எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, May 7, 2017

பூக்களும் வண்ணத்துப் பூச்சிகளும்!


சமீபத்தில் தில்லியிலிருந்து வந்திருந்த நண்பரின் குடும்பத்தினரும் நாங்களும் திருவரங்கத்தில் அமைந்திருக்கும் வண்ணத்துப் பூச்சி பூங்கா சென்று வந்திருந்தோம் என்று எழுதி இருந்தேன்.  நமது சக வலைப்பதிவர் கீதா ஜி கூட, புகைப்படங்களே எடுக்கவில்லையா என்று கேட்டிருந்தார்!  புகைப்படம் எடுக்காமலா?  இதோ இந்த ஞாயிறில், வண்ணத்துப் பூச்சிப் பூங்காவில் எடுத்த பூக்களின் படங்கள் மற்றும் சில படங்கள்!


பூக்கள் இருந்தால் தான் வண்ணத்துப் பூச்சிகள் இருக்கும் அல்லவா? இந்தப் பூங்காவில் இருக்கும் பூக்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தாலும், வண்ணத்துப் பூச்சிகள் என்னவோ மிகக் குறைவு. குறைவான அளவிலேயெ பார்க்க முடிந்தது என்றாலும் பூக்களை நிறையவே பார்த்ததால் வண்ணத்துப் பூச்சியின் படம் ஒன்றே ஒன்று மட்டும் – பூக்கள் படம் தான் நிறைய. கூடவே சில படங்களும்!


உனக்கு நிழல் தரும் மரத்திற்கு மரியாதை கொடு! ஒருவன் என்றைக்கு சிரிக்காமல் இருக்கிறானோ, அந்த நாள் தொலைந்து போன நாளே.


யார் தங்களின் கருத்துகளை எந்தச் சமயத்திலும் திருத்திக் கொள்ளாமல் இருக்கிறார்களோ, அவர்கள் உண்மையின் மீது கொள்ளும் விருப்பத்தை விட தங்களின் மீது வைத்திருக்கும் விருப்பம் அதிகமானது....


பிறரின் வீழ்ச்சியிலிருந்து, நாம் தவிர்க்க வேண்டிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்!


கடவுள் எவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து வைத்திருக்கிறாரோ, அவற்றை மனிதன் பிரிக்காமல் இருந்தாலே நிம்மதி தான்.


செயல்படாமல் இருப்பது, சிறிய ஆசைகளைக் குறைத்து, பெரிய ஆசைகளை அதிகரிக்கச் செய்யும்.


இயற்கை, நேரம், பொறுமை – இவை மூன்றும் மிகச் சிறந்த மருத்துவர்கள்....


ஒருவன் கற்க வேண்டிய விஷயங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எந்த மனிதனும் புத்திசாலி இல்லை....


ஒரு நீண்ட வாழ்க்கை சிறந்ததாக இல்லாமல் இருக்கலாம்... ஆனால் ஒரு சிறந்த வாழ்க்கை நீண்டு நிற்கக்கூடியது.....


சந்தோஷத்திற்கான எல்லா வாய்ப்புகளையும் இயற்கை உருவாக்கித் தருகின்றது.... ஆனால் அதை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது நமக்குத் தெரிய வேண்டும்....


யார் அறிவிற்காகத் தாகத்துடன் இருக்கிறார்களோ, அவர்களுக்கு அது கிடைக்கும்....


ஏமாற்றுக்காரர்கள் பிறரின் மீது ஆதிக்கம் செலுத்துவதில் ஆரம்பித்து, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதில் முடிக்கிறார்கள்....


பெரும்பாலானவர்களின் கருத்து தான், எது சரி என்பதற்கான முடிவு அல்ல!


நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் மிருகத்தனமாக நடந்து கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஒரு கெட்ட மனிதனுக்கும், ஒரு நல்ல மனிதனுக்குமிடையே உள்ள வித்தியாசமே – அதைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணத்தில் தான் இருக்கிறது....


உண்மைக்கு மிக அருகில் வரக்கூடிய ஒரு நகைச்சுவை, தன் அடையாளத்தினை பின்னே விட்டுச் செல்கிறது!


ஒரு தியாகியை உருவாக்குவது மரணமல்ல...
அந்த மரணத்தின் காரணம் மட்டுமே...


மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால்...
நல்ல உடல்நலம் இருக்க வேண்டும்....
மோசமான ஞாபகசக்தி இருக்க வேண்டும்!


பணம் நிறைந்த பர்சை விட, சந்தோஷம் நிறைந்த இதயம் மேலானது!


அமைதிக்குப் பதிலாக போரைத் தேர்ந்தெடுப்பது முட்டாள்தனம்.....
அமைதித் தன்மையின் போது மகன்கள் தந்தைகளைப் புதைக்கிறார்கள்.... போரின்போது தந்தைகள் மகன்களைப் புதைக்கிறார்கள்!


செயல்களைக் கொண்ட மனிதனாக இல்லாமல், வார்த்தைகளைக் கொண்ட மனிதனாக இருப்பவன், களைகளால் நிறைந்திருக்கும் ஒரு தோட்டத்திற்கு ஒப்பானவன்....


பிறரிடம் பார்க்கும் நல்ல விஷயங்களை நீ விரும்ப ஆரம்பித்தால், அவற்றை உன்னிடம் நீ உண்டாக்கிக் கொள்வாய்!


 உருண்டு கொண்டிருக்கும் கல், தன்னுடன் எதையுமே சேகரித்துக் கொண்டு செல்வதில்லை!


என்ன நண்பர்களே, படங்களையும் பொன்மொழிகளையும் ரசித்தீர்களா? பொன்மொழிகள் இணையத்திலிருந்து....

நாளை வேறு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து....

56 comments:

 1. வணக்கம்
  ஐயா

  படங்களும் சொல்லிய கருத்தும் சிறப்பு படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 2. படங்களுக்கு ஏற்ற பொன்மொழிகள், ரசித்தேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 3. படங்களும் பொன்மொழிகளும் ரசித்தேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 4. காவிரியில் தண்ணீர் இல்லாதபோதும் இந்தப் பூக்கள் அழகாகப் பூத்திருக்கின்றவே! சபாஷ்!

  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. காவிரியில் தண்ணீர் இல்லை... ஆனாலும் தினம் தினம் இந்தப் பூங்காவினை பராமரிக்க பாடுபடும் உழைப்பாளிகளுக்கு ஒரு சபாஷ்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.

   Delete
 5. பொன்மொழிகளுடன் வண்ணமயமான படங்கள்..

  அழகோ அழகு!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 6. அன்றாடம் நாம் கவனிக்காமல் கடந்து செல்லும் பூக்களும், அதற்கேற்ற பொன்மொழிகளும் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 7. தனக்கு வண்ணத்துப் பூச்சி என்ற பெயரையும் ,அதற்கொரு பூங்காவையும்
  மனிதன் உருவாக்கியிருப்பது வண்ணத்துபூச்சிகளுக்கு தெரியாது போலிருக்கே :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 8. அருமை ஜி!!

  கீதா: அருமை அழகூ!!! நானும், முந்தைய பயணங்கள் மற்றும் இம்முறை எனது பயணத்தின் போது நிறைய மலர்களின் படங்கள் எடுத்துள்ளேன்...பகிர்கிறேன். மஞ்சள் பூ, சங்குபுஷ்பம், தித்திப்பூ, வண்ணத்துப் பூச்சி ஆனால் மலரின் மீதல்ல, ஃப்ளாட் படிகளில்.... எனது ஆல்பத்திலும் இருக்கிறது...பகிர்கிறேன்...புகைப்படங்கள் மிக அழகு அது போல கருத்துகளும்...

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 9. பொன்மொழிகள் எல்லாம் நல்லா இருந்தது. பூக்களைப் பார்ப்பது எப்போதுமே சந்தோஷம்தான்.

  ReplyDelete
  Replies
  1. பூக்களைப் பார்ப்பது எப்போதுமே சந்தோஷம் தான்! உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 10. பொன்மொழிகள் தொகுப்பு அருமை. படங்கள் வண்ண கலவை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாண்டியன் சுப்ரமணியம் ஜி!

   Delete
 11. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில் கிளாஸ் மாதவி.

   Delete
 12. புய்ப்பங்கள் அனைத்தும் அழகு... வோட் போட்டாஆஆஆஆஅச்ச்ச்ச்ச்ச்:).

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 13. முக்கியமாந ஓட்டு என் ஓட்டு!
  பொன்மொழிகள்,பொன்னான படங்கள் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 15. படங்களும் பொன்மொழிகளும்
  எது சிறந்தது என தீர்மானிக்க முடியாதபடி
  போட்டி போடுகின்றன
  மனதிற்கும் கண்களுக்கும்
  குளிர்ச்சியான பதிவினைத் தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 16. படங்களுக்குக் கொடுத்திருக்கும் வார்த்தைகள் அருமையோ அருமை. எங்கிருந்து பிடித்தீர்கள்? ரொம்ப ரசித்தேன். சேமித்து வைத்துக் கொள்ளத் தோன்றுகிறது.

  படங்களை அப்புறம் தனியாக மீண்டும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. பொன்மொழிகள் இணையத்திலிருந்து தான் எடுத்தவை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 17. படங்களும் அனுபவங்களும் உங்கள் பதிவில் நிறையவே இருக்கும் இப்போது அழகான வார்த்தைகளும் அலங்கரிக்கின்றன வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 18. அருமை கண்களுக்கு குளுமையாக இருந்தன ஐயா. நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம்...

   Delete
 19. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 20. மலர்களின் படமும் , பொன்மொழிகளும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 21. பூக்களின் படங்களும் அருமை! தேர்ந்தெடுத்த தந்த பொன் மொழிகளும் அருமை!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 22. பூக்களும், பொன் மொழிகளும் கண்களையும், சிந்தையையும் கவர்ந்தன.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயந்தி ஜெயா ஜி!

   Delete
 23. அழகு...படங்களும் வரிகளும்


  இந்த முறையும் மேலூர் வரை சென்றும் வண்ணத்து பூச்சி பூங்காவிற்க்கு செல்ல முடியவில்லை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி.

   Delete
 24. அழகான பூக்கள். அருமை.
  (நம்ம ஊரில் அடிக்கிற வெயிலில் வண்ணத்துப் பூச்சி மட்டும் வெளியில சுத்துமா, என்ன!)
  (தமிழ்நாட்டுப் பக்கம் போனாலே தத்துவமும் பொன்மொழியும் கொட்டொ கொட்டுன்னு கொட்டத்தான் செய்யும்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 25. ரசித்தேன்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மொஹம்மத் ஜி.

   Delete
 26. butterfly ponvandu padangaLum pookkalum ponmozhigalum arputham Venkat sago :)

  veyyilukku itham :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

   Delete
 27. படங்கள் மிக அழகு. பொன்மொழிகள் கருத்தாழம் மிக்கவை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 28. பூவும் பொன்னான கருத்துக்களும் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....