புதன், 4 ஏப்ரல், 2012

கொன்றைப் பூ…. கடைமொழி மாற்றுப் பாடல்



ஆஸ்திரேலியாவின் தேசிய மலர் கொன்றை மலர். 
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலின் தல விருட்சம் கொன்றை மரம்.
சிவ பெருமானுக்கு உகந்த மலர் கொன்றை மலர்.
தமிழ் இலக்கியத்தில் பல இடத்தில் வரும் ஒரு மலர் கொன்றை மலர்.

அப்படி இலக்கியத்தில் வரும் கொன்றை மலர் பாடல் கீழே!

கொன்றை மலர் தரித்தான் கோபாலன் கோலெடுத்து
நின்றுகுழல் ஊதினான் நீள்சடையன் பொன்திகழும்
அக்கு அணிந்தான் மாயன் அரவுஅணையில் கண்வளர்ந்தான்
சிக்கலிலே வாழும் சிவன்

- காளமேகப் புலவர்.

இது ஒரு கடைமொழி மாற்றுப் பாடல். கடைசி அடியை முதலில் வைத்து படித்தால், காளமேகப் புலவர் சொல்லவந்தது புரியும்.

”சிக்கலில் வாழும் சிவபெருமான் கொன்றை மலர் மாலை தரித்தவர். கோபாலன் ஆன கண்ணன் புல்லாங்குழல் ஊதினார். நீண்ட சடை உடைய சிவபெருமான் ருத்திராட்சம் [அக்கு] அணிந்திருந்தார். மாயனான திருமால் பார்க்கடலில் ஆதிசேஷன் மீது துயில் கொண்டு இருந்தார்” என்பது இப்பாடலின் பொருள்.

இந்த பாடலில் சொல்லப்பட்ட கொன்றை மலருக்கு ஒரு சிறப்பு. இது ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் மலரும் அற்புத மலர். அது போலவே நம் எல்லோருக்கும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தானே பிறந்த நாள் வருகிறது [அதுக்குன்னு 29 ஃபிப்ரவரி பிறந்தவருக்கு நாலு வருஷத்துக்கு ஒரு முறை தான் பிறந்த நாள் வரும்னு சொல்லக்கூடாது!]. 

இந்த கொன்றை மரங்கள் பூத்துக் குலுங்கி, பார்ப்பவர்கள் கண்ணுக்கு விருந்து படைக்கிறது. அது போலவே இன்றைய வலைச்சரத்தில் பிறந்த நாள் பதிவுகள், வாசிப்பவர்களுக்கு விருந்து படைக்கிறது.

அது என்ன இன்னிக்கு பிறந்த நாள் பதிவுகள்? வலைச்சரத்துக்கு வாங்க, இன்னிக்கு யாருடைய பிறந்த நாள் எனத் தெரியும் உங்களுக்கு!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

38 கருத்துகள்:

  1. கொன்றை மலராய் சொரிந்த அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அரிய விஷயம்...கொன்றை மலர் பாடல்///

    பதிலளிநீக்கு
  4. @ கோவை நேரம்: தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே.....

    பதிலளிநீக்கு
  5. கொன்றை மலரின் அற்புதங்களுடன்
    இன்றைய வலைச்சரம் வாசம் மனமிக்கது...

    பதிலளிநீக்கு
  6. @ மகேந்திரன்: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  7. வந்து பாத்துட்டமே யாருக்கு பிறந்த நாள்னு.இங்கும் மீண்டும் அவளுக்கு வாழ்த்துக்கள்.

    கடை மொழி மாற்றுப் பாடலை ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  8. @ ராஜி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், ரோஷ்ணியை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி ராஜி!

    பதிலளிநீக்கு
  9. @ சதீஷ்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வலைச்சரத்தை இப்போதே படிக்கிறேன். ஆனால் யாருக்குப் பிறந்தநாள் என்பது ஆதி மேடத்தின் தளத்திலேயே தெரிந்து விட்டது. இங்கேயும் உங்கள் செல்லத்துக்கு என் இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன்.

    பதிலளிநீக்கு
  11. கொன்றை ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும்
    உங்கள் வலை நாள்தோறும் பூக்கும்
    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  12. கொன்றை மலர் பற்றிய பதிவு அருமை. எங்க வீட்டு வாசல்ல இருக்கு. ஆனால், அதன் அருமை இன்றுதான் தெரிந்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  13. கொன்றை என்றாலே அது சிவனைக் குறிக்கும்; நம் நூல்களில் சிவனையும், அதன் தொடர்பாகப் பாண்டிய மன்னர்களையும், கொன்றை மலர் சூடியவர்களாகக் குறிப்பிடுவர். ஔவையும் தன் கொன்றைவேந்தன் தொகுப்பின் காப்புப் பாடலில்
    ’கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
    என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.’
    என்று முருகனை கொன்றை வேந்தனின் மகனாகக் குறிப்பிடுகிறாள்.

    அந்தக் கொன்றை வேந்தனின் அருள் இன்று பிறந்த நாள் காணும் ரோஷ்ணிக்கும் கிட்டட்டும்.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. வெங்கட், மிக அழகான பதிவு. Short & Sweet என்பதற்கு சரியான உதாரணம். கடைமொழி மாற்றுப்பாடலை ரொம்ப ரசித்தேன். புதிய அறிவு. தமிழில் எத்தனை விதமான கவிதை வகைகள்!!!

    பதிலளிநீக்கு
  15. ரோஷ்ணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. அங்கும் வாழ்த்தினேன்;இங்கும் வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  17. ரோஷ்ணிக்கு எல்லாம் வல்ல கொன்றைப்பூச் சூடிய பெருமானின் அருள் எப்போதும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  18. வலைச்சரத்திற்கு போகாமலே ஆதியின் பதிவு மூலம் ரோஷணியின் பிறந்த நாள் என்று தெரிந்து விட்டது.
    ரோஷணிக்கு வாழ்த்துக்கள்.
    வாழ்த்துக்கள் வலைச்சர ஆசிரியருக்கு.
    ஊரில் இல்லாத காரணத்தால் இனிதான் எல்லா பதிவுகளையும் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  19. @ கணேஷ்: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  20. @ புலவர் சா. இராமாநுசம்: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  21. @ ராஜி: ஓ கொன்றை மரம் உங்கள் வீட்டு வாசலிலே இருக்கிறதா! மகிழ்ச்சி.... தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  22. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: ஆமாம் சீனு. நமது பழங்கால இலக்கியத்தில் நிறைய இடத்தில் கொன்றை மலர் இடம் பெற்றுள்ளது.

    உனது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிடா.

    பதிலளிநீக்கு
  23. @ சன்னிசைட்: உனது வருகைக்கும் இனிய கருத்திற்கும், பதிவினை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி சூர்யா.

    பதிலளிநீக்கு
  24. @ பழனி. கந்தசாமி: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  25. @ ரேகா ராகவன்: வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சித்தப்பா.....

    பதிலளிநீக்கு
  26. @ சென்னை பித்தன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  27. @ ஈஸ்வரன்: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும், ரோஷ்ணியை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி!

    பதிலளிநீக்கு
  28. @ கோமதி அரசு: ஓ ஊருக்குப் போயிருந்தீங்களா? அதான் பதிவு பக்கம் வரலையேன்னு நினைத்தேன்....

    தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிம்மா....

    பதிலளிநீக்கு
  29. கொன்றை மலர் பற்றிய பதிவு அருமை வெங்கட் ...பிறந்தநாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  30. @ ரெவெரி: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி ரெவெரி.

    பதிலளிநீக்கு
  31. vanakkam thiru venkat nagaraaj avargale neengal ovvoru padhivirkkum oru malarin peyar vaiththu ezhudhugindreer arumai vaazhththukkal nandri
    surendran

    பதிலளிநீக்கு
  32. @ விழித்துக்கொள்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  33. அன்பு நண்பரே
    கொன்றை மரத்தை பற்றிய ஒரு முக்கிய விஷயம் தெரியுமா?
    இந்த மரத்தின் இலைகளை பறித்து போட்டு மாம்பழத்துடன் பழுக்க
    வைத்தால் மாம்பழம் மிகவும் அருமையான மஞ்சள் கலரில் பழுக்கும்.
    வாழ்த்துகளுடன்
    விஜய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... மாம்பழம் விஷயம் எனக்குப் புதியது விஜயராகவன் சார். புதிய தகவல் தெரிந்து கொண்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  34. ஒரு சிறிய திருத்தம்....
    ஆஸ்திரேலியாவின் தேசிய மலர்... இதுவல்ல... அந்த மலரின் பெயர்...Acacia pycnantha.

    கொன்றைப் பூவின் தாவரவியல் பெயர்.... Cassia fistula

    பதிலளிநீக்கு
  35. ஒரு சிறிய திருத்தம்....
    ஆஸ்திரேலியாவின் தேசிய மலர்... இதுவல்ல... அந்த மலரின் பெயர்...Acacia pycnantha.

    கொன்றைப் பூவின் தாவரவியல் பெயர்.... Cassia fistula

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....