ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

வாவ்! நாற்காலிகள்






நாற்காலிகளில் தான் எத்தனை வகை. இறைவனின் படைப்பில் இத்தனை இத்தனை வேறுபாடுகள்! அது என்ன நாற்காலிகளை இறைவன் படைத்தானா? எனக்குத் தெரிந்து நாற்காலிகளை தச்சர்கள் தானே செய்வார்கள் என்று கேட்கக் கூடாது!  

இந்த நாற்காலிஎனும் சொற்பதத்தினை விலங்குகளுக்குப் பயன்படுத்திய துளசி டீச்சருக்கு பாராட்டுகள்! அந்த சொல்லை நானும் அவருக்கு மனதில் நன்றி சொன்னபடியே சுட்டு விட்டேன்!

நாற்காலிகளை படம் பிடிப்பதெற்கென்றே ஒரு சிலர் பல தினங்கள் காடு மலைகளில் காத்திருந்து, இன்னல்கள் பல அடைகிறார்கள்.  அப்படி காத்திருந்து அருமையான படங்களை தங்களது காமிராக்களில் சிறைபிடித்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.  அப்படி பிடிக்கப்பட்ட படங்களை இந்த வருடத்தின் Wildlife Photographer of the Year போட்டிக்கு அனுப்பி இருந்தார்களாம். வந்திருந்த 41000 புகைப்படங்களில் இறுதிச் சுற்றுக்குச் செல்ல 50 புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.  அவற்றில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்வதில் புகைப்படம் எடுப்பதில் கத்துக்குட்டியான எனக்கும் மகிழ்ச்சி! எப்படி இவ்வளவு சிறப்பாய் படம் எடுக்கிறார்கள் என ஆச்சரியம்!

சென்ற வாரத்தில் ஃப்ரூட் சாலட்-106 பதிவில் வெளியிட்ட குரங்கார் படம் கூட இந்த ஐம்பது படங்களில் ஒன்று தான்.  மற்ற படங்களில் சிலவற்றைப் பார்க்கலாமா!


'Stretching' by Stephan Tuengler

முத்தம் கொடுக்க வந்ததால் வெட்கத்தில் கண்களை மூடிக்கொண்டதோ! இல்லை இல்லை இது சோம்பல் முறிக்கிறது!

'Flirting Bearded Seal' by Audun Rikardsen

 

ஐ! இந்த தாடி அழகா இருக்கே! இது மாதிரி தாடி வளர்க்கலாம்னு ஒரு யோசனை!

'Bad Hair Day' by Gordon Illg

 

மயிர் கூச்செறியும் காட்சி என்பது இது தானோ!

'Barracuda Swirl' by Alexander Mustard

 

சுத்தி சுத்தி வந்தீக சுத்தும் விழியால் சுட்டீக!

'Bat Festival' by João Paulo Krajewski

 

நாங்கள் தலைகீழாக தொங்கியபோது வெடி வெடித்த நபர் யாரோ என்று பறந்தபடியே கேட்கிறதோ!

'Dantes Inferno' by Karen Lunney

 

அந்நியன் பட தண்டனையை நினைவுபடுத்துகிறது இந்தப் படம்!

'Feel Safe' by Juan Carlos Mimó Perez

 

ஏய் ஃபோட்டோ புடிக்கிற மாமா, நான் இங்க ஒளிஞ்சு இருக்கேன்னு யார்கிட்டயும் சொல்லிடாத!

'Great Peacock Moth Caterpillar' by Leela Channer



நான் கூட மயில் தான்!

'Heavy Rain' by Pierluigi Rizzato

 

மழையிலே நனைஞ்சா கரைஞ்சு போயிட நான் என்ன சக்கரையா? நான் இப்படித்தான் நனைவேன்!

'Old Cloths' by Claudio Contreras Koob


யாருடா அது என்னை கொடியில காய வைச்சது!

'Red Kangaroos at Waterhole' by Theo Allofs


எத்தனை கங்காரு எண்ணிச் சொல்லுங்க பார்க்கலாம்!

'Sentry Duty' by Neil Aldridge

 

என்னைத் தாண்டி ஒரு ஈ, காக்கா கூட உள்ள வர முடியாது!

எல்லா படங்களையும் இங்கேயே பகிர்ந்து விட்டால் எப்படி? மற்ற படங்களையும் ரசிக்க இங்கே செல்லலாமே!


என்ன நண்பர்களே இந்த வாரத்தின் புகைப்படங்களை ரசித்தீர்களா?  மீண்டும் வேறு சில புகைப்படங்களோடு பிறிதொரு சமயத்தில் சந்திக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

52 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  5. படங்களை அங்கேயும் சென்று ரசித்தேன் ,ஆனாலும் இங்கே உங்கள் கமெண்டுடன் ரசிப்பத்திலேதான் சுகம் !
    த ம 3

    பதிலளிநீக்கு
  6. ஹைய்யோ!!! சூப்பர்! அதுவும் கொடியில் காயும் குட்டியும், காவல்தலைவனும் அதி சூப்பர்!!!!

    நம்மூட்டுலே ஒருநாள் அரசியல்வாதி கிடைச்சார், ஒருக்ளிக்கில்:-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  7. அனைத்தும் படங்களும் அருமை. அதோடு அவைகளுக்கு நீங்கள் தந்துள்ள தலைப்புகள் அதைவிட அருமை. நீங்கள் தந்துள்ள இணைப்பில் சென்று பார்த்தேன். படங்களை இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  8. படங்கள் கண்ணை விட்டு அகலவில்லை அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மைதிலி.

      நீக்கு
  9. மெய் சிலிர்க்க வைக்கும் அருமையான படங்கள் !வாழ்த்துக்கள் அன்புச்
    சகோதரனே .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  10. உங்கள் கமெண்டுகளோடு படங்கள் அதிகம் ரசிக்க வைக்கின்றன வெங்கட். அருமையான பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தேனம்மை லக்ஷ்மணன் ஜி!

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  12. எல்லா படங்களையும் ரசித்தேன். Distractify ஒரு அட்சய பாத்திரம் போல் அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கிறது.
    த.ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  14. அருமையான புகைப்படங்கள்...பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தர்ஷணி.

      நீக்கு
  15. வாவ் ! அருமையான அழகான படங்கள்! மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன! திரும்ப திரும்ப பார்க்கின்றோம்....வெங்கட் ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே!

    என் வலைத்தளம் வந்து கருத்திட்டு என்னை மேலும் எழுத ஊக்கபடுத்திய உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்..! சகோதரர் திரு. கில்லர்ஜி எனக்கு கொடுத்த “பல்திறப் புலமை விருதை” உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த பெருமையடைகிறேன்..! பெற்றுக் கொள்வதற்கு நன்றிகள்..

    வணக்கத்துடன்,
    கமலா ஹரிஹரன்..

    பதிலளிநீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  19. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  20. படங்கள் அனைத்தும் கண்களை மட்டுமல்ல
    மனத்தையும் கொள்ளைக்கொள்ள வைக்கிறது ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  21. அருமையான படங்கள் பகிர்வு நண்பரே...
    அதற்கான உங்கள் கருத்து இன்னும் அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

      நீக்கு
  22. நாற்காலிகள் என்றதும் முதலில் புரியவில்லை :-)

    //அந்நியன் பட தண்டனையை நினைவுபடுத்துகிறது இந்தப் படம்!// விகடனில் இந்தப் படத்தை பார்த்திருந்தேன். ஆப்பிரிக்க காடுகளில் ஆற்றைக் கடக்கும் காட்டெருமையாம் இவை... அட்டகாசமாய் அதே நேரம் மிரட்சியாய் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  23. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  24. நான் ஒரு நசனல் யீயோகிரபி, டிஸ்கவரி பைத்தியம். நவீன படக்கருவிகளால் அவர்கள் சுட்டுத் தரும் படங்கள். அபாரம்.
    காலுக்குள் இருக்கும் சுண்டெலி அற்புதம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யோகன் பாரிஸ்.

      நீக்கு
  25. அழகான படங்கள். ரசித்தேன். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  26. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....