளவாக வேலை இல்லை. ஆரம்பித்த பிறகு அங்கே சுற்றிக் கொண்டிருப்பது சரியல்ல என்பதால், வெளியே, குளிருக்கு இதமாய் வெயிலில் அமர்ந்து கொண்டோம். சில சிறுவர்களும் அங்கே அமர்ந்து கொள்ள, பொழுது போனது.  அது தவிர பெரும்பாலான வட இந்தியக் கோவில்களில் ஷெஹனாய் இசையும் கூடவே தபலா போன்ற மேளமும் வாசிப்பார்கள்.

இசையும் நடனமும்

அவர்களுக்கு காசு கொடுக்க, நம் பெயரை உரக்கச் சொல்லி தேவியிடம் இன்னாருக்கு நல்லதையே கொடு என வேண்டிக் கொள்வார்கள்.  இசை, தாளம் என்றாலே வட இந்தியர்களுக்கு கொண்டாட்டம் தான். உடனே ஆட்டம் போட ஆரம்பித்து விடுவார்கள். இங்கேயும் இப்படித்தான். ஒரு வட இந்தியர் இசையைக் கேட்டவுடன், ஆட ஆரம்பித்து விட்டார். ஆடி முடித்து இசைக் கலைஞர்களுக்கு கொஞ்சம் காசும் கொடுத்து விட்டுத் தான் நகர்ந்தார்.


எத்தனை எத்தனை வேண்டுதல்கள்.....


நேர்ந்து விடப்பட்ட ஆடு....
கோவில் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய மரம். அந்த மரத்தில் பலவிதக் கயிறுகள் கட்டி இருந்தன.  தங்களுக்குத் தேவையானவற்றை மனதில் வேண்டிக் கொண்டு இப்படி கயிறு கட்டி வைக்கிறார்கள்.  இது தவிர கோவிலுக்கு ஆடுகளையும் நேர்ந்து விடுகிறார்கள்.  அதை கோவிலில் பலியிடுவதில்லை என்றாலும் அது எங்கே எப்படி சென்று சேரும் என்பது தேவிக்கே வெளிச்சம்.


தேங்காய் மூடி போலவே இருக்கும் பிரசாதத் தட்டுகள்..... கீழே இருப்பது மாங்கோ ஜெல்லி....
தொடர்ந்து பூஜை நடந்து கொண்டிருக்க, நானும் இன்னும் சிலரும் தங்குமிடத்திற்கு வந்து அறைகளை காலி செய்து கொண்டு அடுத்த பயணத்தினைத் துவங்க ஏற்பாடுகள் செய்யலாம் என முடிவு செய்தோம். வரும் வழியில் மீண்டும் சாலைக் காட்சிகள். இப்போது மக்கள் வருகை இன்னமும் அதிகரித்து இருந்தது என்றாலும் நவராத்திரி சமயம் போல அத்தனை கூட்டம் இல்லை. கடைகளில் விற்பனையும் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. கடைகளில் வித்தியாசமான வகையில் இருந்த பொருட்களை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்.


தாடியும் மீசையும் விற்பனைக்கு!
வழியில் ஒரு சிறுவன் – ஐந்து அல்லது ஆறு வயதிருக்கலாம் – தாடி மீசை போன்றவற்றை ஒட்டிக்கொண்டு ஒட்டு தாடி, மீசைவிற்பனை செய்து கொண்டிருந்தான். இரண்டும் சேர்த்து 20 ரூபாயோ 25 ரூபாயோ. அவனை தாடி மீசையோடு புகைப்படம் எடுக்க முயல, தனது முகத்தினை மறைத்துக் கொண்டான் – “முதல்ல ஒரு தாடி-மீசை வாங்குய்யா! அதை விட்டு புகைப்படம் எடுப்பதில் எனக்கென்ன லாபம்?என்று சொல்வது போல இருந்தது! வேறு ஒரு சிறுவனும் இப்படி விற்றுக் கொண்டிருக்க, அச்சிறுவனின் புகைப்படம் எடுத்தேன்.


தள்ளாத வயதிலும் உழைக்கும் பெரியவர்.....

ஒரு பெரியவர் பட்டாணி, வேர்க்கடலை போன்றவற்றை விற்றுக் கொண்டிருந்தார். இந்த மூத்த வயதிலும் உழைக்கும் அவருக்கு ஒரு சல்யூட். கொஞ்சம் வேர்க்கடலை வாங்கிக் கொண்டோம்.  எங்களுடன் வந்திருந்த பெண்களில் ஒருவர் பானி பூரி கேட்க, அதை அவருக்கு வாங்கிக் கொடுத்தோம். பக்கத்திலேயே ஒரு பழம் – பெயர் அமர்ஃபல் என்று சொன்னார். நன்றாகத் தான் இருந்தது. கூடவே கொஞ்சம் காலா நமக் போட்டு இலந்தைப் பழம். இப்படியே கொரித்துக் கொண்டே கடைவீதியில் வேடிக்கைப் பார்த்டபடியே தங்குமிடம் வந்து சேர்ந்தோம்.

அமர்ஃபல்....

காலையிலேயே உடமைகளை அவரவர் பைகளில் வைத்து விட்டபடியால், தங்குமிடத்திற்கான கட்டணத்தைக் கட்டி அங்கிருந்து காலி செய்தோம். பக்கத்திலேயே தான் தில்லியிலிருந்து நாங்கள் எடுத்துச் சென்ற வாகனம் நின்றிருக்க அதிலே எல்லாவற்றையும் வைத்தோம். பக்கத்திலே இருக்கும் உணவகத்தில் அமர்ந்து கொண்டு மதிய உணவு என்ன இருக்கிறது என்று விசாரித்துக் கொண்டிருந்தோம். பூஜை முடிந்து அவர்கள் வரட்டும். அதற்குள் நாம் சாப்பிடலாம் என பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்த போது அலைபேசியில் அழைப்பு!


குல்லாய்கள் மட்டுமே விற்பனைக்கு!

“சாப்பிட வேண்டாம். நாங்களும் வந்த பிறகு சாப்பிடப் போகலாம்!என்று மிரட்டல்! சரி என்ன என்று வந்த பின் கேட்டுக் கொள்ளலாம் என அங்கிருந்து வெளியே வந்தோம். அந்த உணவகத்தின் பணியாளர்கள் நிச்சயம் எங்களை திட்டியிருக்கக் கூடும்! எத்தனை எத்தனை கேள்விகள் கேட்டு அவர்களை படுத்தி இருப்போம்!

எங்களைப் போலவே இச்சிறுமிக்கும் பசி போல! ஏன் கண்மணி சோகம்....

அப்படி படுத்தியதற்கு எங்களுக்கு அன்றே பலன் கிடைத்தது! அது என்ன என்று அடுத்த பதிவில் பார்க்கலாமே!

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

28 comments:

 1. வணக்கம்
  ஐயா
  நாங்களும் சென்று பார்த்தது போல ஒரு உணர்வு பகிர்வுக்கு நன்றி த.ம2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 2. கிடைத்த பலனை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete

 3. ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்‘ என்ற பழமொழிப்படி தங்களுக்கு கிடைத்த் பலன் பற்றி அறிய காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 4. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஆறுமுகம் அய்யாசாமி அவர்களே.

   Delete
 6. என்ன பலன் என்று பார்ப்பதற்குள் அடுத்த பகிர்வு... காத்திருக்கிறோம். படங்களும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பகுதியில் சொல்லி விடுகிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 7. அழகான படங்கள்! அருமையான பயண அனுபவக் குறிப்புகள்! தொடர்கின்றோம்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 8. குல்லாயும், குல்லாய்க் குழந்தைகள் படமும் பதிவும் பளிச்சுன்னு இருக்கு. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 9. அழகிய புகைப்படங்கள், அருமையான பயணம், தொடரட்டும்,,,,,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலசந்திரன் ஜி!

   Delete
 10. அன்பு நண்பரே!
  வணக்கம்!
  மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

  சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக!

  நித்திரையில் கண்ட கனவு
  சித்திரையில் பலிக்க வேண்டும்!
  முத்திரைபெறும் முழு ஆற்றல்
  முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


  மன்மத ஆண்டு மனதில்
  மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
  மங்கலத் திருநாள் வாழ்வில்!
  மாண்பினை சூட வேண்டும்!

  தொல்லை தரும் இன்னல்கள்
  தொலைதூரம் செல்ல வேண்டும்
  நிலையான செல்வம் யாவும்
  கலையாக செழித்தல் வேண்டும்!

  பொங்குக தமிழ் ஓசை
  தங்குக தரணி எங்கும்!
  சீர்மிகு சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக! வருகவே!

  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

   Delete
 11. அழகிய படங்களுடன் கூடிய பதிவு! நன்றி நண்பரே! இனிய மன்மத ஆண்டு வாழ்த்துகள்!நலம் பெருகுக!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 12. சிறப்பாக செல்கிறது தொடர்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 13. படங்களும் பகிர்வும் அருமை. /எங்களுக்கு அன்றே பலன் கிடைத்தது/ அறிய வருகிறேன்..

  ReplyDelete
 14. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 15. வணக்கம் சகோதரரே.!

  படங்களும், பகிர்வும் அருமை. தேங்காய் மூடி போன்ற பிரசாத தட்டை ப்பார்த்து தேங்காய் மூடி என்றே நினைத்து விட்டேன். தேங்காய் கீற்றுகளாக இருக்கிறதே என படித்த பின் விபரம் அறிந்தேன்.இசையும், நடனமுமான இப்பதிவையும், அருமையான படஙங்களையும் ரசித்தேன்.
  அடுத்த பகுதியை தொடர்கிறேன். தாமத வருகைக்கு வருந்துகிறேன்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....