எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, March 11, 2018

லலித் கலா மேளா – ஓவியங்களும் சிற்பங்களும் - புகைப்பட உலாகடந்த ஞாயிறன்று, Lalit Kala Academy சார்பில் தலைநகர் தில்லியில் ஃபிப்ரவரி 4 முதல் 18-ஆம் தேதி வரை முதலாம் உலகளாவிய கலா மேளாவிலிருந்து சில ஓவியங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். இதோ அதே நிகழ்வில் எடுத்த வேறு சில புகைப்படங்கள் இரண்டாவது பதிவாக…


உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாமே!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

14 comments:

 1. வாவ்....ஜி அனைத்து படங்களும் சூப்பர்.....

  நடனம் ஆடும் பெண்ணின் முகம்...வெறுமையாய் இருப்பது ஏதேனும் செய்தியுடன் கூடியதாய் இருப்பது போல் தோன்றுகிறது....

  லைட்டிங்./ஓளி...கூட ஓவியத்தில் மிக அழகாகக் காட்டப்பட்டு...கீழிருந்து 5, 6 வது படங்கள்....அழகு...

  கீதா

  ReplyDelete
 2. பரமசிவன் பட்டினி சிவனாய் இளைத்திருக்கிறாரே (1)... முகம் மட்டும் காட்டா அந்த மங்கை யாரோ!(2) ... பயணத்தில் தூங்குகிறார்களா? திரைப்படத்தில் தூங்குகிறார்களா! (4).. சேவல்கள் ஆடி முடித்ததும் அல்லது அந்தப் பெண்கள் எழுந்து போனதும் வெட்டக் காத்திருக்கிறாரோ பட்டாக்கத்தியோடு அந்த தேவன்! (5) அதைக்கண்ட ஒரு பெண் எழுந்து சென்று பாதுகாப்புக்கு ஒரு பட்டாக்கத்தி கேட்கிறாளோ வழியில் வரும் வீரனிடம்! (6) கிணற்றடி ஓவியம் அழகு. அனைத்து ஓவியங்களையுமே ரசித்தேன்.

  ReplyDelete
 3. என்னைக் கவர்ந்தவர் நம்ம நண்பரின் இருவேறு தோற்றங்கள் தான். முகம் காட்டாமல் ஆடும் பெண்ணும் ! ஏன்? கிணற்றடியில் ஓய்வாக உட்கார்ந்திருக்கும் பெண் குளிக்கச் சோம்பலோ? ஆடும் சிவன் ஆடி ஆடி இளைத்துவிட்டார் போல!

  ReplyDelete
 4. ஓவியங்களும் சிற்பங்களும் அருமை. பரதநாட்டியப் பெண் நல்லாருக்கு.

  ReplyDelete
 5. அழகான ஓவியங்கள்.. காணக் கிடைத்ததில் மகிழ்ச்சி..

  ReplyDelete
 6. ஶ்ரீராம் - உங்களைப் போன்றவர்கள் சிதம்பரம் வரை போய், நடராஜமூர்த்திக்கு அமுது செய்விக்கலை என்றால் அவன் இளைத்திருப்பதில் என்ன ஆச்சர்யம்?

  ReplyDelete
 7. ஶ்ரீராம் - உங்களைப் போன்றவர்கள் சிதம்பரம் வரை போய், நடராஜமூர்த்திக்கு அமுது செய்விக்கலை என்றால் அவன் இளைத்திருப்பதில் என்ன ஆச்சர்யம்?

  ReplyDelete
 8. 1) ஆடிக் களைத்து, இளைத்துப்போன சிவனார் !

  2) முகத்தை மட்டுமே காட்டாமல் திருப்பிக்கொண்டு, புறாவை நோக்கிடும் பெண்குட்டி .... மற்ற அனைத்தையும் காட்டியபடி .... பச்சையான படம் .... (அதாவது பச்சைக்கலரில் !)

  3) ஆஹா .... வீட்டுக்கு வீடு நடப்பதே .... களிப்புடன் கட்டிக்கொண்டு இருவர் .... மிகவும் இயல்பாக சிகப்பு நிறத்தில் .... ஒருவேளை ’செம்மாதுளைப் பிளந்து தா ... தா ... தா ...’ எனப் பாடிக்கொண்டு இருப்பார்களோ !

  முதல் மூன்று படங்கள் தவிர வேறு எதுவும் எனக்கு ஓபன் ஆகவே இல்லை. :(((((

  ReplyDelete
 9. அனைத்து ஓவியங்களும் அழகு. அருமையான சிற்பங்கள். நல்ல பகிர்வு.

  ReplyDelete
 10. மிக மிக வித்தியாசமான ஓவியங்கள். பிள்ளையார் சிலையும் அடர்த்தியான மரமும் அழகு.

  ReplyDelete
 11. ஒவ்வொரு ஓவியமும் யூகித்து முடிவுக்கு வரவேண்டியது இருக்கிறது அத்தனை கலை நுணுக்கம் அருமை ஜி

  ReplyDelete
 12. எல்லா ஓவியங்களும் சிற்பங்களும் அருமை.

  2,3,4 ஒரே நிறத்தை (கருப்பை தவிர) பயன்படுத்தி தீட்டியிருப்பது அழகு. சேவல் சண்டை, பொய்க்கால் குதிரைகள் ஓவியங்கள் கவரும் வண்ணம் உள்ளன.

  பெரும்பாலும் தமிழக பின்புலம் கொண்ட ஓவியங்களாகவே இருக்கின்றனவே. தமிழ்நாட்டு ஓவியர்களின் ஓவியங்களை மட்டும் படம் பிடித்தீர்களா?

  ReplyDelete
 13. பொய்க்கால் குதிரை ஓவியங்கள், அந்த முகமில்லா நடன மங்கை ஓவியம் மிக மிக அழகு!!

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....