எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, April 6, 2015

சிந்த்பூர்ணி வரலாறும் சில அனுபவங்களும்

தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 6

தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 1 2 3 4 5முதல் நாள் இரவு சின்னமஸ்திகா தேவியை தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்தோம். இரவு உணவினை முடித்துக் கொண்டு நாள் முழுவதும் பயணம் செய்த அலுப்பு தீர ஒரு குளியல். பிறகு உறக்கம்.  அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து விட்டேன். மற்றவர்கள் அனைவரும் உறக்கத்தில் இருக்க, சரி யாரையும் தொந்தரவு செய்யாது நகர்வலம் வருவோம் என புறப்பட்டேன். அதிகாலையில் நடை அதுவும் இதமான குளிரில் நடைப்பயணம் மிகவும் அலாதியான சுகம் தருவது.  நடந்து பாருங்களேன் அதன் இனிமையும் புத்துணர்ச்சியும் புரியும். 

முதல் நாள் வாகனத்தில் பயணம் செய்த தொலைவினை நடையில் கடந்தேன். ஆங்காங்கே சில கடைகள் திறந்திருந்தன. அவற்றில் ஒன்றில் தேநீர் அருந்தி, மேலும் நடந்தேன். காலையிலேயே சில பக்தர்கள் கோவிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். கவலைகளை மறக்க தொடர்ந்து வேண்டுகோள் விடுப்பவர்கள் போலும். நான் காலைக் காட்சிகளை ரசித்தபடியே திரும்பினேன். சில மணித்துளிகள் கடந்த பின்னும் தங்கும் விடுதி உறக்கத்திலேயே இருந்தது!

சரி இன்னும் கொஞ்சம் நடப்போம் என எதிர்புறத்தில் நடையைத் தொடங்கினேன். சிறிதளவு தொலைவு கடந்தபின் ஒரு பெண்மணி எதிர்புறத்தில் வந்து கொண்டிருந்தார். கையிலே ஒரு குச்சி. குளிருக்கான உடைகள் அணிந்திருந்தாலும் அனைத்தும் தோய்த்துப் பலகாலம் ஆனது தெரிந்தது. எனக்கருகே வந்ததும் குச்சியை வேகமாக ஆட்டியபடி “என்னைப் பார்த்தா பைத்தியம் மாதிரி தெரியுதா? நான் பைத்தியம் இல்லை – என்னைத் தவிர மற்ற அனைவரும் பைத்தியம் தான்என்று சொல்லி திட்டிக் கொண்டே கடந்தார்.

நடந்து கொண்டிருந்தாலும் அவர் அருகே வந்து சொன்னதைக் கேட்டபோது ஒரு நிமிடத்திற்கு மேல் அந்த இடத்திலேயே நின்று விட்டேன். நடக்க முடியவில்லை. சூழ்நிலை அவர்களை இப்படித் தள்ளியிருக்க, அவர் என்ன செய்வார் பாவம். சுதாரித்துக் கொண்டு மேலும் நடந்தேன்.

முந்தைய தினம் வாகனத்தில் வரும்போது ஒரு இடத்தில் வானம் வண்ணமயமாய்க் காட்சி அளித்தது ஒரு இடத்தில் – அதே இடத்தில் நின்று காலை நேர வானத்தினை நோக்கியபடி நின்று சில புகைப்படங்களை எடுத்தேன்.  மீண்டும் தங்குமிடம் நோக்கி திரும்பினேன். வழியில் மீண்டும் அந்தப் பெண்மணி. வேறு யாரையோ திட்டியபடியே நடந்து கொண்டிருந்தார். பாவம் அவருக்கு என்ன பிரச்சனையோ....  சிந்தபூர்ணியில் குடிகொண்டிருக்கும் சின்னமஸ்திகா தேவி அப்பெண்மணியின் கவலைகளை எப்போது தீர்ப்பாரோ?

காலையில் மேலும் சில கடைகள் திறந்து அன்றைய வியாபாரத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. தங்குமிடம் திரும்ப, ஒவ்வொருவரும் அன்றைய தினத்திற்கான அனுபவங்களுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். நானும் சென்று தயாரானேன். காலை உணவினை முடித்துக் கொண்டு கோவில் செல்ல உத்தேசம்.  அதற்கு முன்னர், சென்ற பதிவில் சொன்ன வரலாறு பற்றி பார்த்து விடுவோமா?

மார்க்கண்டேய புராணத்தில் வரும் ஒரு கதை இது. சண்டி தேவி உக்கிரமான போரில் பல அசுரர்களை அழித்தார். அனைத்து அசுரர்களையும் அழித்த பிறகு அவரது யோகினி வடிவங்களான ஜெய, விஜயா [டாகிணி, வாரிணி என்றும் அழைப்பதுண்டு] ஆகியோருடன் மந்தாகனி நதியில் நீராடச் சென்றார்.  சண்டி தேவியின் மனதில் அமைதி குடிகொண்டது - ஆனால் அதற்குப் பின்னரும் அவரது யோகினி வடிவங்களுக்கு தாகம் அடங்கவில்லை. தங்கள் தாகத்தினைத் தணிக்க வேண்ட, கொஞ்சம் பொறுமை காக்கச் சொன்னாராம்.ஆனாலும் மீண்டும் மீண்டும் அவர்கள் கேட்க, தனது தலையைத் துண்டித்து, ஒரு பக்கத்தில் இரத்தம் குடிக்க, ஜெய, விஜய ஆகிய இருவரும் வேறு ஒரு பக்கத்தில் இரத்தம் குடித்து தங்களது தாகத்தினை போக்கிக் கொண்டதாக கதை. 

சின்னமஸ்திகா தேவியை மனதாரத் துதிக்கும் பக்தர்கள் தங்கள் கட்டுகளிலிருந்து விடுபட்டு பூரண முக்தியடைவார்கள் என்று காட்டவே இப்படி ஒரு கதை இருக்கலாம். எது எப்படியோ, ஒவ்வொரு கோவிலுக்கும் சில வரலாறுகள் – நம்பக் கூடியவையா இல்லையா என்பதை அவரவர் முடிவுக்கு விட்டு விடுகிறேன்!

நீங்கள் படித்து முடிப்பதற்குள் நானும் தயாராகி விட்டேன். இந்தப் பயணத்திற்கான முக்கிய காரணமே சிந்தபூர்ணியில் நடக்க இருந்த ஒரு பூஜை தான் – தில்லியில் இருக்கும் ஒரு சபை சிந்த்பூர்ணியில் 108 பெண்கள் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கு எங்கள் பகுதியிலிருந்து சிலரும் செல்ல, அதைச் சாக்கிட்டு நாங்கள் அனைவரும் பயணித்தோம். அதற்காக அனைவரும் புறப்பட்டு கோவிலை நோக்கி நடந்தோம். 

அன்று பகல் பொழுது முழுவதுமே கோவிலில் தான் எங்களுக்கு வாசம். அங்கே கிடைத்த அனுபவங்கள், வேறு சில விஷயங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாமா?
    
தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


26 comments:

 1. தங்களின் பயணம்எங்களுக்கு எவ்வளவு செய்திகளைத் தருகின்றது
  காத்திருக்கிறேன் ஐயா
  நன்றி
  தம 2

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. சிந்தபூர்ணியில் குடிகொண்டிருக்கும் சின்னமஸ்திகா தேவி அப்பெண்மணியின் கவலைகளை எப்போது தீர்ப்பாரோ? என்ற வரிகள் மூலமாகத் தாங்கள் எங்களை இதுபோன்ற இடங்களுக்கு அழைத்துச்செல்வதோடு மனிதத்தன்மையையும் தேடிப் பகிர்வதை அறியமுடிந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 3. Replies
  1. தொடர்ந்து வருவதற்கு நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 4. அந்தப் பெண்மணியின் கஷ்டம் சீக்கிரமே தீர தேவி அருள் புரியட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. அறியாத கதை... தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. //இந்தப் பயணத்திற்கான முக்கிய காரணமே சிந்தபூர்ணியில் நடக்க இருந்த ஒரு பூஜை தான் – தில்லியில் இருக்கும் ஒரு சபை சிந்த்பூர்ணியில் 108 பெண்கள் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கு எங்கள் பகுதியிலிருந்து சிலரும் செல்ல, அதைச் சாக்கிட்டு நாங்கள் அனைவரும் பயணித்தோம்.//

  ஏதோ ஒரு குறிக்கோளுடன் பயணம். அதனால் பல்வேறு கதைகள் + புதிய செய்திகள். பாராட்டுகள்.

  //தொடர்ந்து பயணிப்போம்......// ஆஹா ! அப்படியே !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 7. சுவாரசியமான கதை..
  அந்த பெண்ணின் கஷ்டம் தீர நாங்களும் பிரார்த்திக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 8. புதிய புதிய தகவல்களுடன் அழகாகப் பயணிக்கிறது தொடர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 9. அருமை நண்பரே நானும் தொடர்ந்து பயணிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 10. வணக்கம் சகோதரரே.!

  பகுதி 4,5 ஐ தொடர்ந்து படித்து விட்டு பகுதி 6 உடன் பயணத்தில் பயணிக்கிறேன்.
  காலை நேரத்தை இயற்கை வண்ணம் கலந்து பூசிய மிதர்ப்பில், சூரியனின் பவனி வரும் பயணப் புகைப்படம் கண்ணுக்கு குளுமை.
  அந்தப் பெண்ணின் குறையை போக்கி சின்னமஸ்திகா தேவிதான் காத்தருள வேண்டும்.
  தேவியை பற்றிய கதையும் நன்று.
  பயணத்தை தொடருங்கள். நாங்களும் பயணிக்கிறோம்.

  நேரமிருக்கும் போது என் தளம் வந்து பதிவுகளை பார்வையிட்டு கருத்திட்டால் மகிழ்ச்சியடைவேன். நன்றி

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   உங்கள் பக்கமும் வந்து பதிவுகளை ரசித்தேன். அலுவல்கள் காரணமாக பதிவுகளைப் படிப்பதில் சற்று தடங்கல்கள்......

   Delete
 11. அந்தப் பெண்மணி பாவம்! அவரது கஷ்டங்கள் யாவும் விரைவில் தீரட்டும்! படிக்கும் போதே எங்களுக்கு அதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று தோன்றியது.

  தங்கள் பயணங்கள், அனுபவங்கள் எண்ணற்ற செய்திகளையும், விஷயங்களையும், படிப்பினைகளையும் தருகின்றது. பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 12. அன்று பகல் பொழுது முழுவதுமே கோவிலில் தான் எங்களுக்கு வாசம்
  5 finished...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete
 13. சின்னமஸ்தா தேவி குறித்த உள்ளார்ந்த தத்துவம் எனக்கு அறிந்தவரை எழுதியதன் சுட்டியை இன்னொரு பதிவில் கொடுத்திருக்கேன். பார்க்கவும்.http://sivamgss.blogspot.in/2006/10/blog-post.html இங்கேயும் கொடுத்திருக்கேன். வெளிப்படையாக தாகம் அடங்கணும்னு சொன்னாலும் தத்துவ ரீதியாக வேறே பொருள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி. உங்கள் பதிவின் சுட்டிக்கு நன்றி. படிக்கிறேன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....