வெள்ளி, 26 செப்டம்பர், 2014

ஃப்ரூட் சாலட் – 107 – பூனம் ஷ்ருதி – 2/10 = 2? – இரண்டு காக்கைகள்



இந்த வார செய்தி:

பூனம் ஷ்ருதி – படித்த படிப்பு – B.Com., MBA [Finance], Post Graduate Diploma in Personal Management – இத்தனை படித்தபின் நிச்சயம் பூனம் ஒரு நல்ல வேலை கிடைத்து, ஏதோ ஒரு MNC-ல் பணி புரிந்து கொண்டிருப்பார் என நினைக்கலாம். ஆனால் இத்தனை படித்திருந்தும், எத்தனையோ நேர்முகத் தேர்வுகளில் பங்குபெற்றும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. ஒவ்வொரு நேர்முகத் தேர்விலும் பங்குபெறும் சமயத்தில் அவர்கள் சொன்ன பதில் – ஒரு படத்தில் வடிவேலுவைப் பார்த்து சிங்கமுத்து “இந்த வேலைக்கு நீ சரி வர மாட்டஎனச் சொல்வாரே அந்த மாதிரி தான்!

நல்ல திறமையிருந்தும், வேலை கொடுப்பதற்கு நிறுவன்ங்கள் தயங்கிய காரணம் பூனம் அவர்கள் இரண்டடி உயரம் தான் இருந்தார். அவருக்கு  Osteogenesis Imperfecta (OI),  எனும் உடல் கோளாறு.  சுலபமாக உடைந்து விடக்கூடிய எலும்புகள் – தனது உடல் பற்றி சொல்லும்போது நகைச்சுவையாக – “என் உடம்பில் எலும்புகளை விட அவை உடையாமல் காக்க வைத்த Plate-கள் அதிகம்!என்று சொல்கிறார்.

பல தோல்விகளுக்குப் பிறகு அவருக்கு வேலை கிடைத்தது. உடலில் பிரச்சனை இருந்தாலும், மற்ற அலுவலர்களைப் போலவே அவருக்கும் Target, Goal என அனைத்தும் உண்டு. முடியாத நேரத்தில் வீட்டிலிருந்தும் பணிபுரியலாம் என்பது மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்ட சலுகை. ஆறுவருடம் அந்தப் பணியில் இருந்தபிறகு இன்னமும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, அதுவும் தன்னைப் போன்றவர்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று அந்த வேலையை உதறித் தள்ளினார்.

Uddip Social Welfare Society என்ற இயக்கத்தில் இணைந்து தன்னைப் போன்ற பலருக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து அவர்களது வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை உருவாக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் செய்யும் பல நல்ல விஷயங்களைப் பற்றி முழுவதும் இங்கே படிக்கலாம்!

திருக்குறள் இரண்டடி தான் – ஆனாலும் அவை நமக்குச் சொல்லித் தரும் பாடங்கள் எத்தனை எத்தனை. அதே போல போபால் நகரினைச் சேர்ந்த பூனம் அவர்களும் பலருக்கு நல்ல விஷயங்களைக் கற்றுத் தருகிறார். 

இந்த வாரப் பூங்கொத்து பூனம் அவர்களுக்கு!
  
இந்த வார முகப்புத்தக இற்றை:

தலைப்பில் 2/10 = 2 அப்படின்னு எழுதி இருக்கே அது தான் இந்த வார முகப்புத்தக இற்றை! Prove 2/10 = 2 அப்படின்னு ஒரு கணக்கு. ஜப்பான் மாணவன் – இது தப்பான கேள்வி என்று சொல்ல, அமெரிக்க மாணவன் – வினோதமா இருக்கே, இது எப்படி சாத்தியம்என்று கேட்டான்!  ஆனா நம்ம ரஜினி அண்ணாத்த சுலபமா இதை நிரூபித்து விட்டார்! எப்படி....  பாருங்களேன்! :)


இந்த வார குறுஞ்செய்தி:

WE ALL MAKE MISTAKES IN OUR LIFE.  BUT WIFE AND BOSS ONLY HAS THE ART OF FINDING IT, REMEMBERING IT AND REMINDING IT EVERY NOW AND THEN!

                SENT BY: MRS.SARASWATI

ரசித்த காணொளி:

என்கிட்ட மோதாதே...  :) சிகரெட் பிடிக்காதே என்று சொன்ன பிறகும் சிகரெட் பிடித்தால் இப்படி நடக்கலாம்! பாருங்களேன்!




ரசித்த பாடல்:

பசங்க படத்திலிருந்து ஒரு வெட்கம் வருதே வருதே!பாடல் இந்த வார ரசித்த பாடலாக!




இந்த வார புகைப்படம்:



“Hello, Excuse me!” உயரமானவரே, கொஞ்சம் குனிஞ்சு போங்க! என்று சொல்லுமோ இந்த யானை!

படித்ததில் பிடித்தது:



அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் 'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.

மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.

அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.

ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.

இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.

மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து 'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. 'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி' என்று உறுமினான்.

சேவகன் சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?' என்றான்.

மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட 'எஸ்கேஏஏஏஏ..ப்' ஆகிவிட்டார் என்று கேள்வி!!!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


32 கருத்துகள்:

  1. எல்லாமே அருமை. பசங்க பாடல் கேட்டதில்லை. பூனம் செய்தி நானும் பாஸிட்டிவுக்கு எடுத்துக் கொண்டுள்ளேன். :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. நல்ல தொகுப்பு. பாராட்டுக்குரியவர் பூனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  3. இந்த வார ஃப்ரூட் சாலட் அருமை.
    படித்ததில் பிடித்தது சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு

  4. இந்த வார பழக்கலவை வழக்கம்போல் அருமை. அதிலும் அந்த புகைப் பிடிப்பாளிக்கு கொடுக்கப்பட்ட தண்டனை சிரிக்க வைத்தது. சிந்திக்கவும் வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  5. இனிக்கும் பழக்கலவை...
    சுவைத்தேன்.. மகிழ்ந்தேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

      நீக்கு
  6. திருக்குறள் இரண்டடி தான் – ஆனாலும் அவை நமக்குச் சொல்லித் தரும் பாடங்கள் எத்தனை எத்தனை.

    ஃப்ரூட் சாலட் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  7. பூனம் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும். ரஜினி நடிப்பில் மட்டுமல்ல எல்லாவகையிலும் சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்துவிட்டாரே! மனைவிகளும், உயர் அதிகாரிகளும் நிச்சயம் உயர்ந்தவர்கள் தான். பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. கதை அருமை!
    ப்ரூட் சாலட் வெகு ருசி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா..

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  9. நல்லதொரு சாலட்! கதை சூப்பர்! ரஜினி தீர்த்த கணக்கு அவரு சூப்பர் ஸ்டாருன்னு உணர்த்தியது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  10. பூனத்தின் தன்னம்பிக்கை வாழ்க! வாழ்த்துக்கள்.அனைத்தும் அருமை. காக்கை கதை மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  11. ஷ்ருதி, ரஜினி கணக்கு, சிகரெட் வீடியோ, காக்கைக் கதை, யானை படம் என எல்லாமே கலக்கல் அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  12. மொத்தத்தில் ஃப்ரூட் சலாட் சுவைக்கிறது. புகைப்படம் அருமை. பூனம் பற்றிய செய்தி எங்கள் ப்லாகை நினைவு படுத்தியது. ரஜினி பற்றிய ஜோக் செய்தி ரசிக்க வைக்கிறது. இது மாதிரி ரஜினி செய்திகள் அவ்வப்போது கேட்பதுண்டு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  13. எப்படி தான் இப்படி சாலட் தயாரிக்கிரீங்கலோ!! உங்க கை பக்குவமே சூப்பர் அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  15. பூனம் அவர்களுக்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  16. பூனம் க்ரேட்!

    இற்றை: ஆஹா நம்மவர்கள் நிஜமாகவே புத்திசாலிகள்தான்...ரூம் போட்டு யோசிப்பாங்களோ?!!
    காணொளி, இற்றை, குறுன்செய்தி, பாட்டு அருமை! புகைப்படம் சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்! படித்ததில் பிடித்தது நல்ல சகுன அடி!

    சாலர் ஸோ ஸ்வீட்ட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....