புதன், 20 ஆகஸ்ட், 2014

ஹிந்தியும் தேங்காய் ஓடும்!



இரயில் பயணங்களில் – 3

தில்லியிலிருந்து சென்னை ராஜதானி விரைவு வண்டியில் வந்த போது கிடைத்த ஒரு அனுபவத்தினை சென்ற இரயில் பயணங்களில் பகுதியில் எழுதி இருந்தேன். அதனைப் படித்து ரசித்த அனைவருக்கும் நன்றி.  அதே பயணத்தில் கிடைத்த வேறொரு அனுபவம் இங்கே, இப்பகுதியில்!

தமிழகத்திலிருந்து தில்லி/வட இந்தியா வரும் அனைவரும் தடுமாறுவது மொழிப் பிரச்சனையில் தான். ஹிந்தி தெரியாத, ஆங்கிலத்திலும் அத்தனை சரளமாக பேச முடியாத, தமிழ் மட்டுமே பேசத் தெரியும் தமிழர்கள் படும் அவஸ்தை சொல்ல முடியாத அளவிற்கு இருக்கும்.  வண்டியில் இருந்து தில்லி ரயில் நிலையத்தில் இறங்கிய உடனேயே தொல்லைகள் ஆரம்பித்து விடும்.


நன்றி: கூகிள்

பயணத்தில் என்னுடன் வந்த ஒரு நபர் தான் அடைந்த துயரங்களை சொல்லிக் கொண்டு வந்தார். தாய் மொழி தவிர இன்னும் சில மொழிகளைக் கற்றுக் கொள்வதின் அவசியம் வெளி மாநிலங்களுக்கு/நாடுகளுக்குச் செல்லும்போது தான் நாம் அதிகம் உணர்கிறோம்.  இந்த மனிதரும் அப்படித் தான்!  வந்து இறங்கியவுடனே அவருக்கு கிடைத்த பாடம் அப்படி!

புது தில்லி ரயில் நிலையத்தில் ரயிலிலிருந்து இறங்கி வெளியே வந்து மால்வியா நகர் எனும் இடத்தில் இருக்கும் அவரது நிறுவனத்தின் தங்குமிடத்திற்குச் செல்ல ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டு இருக்கிறார்.  அவர் மால்வியா நகர் என்று இடத்தினைச் சொல்லவும், “[dh]தோ சோஎன்று அவர் சொல்ல, இவர் தோசை இல்ல, மால்வியா நகர் என்று சொல்ல அவர் திரும்பவும் “[dh]தோ சோஎன்று சொல்ல, இவருக்குஎன்ன வாழ்க்கைடா இது” Moment அது! பிறகு ஆட்டோ ஓட்டுனர் ஆங்கிலத்தில் Two hundred என்று சொல்ல, இவர் one hundred என்று சொல்லி, அந்த இடத்திற்குச் சென்றாராம்!

இனிமேல் ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தில்லி வர வேண்டியிருக்கும் என்று சொன்ன அவரிடம் ஹிந்தி மொழி கற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தினைச் சொல்லிக் கொண்டு வந்தேன்.

இன்னும் சில அனுபவங்கள் மிக ஸ்வாரசியமானவை! அங்கே இருந்த சில தினங்களும் வெளியே சாப்பிட பிடிக்காமல், தங்குமிடத்திலேயே சமைத்துச் சாப்பிட்டு இருக்கிறார் [வசதிகள் அங்கே இருந்ததால்]. காய்கறி வாங்க செல்லும் போது வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு 100 ரூபாயை கொடுத்து அவர் தரும் சில்லறையை வாங்கிக் கொண்டு வருவாராம்! மற்ற மளிகை சாமான்களை பக்கத்தில் இருக்கும் Big Apple கடையில் தானாகவே எடுத்து, Bill போட்டு வாங்கி விட, தாளிக்க கடுகு அங்கே கிடைக்காததால், கடைக்குச் சென்று அதைக் கேட்க அவர் ரொம்பவே பிரயத்தனப்பட்டிருக்கிறார்! அவர் மொழியிலேயே அதைக் கேட்போமா!

நான் கடைக்குப் போய், தாளிப்பதற்கு கடுகு என்று தமிழில் கேட்க, அவர் முழியோ முழி என முழிக்க, பிறகு சைகை மூலம் காண்பித்தும், ஆங்கிலத்தில் தெரிந்த அளவிற்குச் சொல்லியும் பார்த்தேன்Big vessel – put oil, then put kadugu, பட் படா, படா பட் sound”  எனக்கு அதான் வேண்டும்!” என்று கேட்க, அவனுக்கு தலை கால் புரியாது முழித்தான்! போய்யா, நான் கடுகு போடாமலேயே தாளிச்சுக்கறேன்என்று வந்து விட்டாராம்! அவரிடம் நான் கடுகுக்கு ஹிந்தியில் ராய் [] சர்சோன் என்று சொல்லி, சரசுவை நினைவில் வைத்துக் கொள்ளச் சொன்னேன்!

 நன்றி: கூகிள்

தில்லியில் தேங்காய் கிடைக்குமோ கிடைக்காதோ என செங்கல்பட்டிலிருந்தே தேங்காய் கொண்டு வந்திருக்கிறார் போலும். அது தீர்ந்துவிட, துருவியபின் தேங்காய் ஓட்டினை எடுத்துச் சென்றிருக்கிறார். கடைக்காரரிடம் அதை திருவோடு போல காண்பித்து தமிழில் தேங்காய் தேங்காய் என்று கேட்க, அவர் சைகையாலேயே போ போ என்று அனுப்பி இருக்கிறார்! நல்ல வேளை, காசு போடாமல் போனாரே! [ஹிந்தியில் தேங்காய்க்கு நாரியல் என்று சொல்லி, Mother Dairy கடைகளில் கிடைக்கும் என்றும் சொன்னேன்.

ரயிலில் ஏறிய உடனேயே ஒரு தட்டில் சமோசா, Sauce, ஒரு சின்ன பாக்கெட் கடலை கூடவே ஒரு பாக்கெட்டில், Milk Powder, Sugar, tea bag ஆகிய மூன்றும் கொடுப்பார்கள். அந்த மூன்றையும் பார்த்த அவர், ”என்ன உலகமடா இது?” இப்படி குடுத்தா என்ன பண்ணனும்னு தெரியலையே? இதை எப்படி டீயா மாத்தறது? என்று வாய்விட்டே புலம்பினார்.

கொஞ்சம் இருங்க! சூடா தண்ணீரும், கப்பும் தருவாங்க, சக்கரை, பால் பவுடர் போட்டு, கலக்கி தண்ணீர் விடுங்க, என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே Tea Bag- கிழிக்கப்போக, நான் அலற, ஒரே ரகளை தான்! பிறகு அவருக்கு எப்படி தேநீர் தயாரிக்க வேண்டும் என்பதை செயல்முறை விளக்கத்தோடு சொல்லிக் கொடுத்தேன்.

முதல் முறையாக தில்லி வரும்போதே தெரியாத மொழி, பழக்கம் இல்லாத மனிதர்கள், புதிது புதிதாய் விஷயங்கள் என்று பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது என்று புலம்பினார். ”அடிக்கடி வர வேண்டியிருக்கும், ஹிந்தி தெரியாம எவ்வளவு கஷ்டம்!”  என்று சொன்ன போது அவருக்கு நான் சொன்னது, ”கொஞ்சம் கொஞ்சமா ஹிந்தி கத்துக்கோங்க! நிச்சயம் பயன்படும்!” 

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

46 கருத்துகள்:

  1. சுவையோ சுவை! நகைச்சுவை! அப்புறம் உங்கள் நண்பர் ஹிந்தி கற்றுக் கொண்டாரா?
    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது தானே தில்லி வர ஆரம்பித்து இருக்கிறார்! கற்றுக்கொள்வார் - பட்ட கஷ்டம் கற்றுக்கொள்ள வைக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா

      நீக்கு
  2. பதில்கள்
    1. தற்போது படிக்கும்போது வேடிக்கையாக இருந்தாலும் அந்த நேரங்களில் அவரது நிலை ரொம்பவே மோசம் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  3. ஹாஹாஹா....நல்ல அனுபவம்..வெங்கட் ஜி! ..அந்த மனிதர் திருவோடு ஏந்தியதை நினைத்தும், நீங்கள் தேநீர் தயாரிக்கக் கற்றுக் கொடுத்ததை நினைத்தும்.....பிரயாணம் என்றாலே பல சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைக்கும். ரயில் பயணம் என்ரால் கேட்கவே வேண்டாம்.....நல்ல அனுபவம்....தொடர்கின்றோம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு பிரயாணத்திலும் கிடைக்கும் அனுபவங்கள் நிறைய...... எல்லாவற்றையும் எழுத இய்லாது :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  4. வேடிக்கையான அனுபவம்...
    சரசுவை நினைக்கச் சொன்னது.... ஹா... ஹா....அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரும்பி வரும் பயணத்திலும் ”சரசு” என்று பலமாக ஒரு குரல் கேட்டது! அது பற்றிய பதிவு பிறிதொரு சமயத்தில்! :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  5. நான் தொடக்கத்தில் பிரென்சு தெரியாமல் பட்ட கஷ்டங்களை நினைத்துப் பார்க்கிறேன்.

    நல்ல பகிர்வு நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுப்வங்களையும் பதிவிடுங்களேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  6. மொழி தெரியாததால் என்னென்ன பிரச்சினைகள்
    தம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதம் விதமான பிரச்சனைகள்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. கஷ்டம்தான். எனக்குக் கூட கொஞ்சம் கொஞ்சம்தான் ஹிந்தி தெரியும். இந்த கடுகு, உளுத்தம் பருப்பு போன்றவற்றுக்கு எல்லாம் ஹிந்திப் பதத்துக்கு எங்கே போவது! ஆனால் அனுபவம் கற்றுக் கொடுக்கும் பாடம்தான் மறக்காது நிற்கும்! :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”அனுபவம் கற்றுக் கொடுக்கும் பாடம் மறக்காது!” - அதே தான். பல அனுபவங்கள் நமக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுக்கின்றன!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. ஹாஹாஹா! எனக்கு ஹிந்தி தெரிந்திருந்தும், நான் பேசிய உச்சரிப்பு அவங்களுக்குப் புரியலை/பிடிக்கலை(?) அவங்க சிரமப்பட, அவங்களோட வேகமான ஹிந்தி பிடிபட எனக்கு நாளாக, ஒரு மூணு மாசம் கஷ்டப்பட்டேன் தான். அப்புறமாச் சமாளிச்சாச்சு. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி வரும் வேளை எனக்கு ஹிந்தியில் ஒரு எழுத்து கூட தெரியாது. மூன்று - நான்கு மாதங்களில் பேசக் கற்றுக் கொண்டேன். பிறகு எழுதவும், படிக்கவும்! ஆனாலும் புதியதாக வரும்போது கடினம் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  9. பல சமையல் புத்தகங்களிலும் மளிகை சாமான்களின் பெயர்களைத் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி,கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தமிழிலேயே எழுதி இருக்கிறார்கள். அதைப் பார்த்துக் கொண்டாலே போதும். ராயி எனக் கடுகுக்குக் குறிப்பிடுவார்கள். இது தாளிக்கும் கடுகு. சர்ஸோன் என்பது எண்ணெய்க் கடுகு. இதிலிருந்து தான் கடுகு எண்ணெய் தயாரிப்பார்கள். சர்ஸோன் கா தேல் என்றால் கடுகு எண்ணெய் அல்லவா? அந்தக் கடுகு தான் சர்ஸோன். சர்ஸோன் கீரையில் சாக்(sarson ka saag என்னும் சைட் டிஷ் தயாரிப்பார்கள். இதுக்கு ரொட்டி சோளத்திலே. சோளரொட்டியும்(makhi ka roti), சர்சோன் கா சாகும் பிரபலமான உணவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சர்ஸோன் கா சாக் - மக்கி ரொட்டி மிகவும் பிரபலமான ஒரு Combination. குளிர் நாட்களில் தான் அதிகம் சாப்பிடுவார்கள் - சூடு தரும் என்பதற்காக.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    2. தாளிக்கும் கடுகுக்கும் எண்ணெய் கடுகுக்கும் என்னெய் வித்தியாசம்?

      நீக்கு
    3. இந்த மஸ்டர்ட் கலரைக் குறித்து நினைக்கையில் என் அம்மா, பாட்டி எல்லாம் இதை மஸ்கெட் கலர்னு சொல்லுவது நினைவில் வந்தது. பின்னால் விபரம் தெரிந்த பின்னர் இதை வைத்து அம்மாவைக் கேலி செய்வேன். :))))

      நீக்கு
    4. தாளிக்கும் கடுகு - காய வைத்தது. எண்ணை கடுகு - காய வைக்காதது!

      இது தான் வித்தியாசம் என நினைக்கிறேன் அப்பாதுரை.

      நீக்கு
    5. தமிழகத்தில் இருந்த வரை கறுப்பு கலரில் தான் கடுகு பார்த்திருக்கிறேன். இங்கு வந்த பிறகு தான் மஸ்டர்ட் கலர் எப்படி இருக்கும் என புரிந்தது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  10. ஒன்று கவனித்து இருக்கிறீர்களா.?அங்கிருந்து இங்கு வரும் வட இந்தியர்கள் அவ்வளவாகக் கஷ்டப் படுவதில்லை. நாம் அவர்கள் மொழியில் பதில் கூற முனைவோம். இல்லை என்றால் ஆங்கிலம். பல வட இந்தியர்கள் ஆண்டுகள் பல தமிழ் நாட்டில் இருந்தாலும் நம் மொழியைக் கற்க முயலுவதில்லை.எக்சப்ஷன்ஸ் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  11. தில்லி மட்டும்மல்ல மொழி தெரியாத எந்த ஊருக்கு... போனாலும், இப்படி தான் கற்றுக்கொள்ள வேண்டி வரும். தமிழை தவிர வேறு எதுவும் தெரியாமல் அந்தக் காலத்தில் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பா எங்கும் போன தமிழர்கள் , இப்படி தான் காமெடியா மலாய், சீனம், பிரஞ்சு, ஜேர்மன்,எல்லாம் கற்றுகிட்டங்க.கற்று கிட்டாங்க. எது எது எங்கே தேவையோ, அது அது பழகி தான் ஆகணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாநகரன்.

      தங்கள்து முதல் வருகையோ?

      நீக்கு
  12. ரா.ஈ. பத்மநாபன்21 ஆகஸ்ட், 2014 அன்று AM 9:58

    ஹிந்தி தெரியாமல் தில்லிக்கு வரும் தமிழர்களை வரவேற்கிறது, கடந்த 25 வருடங்களாக ஹிந்தியில் ததிங்கணதோம் போடும் உண்மைத் தமிழர்கள் சங்கம். (அது யாருங்க சரசு! சொல்லவே இல்லை!)

    (தாத்தா! தாத்தா! இங்க ஒரு அங்கிள் ஹிந்திப் பிரச்சாரம் பண்றாரு.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      ஆஹா தாத்தா கிட்ட போட்டுக் கொடுக்கறீங்களே அண்ணாச்சி!

      நீக்கு
  13. பாவம் அந்த அந்த மனுஷன் நாய் படா பாடு பட்டுள்ளார் :))
    இந்த நகைச்சுவையான சம்பவங்களை நினைக்கும் பொழுது இங்கு
    சுவிஸ் நாட்டிற்கு முதன்முறையாக வரும் பொழுது எமது தமிழ்
    மக்கள் பட்ட பாட்டினை எண்ணி பார்க்கத் தோன்றுகிறது :)
    கோழி வாங்குவதற்காக கடைக்குச் சென்றவர்கள் முட்டையை
    எடுத்து இதனுடைய அம்மா எங்கே என்று ஆங்கிலத்திலும் சைகைகளிலும்
    காட்டியே வாங்கியுள்ளனர் :)இது ஓர் உதாரணம் மட்டுமே இதை
    விடவும் ஏகப்பட்ட சமாச்சாரம் உள்ளது சகோதரா :) மொத்தத்தில்
    நீங்கள் சொல்வது போல் பல மொழிகளையும் கற்பதற்கு வாய்ப்புக்
    கிட்டும் போது அவற்றைக் கற்றுக் கொள்தலே சாலச் சிறந்தது .
    அருமையான பகிர்வு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      உங்கள் அனுபவங்களையும் இங்கே குறிப்பிட்டதற்கு நன்றி.

      நீக்கு
  14. வேறு மாநிலங்களுக்கு போகும் போது கொஞ்சம் அந்த மொழி தெரிந்திருக்க வேண்டியதின் அவசியத்தை நகைச்சுவையோடு சொன்னது பதிவு! அதுவும் அந்த கடுகு கேட்ட விதம் செம இண்டர்ஸ்டிங்க்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  15. ராஜ்தானி ரயிலில் தரும் ,நமக்கு நாமே தயாரித்துக் கொள்ளும் டீ,அவ்வளவாக ரசிக்கும் படியாக இல்லை தானே ,வெங்கட் ஜி ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது தேநீர் அல்ல! தேநீர் வண்ணத்தில் சுடு நீர்!-

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  16. இப்படி இன்னும் ரெண்டு பதிவு போடுங்க அண்ணா! நானும் ஹிந்தி கத்துகிறேன்:)
    THAMA 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

      ஹிந்தி அப்படி ஒன்றும் கடினமான மொழி அல்ல.....

      நீக்கு
  17. பாவம்! அப் பாவி! நலமா வெங்கட்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலம் புலவர் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. மொழி தெரியா ஊரில் படும்பாடு அப்பப்பா! நகைச்சுவையுடன் சிந்திக்க வைக்கிறது. நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  19. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  20. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  21. அருமை ! உங்கள் சரளமான நடையில் நண்பரின் அனுபவங்கள் சிரிப்பை வரவழைத்தாலும் அந்த நேரத்தில் அவர் என்ன பாடு பட்டிருப்பார் ?!

    ஆமாம், அந்நிய மொழி பேசும் பிரதேசங்களுக்கு செல்லும் போது அன்றாட தேவைகளுக்காகவாவது ஒரு அகராதியை தயார்செய்துகொண்டுதான் போக வேண்டும் !

    சர்சோனுக்காக சரசுவை நினைவில வைத்துகொள்ள சொன்ன உங்களை...

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாமானியன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....