புதன், 3 மே, 2017

பயணங்கள் முடிவதில்லை – ஒரு கருத்துக் கணிப்புஅதிகரித்திருக்கும் பணிச்சுமை காரணமாக தொடர்ந்து எழுதுவது இயலாத ஒரு விஷயமாக இருக்கிறது. பதிவுகள் எழுதுவதற்காக நேரமும் செலவிட வேண்டியிருக்கிறது. Blogger மூலம் நான் தொடரும் அனைத்து பதிவர்களின் பதிவுகளையும் பெரும்பாலும் வாசித்து விடுகிறேன் – அவர்கள் எனது பதிவுகளை வாசிக்கிறார்களோ இல்லையோ, கருத்து சொல்கிறார்களோ இல்லையோ, அனைவரது பதிவுகளையும் வாசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். Controversial பதிவுகள் தவிர மற்ற பதிவுகள் அனைத்திலும் நான் படித்ததன் அடையாளமாக தமிழ்மண வாக்கு அளிக்கிறேனோ இல்லையே, கருத்துரை எழுதாமல் வருவதில்லை. வலையுலகில் எப்போதுமே ஒரு Give and take policy இருப்பது கண்கூடு! நீங்க படிச்சா, நானும் படிப்பேன்! இருந்தாலும் பரவாயில்லை! நான் அப்படி இல்லை!
தொடர்ந்து பயணக் கட்டுரைகள் எழுதித் தள்ளுவது எனக்கே அலுப்பு தரும்போது, படிக்கும் உங்களுக்கும் அலுப்பு தரலாம். பயணக் கட்டுரைகள் தொடர்ந்து படிக்கும் சில நண்பர்களுக்கும், பயணத்தில் விருப்பம் உள்ளவர்களுக்குப் பிடித்திருந்தாலும், தொடர்ந்து ஏதாவது ஒரு பயணத் தொடர் எனது தளத்தில் வருவது சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்! சமயங்களில் எனது பயணத் தொடர் பதிவுக்கு வரும் நண்பர்களின் எண்ணிக்கை அதை உறுதி படுத்துகிறது.  பெரும்பாலான பதிவுகளுக்கு வரும் கருத்துரைகளும் மிகக் குறைவு தான்.

பல பதிவர்கள் தங்களது பதிவுகளை ஆயிரக்கணக்கானோர் வாசிக்கிறார்கள் என்று எழுதும்போது எனது பதிவுகளுக்கான எண்ணிக்கை வெட்கப்பட வைக்கிறது – வெறும் நூறுகளில் இருக்கும் அந்த எண்ணிக்கை, எனக்கு “எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்என்று சொல்வது போல நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்ற உணர்வினைத் தருகிறது. பெரும்பாலான பதிவுகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 250-300-ஐத் தாண்டுவதில்லை – இந்த எண்ணிக்கையில் நான் பார்த்தவையும் அடங்கும் என்பதால் அதிலிருந்து கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது பக்கப்பார்வைகளுக்கான கணக்கு!
எனது பதிவுகளிலேயே அதிகமாய் படிக்கப்பட்ட பதிவுகள் என்ற கணக்கை Blogger தளத்தில் பார்க்கும்போது அந்த எண்ணம் வலுக்கிறது – பயணங்கள் பற்றிய பதிவுகள் அதிகமாக எழுதி இருக்கும் எனது தளத்தில், அதிகமாய் வாசிக்கப்பட்ட முதல் பத்து பதிவுகளில் ஒரு பதிவு கூட பயணம் பற்றிய தொடரில் வந்த பதிவு அல்ல! முதல் இரண்டு இடங்களில் இருக்கும் பதிவுகள் என்ன என்று நீங்களே பாருங்களேன்! இதிலிருந்தே எனது பதிவுகளுக்குக் கிடைக்கும் வரவேற்பு உங்களுக்குத் தெரியும்! இப்படி இருக்கையில் தொடர்ந்து எழுத வேண்டுமா என்ற எண்ணம் சில சமயங்களில் வருவதுண்டு. ஆனாலும் உங்களை விடப்போவதில்லை!

பயணங்கள் முடிவதில்லை என்றுதான் நானும் சொல்ல வேண்டும். சென்று வந்த பயணங்கள் இருக்க, அந்த அனுபவங்களைத் தொகுத்து வைப்பது எனக்கான தேவையும் உண்டு என்பதால் எழுதத் தான் போகிறேன்! படிப்பதும் படிக்காததும் அவரவர் விருப்பம்.  

சமீபத்தில் முடித்த ஹனிமூன் தேசம் தொடரில் சொன்ன பயணத்திற்குப் பிறகு மூன்று பயணங்கள் சென்றிருக்கிறேன் – தரம்ஷாலா, சம்பா, கஜியார் [ஹிமாச்சலப் பிரதேசம்], ஆந்திரப் பிரதேசம்-ஒடிசா, குஜராத்-தியு [Daman & Diu] ஆகிய மூன்று பயணங்கள் சென்று வந்ததை எழுதினாலே குறைந்தது இன்னும் ஐம்பது பதிவுகளுக்குக் குறையாமல் எழுதலாம்! ஆனால் இந்த மூன்று பயணங்களில் எதை எழுதுவது என்ற குழப்பம்.

சரி படிக்கப் போகும் உங்களையே ஒரு வார்த்தை கேட்டுடலாமே என்று ஒரு சின்ன opinion poll…. கீழ்க்கண்ட மூன்று பயணங்களில் எந்த பயணம் பற்றிய கட்டுரைகள் முதலில் வெளியிடுவது என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.பயணம் – 1: தரம்ஷாலா, மினி ஸ்விஸ்-கஜியார், சம்பா – ஹிமாச்சலப் பிரதேசம்


பயணம் – 2: Araku Valley, Andhra Pradesh மற்றும் ஓடிசா


பயணம் – 3: கிர் வனம், குஜராத் மற்றும் கடற்கரை நகரம், தியு!

இந்தப் பயணங்களில் எந்தப் பயணம் பற்றிய கட்டுரை வேண்டும் என்ற வரிசையை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்! அதிக விருப்பம் கிடைக்கும் வரிசையில் பயணக்கட்டுரைகள் வெளிவரும்!

தொடர்ந்து பயணிப்போம்....

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து.....


52 கருத்துகள்:

 1. வெங்கட்... மற்றவர்கள் படிப்பதுதான் நோக்கம், நிறையபேர் படிக்கவேண்டும் என்பதுதான் AIM என்று நினைத்தால், கான்ட்ரவர்ஷியல், சினிமா, கிளுகிளு பத்திகள்தான் எழுதமுடியும். அதனால், நிறையபேர் படிக்கவேண்டும் என்பதை நோக்கமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

  பயணக் கட்டுரைகளின் பயன், உங்களுக்கு ஒரு நாட்குறிப்பு போன்று, தேவையானவர்களுக்கு எந்த எந்த இடங்களைப் பார்க்கவேண்டும் போன்ற விஷயங்களுக்கு, மற்றவர்களுக்கு தெரிந்திராத இடங்களையும், மக்களையும் ஓரளவு அந்த இடங்களின் சமூக நிலையையும் படித்துத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு. நானே, பாலித் தீவுகள் போய் வந்தபிறகுதான், துளசிதளத்தில் ஏற்கனவே அதைப் பற்றி எழுதியிருப்பது தெரியவந்தது. அதனால், பயணக் கட்டுரைகளைத் தொடருங்கள்.

  உங்களுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை. ஆனந்தவிகடன் முன்னாள் ஆசிரியர் மணியன், பின்பு 'இதயம் பேசுகிறது மணியன்' என்று அறியப்பட்டவர் (அவர் ஆரம்பித்த பத்திரிகை இதயம் பேசுகிறது) அவரது பயணக் கட்டுரைகளால்தான் அறியப்பட்டவர்.

  எனக்கென்னவோ, ஆந்திரப்பிரதேசம்/ஒடிஷா, கிர் வனம்/குஜராத், அதற்கப்புறம் ஹிமாசல்பிரதேசம் என்று எழுதினால் சரியாக இருக்கும். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்புறம் எனக்கு இன்னொரு சந்தேகம். பொதுவா நீங்கள் எழுதப்போகும் இடத்தில் எடுத்த படத்தை தளத்தின் முகப்பில் வைப்பீர்கள். கொஞ்ச வாரமாவே கிர்/குஜராத் படம் இருக்கு. அதனால் குஜராத் கட்டுரைதான் முதலில் வரும் என்று தோன்றுகிறது. (இது என்ன முதலில் முடிவு செய்த கருத்துக்கணிப்பா? :)))

   நீக்கு
  2. முதலில் ஆந்திரப் பிரதேசம், இரண்டாவது கிர் வனம் மூன்றாவது ஹிமாச்சல்! ஓகே....

   //மற்றவர்கள் படிப்பதுதான் நோக்கம், நிறையபேர் படிக்கவேண்டும் என்பதுதான் AIM என்று நினைத்தால், கான்ட்ரவர்ஷியல், சினிமா, கிளுகிளு பத்திகள்தான் எழுதமுடியும்// உண்மை.

   மணியன் அவர்களின் பயணக் கட்டுரைகளை நானும் படித்ததுண்டு. சுவைபட எழுதுபவர். வெளிநாட்டு பயணங்கள் பற்றி அவர் எழுதும் கட்டுரைகள் எனக்கும் பிடித்தவை....

   சில நாட்களில் பயணக் கட்டுரைகள் ஆரம்பிக்கும்!

   நீக்கு
  3. //அப்புறம் எனக்கு இன்னொரு சந்தேகம். பொதுவா நீங்கள் எழுதப்போகும் இடத்தில் எடுத்த படத்தை தளத்தின் முகப்பில் வைப்பீர்கள். கொஞ்ச வாரமாவே கிர்/குஜராத் படம் இருக்கு. //

   அப்படி இல்லை. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை படம் மாற்றுவது வழக்கம். இந்த முறை மார்ச் ஒன்று முதல் இதே படம் இருக்கிறது! மாற்றி இருக்க வேண்டும்.... இன்னும் மாற்றவில்லை! அதற்கும் கட்டுரைகளுக்கும் சம்பந்தம் இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 2. ஆனாலும் உங்களை விடப்போவதில்லை ஹா.. ஹா.. ஹா.. ஸூப்பர் ஜி

  மூன்றாவது குஜராத் பற்றி முதலில் எழுதுங்கள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குஜராத் பற்றி முதலில்.... பார்க்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 3. பயணம் 3 கிர் வனம் பெயரே கிர்ரென்று இருக்கு..
  அதான் என் சாய்ஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிர் வனம் பெயரே கிர்ரென்று இருக்கு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 4. //வலையுலகில் எப்போதுமே ஒரு Give and take policy இருப்பது கண்கூடு! நீங்க படிச்சா, நானும் படிப்பேன்! இருந்தாலும் பரவாயில்லை! நான் அப்படி இல்லை!//

  இதைப் பனிரண்டு வருடங்களாகப் பார்த்து வருகிறேன். ஒரு சிலர் தவிர பலரும் என் பதிவுகளுக்கு அதிகம் வருவதில்லை என்பதன் காரணமும் இது தான் என நினைத்துக் கொள்வேன். என்னால் எல்லாப் பதிவுகளுக்கும் கிடைக்கும் நேரத்தில் போக முடியறதில்லை என்பதோடு நான் எழுதுவதையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டும் வருகிறேன். ஆனாலும் உங்களை மாதிரித் தான் நானும் நினைக்கிறேன். இப்போதைக்கு யாரையும் விடக் கூடாதுனு! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இப்போதைக்கு யாரையும் விடக்கூடாது!// அதே தான். பனிரெண்டு வருடங்கள்! You are more experienced in this too! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 5. திரு நெ.த.வோட முதல் கருத்தை முற்றிலும் ஆதரிக்கிறேன். வராங்களோ இல்லையோ அதைப் பத்தி எல்லாம் அதிகம் கவலைப்படுவதில்லை! :)))) பார்வையாளர்கள் இருந்தால் கருத்துச் சொல்பவர்கள் இருப்பதில்லை. நிறையக் கருத்துகள் வந்தால் பார்வையாளர்கள் இருக்கிறதில்லை! :) பொதுவாக எனக்கு 20 கருத்துக்களுக்கு மேல் போனதில்லை! எப்போவானும் கொஞ்சம் கூடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வராங்களோ இல்லையோ அதைப் பத்தி எல்லாம் அதிகம் கவலைப்படுவதில்லை! - நானும் அப்படித்தான். சில சமயங்களில் இது போன்ற எண்ணங்கள் வருவதுண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 6. Venkat, I am reading your blog from the start !Many Years! Hats off. Your blog is useful and good to read. keep you good work. Pl keep writing travel blog ,most of them love reading it !
  VS Balajee

  பதிலளிநீக்கு
 7. அடாது மழை பெதாலும் விடாது நாடக ம் நடக்கும் என்பார்கள் என்னதான் பணிச்சுமை என்று இருந்தாலும் எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் நேரம் ஒதுக்கும் உங்களைப் பாராட்டுகிறேன் பலரது பதிவுகளைப் பற்றிப் படிக்கும் போது பல ஆயிரம்பேர் வருகை தருகின்றதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றனர் சுமார் ஏழாண்டுகளாக 800 க்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதிய என் படிவுகளுக்கு வருகை தருவோர் எண்ணிக்கை abysmally less இத்தனைக்கும் எல்லா தலைப்புகளிலும் சினிமா தவிர எழுதி இருக்கிறேன் உங்களுக்கு பிடித்ததை எழுதுங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல்சுவைப் பதிவராயிற்றே நீங்கள்.... சினிமா எழுதவில்லை என்றாலும் தப்பில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   நீக்கு
 8. வெங்கட் நாகராஜ் சார்

  எனக்குக் கூட என் பதிவுகளை நிறைய பேர் படிப்பதில்லை என்ற வருத்தம் இருந்தது. எப்பொழுதும் வருகை தரும் மகானுபாவர் கோபு அண்ணா (வை கோபாலகிருஷ்ணன்) ஒருவர் தான்.

  ஆனால் என் பக்கமும் தப்பு இருக்கிறது. நேரம் இல்லை என்ற காரணத்தான் எழுதவில்லை. அதே போல் மற்றவர்கள் தளங்களுக்கும் சென்று பின்னூட்டம் இடுவதில்லை.

  இப்பொழுது கொஞ்சம், கொஞ்சமாக நிறைய பதிவர்களின் தளத்திற்குச் சென்று பின்னூட்டம் இடவேண்டும் என்று ஆரம்பித்திருக்கிறேன்.

  //வலையுலகில் எப்போதுமே ஒரு Give and take policy இருப்பது கண்கூடு! //

  உண்மைதான். ஆனால் இதில் ஒன்றும் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இதெல்லாம் செல்லக்கோபம் போல் தான்.

  நான் கூட ரொம்ப நாட்களாக இங்கு வருகை தரவில்லை. இப்ப நான் வந்துட்டேன். நீங்களும் வாங்கோ.

  வாழ்த்துக்களுடன்
  ஜெயந்தி ரமணி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Give and Take Policy - தவறு என்று சொல்லவில்லை! பல விஷயங்களில் இப்படித்தான்!

   உங்கள் பதிவுகளை நான் தொடர்வதில்லை. உங்கள் தளத்தில் Follower Gadget இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். இதோ வருகிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயந்தி ரமணி ஜி!

   நீக்கு
 9. பயணக்கட்டுரைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

  கண்டிப்பாக வந்து படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா உங்கள் தளத்திலும் பயணக் கட்டுரைகள்.... இதோ வருகிறேன்.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயந்தி ரமணி ஜி!

   நீக்கு
 10. வெங்கட் நீங்கள் சந்தனமாக இருக்க வேண்டுமா இல்லை சாக்டையாக இருக்க வேண்டுமா என்ரு முடிவு செய்யுங்கள் சந்தனம் அளவில் குறைந்து இருந்தாலும் என்றும் மணக்கும் ஆனால் சாக்கடை அளவில் பெரிய அளவில் இருந்தாலும் அது மணக்காது அது போலத்தான் உங்கள் பதிவுகள் சந்தனமாக மணக்கிறது...

  நான் உங்களிடம் பல தடவை இதயம் பேசிகிறது மணியனுக்கு அடுத்து நீங்கள்தான் தரமான பயணப்பதிவுகள் எழுதுகிறீர்கள் என்று சொல்லி இருக்கிறேன்


  உங்கள் இமெயில் ஐடியை எனக்கு அனுப்பிவையுங்கள் இன்னும் அதிக அளவு எப்படி பார்வையாளர்களை எப்படி கவர்வது என்று சொல்லுகிறேன்


  உதாரணமாக எனக்கு தமிழ் மண்த்தில் இருந்து வரும் பார்வையாளர்களைவிட பேஸ்புக்கில் இருந்து வரும் பார்வையாளர்கள் அதிகம்தான் ஆனால் என் பேஸ்புக் அக்கவுண்டை பார்த்தீர்கள் என்றால் அதற்கு வரும் லைக் 5 அல்லது கூடினால் 10தான் வரும் ஆனால் அங்கிருந்து வரும் கூட்டம் மிக அதிகம் அதுமட்டுமல்ல வேறு சில இடங்களில் அவர்கள் என் பாலோவர்கள் இல்லை என்றாலும் அதிக அளவு லைக்ஸும் அல்லது பாராட்டியோ அல்லது கழுவி ஊற்றியோ வரும்..


  வேலைக்கு செல்லும் நேரம் வந்துவிட்டது மீண்டும் வருகிறேன்.


  ஒன்று மட்டும் சொல்லுகிறேன் பார்வையாளர்கள் எண்ணிக்க்கையை கண்டு மனம் சோர்ந்து போக வேண்டாம் நிச்சய்ம் உங்கள் திறமை ஒரு நாள் ஊடகங்கள் மூலம் வெளிவரும் அதிக பாராட்டை பெறும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்தனமா இல்லை சாக்கடையா - நல்ல கேள்வி மதுரைத் தமிழன். பெரும்பாலும் பார்வையாளர்களைக் கவர்வதற்காக பதிவுகள் எழுதுவதில்லை. நல்ல விஷயம் நிறைய பேர் படிக்கலாமே என்ற எண்ணத்தில் மட்டுமே இந்தப் பதிவினை எழுதினேன்.

   எனது மின்னஞ்சல் முகவரி எனது வலைப்பூவில் இருக்கிறதே - venkatnagaraj@gmail.com.

   தங்களது வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
  2. Avargal Unmaigal
   உங்கள் தளத்தில் 600 வது FOLLOWER ஆக இணைந்துள்ளேன். அப்படியே என் தளத்திற்கும் வருகை தாருங்கள்.
   https://manammanamveesum.blogspot.in/

   http://aanmiigamanam.blogspot.in/


   நீக்கு
  3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயந்தி ஜெயா ஜி!

   நீக்கு
 11. பயணக்கட்டுரைகள் சுவாரஸ்யமாக எல்லோராலும் எழுத முடியாது வெங்கட்.உங்களால் முடிகிறது.நிறுத்த வேண்டாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 12. வலையுலகில் ப்யண்க் கட்டுரைகள்
  உங்களைப் போல
  மிகச் சிலர்தான் எழுதுகிறார்கள்

  நான் போகாத போக விரும்புகிற ஊர்
  குறித்த விவரங்களை இந்தப் பதிவுகளில்
  இருந்து தெரிந்து கொள்கிறேன்

  மிகக் குறிப்பாக அழகானப் படங்களுட்ன்
  முக்கியக் குறிப்புகளுடன் எளிய
  இனிய நடையில் தங்கள் பதிவுகள்
  உள்ளதால் நான் தங்கள் பயணப் பதிவுகளைத்
  தொடர்வதில் மிக்க ஆர்வம்கொள்கிறேன்
  விடாது தொடர்ந்தால் மகிழ்வேன்

  மூன்று சுற்றுலாத் ஸ்தலங்களும்
  பார்க்காத இடம் என்பதால் எது
  முதலிருந்தாலும் எனக்கு உடன்பாடே...

  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூன்றுமே பார்க்காத இடங்கள்..... விரைவில் ஆரம்பிக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 13. Vaalthukal aya. muthalil sendra idthel iruthu variseyaga thodarthaal yathuvum vidupadamal eluthamudium endru naan ninekeran. thanjai periya koili katimuditha podhu evlo pakthargal vantu irupaga. atha ipa evlo pakthargal varuvaargal endru eni paarugal. paarvaiyalargal varuvathail manam seluthe aaraiyamal inum sirapaga ena elam eluthil tharamudium endru yosithaal! tirupathi pirasatham suvaikavendum endru varupavargal thinamum ethanai peer?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி My Mobile Studios!

   நீக்கு
 14. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நான்.....

   உங்களது முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி.

   நீக்கு
 15. பயணக்கட்டுரைகளை நிறுத்த வேண்டாம். என் போன்ற கிணற்றுத் தவளைகளுக்கு அதுதான் அறிந்து கொள்ளவும், சுவாரஸ்யமாகப் படிக்கவும் வசதி. இடையே மற்ற பதிவுகளும் இடலாம். பதில் மொய் பாலிசி பதிவுலகில் சகஜம்! நாம் கொஞ்சநாள் அங்கு போகவில்லையெனில் மறந்து விடுவார்கள்! நானும் ஒரு பத்திவைப் படித்தால் கமெண்ட் விட்டுவிடுவேன். தம வாக்கும் இதுவரை தவறாமல் அளித்து விடுகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடருங்கள் வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   பயணக் கட்டுரைகள் நிச்சயம் தொடரும்.

   நீக்கு
 16. ஜி...நான் அடிக்கடி நினைப்பதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்....உங்கள் பாலிசி தான்...யார் வருகிறார்களோ இல்லையோ...எல்லா பதிவுகளையும் வாசித்து விடுவதுண்டு.....வாக்க்உ அளிப்பதை விட கருத்து முக்கியம் என்று நினைப்பதுண்டு......மொபைலில் அபிப்பதால் விரிவாக அடிக்க முடியல...பயணம் வேறு...நெல்லை முதல் கருத்து, மற்றும், மதுரையின் கருத்தை வழி மொழிகிறேன்...

  ஒரிஸ்ஸா, ஆந்திரா,.ஹிமாச்சல்....சமீபத்தில் தான் ஆந்திரா சென்று வந்தேன்.அறைக்கு, விசாகப்பட்டினம் பீச், கைலாச கிரி,..என்று...ஒரிசா போனதில்லை.அதான்...

  நீங்கள் என்ன எழுதினாலும் நாங்கள் வாசிக்க ரெடி...உங்கள் பதிவுகள் அனைத்தும் முத்துக்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 17. ஐயா
  பொதுவாகவே
  எழுதுகிறவர்களின் எண்ணிக்கையும்
  வாசிக்கிறவர்களின் எண்ணிக்கையும் குறைந்துதான் போய்விட்டது.
  வலையில் எழுதாதவர்களே, தொடர்ந்துவாசித்துக் கொண்டிருக்கிறார்கள்,
  நமது பதிவை வாசித்தவர்களின் எண்ணிக்கைக்கும், கருத்து கூறியவர்களின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் பார்த்தால், மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.
  தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும்,எங்களையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே, இந்தியாவைச் சுற்ற அழைத்துச் செல்லும் பதிவுகள். தரமான பதிவுகள்.
  தொடர்ந்து பயணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.... உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 18. நானும் நெல்லைத்தமிழன் சொன்னதை (முதல் கருத்தை ) ஆமோதிக்கிறேன்.
  பயணக் கட்டுரை பலருக்கு உதவும். நாங்கள் பயண்ம போகும் போது ஊரைப்பற்றி, தங்கும் இடம் பற்றி, உணவுகளைப் பற்றி தெரிந்து கொண்டு தான் பயண்ம செய்வோம்.

  பயணக்கட்டுரைகள் எழுதுங்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 19. தொடர்ந்து எழுதுங்கள் வெங்கட்

  நன்றி

  ஹரி ராஐகோபாலன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் முதல் வருகையோ.... மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹரி ராஜகோபாலன் ஜி!

   நீக்கு
 20. பயணக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதுங்கள். படிக்க நாங்கள் இருக்கிறோம். முதலில் ஹிமாச்சல பிரதேசம்,பிறகு குஜராத்,கடைசியாக ஒடிசா என்ற வரிசையில் எழுதலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 21. பயணக் கட்டுரைகள் நீளமாக இருந்தாலும், ஓரிரு பதிவுகளில் முடித்துவிடுங்கள். உங்கள் கட்டுரைகள் அதிக எண்ணிக்கையிலான பதிவுகளாக இருப்பதால் நான் வருவதில்லை. காரணம் முதலில் இருந்து பதிவுகளைத் தேடிப்பிடித்து படிக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 4 நாட்கள் பயணத்தினை ஓரிரு பதிவுகளில் முடிப்பது எப்படி சரவணன்! 15 நாட்கள் பயணம் செல்லும்போது அதையும் ஓரிரு பதிவுகளில் முடிக்க முடியுமா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரவணன்.

   நீக்கு
 22. நான் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன். நீங்கள் இதே போல் தொடர்ந்து எழுதுங்கள். இது எல்லோராலும் முடியும் விஷயமல்ல. உங்களுக்கு கடவுள் கொடுத்த ஆற்றல். எதையும் கண்டுக்காம போய்கிட்டே இருங்கப்பா.
  சுதா த்வாரகாநாதன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதாஜி.

   நீக்கு
 23. சார் எழுத மாட்டேன் சொல்லி தலைல கல்லைப் போடாதீங்க, உங்க பதிவுகளை படிச்சுட்டுத்தான் நானே அங்கெல்லாம் போய்ட்டு வந்த மாதிரி திரிஞ்சுகிட்டு இருக்கேன். என்றோ ஒரு நாள் போவேன்னும் நம்பிகிட்டு இருக்கேன். தயவு செய்து தொடர்ந்து எழுதுங்க.

  அப்புறம் இந்த போக்குவரத்து அதான் பஸ், டிரெய்ன் மற்றும் தங்குமிடம் பற்றிய குறிப்புகளை கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க புண்ணியமா போகும்

  அரக்கு வேலி எனக்கு அவசியம்.நான் சென்னைவாசி.சும்மா உங்க கவனத்துக்கு.எனக்காக மட்டுமேயானாலும்கூட விடாம எழுதுங்க

  உருப்படியான ஒரு சிஷ்யை போறாதா குருவே.நான் ஏகலைவி. கட்டை விரலை கேக்க மாட்டீங்கல்லே. நன்றியுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கட்டை விரலை கேக்க மாட்டீங்கல்ல! ) நிச்சயம் இல்லை!

   அரக்கு வேலி! விரைவில் தொடரும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சித்ரா.

   நீக்கு
 24. அய்யோ அப்புறம் ஒன்னை சொல்ல மறந்துட்டேன்.தயவு செய்து சுருக்காதீங்க. எல்லா விவரங்களையும் சொல்லுங்க. உங்க அடிச்சுவடை தொடர எங்கோ சில காலங்கள் தயாராயிட்டு இருக்கும் அதுல நாலு எந்தும் என்ற வூட்டுக்காரருதும் குருவே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரும்பாலும் விவரங்களைச் சுருக்குவதில்லை. சொல்லி விடுவது தான் வழக்கம். இனிமேலும் தொடரும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சித்ரா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....