எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, May 8, 2018

எங்கிருந்தோ வந்த ரதி….
இந்த ரதி வேறு ரதி!
படம்: இணையத்திலிருந்து...

ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காகவே சீக்கிரம் பதிவினைப் பற்றி சொல்லி விட வேண்டும்.

ஆனாலும் அதற்கு முன்னால் சில விஷயங்கள் பேசலாம். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது – என் வீட்டில் இருந்த தொ[ல்]லைக் காட்சி பெட்டியை எங்கள் பகுதி கூர்க்காவிடம் கொடுத்து – எப்படியும் பார்ப்பதில்லை – அதற்கு தண்டத்திற்கு மாதா மாதம் டாடா ஸ்கை கட்டணம் வேறு கட்டிக் கொண்டிருந்தேன். பழைய Phillips TV தான் – வாங்கி கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாகி விட்டது. கொஞ்சம் நடுநடுவே கோடுகள் வரத் துவங்கி இருந்தன. பார்க்காத ஒரு டி.வி. எதற்கு, அதற்கு ஒரு டாடா ஸ்கை கனெக்‌ஷன் எதற்கு என முடிவு செய்து கூர்க்காவிடம் கொடுத்து விட்டேன். எப்போதாவது பாட்டு கேட்க வேண்டுமென்றால் இருக்கவே இருக்கிறது இணையமும் – யூட்யூபும்!

நானும் இல்லத்தரசியுமாகச் சேர்ந்து “ரசித்த பாடல்” என்ற தலைப்பில் ஒரு வலைப்பூ கூட வைத்திருந்தோம். நாங்கள் ரசித்த பாடலை காணொளி அல்லது ஒலியுடன் கூடிய பதிவுகள் – கூடவே பாடல் வரிகளும்! 23 டிசம்பர் 2013-க்குப் பிறகு அதில் ஒன்றுமே பதிவு செய்யவில்லை. கிட்டத்தட்ட 63 பாடல்கள் அப்படி பதிவு செய்திருக்கிறோம் அங்கே! இரண்டு மூன்று வலைப்பூக்களை வைத்து பதிவுகள் எழுதுவது கடினம் என்பதால் அங்கே எழுதுவதே இல்லை!

சரி இப்போது எதற்கு “ரசித்த பாடல்” புராணம்! சில நாட்கள் முன்னர் கேட்ட ஒரு பாடல் – இது வரை நான் கேட்டிராத பல பாடல்களுக்குள் ஒன்று – 1955-ஆம் வருடம் வந்த படத்திலிருந்து – நான் பிறப்பதற்கு 16 வருடங்கள் முன்னர் வந்த படம்! எங்கே பார்ப்பது? கேட்க நன்றாக இருக்கவே இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது. முல்லை வனம் என்ற படத்திலிருந்து தான் இந்தப் பாடல் – கீழே கொடுத்திருக்கும் இணைப்பில் ஜிவாஜியோட ஸ்டில் இருந்தாலும் அவர் இந்தப் படத்தில் நடிக்கவில்லை – பாடல் இணைத்தவர் அப்படி கொடுத்திருக்கிறார். இதோ நீங்களும் ரசிக்க….


இந்தப் படத்தில் நடித்த நடிகர் யார் தெரியுமா? – ஸ்ரீராம்! நான் கூட எங்கள் பிளாக் ஸ்ரீராம் அவ்வளவு வயதானவரா என்று நினைத்தேன்! அவர் அனுஷ்காவை ரசிக்கும் இளைஞராயிற்றே! அட இது வேறு ஸ்ரீராம்! நாயகி – குமாரி ருக்மணி! படத்தில் மொத்தம் 9 பாடல்கள் – ஒன்று கூட கேட்ட மாதிரி இல்லை.

அப்படி கேட்டு ரசித்த பாடல் – எங்கிருந்தோ இங்கு வந்த ரதியே…. வி. கிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில் வந்த இந்தப் படத்திற்கு இசை கே.வி. மஹாதேவன்.

பாடலை ரசித்தீர்களா? நண்பர்களே? முடிந்தால் அவ்வப்போது இது போன்று ரசித்த பாடல்களை இந்த வலைப்பூவிலேயே பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன் – உங்களுக்கும் பிடித்திருந்தால்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
தமிழகத்திலிருந்து.....

61 comments:

 1. குட்மார்னிங் வெங்கட். இந்த நடிகர் ஸ்ரீராம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். ருக்மணி என்பது அநேகமாக நடிகை லக்ஷ்மியின் அம்மாவோ, பாட்டியோ!

  ReplyDelete
  Replies
  1. மாலை வணக்கம் ஸ்ரீராம்.

   லக்ஷ்மி அவர்களின் அம்மா தான் இந்த ருக்மணி அவர்கள்.

   Delete
 2. //எங்கள் பிளாக் ஸ்ரீராம் அவ்வளவு வயதானவரா என்று நினைத்தேன்!//

  இந்தப் பிரச்சனைக்குள் நான் புக விரும்பவில்லை!!!! இவ்வளவு சொல்லும் நீங்கள் ஒரு அனுஷ்க்கா ஸ்டில் போட்டிருக்கக் கூடாதோ!

  :))

  ReplyDelete
  Replies
  1. ரசிகப் பெருமக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து தானைத் தலைவியின் படம் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

   Delete
  2. ஹா.... ஹா... ஹா... ஸூப்பர்!

   நன்றி!

   Delete
  3. அது! இப்ப எவ்வளவு சந்தோஷம் உங்களுக்கு! எஞ்சாய் ஸ்ரீராம்.

   Delete
 3. இந்தப் படத்தின் பெயரும் கேள்விப்பட்டதில்லை. பாடலும் முதல் முறையாகக் கேட்கிறேன். அந்தக் காலத்தில் வேறு வழி இல்லாத நிலையில் ரேடியோவில்தான் கேட்கமுடியும். அதுவும் 1955 என்றால் சில வீடுகளிலும், பொதுவில் வைத்து பூங்காக்களிலும்தான் ரேடியோ இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ரசித்துக் கேட்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. பாடல் இனிமையாகவே இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அப்போது ரேடியோ 📻 மட்டும் தானே. அம்மாவிடம் கேட்க, படம் பெயர் தெரியும் ஆனால் இந்த பாட்டு கேட்ட நினைவில்லை என்று சொன்னார்.

   நல்ல பாடல் என்பதால் தான் பகிர்ந்து கொண்டேன் ஸ்ரீராம்.

   Delete
 4. ஆஹா கொஞ்சம் முன்னர் கூடப் பார்த்தேன் பதிவு எதுவும் இல்லை என்றதும் கிச்சனுக்குப் போய் வருவதற்குள் ஸ்ரீராம்...ஹா ஹா ஹா

  இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!! ரதியைப் பார்த்துவிட்டு வரேன்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இந்த முறை தமிழகத்தில் இருக்கும் எல்லா நாட்களிலும் பதிவு வரும்படி schedule செய்து இருக்கிறேன் கீதா ஜி.

   ஸ்ரீராம் சந்தோஷமா இருந்தா நமக்கும் சந்தோஷம் தானே

   Delete
 5. ஸ்ரீராம்! நான் கூட எங்கள் பிளாக் ஸ்ரீராம் அவ்வளவு வயதானவரா என்று நினைத்தேன்! அவர் அனுஷ்காவை ரசிக்கும் இளைஞராயிற்றே! அட இது வேறு ஸ்ரீராம்!//

  ஹா ஹா ஹ் ஆ ஹா ஹா...இன்று கிட்டியது அவல்!! நன்றி வெங்கட்ஜி!!

  அனுஷ்கா படம் போட்டிருந்தால் ஸ்ரீராம் ஒரே சந்தோஷமாக இருந்திருக்கும் ஹிஹிஹிஹி

  இந்தப்படம் பற்றி கேட்டதுமில்லை. பாடல் கேட்டுவிட்டு வருகிறேன் ஜி

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இன்று கிட்டியது அவல்! ஹாஹா...

   மகிழ்ச்சி 😃 கீதா ஜி.

   Delete
 6. இதுதான் முதல் தடவை கேட்கிறேன் ஜி. நன்றாக இருக்கிறது. டிப்பிக்கல் அந்தக் காலத்துப் பாடல்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா ஜி. முதல் முறை கேட்கும் போதே பிடித்திருந்தது.

   Delete
 7. ஆஹா!! ஸ்ரீராம் உங்கள் ஆசை நிறைவேறியது!!! பாருங்க!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா..... ரசிகரின் வேண்டுகோள் நிறைவேற்றுவது தானே நம் கடமை கீதா ஜி.

   Delete
 8. இனிமையான பாடல்
  இப்பொழுதுதான் முதன் முதலாகக் கேட்கிறேன்
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. பாடலௌ ரசித்தமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 9. ஸ்ரீராமிற்காக அனுஷ்கா படமா?

  இரண்டாவது படம், ரத்தி. (ரதி இல்லை). பாரதிராஜாவால் தமிழ்திரையில் அறிமுகப்படுத்தப்பட்டவர் (புதிய வார்ப்புகள்). (இப்போ பாரதிராஜா, தமிழர் என்றெல்லாம் பேசுவது வேறு விஷயம்)

  நீங்கள் குறிப்பிடும் 'ரசிகப் பெருமக்களில்' நான் இல்லை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்காக தமன்னா படம் ஒரு முறை போட்ட நினைவு!

   ரத்தி! ம்ம்ம்ம்ம்

   ஆஹா உங்களுக்கும் கர்ர்ர்ர்ர்ர்... பிடித்து விட்டதா நெல்லைத் தமிழன்.

   Delete
  2. காலைலயே வந்து நெல்லைக்காக ஒரு தமன்னா படம் சேர்த்துடுங்க வெங்கட்னு சொல்லலாம்னா கணினியில் தளம் திறக்கவே இல்லை... மொபைல் வழி வந்திருக்கேன்.

   ஆனா நீங்களும் எவ்வளவு படம்தான் சேர்ப்பீங்க..? அப்புறம் கீதாக்கா டி ஆர் ராஜகுமாரி, பி ஏ பெரியநாயகி படம்லாம் சேர்க்கலைம்பாங்க....

   Delete
  3. //அப்புறம் கீதாக்கா டி ஆர் ராஜகுமாரி, பி ஏ பெரியநாயகி படம்லாம் சேர்க்கலைம்பாங்க....// @ஶ்ரீராம், இவங்கல்லாம் யாரு தாத்தா?

   Delete
  4. // @ஶ்ரீராம், இவங்கல்லாம் யாரு தாத்தா? //

   அக்கா... இதற்கு நான் சிரிக்கணுமா?!!!!!!!

   Delete
  5. சிரிக்காதீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! சிங்கத்தைப் பார்க்கப் பின்னர் வரேன்.

   Delete
  6. நீங்களும் எவ்வளவு படம் தான் சேர்ப்பீங்க ஹாஹா...

   மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஸ்ரீராம்.

   Delete
  7. ஐயோ அது யார் பெரியநாயகி? எனக்குத் தெரியவே தெரியாதே ஸ்ரீராம்.

   Delete
  8. இவங்கல்லாம் யாரு தாத்தா? ஹாஹா. அனுஷ்கா ரசிகரை இப்படியா சொல்றது கீதாம்மா.

   Delete
  9. தாத்தாவுக்கு அக்காவை எப்படி கூப்பிடணும் ஸ்ரீராம்?

   Delete
  10. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....சிங்கம் பார்க்க சீக்கிரம் வாங்க கீதாம்மா.

   Delete
 10. பலரும் கேட்டிருக்காத பாடலை ஸ்ரீராம்தான் இடுகையாக்குவார் என்று நினைத்திருந்தேன் ஆஹா கேட்டு ரசித்தபாடல் என்று யாராவது எழுதுகிறார்களா பார்க்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. யாராவது முன்பே கேட்டு ரசித்திருப்பதைச் சொல்வார்கள் என நானும் காத்திருக்கிறேன் ஜி.எம்.பி. ஐயா.

   Delete
 11. Replies
  1. பாடலை ரசித்தமைக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 12. இந்த படம் மரகதம் என்ற படம் போல இருக்கே! நான் பழைய படம் பார்த்தேன் சிலோனில் நடக்கும் கதை போல வரும. பத்மினியின் உடையும் சிலோன் உடையாக இருக்கும். யூட்யூபுலில் தான் பார்த்தேன்.

  ReplyDelete
  Replies
  1. பதிவில் வரும் பாடலுக்கும் இந்த ஜிவாஜி படத்திற்கும் சம்பந்தம் இல்லை கோமதிம்மா.

   Delete
 13. மரகதம் படத்திற்கு எடுத்த பாடல் தான் , (இந்த பாடல் மரகதம் படத்தில் இடம் பெறவில்லை போலும்) நான் கொஞ்ச நாள் முன்புதான் மரகதம் படம் பார்த்தேன் அதனால் நினைவில் வந்தது.
  இதோ உடையில் சிவாஜியும், பத்மினியும் வேறு பாடல் பாடுகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. இந்த பாடலை யூட்யூப் இல் சேர்த்தவர் இப்படி ஜிவாஜி படம் சேர்த்து இருக்கிறார். பாடல் வேறு படம் - முல்லைவனம் கோமதிம்மா.

   Delete
  2. படத்தின் பேரை துப்பாக போட்டு இருக்கிறார். படம் பேர் மரகதம்
   முல்லைவனத்தில் சிவாஜி இல்லை

   Delete
  3. தப்பாக போட்டு இருக்கிறார்

   Delete
  4. முல்லைவனத்தில் நடித்தவர் தான் ஸ்ரீராம்! கோமதிம்மா.

   Delete
 14. இப்படி ஒரு படமா? கேட்டதே இல்லை பெயர். பாடலும். இப்போதுதான் முதல் தடவையாகக் கேட்டேன். நன்றாக இருக்கிறது வெங்கட்ஜி

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. பாடலை ரசித்தமைக்கு நன்றி துளசிதரன் ஜி.

   Delete
 15. Replies
  1. பாடலுக்கான சுட்டி தந்தமைக்கு நன்றி கோமதிம்மா.

   Delete
 16. என் அப்பாக்கூட இந்த பாட்டை பார்க்க மாட்டாரே!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா அவர் பார்க்கலைன்னா என்ன ராஜி, நீங்க பாருங்க.

   Delete
 17. ஹிஹிஹிஹி, எல்லோருக்குமே இப்போ ஜிவாஜி ஆயிட்டார் போலே! ஹெஹெஹெஹெஹெ! இந்த ஜினிமாப் பட விஷயத்தில் நான் ரொம்ப வீக்! ஆகவே உங்க ரசிகப் பெருமக்கள் கூட்டத்திலே நான் இல்லை! :)

  ReplyDelete
  Replies
  1. சினிமா விஷயங்களில் நானும் வீக் தான் கீதாம்மா.

   ஜிவாஜி! ஹாஹாஹா...

   Delete
 18. முதல் படம் தான் அனுஷ்கா அக்காவா? அது என்னமோ அவங்க மூஞ்சி நினைவிலேயே நிக்க மாட்டேங்குது!

  என்ன போங்க! கலப்பையிலே வராததை சுரதாவிலேயும், சுரதாவிலே வராததைக் கலப்பையிலும் கொடுத்து! நேரம் தான் எடுக்குது! :(

  ReplyDelete
  Replies
  1. எங்கே ஸ்ரீராம்? அனுஷ்கா அக்காவா? அநியாயமா இருக்கே? கீதாம்மா சொன்னதைக் கேட்டுட்டு சும்மா இருக்கீங்களே ஸ்ரீராம்.

   Delete
  2. கீதாக்கா சொல்றாங்கன்னு பெரிசா எடுத்துக்காதீங்க வெங்கட்... வுடுங்க...

   Delete
  3. ஹாஹா சும்மா தான் கேட்டேன் ஸ்ரீராம்.

   Delete
 19. எனக்குக் கூட ரசித்த பாடல்கள் என்று ஒரு பதிவு போடலாம் என்று ஒரு எண்ணம் இருந்தது. ஏற்கனவே ஸ்ரீராம் வெள்ளி வீடியோ போடுகிறார். இப்போது நீங்களும் போட்டு விட்டீர்கள், இப்போது நான் போட்டால் காப்பி அடித்தது போல ஆகாதா?

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் போடுங்க. காப்பி அடிப்பதில் இது சேர்த்தி இல்லை பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி.

   Delete
  2. பானுக்கா... உங்கள் ரசனை.. உங.கள் தெரிவு.. தாராளமாகப் பதிவு போடலாம்.

   Delete
  3. அதேதான் ஸ்ரீராம். அவங்களுக்கு பிடித்த பாடலை நாமும் ரசிக்கலாமே.

   Delete
 20. மறுபடியும் கணினியில் திறக்கமுடியாமல் சண்டி செய்கிறது உங்கள் தளம்!

  ReplyDelete
  Replies
  1. அடடா..... என்ன பிரச்சினை என்று புரியவில்லை ஸ்ரீராம்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....