எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, December 1, 2015

சாப்பிட வாங்க: தேப்லா.....

நன்றி: www.simplytadka.com

இரண்டு வாரமா சாப்பிட வாங்க பகுதியில் பீஹார் மாநில உணவுகளைப் பற்றியே பார்த்திருக்கிறோம்.....  இந்த வாரமும் பீஹார் மாநில உணவு என்றால் கொஞ்சம் போரடிக்கும்! அதனால் வேறு மாநில உணவுக்குப் போகலாம்! பயணம் பிடிக்கும் – விதம் விதமான ஊர்களுக்குச் செல்வதால் இங்கே விதம் விதமான உணவுமா என்று கேட்க வேண்டாம்! தேப்லா என்ற உணவு குஜராத்தி உணவு.  இதில் பல வகைகள் என்றாலும், நாம் பார்க்கப் போவது சாதாரணமாக செய்யக் கூடிய தேப்லா....

தில்லியில் எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் கர்நாடகத்தினைச் சேர்ந்தவர். அவர் காதலித்து மணம் புரிந்தது ஒரு குஜராத்தி பெண். காதலிக்கும் போதே நண்பர் வீட்டில் சொல்லி, இருவீட்டார் சம்மதம் பெற்று திருமணமும் புரிந்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நண்பர் வீட்டிற்கு ஓரிரு முறை சென்றபோது “தேப்லாசாப்பிடக் கொடுத்தார்கள். அப்பெண்ணிடம் செய்முறையைக் கேட்டுத் தெரிந்து கொண்டு சில முறை தேப்லா செய்து சாப்பிட்டதுண்டு.  படம் எடுத்து வைக்கவில்லை! :(

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு [2 கப்], தயிர் [2 கரண்டி], சமையல் எண்ணை, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி [சிறிதளவு] மற்றும் உப்பு [தேவைக்கு ஏற்ப].

எப்படிச் செய்யணும் மாமு:

கோதுமை மாவுடன் தயிரையும் சேர்த்து, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, காரத்திற்குத் தேவையான மிளகாய்ப் பொடி, [பச்சை மிளகாய் கூட சேர்த்துக் கொள்ளலாம்], பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஆகிய அனைத்தையும் கலந்து, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கொண்டு, சப்பாத்திக்குப் பிசைவது போல பிசைந்து, அதனுடன் ஒரு ஸ்பூன் எண்ணை சேர்த்து, நன்கு பிசைந்து எடுத்து வைக்கவும்.  பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் ஊறிய பிறகு எடுத்து, சிறு சிறு உருண்டைகளாக ஆக்கி, சப்பாத்தி போலவே மெல்லியதாக இட்டுக் கொள்ளவும்.

தவாவில் கொஞ்சம் எண்ணை விட்டு, இட்டு வைத்த தேப்லாவினை போட்டு கொஞ்சம் சூடான பிறகு திருப்பி விடவும். இரண்டு புறமும் எண்ணை தடவி, பொன்னிறமாக ஆகும் வரை காத்திருந்து எடுத்து விடவும்.  இப்படி பிசைந்து வைத்த மாவு முழுவதும், தேப்லாவாக செய்து எடுத்துக் கொள்ளலாம்!

இதற்கு தொட்டுக்கொள்ள குஜராத்திகள் தரும் ஒரு சைட் டிஷ் “[ch]சுண்டா இது ஒரு ஊறுகாய் என்று சொன்னாலும் எனக்குப் பிடிப்பதில்லை.  ஊறுகாய் தொட்டுக்கொண்டோ, அல்லது வேறு ஏதாவது சப்ஜி தொட்டுக்கொண்டோ சாப்பிடுவேன். “[ch]சுண்டாஎன்பது மாங்காயைத் துருவி, சர்க்கரைப் பாகில் சேர்த்து, செய்வார்கள். இனிப்பும், துவர்ப்பும், உரைப்பும் சேர்ந்து ஒரு கலக்கலான சுவையில் இருக்கும்! சாப்பிட்டிருக்கிறேன் என்றாலும் அவ்வளவாகப் பிடிப்பதில்லை!

தேப்லாவிலும் பல வகை உண்டு. கோதுமை மாவுடன், கொஞ்சம் கடலை மாவு [அல்லது] கம்பு மாவு சேர்த்தும் செய்வார்கள். கூடவே துருவிய சுரைக்காய் அல்லது கொத்தமல்லி தழைகளை பொடிப்பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்து செய்வதுண்டு. பெரும்பாலான குஜராத்தி மக்கள் பயணம் செய்யும் போது இப்படி தேப்லாக்கள் செய்து எடுத்து வருவதுண்டு. இரண்டு மூன்று நாட்கள் வரை கெட்டுப் போகாது என்று சொல்வார்கள்.  அத்தனை செய்து வைத்து சாப்பிடுகிறோமோ இல்லையோ, தேவைப்பட்ட போது தயாரித்து சாப்பிடலாம்!

என்ன நண்பர்களே, இன்றைக்கு உங்க வீட்ல “தேப்லாவா! செய்து பார்த்துச் சொல்லுங்களேன்!

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

44 comments:

 1. இன்றைய இரவு எங்கள் வீட்டில் தேப்லா தான் மெயின் மெனு! செய்து பார்த்து சுவையாக இருந்தால் நான் சாப்பிட்டு விடுவேன். சுவை இல்லாவிட்டால் டெல்லிக்கு பார்சல் பண்ணி விடுகின்றேன்!

  “[ch]சுண்டா” எப்படி செய்வது எனவும் சொல்லுங்கள். எங்களுக்கு மாங்காய் சேர்த்த எதுவானாலும் சாப்பிட ரெம்ப பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... சுவையாகவே இருக்கும்.... ஸ்விஸ்லருந்து தேப்லா! வந்தால் சாக்லேட் என நினைத்து சாப்பிட்டுக் கொள்கிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 2. காலையிலேயே - தேப்லா அருமை..
  [ch]சுண்டா - நம்ம ஊர் மாங்கா பச்சடி மாதிரி தெரிகின்றது..

  ReplyDelete
  Replies
  1. நம்ம ஊர் மாங்காய் பச்சடி வைத்து சாப்பிட முடியாது. இது சில நாட்கள் வைத்து சாப்பிட முடியும். சூரிய ஒளியில் வைத்து தயாரிக்கப்படும் சுண்டா ஒரு வருடம் வரை கெட்டுப் போகாது என்று சொல்கிறார்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூஜி!

   Delete
 3. எத்தனை வகை உணவுகள் இல்லை? இந்த தேப்லா பற்றி ஏற்கெனவே ஒருமுறை சொல்லியிருக்கிறீர்களோ?

  ReplyDelete
  Replies
  1. விதம் விதமாய் உணவுகள்..... தேப்லா பற்றி முன்னர் சொன்ன நினைவில்லையே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  2. grrrrrrrrrrrrrrrrrrr ஶ்ரீராம், தேப்லா பத்தி நான் தான் பலமுறை சொல்லி இருக்கேன். சமீபத்தில் கூடப் படங்களோடு பகிர்ந்தேன். :) இந்த மாங்காய் சுண்டாவுக்கு மாங்காயைத் துருவிக் கொண்டு மி.பொடி, சர்க்கரை, உப்பு எல்லாம் கலந்து தினம் தினம் வெயிலில் வைத்து எடுப்பார்கள். நாங்க நிறையவே சாப்பிட்டிருக்கோம். நல்லாவே இருக்கும் வெயிலின் வாசனையோடு! :)

   Delete
  3. கிர்ர்ர்... :))) உங்க பதிவுல படிச்சத என் பதிவுன்னு நினைச்சுட்டார் போல! :))

   நீங்க குஜராத்ல இருந்தப்ப நிறையவே சாப்பிட்டு இருப்பீங்க....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 4. சாப்பிடத் தோன்றுகிறது ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 5. "தேப்லா" எங்கோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கு... செய்முறைக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வடக்கில் செய்யும் பராந்தா போலவே இருந்தாலும், தேப்லாவில் சேர்க்கப்படும் தயிர் பராந்தாவில் சேர்ப்பதில்லை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபால்ன்.

   Delete
 6. எளிமையான செய்முறையாக இருக்கிறது. ஒருநாள் செய்துவிட வேண்டியதுதான்.
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. சுலபமான செய்முறை தான். செய்து பாருங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 7. அங்கே ஶ்ரீராமுக்குச் சொன்னதுக்கு இங்கே பதில்! என்னோட தேப்லா செய்முறை குறித்த பதிவின் சுட்டி! http://sivamgss.blogspot.in/2015/08/blog-post_30.html

  ஶ்ரீராம் இங்கே தான் படிச்சிருக்கார். அதோட என்னுடைய சாப்பிட வாங்க பதிவிலும் இது குறித்துச் சொல்லி இருக்கேன். :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 8. உங்கள் சேவை தேவை நண்பரே.....ரசிக்கிறேன்...ருசிக்கத்தான் வாய்க்கவில்லை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வகுமார்.

   Delete
 9. கட்டாயம் இன்று எங்கள் வீட்டில் தேப்லா தான்,
  நல்ல பகிர்வு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 10. பெயர் தெரியாமலேயே இதைச் செய்து சாப்பிட்டதுண்டு. சப்பாத்தி செய்யும் பலவகைகளில் இதுவும் ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 11. தேப்லா' பெயரே ரொம்ப பிடித்துவிட்டது...சீக்கிரம் செய்து பார்க்கணும் என்ற ஆசையும் வந்துவிட்டது...தொட்டுக்க நம்ம ஊர் மாங்காய் பச்சடியை வச்சுக்க வேண்டியதுதான் :-)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌசல்யா ராஜ்.

   Delete
 12. எளிய செய்முறை ஒருதடவை செய்து பார்க்கத் தூண்டுகிறது சகோ...

  ReplyDelete
  Replies
  1. எளிய முறை தான். செய்து பாருங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 13. வணக்கம்
  செய்முறை விளக்கத்துடன் அசத்தல் சிறப்பு ஐயா த.ம7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 14. பெயரே வித்தியாசமாக இருக்கின்றது ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 15. மேத்தி தேப்லா, பாலக் தேப்லா அடிக்கடி செய்வேன் அண்ணா ..பசங்களுக்கு லஞ்ச்பாக்சில் கொடுத்தனுப்பினால் அவர்களுக்குப் பிடிக்கும்..அவர்களுக்காகக் கீரை, தயிர் என்று சேர்ப்பது. ஆனால் தேப்லா என்ற பெயர் இப்பொழுதுதான் அறிந்தேன் :) நன்றி அண்ணா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 16. வணக்கம்.

  கேள்விப்படாத ஓர் உணவு வகைதான்.

  செய்ய முடியாவிட்டாலும் உங்கள் படம் பார்க்கப் பசி தீரும்.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஊமைக்கனவுகள்.

   Delete
 17. பலரும் குறிப்பிடுவது போல் இதன் பெயர் தெரியாமலேயே பலமுறை செய்திருக்கிறேன். அதிலேயே காரம் உறைப்பு இருப்பதால் தொட்டுக்கொள்ள எதுவும் தேவைப்படாமலேயே சூடாக சாப்பிடலாம். பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 18. சாப்பிட வாங்க: தேப்லா - சூப்பர்ப்பா. அதாம்ப்பா நம்மவூர் stuffed பரோட்டா போல தான் இருக்குதுப்பா
  நீ நல்லா மகராசனா இருப்பா.
  விஜய், தில்லி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 19. இன்னிக்கே சாப்பிட்டு, சாரி, செய்து பார்த்துட வேண்டியதுதான்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 20. வீட்டில் செய்வதில்லை. தெரிந்து கொண்டேன்.

  கீதா: தேப்லா பல முறை பல தினுசில் செய்ததுண்டு...சுண்டாவும் செய்ததுண்டு. மகன் தேப்லாவிற்கு உபயோகிக்க மாட்டான். ஆனால் ப்ரெட் சான்ட்விச் செய்து சாப்பிடுவான். கணவர் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடுவார்!!!!

  பகிர்வுக்கு மிக்க நன்றி வெங்கட்ஜி.


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 21. ஆஹா, மீண்டும் ஓர் சாப்பாட்டு ஐட்டம். பலருக்கும் பயன்படும். பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....