படம்: இணையத்திலிருந்து.....
சாதாரணமா பூரின்னா
கோதுமை மாவுல செஞ்சு சாப்பிடுவாங்க... இல்லைன்னா மைதா சேர்த்து சோளா பூரி என்று
சாப்பிடுவது நம் வழக்கம். ஆனால் வட இந்தியாவில் பேட்மி [Bedmi] பூரி என்றும் ஒன்று உண்டு. தில்லியின்
சாந்த்னி சௌக் பகுதிகளில் இப்படி பேட்மி பூரி கிடைக்கும். சென்ற ஞாயிறன்று நண்பர்
ஒருவர் இன்னிக்கு வீட்டுல பேட்மி பூரி செய்யப் போறாங்க! உங்களுக்கும் சேர்த்து
தான் – கண்டிப்பா வந்துடுங்க! என்று சொன்னார்.
நானோ காலையிலேயே
சாதம் வைத்து சீரக ரசம் – அதாங்க நம்ம உமையாள் காயத்ரி
ஜி பதிவில் சொன்ன மாதிரி செய்து பார்க்கலாம் என அதற்கான தயாரிப்பில் இறங்கி
இருந்தேன். அதை ராத்திரி செய்து சாப்பிடுங்க, இப்ப இங்கே வந்துடுங்க என அழைப்பு
பலமாய் இருக்க, நானும் சரி என்று சொல்லி விட்டேன். பேட்மி பூரி சாப்பிட்டு சில
மாதங்கள் ஆகிவிட்டது என்பதும் ஒரு காரணம். சரி என்று நான் செய்த சாதத்தினை எடுத்து
வைத்து விட்டு, அவர்களது வீட்டிற்குச் சென்று விட்டேன்.
சென்று என்ன செய்தேன்
எனக் கேட்கக் கூடாது – நல்ல ரவுண்டு கட்டி தொட்டுக்கையாக கொடுத்திருந்த
உருளைக்கிழங்கு சப்ஜி, ராய்த்தா, மற்றும் சலாட் உடன் ஏழு எட்டு பூரிகளை உள்ளே
தள்ளினேன். ”அட நீங்க மட்டும் நல்லா சாப்பிட்டு வந்தா
எப்படி, எங்களுக்கு தரதான் முடியாது, எப்படிச் செய்வதுன்னு சொல்லவாது செய்யலாம்
இல்ல” என நீங்கள் கேள்விக்கணைகளை வீசும் முன்னரே
நானே சொல்லி விடுகிறேன்.
சரி இந்த பேட்மி பூரி
எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.....
படம்: இணையத்திலிருந்து.....
பொதுவாக குளிர்
காலத்தில் இந்த பேட்மி பூரி செய்வது இங்கே வழக்கம். சாதாரண நாட்களிலும் கிடைக்கும்
என்றாலும், குளிர் காலத்தில் தான் அதிகம் கிடைக்கும். வடக்கில் இந்த வகை பூரி செய்வதற்கென்றே, கோதுமை
மாவு போலவே பேட்மி பூரி மாவும் தனியாக
கிடைக்கும். ஆனால் நமது ஊரில் இம்மாவு
கிடைப்பது கடினம் என்பதால் நீங்கள் தடுமாற வேண்டாம். அதற்கும் வழி உண்டு.
தயாரிக்க ஆகும் நேரம்: 2 மணி
நேரம்.
சமைக்க ஆகும் நேரம்: சுமார் 30
நிமிடங்கள்.
எத்தனை பேர் சாப்பிடலாம்? சுமார் நான்கு பேர்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு [இரண்டு கப்], வறுத்த ரவை [அரை
கப்], பாசிப்பருப்பு [ஒரு கப்], இஞ்சி – ஒரு துண்டு, பச்சை மிளகாய் 5, கொத்தமல்லிப்
பொடி 1 தேநீர் கரண்டி, மஞ்சள் பொடி 2 தேநீர் கரண்டி, மிளகாய்த் தூள் காரத்திற்கு
வேண்டியபடி மற்றும் உப்பு தேவையான அளவு. பொரிக்கத்
தேவையான அளவுக்கு எண்ணை அல்லது நெய்.
எப்படிச் செய்யணும் மாமு?
பருப்பினை இரண்டு மணி நேரம் அளவு ஊற வைத்துக்
கொள்ளவும். ஊறிய பிறகு, தண்ணீரை நன்கு வடிகட்டிவிட்டு இஞ்சி, பச்சை மிளகாய்
சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த பிறகு அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள்
மற்றும் கொத்தமல்லி பொடி உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
பிறகு கோதுமை மற்றும் ரவையைச் சேர்த்து அதில்
கொஞ்சம் எண்ணை சேர்த்துக் கொண்டு அரைத்து வைத்திருக்கும் கலவையையும் சேர்த்து
நன்கு பிசைந்து கொள்ளவும். தேவையெனில்
கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக் கொள்ளலாம். பூரி பதத்திற்கு பிசைந்து வைத்து அதை
மூடி வைத்து விடவும். அரை மணி நேரம் இப்படி வைத்து விட்டு, உருளைக்கிழங்கு சப்ஜி,
சட்னி போன்றவற்றையும் செய்து கொள்ளலாம்.
மாவினை சிறு சிறு உருண்டைகளாகச் செய்து
பூரிகளாக இட்டுக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணை
வைத்து நன்கு சுட்ட பிறகு, ஒவ்வொரு பூரியாக அதில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்து
விடுங்கள். எண்ணைக்குள் பூரியைப் போடும்போது கவனம் தேவை என்பதை சொல்லவும்
வேண்டுமோ? தொட்டுகையாக உருளைக்கிழங்கு, சட்னி என அசத்தலாக இருக்கும் இந்த பேட்மி
பூரி!
”இந்த ஊற வைத்து அரைக்கிற வேலையெல்லாம் நமக்கு
ஆகாது” என்று சொல்பவர்கள் “பேட்மி பூரி மாவு” கிடைக்கிறதா என்று பார்த்து, கோதுமை மாவு போலவே
இந்த மாவினை தண்ணீர் சேர்த்து பிசைந்து பூரியாக பொரித்துக் கொள்ளலாம்.
என்ன நண்பர்களே இந்த வாரம் உங்கள் வீட்டில் பேட்மி
பூரி தானே!
மீண்டும் வேறு ஒரு அனுபவம்/உணவு வகையோடு விரைவில்
உங்களைச் சந்திக்கிறேன்.
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
அட..வித்தியாசமா இருக்கே..
பதிலளிநீக்குவித்தியாசம் தான்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.
பதிவுலகம் சாப்பாட்டு ராமன்கள் உலகமாய்ப் போச்சே?
பதிலளிநீக்குஹா.... ஹா. :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.
முதற்கண் கடைகளில் தேடிப் பார்க்கிறேன். கிடைக்கா விட்டால் ஊற வைத்துக் கொள்ளலாம். அந்த உ.கி சப்ஜி எப்படி செய்வது என்று சுருக்கமாகப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
பதிலளிநீக்குஉருளைக்கிழங்கு சப்ஜி செய்வது சுலபம் தான். வெங்காயம், தக்காளி மற்றும் ஜீரகம் ஆகியவற்றை வதக்காமல் மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளலாம். Pressure Pan [அ] குக்கரில் கொஞ்சம் எண்ணை விட்டு, கடுகு தாளித்துக் கொள்ளுங்கள். கடுகு வெடித்தபின் அதில் அரைத்த விழுதைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். பிறகு, உப்பு, கரம் மசாலாப் பொடி, பெருங்காயத் தூள் போட்டு, கசூரி மேத்தி பொடி, [கடைகளில் கிடைக்கும். நம் ஊரில் கிடைக்கிறதா தெரியவில்லை. இது இல்லாவிட்டாலும் தவறில்லை] கூடவே உருளைக்கிழங்கும் போட்டு விடுங்கள். தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி வேக வையுங்கள். நான்கு ஐந்து விசில் வந்தால் போதும். உருளைக்கிழங்கு சப்ஜி ரெடி.
நீக்குசுருக்கமாகச் சொல்லி விட்டேன் என நினைக்கிறேன்! :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நன்றி பாஸ்!
நீக்குசென்னை வரும்போது ஶ்ரீராம் வீட்டுக்கு பேட்மி பிக்ஷாந்தேஹி...
நீக்கு:) நன்றிங்க வெங்கட் ஜி! :) பேட்மி பூரி செய்வேனோ இல்லையோ..இந்த சப்ஜி செய்து பார்க்கிறேன். உங்க சுக்டி ரெசிப்பி பாத்து..அதோட எஃபெக்ட்ல சில பல வீடியோ செய்முறைகளும் பார்த்துன்னு கொஞ்ச நாள் திரிஞ்சேன்! ;) [சிம்பிள் செய்முறைதானே என்ற கேள்வி எழலாம் உங்களுக்கு..கைவசம் நெய் இல்லை..அடுப்பருகே நின்று கைவிடாம கிளறவும் நேரமில்லை..அவ்வ்வ்வ்! ]இந்த சப்ஜி அந்த அளவுக்கு தொந்தரவு செய்யாது. அடுத்த முறை சப்பாத்திக்கு செய்து பார்த்து சொல்கிறேன்.
நீக்குகமலேஷ் மேத்தா கேள்விப்பட்டதுண்டு. கசூரி மேத்தி?
நீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஸ்ரீராம் வீட்டுக்குப் போகும்போது சொல்லுங்க! நானும் வரேன் துரை!
நீக்குசப்ஜி செய்து பார்த்துட்டு சொல்லுங்க மகி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கசூரி மேத்தி - வெந்தயக் கீரை - காய்ந்தது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை.
மாவு தயாரிப்பு செய்முறைக்கும் நன்றி...
பதிலளிநீக்குசெய்து பார்க்கிறோம்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குசெஞ்சுறலாம். அரைப்பது ஒன்னும் பிரச்சனை இல்லை. கொஞ்ச மாசங்களா அடுப்பில் எண்ணெய் சட்டி வைப்பது இல்லை. வயசாகுதே.... எதுக்கு பொரிச்சதுன்னுதான். ஆனால் பானி பூரிபோன வாரம் செஞ்சது விதிவிலக்கு:-)
பதிலளிநீக்குவீட்டுக்கு யாராவது விருந்துக்கு வந்தால் அன்றைக்குச் செஞ்சு பார்க்கிறேன்.
@ஸ்ரீராம், கசூரி மேத்தி வெறும் காய்ஞ்சு போன வெந்தியக்கீரை இலைகள்தான். நாமே வெந்தியக்கீரை சீஸனில் கொஞ்சம் காயவச்சு எடுத்து வச்சுக்கலாம். இல்லைன்னா வீட்டில் ஒரு தொட்டியில் ஊறவச்ச வெந்தியத்தைப் போட்டு வையுங்க. சீக்கிரம் முளைச்சுரும்.
செய்து பார்த்துட்டு சொல்லுங்க துளசி டீச்சர்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஃபார் ஃபாலோ அப்
பதிலளிநீக்குநன்றி துளசி டீச்சர்.
நீக்குபுதுவகையான வட இந்திய உணவு வகைகளை அறிமுகப்படுத்துவதுக்கு நன்றிங்க! :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.
நீக்குவித்தியாசமான பூரியாக இருக்கிறதே
பதிலளிநீக்குநன்றி ஐயா
தம +1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஇங்கே - குவைத்தில் ஒரு வட இந்திய உணவகத்தில் இதனை சாப்பிட்டிருக்கின்றேன்..
பதிலளிநீக்குஆனால் - இது தான் பேட்மி பூரி என்பது தெரியாது..
( நானும் பேர் என்னான்னு கேட்கலை.. அவனும் சொல்லவில்லை!?.)
பல சமயங்களில் பெயர் தெரியாமலேயே சிலவற்றை சாப்பிடுகிறோம். ருசி மட்டும் நன்றாக இருந்தால் போதும்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
எனக்கு ஒரு பார்சல் அனுப்புங்க நண்பரே
பதிலளிநீக்குஅனுப்பிட்டா போச்சு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.
கசூரிமேதி பொடி கடைகளிலே கிடைக்கிறது. நான் வாங்கி வைச்சிருக்கேன். அநேகமாக எல்லா மசாலாப் பொடிகளுமே மளிகைக்கடைகள், பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும். ஒண்ணும் கஷ்டமில்லை. ஆனால் இந்த பேட்மீ பூரி மாவு கிடைப்பது கொஞ்சம்கஷ்டம். ராஜஸ்தானில் இந்தப் பருப்புக் கலவையைப் பூரிக்குள் வைத்து ஸ்டஃப் செய்தும் பொரிப்பார்கள். காரம் தூக்கலாக இருக்கும். :)))
பதிலளிநீக்குஸ்டஃப் செய்து செய்வதும் உண்டு. கசூரி மேத்தி தமிழகத்தில் கிடைக்கிறதா? நல்லது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
வித்தியசமான சுவையான பூரி செய்முறை விளக்கத்திற்கு நன்றி..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.
நீக்குபுதுசா இருக்கே.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா...
நீக்குஆஹா...வித்தியாசமான பூரியா..இருக்கே...+ அதனுடன் சப்ஜியும் வித்தியாசமா இருக்கு...செய்து ருசிக்க வேண்டும். ரவை சேர்த்தாலே பூரி உப்பலாக வரும். இங்கே கொஞ்சம் நல்லாவே ரவை சேர்ப்பதால் பூரி நல்லா உப்பி அழகாய் வரும் போலயே...படத்திலும் அவ்வாறே இருக்கிறது. இந்த வீக் எண்டு இது தான்...
பதிலளிநீக்குஅப்புறம் இரவு உணவிற்கு அந்த சாதத்துடன் சீரக ரசம் செய்து சப்பிட்டீர்களா...சகோ...?
தம + 1
இரவு உணவு - சாதம் - சீரக ரசம் தான்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
செய்முறை விளக்கத்துடன் அசத்தி விட்டீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குநிச்சயம் செய்து பார்க்கணும்..புதுவகையா இருக்கு வித்தியாசமாகவும்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷைலஜா.
நீக்குசெய்து பார்க்க வேண்டும்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.
நீக்குவணக்கம் சகோதரரே.!
பதிலளிநீக்குநல்ல சுவையான வித்தியாசமான பூரியை அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். நன்றி.! இங்கு இந்த மாவு இருக்கிறதா என்று தெரியவில்லை. அடுக்கி வைத்த பூரிகளை பார்க்கும் போதே மனசு "தேடலாம்". என்று சொல்கிறது. ௬டவே பின்னூட்டத்தில் சப்ஜி செய்யும் முறை..அதையும் குறித்துக்கொண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி ..
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குஎன்ன ஜி இப்படியெல்லாம் அழகாக பூரியை காண்பித்து வயித்தெரிச்சலை கிளப்பி விடுறீங்களே...?
பதிலளிநீக்குநவரத்தினம்
அடடா ....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
கலவையைப் பார்த்தாலே சொல்ல முடியுதே ,இது நாட் பேட் பூரி என்று :)
பதிலளிநீக்குத ம + !
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குபேட்மி பூரி பாக்கும் போதே பசிக்குது அண்ணா...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குசெஞ்சுரலாம்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!
நீக்குபாசிப்பருப்புக்குப் பதிலாய் உளுத்தம்பருப்பை வைத்தும் ராஜஸ்தான், பஞ்சாபில் செய்வார்கள். அப்பாதுரை, உங்க கருத்து இங்கே இல்லை. ஆனால் எனக்கு வந்திருக்கு. கசூரி மேதி என்பது வெந்தயக்கீரையைக் காய வைத்த பொடி! :))))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..
நீக்குஆலூ சப்ஜி செய்தாச்சுங்க..நன்றி!
பதிலளிநீக்குஓ செய்தாச்சா? வாழ்த்துகள் மஹி.
நீக்குநேரமிருந்தால் இப்படித்தான் இருக்குமா என்று பாருங்க! :)
பதிலளிநீக்குhttp://mahikitchen.blogspot.com/2015/03/aaloo-subzi.html
தோ வந்துட்டே இருக்கேன்.....
நீக்குதங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி மஹி.