எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, May 14, 2018

குஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – மான் கண்டேன் மயில் கண்டேன்இரு மாநில பயணம் – பகுதி – 38

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


மான் கண்டேன்...  மானும் எங்களைக் கண்டது...
Gகிர் வனத்திற்குள்....


எட்டு சிங்கங்களை அவ்வளவு கிட்டத்தில் பார்த்ததில் எங்கள் குழுவில் இருந்த அனைவருக்குமே மகிழ்ச்சி. வேறு எதைப் பார்க்க முடிகிறதோ இல்லையோ, சிங்கங்களுக்குப் பெயர் போன Gகிர் வனத்திற்குள் வந்துவிட்டு சிங்கங்களைப் பார்க்க முடியாமல் போனால் என்ன பலன்! அதுவும் கேரளத்திலிருந்து இதற்காகவே வந்து என்ன பலன்! அதனால் கேரளத்திலிருந்து வந்த நான்கு நண்பர்களும் “வாழ்க்கையின் பலனையே அடைந்த” ஒரு உணர்வில் இருந்தார்கள். நானும் இந்த மாதிரி நிறைய வனப்பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன் – அனைத்திலுமே எனக்கு பிடித்தது – அசாமின் காசிரங்காவும் குஜராத்தின் இந்த Gகிர் வனமும் தான். எங்களுடன் வந்திருந்த வழிகாட்டியும் நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள் போலும் என்று சொல்லிக் கொண்டு வந்தார். சிலர் ஒரே நாளின் இரண்டு மூன்று பயணங்களை மேற்கொண்ட பிறகும் சிங்கங்களைப் பார்க்க முடியாமல் போனதுண்டு என்றும் சொன்னார்.
என்ன ஒரு அலட்சியப் பார்வை..... 
Gகிர் வனத்திற்குள்....
 

 காய்ந்த சருகுகளில் மறைந்து விடும் சிங்கங்கள்...
Gகிர் வனத்திற்குள்....கொஞ்ச நேரம் தாச்சி தூச்சி.......
Gகிர் வனத்திற்குள்....

பெரிய பெரிய மரங்களின் சருகுகள் [காய்ந்து போன இலைகள்] வண்ணமும் சிங்கங்களின் வண்ணமும் ஒரே மாதிரி இருப்பதால் சிங்கங்கள் மறைந்து கொள்ள நல்ல வசதி. அதற்கு பசி இருந்தால் மட்டுமே வேட்டையாடும் எனவும், மற்ற சமயங்களில் மற்ற மிருகங்கள் அருகில் சென்றால் கூட ஒன்றும் செய்யாது என்றும் சொல்லிக் கொண்டு வந்தார். மேலே கொடுத்திருக்கும் படத்தில் மூன்று சிங்கங்கள் இருக்கின்றன – கொஞ்சம் தடுமாற்றம் தான் இதைக் கண்டுபிடிக்க – குறிப்பாக நேரில் பார்த்தபோது – படத்தினை Zoom செய்து எடுத்ததால் பின்னால் படுத்துக் கொண்டிருக்கும் சிங்கத்தினையும் நமக்குத் தெரிகிறது – நேரில் பார்த்தபோது கண்டுபிடிக்கக் கஷ்டப்பட்டோம். வழிகாட்டி தேவ்சியா தான் ஒவ்வொன்றாகக் காண்பித்தார்.


கொஞ்சம் தூங்க விடுங்கப்பு.... எத்தனை ஃபோட்டோ புடிப்பீங்க... 
Gகிர் வனத்திற்குள்....


இந்தப் படத்திலும் சருகுகளோடு மறைந்திருக்கும் சிங்கங்கள்..
Gகிர் வனத்திற்குள்....சிங்கமும் வனத்துறை காவலரும்....
Gகிர் வனத்திற்குள்....

மற்ற வனங்களைப் போலவே இங்கே நிறைய புள்ளி மான்களை பார்க்க முடிந்தது. மான்களின் எண்ணிக்கை ரொம்பவே அதிகம் என்பதால் சுலபமாக பார்க்க முடியும். ஆனால் மான்களுக்கு மருட்சி அதிகம். அதனால் கொஞ்சம் சப்தம் கேட்டால் கூட அந்த இடத்திலிருந்து ஓடி ஒளிந்து விடும். அதனால் மான்களைப் பார்த்தால் சற்றே தொலைவில் வண்டியை அணைத்து விடுகிறார் ஓட்டுனர் கிம் Bபாய். நிறைய மான்களின் புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம்.  எவ்வளவு வேண்டுமானாலும் படம் எடுத்துக் கொள்ளாலாம்! மான்கள், மயில்கள் என நிறையவே பார்க்க முடிந்ததே தவிர வேறு காட்டு விலங்குகளை அவ்வளவாக பார்க்க முடியவில்லை. சிங்கங்கள் முதலில் தென்பட்ட பிறகு வேறு இடங்களில் பார்க்க முடியுமா எனத் தொடர்ந்து கண்களை விரித்து வைத்தபடியே வனப்பாதையில் பயணித்துக் கொண்டிருந்தோம்.


மயில் கண்டேன்.....
Gகிர் வனத்திற்குள்....


மரங்களுக்கு இடையே உதித்த சூரியன்....
Gகிர் வனத்திற்குள்....


வனத்தில் பயணித்த பாதை....
Gகிர் வனத்திற்குள்....

நடுவே ஒரு இடத்தில் வாகனத்தினை நிறுத்தி வனப்பகுதியில் இறக்கி விடுகிறார் ஓட்டுனர் கிம் Bபாய். சற்றே வாகனத்திலிருந்து இறங்கி நிற்கலாம்! கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அந்த ஜீப்பில் நின்று கொண்டும், உட்கார்ந்து கொண்டும் பயணித்ததில் கொஞ்சம் ஓய்வு தேவையாக இருந்தது. காலை நேரத்திலேயே தங்குமிடத்திலிருந்து புறப்பட்டதால், சற்றே இயற்கை உபாதைகளுக்கும் இடம் கொடுக்க வேண்டுமே என வழிகாட்டி தேவ்சியா சொன்னார் – காட்டுக்குள் அதற்கென்று தனி இடங்கள் ஒன்றுமில்லை! திறந்த வெளி தான்! ஆண்களுக்குப் பரவாயில்லை என்று சொல்லக் கூடாது! ஆண்களுக்கே சரியில்லை எனும்போது பெண்கள் நிலை! வனத்துறை இதற்கும் ஏதாவது ஏற்பாடு செய்யலாம். 


நாங்கள் வனத்தில் பயனித்த வாகனமும் வழிகாட்டி தேவ்சியாவும்...
Gகிர் வனத்திற்குள்....


வனத்திற்குள் ஆதிவாசிகளின் வீடுகள்..
Gகிர் வனத்திற்குள்....


வனத்திற்குள் பயணித்த பாதை....
Gகிர் வனத்திற்குள்....

அங்கிருந்து புறப்பட்டு வனத்திற்குள் இன்னும் பயணித்தோம். வழியில் சில ஆதிவாசி குடும்பங்களின் வீடுகள் பார்க்க முடிந்தது. வனத்திற்குள் மின்சார விளக்குக் கூட இருக்கிறது – சோலார் பேனல் வீட்டின் கூரைக்கு அருகே சின்னதாய்! குஜராத்தில் பிடித்த விஷயம் இந்த மின்சார தன்னிறைவு! ஆதிவாசிகளின் குடிசைகளையும் சில ஆதிவாசிகளையும் பார்த்துக் கொண்டே வனத்திற்குள் மேலும் பயணித்தோம். வனத்திற்குள் நிறைய பறவைகளையும் பார்க்க முடிந்தது – கிங்ஃபிஷர் உட்பட! வழிகாட்டி தேவ்சியா திடீரென வாகனத்தினை நிறுத்தச் சொன்னார். அப்படி நிறுத்தி அவர் காட்டியது – Spotted Owl!ஒற்றை மான்....
Gகிர் வனத்திற்குள்....


180 டிகிரி தலையைத் திருப்பி வைத்திருக்கும் Spotted Owl .
Gகிர் வனத்திற்குள்....

இந்த Spotted Owl பறவைக்கு ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு என்று அவர் சொல்லிய விஷயம் – இவை தனது கழுத்தை 180 டிகிரி வரை திருப்ப முடியும்! பின்பக்கத்தில் யார் வருகிறார் என கழுத்தைத் திருப்பிப் பார்க்க வசதி! நாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கையில், எங்களுக்காகவே கழுத்தினைச் சுற்றிச் சுற்றிக் காண்பித்தது அதுவும்! என்ன ஒரு வசதி – மனிதனுக்கு இந்த வசதி இருந்திருந்தால்….  என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை! இப்படி மான்கள், மயில்கள், பறவைகள், தவிர ஆதிவாசிகளையும் பார்த்து, இயற்கையை ரசித்த படியே வனப் பயணத்தினை தொடர, ஒன்பது மணிக்கு முன்னர் எங்கள் வனப்பயணத்தின் இறுதியை அடைந்திருந்தோம்.உங்கூட பேச மாத்தேன் போ....  இரண்டு பறவைகள்......
Gகிர் வனத்திற்குள்....

இந்த வனப்பகுதி வழியே ஒரு இருப்புப்பாதை இன்னமும் இயங்குகிறது என்பது கூடுதல் தகவல்! வனத்திலிருந்து வெளியே வந்த பிறகு நாங்கள் வனத்துறையின் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கே இருந்த வனத்துறையின் அலுவலகத்தில் சில நினைவுப் பரிசுகளை வாங்கிக் கொண்டு புறப்பட்டோம். அங்கிருந்து நேராக நாங்கள் தங்கியிருந்த ஷிவ் ஃபார்ம் ஹவுஸ் தான்! பிறகு என்ன செய்தோம் என்பதை வரும் பதிவில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.
 
நட்புடன்

வெங்கட்
தமிழகத்திலிருந்து....

34 comments:

 1. குட்மார்னிங்க் வெங்கட்ஜி ஆஜர் படங்கள் சூப்பர் பதிவு வாசித்து வரோம்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கீதா ரெங்கன்.. கணினி ஓகே ஆகி விட்டது போலவே...

   Delete
  2. ஸ்ரீராம் நேற்று ஆஃப் பண்ணாமல் தூங்கிவிட்டேன்...ஹிஹிஹி...பார்ப்போம் இன்று எப்போது வரை ஓடுகிறது என்று..ஹா ஹா ஹா ஹா ஹா

   கீதா

   Delete
  3. வணக்கம் கீதா ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 2. குட்மார்னிங் வெங்கட். முதல் படத்தைப் பார்த்ததும் எனக்குத் தோன்றிய பாடல் "மான் கண்டேன் மான் கண்டேன் மானேதான் நான் கண்டேன்.. நான் பெண்ணைக் காணேன்..."

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஸ்ரீராம்.

   நல்லதொரு பாடல் தான் உங்கள் நினைவுக்கு வந்திருக்கிறது. மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 3. தூங்கும் சிங்கங்களைத் தட்டி எழுப்பவில்லையே...?!!!

  அருகில் ஆள் நடமாட்டம் இருக்கும்போதும் நிம்மதியாய்த் தூங்குகின்றனவே..! பார்த்தால் அடுத்த படத்தில் அந்த சிங்கம் விழித்துக் கொண்டு குறுகுறுவெனப் பார்க்கிறது!

  ReplyDelete
  Replies
  1. சிறிது நேர உறக்கத்திற்குப் பிறகு எழுந்து அருகே வந்தது! கொஞ்சம் நடுக்கம் இருந்தது உண்மை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. வனத்திற்குள் வீடு கட்டிக்கொண்டு வாழும் ஆதிவாசிகளின் தைரியம் பிரமிக்கத்தக்கது.

  ReplyDelete
  Replies
  1. அவர்களுக்குப் பழகிய விஷயம் தானே...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. சிங்கங்கள் வெகு அழகு. அதுவும் சருகுகளில் சிங்கங்கள் மறைந்து இருப்பது ஆம் ஒரே நிறம் பார்த்துக் கண்டுபிடிப்பது கடினம் தான்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அழகு தான் - ஆபத்தான அழகோ?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 6. 180 டிகிரி தலையைத் திருப்பி.. வா......வ்..

  ReplyDelete
  Replies
  1. அப்படி திரும்பி இருக்கும்போது படம் பிடிக்க முடிந்ததில் எங்கள் குழுவில் இருந்த அனைவருக்குமே மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. கேமராவைப் பார்க்கும் சிங்கம் சூப்பரா இருக்கு....அதன் பார்வை செமையா இருக்கு. கேமராவைப் பார்க்கும் இரு சிங்கப் படங்கள்...ரொம்ப அழகு கண்கள்...

  தொட்டுக் கொஞ்ச வேண்டும் போல் இருக்கு ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தொட்டுக் கொஞ்ச வேண்டும் போல இருக்கிறது! ஹாஹா.... ஆனாலும் கிட்டே நெருங்க முடியாது! பழகும் வரை பயம் இருக்கிறதே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 8. அந்தத் தாச்தி தூச்சி சிங்கம் ஓட்டைக் கண் போட்டுப் பார்ப்பது போல் இருக்கு ஹா ஹா ஹா ஹா குழந்தையின் ஃபீல் முகத்தில் என்ன அழகு.

  தாச்சி என்ற வார்த்தையைப் பார்த்ததும்.....என் மகனுக்கு இப்போது 28 வயசு இருந்தாலும் சில சமயம் நான் வாட்சப்பில் பகல் நம் நேரம் 11, 11.30க்கக் கூப்பிட்டால் (அவனுக்கு இரவு 11..) அம்மா பாப்பா இப்பத்தான் வந்துது...பாப்பா தாச்சி...பாப்பா நாளைக்குப் பேசும் என்று மெசெஜ் கொடுப்பான்...இதைப் பார்த்ததும் அவன் பேசவில்லையே என்ற வருத்தம் எல்லாம் கரைந்து விடும்... சின்னக் குழந்தை போலப் பேசுவது...இப்போதும் அவனுக்கு உண்டு..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தாச்சி தூச்சி - நான் அவ்வப்போது சொல்லும் வார்த்தை - இப்போதும் மகளிடம் அப்படித்தான் சொல்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 9. வனத்திற்குள் ஆதிவாசிகள் வீடுகள் வியப்பு பயமில்லாமல் இருக்கிறார்களே சிங்கங்களுடன்...!!

  ஆம் சிங்கம் பசித்தால் மட்டுமே அடிக்கும். இல்லை என்றால் பேசாமல் இருக்கும் பசி எடுக்கும் சிங்கம் என்பது எப்படித் தெரியும் ஹிஹிஹி..புலிகள் அப்படி இல்லை பசிக்கலைனாலும் அடிச்சுப் போட்டுட்டுப் போகும்....அந்தக் காவலர் அருகில் இருப்பது போல இருக்கே...ஹையோ...
  ஹை நீங்களும் வனத்தில் இறங்கினீர்களா...அப்போ சிங்கம் எதுவும் வரலையோ...ஹா ஹ ஹா வந்திருந்தால் என்று என் கற்பனை ஓடியது ஹா ஹா ஆ

  மான் மயில் ஆந்தை கொக்குகள் அனைத்தும் செமையா இருக்கு...ஒற்றை மான் மயிலைப் பார்த்ததும் ஹையோ சிங்கம் வந்துவிடாமல் அதுவும் பசியுடனான சிங்கம் வந்துவிடக் கூடாது என்று தோன்றியய்து...

  வனம் மிக அழகாக இருக்கிறது...ஜி ரசித்தோம் பதிவை

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வனக் காவலர் மிக அருகில் தான் நின்று கொண்டிருந்தார். அவர்களுக்குப் பழக்கம்.

   ஆதிவாசிகளும் பயமில்லாமல் தான் இருக்கிறார்கள். நமக்குத் தான் பயம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 10. தங்களால் நாங்களும் வனப் பகுதியைச் சுற்றிப் பார்த்த மன நிறைவு
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 11. வாவ்! நம்மூர் லைன்சஃபாரியில் நிறைய சிங்கங்கள் அங்கங்கே இருக்கும். ஆனாலும் காட்டுக்குள்ளே பார்ப்பது விசேஷம்தான்!

  லேடீஸ் டாய்லெட் கட்டிவுட்டு, நாம் அதுக்குள்ளே இருக்கும்போது.... மேலே இருந்து சிங்கம் எட்டிப்பார்த்தால்......... ஐயோ........... மொத்தப்பயண தூரம் நாலுமணி நேரம் என்றால் சமாளிக்க முடியும், சிங்கம் நம் மேல் பாயாமல் இருந்தால்.... இல்லே?

  ReplyDelete
  Replies
  1. காட்டுக்குள் பார்ப்பதில் ஒரு வித த்ரில் இருக்கத்தான் செய்கிறது - அதுவும் இத்தனை அருகில்.

   சிங்கம் நம் மேல் பாயாமல் இருந்தால்! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 12. டில்லி தமிழ் சிங்கம் எடுத்த படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன

  ReplyDelete
  Replies
  1. டில்லி தமிழ் சிங்கம்! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 13. அழகான படங்கள். கிர்வனத்திலும் மக்கள் இருப்பது ஆச்சரியம்தான். பயமாக இருக்காது போல பழகியிருக்குமாக இருக்கும். நல்லதொரு அனுபவம் இல்லையா. நேரில் இல்லை என்றாலும் எங்களுக்கும் உங்கள் மூலம் நல்ல அனுபவம் கிட்டியது.

  தொடர்கிறோம்

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 14. அழகிய படங்களுடன் தகவல்களும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 15. வனத்தில் உலாவும் மான்களை சிங்கங்கள் வேட்டையாடுமா

  ReplyDelete
  Replies
  1. வேட்டையாடும்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   Delete
 16. சிங்கத்தை தூங்கவிடாம இம்சிச்சா எப்படிண்ணே?!

  ReplyDelete
  Replies
  1. இம்சிப்பதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....