தலைநகரிலிருந்து....
பதவியும் பலமும் ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யத்
தூண்டுகிறது. தனக்கு பதவி தந்தவர்களையே தூக்கி எறிந்து விட்டு தான் பதவி ஏறவும்
துடிக்கிறார்கள். எல்லா அதிகாரங்களையும் பறித்துக்கொள்ளவும்
முயற்சிக்கிறார்கள். ஆட்சிக்கு வந்து சில
நாட்களே ஆன நிலையில் அதற்குள்ளாகவே தில்லி அரசில் நிறைய பிரச்சனைகள். நேற்று அவர்களுக்குள்
இருக்கும் பூசல்கள் வெளியே வந்திருக்கிறது.
இன்றைய அரசியல் மட்டுமல்லாது பண்டைக்கால ராஜாக்கள் சமயத்திலும்
இப்படித்தான் போலும்.
வெளிப்புற வாயிலிலிருந்து எடுத்த படம்!
மீர்சா முகிம் அபுல் மன்சூர் கான், அவத்[dh] பகுதியின் மன்னராகவும் தில்லியில் ஆண்ட முகலாயப் பேரரசர் முஹம்மது ஷா அவர்களின் இராஜப் பிரதிநிதியாகவும்
செயல்பட்டவர். பணபலம் மற்றும் அதிகாரபலம் படைத்தவராகத் திகழ்ந்தவர். மன்னர்
முஹம்மது ஷா இறந்த பிறகு, அவத்[dh]
நாட்டிலிருந்து தில்லிக்கு
குடிபெயர்ந்தார். மன்னரின் இறப்பிற்குப் பிறகு முஹம்மது ஷா அஹ்மத் ஷா முஹலாயப் பேரரசின்
மன்னராக பொறுப்பேற்க, மீர்சா முகிம் அபுல் மன்சூர் கான் அவர்களுக்கு வாசிர் உல் மல்க்-இ-ஹிந்துஸ்தான்
என்ற பட்டம் அளித்து முதல் அமைச்சராகப் பொறுப்பு தரப்பட்டது.
என்னவொரு பிரம்மாண்டம்....
முஹம்மது ஷா அஹ்மத் ஷா காலத்தில் முகலாயப் பேரரசு தன்
பலத்தினை இழந்து வெகு சில இடங்களையே தக்க வைத்துக் கொண்டிருந்தது. மன்னர் மது,
மாது போன்ற விஷயங்களில் மூழ்கிக் கிடக்க, மீர்சா வானளாவிய அதிகாரங்களை
வைத்துக்கொண்டு, மன்னரை தன் இஷ்டத்திற்கு ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தார். முதலமைச்சர் மீர்சாவின் இப்போக்கு பிடிக்காத
மன்னரின் குடும்பத்தினர் மராட்டியர்களின் உதவி கொண்டு முதலமைச்சர் பதவியை
மீர்சாவிடமிருந்து பறித்தது மட்டுமல்லாது தில்லியை விட்டே விரட்டினார்களாம்.
கல்லிலே கலைவண்ணம் கண்டான்....
அதன் பிறகு ஒரு வருடத்திற்குள்ளாகவே மீர்சா இறந்து
விட்டார். அவர் இறந்த பிறகு அவரது மகன் நவாப் ஷுஜௌத் தௌலா முகலாயப் பேரரசரிடம்
தான் தனது தந்தைக்கு தில்லியில் ஒரு கல்லறை கட்ட விரும்புவதாகவும் அதற்கு மன்னர்
தயைகூர்ந்து அனுமதி தரவேண்டும் என்று கேட்டுக்கொள்ள மன்னரும் அனுமதி தந்தார்.
தில்லியில் மீர்சா முகிம் அபுல் மன்சூர் கானுக்கு ஒரு கல்லறை கட்டும் முயற்சி தொடங்கியது.
கல்லறை.... வெளிப்புறத்திலிருந்து எடுத்த படம்
தில்லியில் இருக்கும் ஹூமாயூன் கல்லறை போலவே மீர்சா
முகிம் அபுல் மன்சூர் கான் அவர்களது கல்லறையும் மிகச் சிறப்பாக கட்டப்பட்டு முடிக்கப்பட்டது
– அது நடந்தது 1753-54 ஆம் ஆண்டு என அக்கல்லறையின் வெளியே வைத்திருக்கும் தகவல்
பலகை சொல்கிறது. கல்லறை மட்டுமல்லாது அதைச் சுற்றிலும் அழகிய பூங்கா, மசூதி,
தங்குமிடங்கள் என சிறப்பான முறையில் அமைக்கப்பட்டன.
கல்லறைக் கட்டிடத்தின் உள்ளே நிழலில் ஓய்வெடுக்கும் காவலாளி
அதெல்லாம் சரி, இப்படி தில்லியில் மீர்சா முகிம் அபுல்
மன்சூர் கான் கல்லறை என்ற பேர் கேள்விப்பட்டதே இல்லையே என்று உங்களுக்குத்
தோன்றலாம்! இந்தப் பெயர் அவரது இயற்பெயராக இருந்தாலும் அவருக்குக் கொடுக்கப்பட்ட
அடைமொழியாலேயே அவர் இன்றளவும் நினைவில் இருக்கிறார். அவரது பெயரில் ஒரு விமான
நிலையம், மிகவும் பிரபலமான ஒரு மருத்துவமனை, செல்வந்தர்கள் வாழும் ஒரு இடம் என
பலவும் தில்லியில் உண்டு! அவருக்கு கொடுக்கப்பட்ட அடைமொழி “சஃப்தர்ஜங்”!
கட்டிடக்கலையை ரசிக்க வந்த வருங்காலம்!
முகலாயக்
கட்டிடக் கலையில் உங்களுக்கு விருப்பமிருந்தால், பூங்காக்கள்
அமைக்கப்பட்டிருக்கும் விதம் பார்க்கும் ஆசையிருந்தால் நிச்சயம் நீங்கள் இங்கே
சென்று ரசிக்கலாம்.
மொட்டை மாடி மொட்டை மாடி
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி!
தில்லியின் பல கல்லறைகள் போலவே இங்கும் காதலர்கள் நடமாட்டம்
அதிகம். தங்களை மறந்து, இருக்கும் சூழ்நிலை மறந்து பரவச நிலையில் அமர்ந்திருக்கும்
பல காதலர்களை இங்கே காணமுடியும். காதலர்களைப் போலவே புறாக்களும் இங்கே நிறைய உண்டு!
தூது செல்லத் தயாராக இருக்கிறதோ இப்புறா!
தில்லியிலுள்ள
இவ்விடத்திற்கு மெட்ரோ மூலமும் நீங்கள் வர முடியும். அருகிலுள்ள மெட்ரோ நிலையம் –
ஜோர்பாக்[G]. சஃப்தர்ஜங் சாலை மற்றும் அரபிந்தோ சாலை சந்திக்கும் இடத்தில் இருக்கும்
இக்கல்லறை எல்லா நாட்களும் காலையிலிருந்து மாலை வரை திறந்திருக்கும். இங்கே
நுழைவுக்கட்டணமும் உண்டு – இந்தியர்களுக்கு 5 ரூபாய், வெளி நாட்டவர்களுக்கு 100
ரூபாய். புகைப்படக்கருவிக்கு கட்டணமில்லை. காணொளி கருவிகளுக்கு 25 ரூபாய் கட்டணம்.
அடுத்த தில்லி பயணத்தில் இங்கேயும் சென்று வாருங்களேன்!
அவ்வப்போது தில்லியில் இருக்கும் மற்ற இடங்களைப் பற்றியும் பார்க்கலாமா? நீங்க
ரெடின்னா நானும் ரெடி!
மீண்டும் சந்திப்போம்.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
டிஸ்கி-1: சென்ற நவம்பர் மாதம் புகைப்படங்கள் எடுப்பதற்காகவே
நானும் நண்பர் ஒருவரும் இங்கே சென்றிருந்தோம்.
இப்பதிவில் தந்திருக்கும் படங்கள் இரண்டு பேரும் எடுத்ததிலிருந்து.
டிஸ்கி-2: காதலர்கள் படம், காவலாளி படம் இரண்டும் Silhouette Photography என முயற்சி செய்ய எடுத்த படங்கள்.... நன்றாக வந்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்!
புகைப்படங்கள் அழகு .டெல்லி எப்போது வருவோம்னு தெரியலை .ஆனால் உங்க கட்டுரைகள் மூலமாக சுற்றிப் பார்த்திடுவோம்னு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில். முடிந்த போது தில்லி வந்து நேரிலும் பார்க்கலாம்!
நீக்குசுவாரஸ்யமான தகவல்கள்...
பதிலளிநீக்குரசிக்க வைக்கும் படங்கள்...
லவ் ஜோடி சூப்பர்...!
வருங்காலம் No. 1
படங்களை ரசித்தமைக்கு நன்றி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
‘சஃப்தர்ஜங்’ கின் உண்மையான பெயர் மீர்சா முகிம் அபுல் மன்சூர் கான் என்பது புதிய தகவல். தில்லியில் நான்கு ஆண்டுகள் இருந்தும் இது பற்றி அறிந்திருக்கவில்லை. தகவலுக்கு நன்றி! படங்கள் அருமையாய் வந்திருக்கின்றன. வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதில்லியில் நானும் பார்க்காத இடங்கள் நிறைய உண்டு.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
இவ்வளவு நுணுக்கமாக படங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியே ! தொடர வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.
நீக்குவரலாறு என்றைக்குமே பாடம் தான்..
பதிலளிநீக்குஅழகிய படங்களுடன் இனிய பதிவு!..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
நீக்குவரலாற்றை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது. புகைப்படங்கள் மிகவும் அருமை. உங்களின் மூலமாக நாங்கள் புதுதில்லியை நன்கு சுற்றிப்பார்க்கமுடிகிறது. நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குநல்ல போட்டோக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கநதசாமி ஐயா.
நீக்கு"Silhouette Photography" - அப்படின்னா! அந்தப் படத்தில் சில்லாட்டைகள் இரண்டும் மல்லாட்டைதானே போட்டு கொண்டு இருக்கின்றன.
பதிலளிநீக்குபுகைப்படங்கள் அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குபதவி தரும் சுகம் பெரிது நணபரே! ஒருமுறை சுவைத்தாலே போதும்! விடாது!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்குபடங்கள் அருமையாக இருக்கின்றன. டில்லியை அழகாய் சுற்றிக்காட்டுகிறீர்கள். மேலும் தொடருங்கள் தொடர்கிறோம்...தம +1
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!
நீக்குஇதுவரை நான் அறியாத விஷயம். நல்லதொரு பகிர்வு.
பதிலளிநீக்குபடங்கள் அனைத்துமே மிக அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.
நீக்குபுகைப்படங்கள் அழகு. இப்போதைய டில்லி அரசியல் பற்றி அவ்வப்போது எழுதுங்கள்.
பதிலளிநீக்குகல்லறையில் வளர்க்கப்படும் காதல் -- நல்லாயிருக்கு போங்க!
இப்போதைய தில்லி அரசியல் - ஒன்றும் சொல்வதிற்கில்லை! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
வணக்கம் சகோதரரே.!
பதிலளிநீக்குபுதிதான சரித்திர தகவல்களுடன், படங்களும், பகிர்வுகளும் அருமை. உங்களுடைய விஸ்தாரமான தகவல்களினால், டெல்லியை சுற்றிய நிறைவு கிடைத்தது. படங்கள் அனைத்துமே நன்றாக இருந்தன.புறாவின் படம் கண்ணுக்கு விருந்து.
பகிர்ந்தமைக்கு நன்றி.! வாழ்த்துக்கள்.!
பயணங்கள், மேலும் சில காரணங்களினால் , தங்கள் பதிவுக்கு தொடர்ந்து வந்து கருத்திட இயலாமல் போனதற்கு வருத்தத்துடன் மன்னிப்பு கோறுகிறேன். இனித் தொடர்கிறேன்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
பல சமயங்களில் அனைவரது பதிவுகளையும் படிக்க முடிவதில்லை. இதில் வருத்தம் கொள்ளத் தேவையில்லை....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
சப்தர்ஜங் விவர விருந்துக்கு நன்றி.
பதிலளிநீக்குதொடக்கத்தில் சொன்ன சண்டை விவரமாக கொஞ்சம் விளக்கிப் போடுங்க...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.
நீக்குமுகலாயப் பேரரசர்களில் பாபர் ஹுமாயூன் அக்பர் இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவரா இந்த மிர்சா முகிம். அந்தப்புறா நிஜப் புறாவா?சில்ஹௌட்டிப் புகைப்படங்கள் அருமை. எடுத்தது த க்ரேட் வெங்கட் அல்லவா.?
பதிலளிநீக்குநிஜப் புறா தான்! சந்தேகமென்ன! :)
நீக்குஇவர் அவத் நகரை ஆண்ட மன்னர். முகலாயப் பேரரசின் முதலமைச்சராக இருந்தவர்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.
டில்லி பற்றிய நிறைய சுவராசியமான வரலாற்றுத் தகவலகள் தந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அழகு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
நீக்குஅழகிய படங்களுடன் வரலாற்றுத் தகவல்கள்...
பதிலளிநீக்குஅருமை அண்ணா...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குநீங்க டெல்லியில் பார்க்கவேண்டிய இடங்களைத் தொடர்ந்து எழுதுங்கள். அங்கு செல்ல நேர்ந்தால் பார்க்க வசதியாக இருக்கும். ரொம்ப டயர்ட் ஆனா, ஒரு சுக்டியோ, பராத்தாவோ..உங்க இடத்துக்கு வந்தால் கொடுக்காமலா இருக்கப் போறீங்க? (அதுக்கு முன்னால தாமசம் இங்கயா ஸ்ரீரங்கமான்னு தெரிந்துகொண்டு வந்தால் போகிறது)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குவரலாற்றுப் பின்னனியுடன் கூடிய அருமையான தகவல்கள் ஐயா
பதிலளிநீக்குநன்றி படங்கள் ஒவ்வொன்றும்அற்புதம்
காவலாளியும், காதலர்களும் படம்
அருமையிலும் அருமை
நன்றி
தம +1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஅருமையான தகவல்!
பதிலளிநீக்குகல்லறையிலும் காதல் ஜோடி!
புகைப்படங்கள் எல்லாமே மிக மிக அழகு. புறா அசத்தல்! அதன் பேக் க்ரவுண்ட் வித்தியாசமாக அருமையாக வந்திருக்கின்றதே! எப்படி அது?
Silhouette Photo மிக மிக அசத்தல் வெங்கட் ஜி! உங்கள் ஃபோட்டோஸ் எப்பவுமே க்ரேட் தான் ஜி!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்கு