எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, April 16, 2015

புலாவ், ஃபுல்கா ரொட்டி, நான்தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 9தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 1 2 3 4 5 6 7 8

எங்கள் குழுவினர் அனைவரும் கோவிலில் இருந்து வரக் காத்திருந்தோம். அனைவரும் வந்த பிறகு சொன்னது இது தான் – “நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இங்கிருந்து 10-12 கிலோ மீட்டர் பயணித்தால் தில்லி போகும் சாலையில் இருக்கும் பாம்பே பிக்னிக் ஸ்பாட் வரும் – அங்கே தான் எல்லோருக்கும் மதிய உணவு என்று சொன்னார்கள். பாருங்க, மதிய உணவிற்காக, சிந்த்பூர்ணியிலேயே தில்லி, பாம்பே என ஓட வைத்துவிட்டார்கள்! இதுக்குத் தான் யாரையும் ரொம்ப படுத்தக் கூடாதுன்னு பெரியவங்க சொல்றாங்க! :)


 தாவுவதற்குத் தயாராய் இருக்கும் குரங்கார்....


பாம்பே பிக்னிக் ஸ்பாட் நோக்கி அனைவரும் பயணித்தோம். வழியெங்கும் நம் முன்னோர்களின் கூட்டம். அவர்களுக்கு சில பழங்களைப் போட ஜாண்டி ரோட்ஸ் மாதிரி தாவித் தாவி சரியாக பிடித்தார்கள். வண்டியை கொஞ்சம் நிறுத்தி அவர்களைப் படம் பிடிக்கலாம் என்றால் உள்ளே வந்து விடுவார்கள் எனத் தோன்றியது. எதற்கு வம்பு என பழங்களை போட்டுக் கொண்டே பாம்பே சென்றடைந்தோம்.... அதாங்க பாம்பே பிக்னிக் ஸ்பாட் சென்றடைந்தோம். கண்களில் ஏன் கண்ணே குழப்பம்.....
பாட்டியுடன் பெட்டியை இழுத்து வந்த சிறுமி....

நாங்கள் சென்று சேர்ந்த பொழுதே நீண்ட வரிசை அங்கே. பஃபே முறையில் தான் உணவு வழங்குகிறார்கள். உணவு உண்ணுமிடம் சிறிய அளவிலிருந்ததால் பத்து பத்து பேராகத் தான் உள்ளே அனுமதி கொடுக்கிறார்கள். அதனால் நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்த பின்னர் தான் எங்கள் முறை வந்தது. ஒவ்வொருவராக உள்ளே சென்று வேண்டிய உணவு வகைகளை எடுத்துக் கொண்டு நின்றபடியே உண்டோம்.


 கிறிஸ்துமஸ் மற்றும் புது வருடக் கொண்டாட்டத்திற்கான அலங்காரம்.....  
பாம்பே பிக்னிக் ஸ்பாட்.


இந்த பஃபே முறையில் சாப்பிடுவது ஒரு பெரிய  கலை! ஒரு கையில் தட்டை வைத்துக் கொண்டு மற்றொரு கையால் சுக்கா ரொட்டியை சிறு துண்டுகளாக்கி சப்ஜியோடு சேர்த்து சாப்பிட நிறைய வித்தைகள் செய்ய வேண்டும்.  கரணம் தப்பினால் மரணம் என்பது இங்கும் பொருந்தும். கொஞ்சம் தவறினாலும் ரொட்டி கீழே விழும். இல்லையெனில் தட்டு சாய்ந்து சப்ஜி உங்கள் உடையிலோ, பக்கத்திலிருக்கும் நபரின் உடையிலோ படும். தட்டை வைத்துக் கொண்டு நீங்கள் திரும்பும் நேரம் பார்த்து தான் ஒருவர் அவசர அவசரமாக பாத்திரத்தினை நோக்கி அடுத்த Helping-க்காக வருவார்! தட்டு பறக்கும்!அதிலும் சிலர் தட்டு முழுவதும் நிரப்பிக் கொள்வார்கள் – எல்லா சப்ஜியும், வேண்டுமோ வேண்டாமோ என யோசிக்காமல் அனைத்திலும் கொஞ்சம் எடுத்து அந்த சிறிய தட்டில் போட்டுக்கொள்ள அங்கே ஒரு சங்கமம் நடக்கும் – அலஹாபாத்தில் திரிவேணி சங்கமம் தான் – ஆனால் இங்கே நடக்கும் சங்கமத்தில் கலக்கும் சப்ஜிகள/உணவு வகைகள் பத்து பன்னிரெண்டு தாண்டும்! இப்படியாக கலந்து கட்டி சாப்பிட்டு, முழுவதும் சாப்பிட முடியாமல் அதை அப்படியே வீணாக்குவார்கள். பார்க்கும் போதே நமக்கு பதறும்.... எத்தனை எத்தனை பேருக்கு உணவு கிடைப்பதில்லை, கிடைக்கும் உணவினை இப்படி வீணாக்குகிறார்களே என நெஞ்சு துடிக்கும். பொதுவாகவே இப்படி இருக்கும் இடங்களில் மிகவும் குறைவாகத் தான், தேவையான அளவு மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது என்பது மக்களுக்கு எப்போது தான் புரியுமோ.....அந்த இடத்தில் நெடுஞ்சாலைப் பயணிகள் உணவு உண்பது மட்டுமன்றி சற்றே இளைப்பாறவும், சிறுவர்கள் விளையாட ஏதுவாய் சில ஏற்பாடுகளும் இருந்தது. ஒட்டக சவாரி செய்யும் வசதிகளும், செயற்கை குளங்களில் படகுக் சவாரி செய்யவும், கிரிக்கெட் விளையாடும் [Bowling Machine பந்து போட நீங்கள் விளையாடலாம்] வசதியும் [Net Practice] இருந்தது. அதையெல்லாம் சிறிது நேரம் வேடிக்கைப் பார்த்து விட்டு எங்கள் அடுத்த இலக்கை நோக்கிப் பயணித்தோம். 

 குளிருக்கு இதமாய் நெருப்பின் கதகதப்பு...


அடுத்த இலக்கும் மலைப்பகுதியில் தான் என்பதால் சற்றே வளைவு நெளிவான பாதை. மாலை நேரமும் நெருங்கி வரவே குளிர் கொஞ்சம் அதிகமாக ஆரம்பித்திருந்தது. மலைப்பாதையில் சாலைகள் ஆங்காங்கே சரியில்லாதிருக்க, அதை சரி செய்ய பணியாளர்கள் இருந்தார்கள். வாகனத்திற்குள் கண்ணாடிக் கதவுகளை அடைத்து பயணிக்கும் எங்களுக்கு குளிர் தெரிந்த போது அவர்களுக்கு குளிர் அதிகமாகவே தெரியும்.  ஒரு சில பணியாளர்கள் காய்ந்த விறகுகளைப் போட்டு தீயிட்டு குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். ”மீண்டும் துளிர்தெழுவேன்” என்று நம்பிக்கையோடு சொல்லும் சாலையோர மரம்.


எத்தனை கடினமான பணி என்றாலும் வேலை செய்யத் தானே வேண்டும். செய்வது எல்லாமே ஒரு ஜான் வயிற்றுக்குத் தானே....  வழியில் இலைகளில்லாது பார்த்த ஒரு மரம் இவர்களை நினைவு படுத்தியது. எத்தனை தொல்லைகள் வந்தாலும் வாழ்ந்தே தீருவோம் என்ற அந்த மரமும் அம்மனிதர்களும் சொல்வது போல எனக்குத் தோன்றியது. இப்படியாக பயணம் செய்து நாங்கள் அடைந்த இடம் என்ன? அங்கே என்ன சிறப்பு என்பதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாமா?

தொடர்ந்து பயணிப்போம்......நட்புடன்வெங்கட்.

புது தில்லி.

42 comments:

 1. தெடர்ந்து பயணிக்கக் காத்திருக்கிறேன் ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. சரியாச் சொன்னீங்க பஃபே முறையை.

  பயணிக்கையில் எடுத்ததென்றாலும் படங்கள் பளிச் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 3. ஏகப்பட்ட சிந்தனைகளுடன் பயணம் தொடர்கிறது. அருமையான சிந்தனைகள்.

  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. தட்டு முழுவதும் நிரப்பிக்கொண்டு - இதுதான் நம் ஆட்கள் பெரும்பாலும் செய்வது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 5. வணக்கம்
  ஐயா
  பயண அனுபவங்களை சுவை பட சொல்லியுள்ளீர்கள் தங்களின் பயணத்தில் நாங்களும் பயணிக்கின்றோம் பகிர்வுக்கு நன்றி த.ம 4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 6. வீணாக்கும் வீண் மனிதர்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. பயணம் தொடர ஆவலுடன் காத்திருக்கிறேன்
  தம +

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 8. பயணக் கட்டுரை படு சூப்பராக சென்று கொண்டு இருக்கிறது.
  உங்களோடு நாங்களும் பயணிப்பது போன்றதொரு உள்ளுணர்வு தருகிறது.
  ”மீண்டும் துளிர்தெழுவேன்” என்று நம்பிக்கையோடு சொல்லும் சாலையோர மரம்".
  தாவுவதற்குத் தயாராய் இருக்கும் முன்னோர்கள் (குரங்கார்) புகைப் படங்கள் அருமை!
  ஆஹா! சப்ஜிகளின் தசம் சங்கமத்தில் நாங்களும் அல்லவா?
  உண்டு மகிழ்ந்தோம்.
  த ம 7
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

   Delete
 9. சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள். தொடருகிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 10. பஃபே முறையில் சாப்பிடும் அழகை கலகலப்பாக விவரித்து சிரிக்க வைத்து விட்டீர்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 11. பஃப்ஃபே சாப்பிடும்போது - நமக்குப் பசி அதிகமாக இருக்கும் வேளை என்றால், ஒரு உணவை மட்டும் (அதன் தொட்டுகையுடன்..அதுவும் ஒன்றுதான்) எடுத்துக்கொண்டு முதலில் சாப்பிடவேண்டும். குறைந்த அளவு. (ஒரு ரொட்டி, சப்ஜி அல்லது, 2 கரண்டி வெரைட்டி ரைஸ் போன்று). அதுக்கு அப்புறம்தான் திரும்பி டேபிளுக்குப் போய் நமக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளவேண்டும். இல்லாட்டா, எதைப் பார்த்தாலும் நமக்கு ஆசையாக இருக்கும். அளவையும் கட்டுப் படுத்த முடியாது. எல்லாம் மிக்ஸ் ஆகி ரியல் கதம்பமாகி ஆகிவிடும். 'நிறைய ஐட்டத்திற்கு வயிற்றில் இடம் இருக்காது. உணவை வீணாக்குவது, வெ. சொல்வது போல் கிரைம்தான்.

  வட இந்தியாவை நன்றாக அறிமுகப் படுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நிறைய பேருக்கு உணவு வீணாக்குகிறோம் எனும் எண்ணமே இருப்பதில்லை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 12. உணவுப் பொருட்கள் வீணாகையில் எனக்கும் மனசு வலிக்கும்! உணர வேண்டியவர்கள் உணர்ந்தால்தானே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 13. எத்தனை கடினமான பணி என்றாலும் வேலை செய்யத் தானே வேண்டும். செய்வது எல்லாமே ஒரு ஜான் வயிற்றுக்குத் தானே.... வழியில் இலைகளில்லாது பார்த்த ஒரு மரம் இவர்களை நினைவு படுத்தியது. எத்தனை தொல்லைகள் வந்தாலும் வாழ்ந்தே தீருவோம் என்ற அந்த மரமும் அம்மனிதர்களும் சொல்வது போல எனக்குத் தோன்றியது.
  எத்துனைப் பெரிய உண்மை.அருமையான பயணம். தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலசந்திரன் ஜி!

   Delete
 14. விறுவிறுப்பான சுறுசுறுப்பான பயணம் என்பதை பதிவினிலேயே உணரமுடிகிறது. தொரடட்டும் பயணங்களும் பதிவுகளும். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 15. பஃப்ஃபேயில் உணவு நின்று கொண்டு உண்பது ஒரு கலைதான் இம்மாதிரி ப்ஃப்ஃபேக்கள் உணவு விரயமாவதைத் தடுக்க அல்லவா வேண்டும் பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 16. அடுத்த இடம் என்ன என்பதை அறிய காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 17. நவரத்தினத்தகவல்கள் வாழ்த்துகள் தொடர்கிறேன் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 18. சூழ்நிலை காரணமாக, சில நாட்கள் உங்கள் பதிவின் பக்கம் வராமல் போனாலும்,, இந்த பதிவின் மூலம் உள்ளே வந்து விட்டேன். தொடர்கின்றேன்.
  த.ம.9

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 19. பார்க்கும் போதே நமக்கு பதறும்.... எத்தனை எத்தனை பேருக்கு உணவு கிடைப்பதில்லை, கிடைக்கும் உணவினை இப்படி வீணாக்குகிறார்களே என நெஞ்சு துடிக்கும். பொதுவாகவே இப்படி இருக்கும் இடங்களில் மிகவும் குறைவாகத் தான், தேவையான அளவு மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது என்பது மக்களுக்கு எப்போது தான் புரியுமோ.....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கு நன்றி VKN சித்தப்பா....

   Delete
 20. வணக்கம் சகோதரரே.!

  பயண அனுபவங்கள் நன்றாக உள்ளன. படிக்க படிக்க நாங்களும் உங்களுடனேயே பயணித்து நீங்கள் ரசித்து எழுதிய இடங்களை கண்டு தரிசிக்கும் உணர்வு வருகிறது.

  சாலையோர மரத்தின் தத்துவமும் அருமை. உணவை வீணாக்காமல் எவருக்கேனும் கிடைக்கும்படி செய்தால், அவர்கள் வயிறும் நிறையும். மனமும் குளிரும். இந்த புதிய முறை திட்டத்தினை அனைவருமே புரிந்து கொள்ளல் வேண்டும் என உணர்த்தியது சிறப்பு. நன்றி..

  அடுத்த பதிவை தொடர்கிறேன்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 21. ரொட்டி, நான் எடுக்கும்போது தட்டில் இருக்கும் ரொட்டியை சின்னத்துண்டுகளாகப் பிய்த்துப் போட்டுக்கிட்டுத்தான் சப்ஜி எடுத்துக்கப் போவேன் :-)

  ReplyDelete
  Replies
  1. அட இது கூட நல்ல ஐடியாவா இருக்கே..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....