செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

நாளை முதல் குடிக்க மாட்டேன்....



தலைக்கு மேல் வேலை... ஆனால் அந்த வேலையை நான் செய்ய வேண்டியதில்லை. தலையைக் கொடுத்து விட்டு நிம்மதியாக அமர்ந்து கொள்ளலாம்.... அப்படி இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் என் தலையை அப்துல் என்ற நாவிதரிடம் ஒப்படைத்து அமர்ந்திருந்தேன். அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் என் தலைப்பகுதி முழுதும் ஆடிக்கொண்டிருந்தது.... சில சமயங்கள் தலையினை மறுபுறம் தள்ளியும், அவரது  பக்கம் சாய்க்க காதைப் பிடித்து இழுப்பதுமாய் அதகளம் செய்து கொண்டிருந்தார் அப்துல்.

பெரும்பாலும் ஒரே கடையில் தான் இந்த வேலைக்கு வருவது வழக்கம். போலவே அங்கே இருக்கும் பெரியவரிடம் தான் தலையைக் கொடுப்பேன்.... ஆளுயர நாற்காலியில் அமர்ந்து கொண்ட பின் அவர் கேட்கும் ஒரே கேள்வி - சோட்டா கர்தூன்... நான் சொல்லும் ஒரே பதில் ம்ம்ம்ம்ம். வேறு பேச்சே கிடையாது. அவர் தொழிலில் மும்மரமாக இருக்க நான் யோசனையில் மூழ்கிவிடுவேன்.  கற்பனைக் குதிரையத் தட்டி விட்டால் தறிகெட்டு ஓடும் சில நிமிடங்கள் அவை...

இம்முறை சென்றபோது பெரியவர் வேறு தலையின் மீது தன் கைவரிசையைக் காட்டிக் கொண்டிருந்தார். எனவே அவராகவே 'அப்துல்..' என விளித்து அவரிடம் என் தலையை ஒப்படைத்தார். பெரியவர் இரண்டு வார்த்தைக்கு மேல் பேச மாட்டார் என்றால் அப்துல் நேரெதிர்.... ஈராயிரம் வார்த்தைகளுக்குக் குறைவாகப் பேச மாட்டேன் என்று சபதம் போட்டவராக இருந்தார். இருக்கையில் உட்கார்ந்த என்னிடம், ”கொஞ்சமா எடுக்கணுமா, லைட்டா ட்ரிம் பண்ணணுமா, இல்லை காதோரம் இருக்கும் நீட்டு முடி மட்டும் எடுக்கணுமா, மெஷின் போடவா இல்லை கத்திரிக்கோலா” என எண்ணிடலங்கா கேள்விகள்….

வேறு வழியில்லை – சில வார்த்தைகளை பேசியே ஆகவேண்டும் – ம்ம்ம்ம் என்று சொல்லி தப்பிக்க முடியாது! பதில் சொன்ன பிறகு மேலும் கேள்விகள் தொடர்ந்தது – வெறும் கட்டிங் மட்டுமா, இல்லை ஷேவிங் பண்ணனுமா, தலை முடி வெளுத்துருக்கே டை அடிக்கணுமா, மசாஜ் பண்ணவா எனக் கேட்டுக் கொண்டே இருக்க, வெறும் தலைமுடி மட்டும் வெட்டுப்பா எனச் சொல்லி அமைதியானேன்.  ஆனால் அவரோ பேசிக்கொண்டே இருப்பவர் போலும், தானாகவே பேசிக் கொண்டிருந்தார்.

“வேண்டாண்டா அப்துல், இப்படியே இருந்தா, செத்துடுவ, நாளையிலிருந்து குடிக்காதடா அப்துல்” என தனக்குத் தானே சொல்லிக் கொள்ள, நான் கொஞ்சம் ஸ்வாரஸ்யமாகக் கதை கேட்க ஆரம்பித்தேன்.  அவருக்கு வயிற்று வலி என மருத்துவரிடம் சென்றபோது, “குடிக்காதே எனச் சொன்ன மருத்துவரை “போய்யா வெண்ணை” என்று சொல்லிவிட்டு வந்தாராம்.  தொடர்ந்து குடித்துக் கொண்டே வர, வயிற்று வலி அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாம்.  தனக்கே தனது பிரச்சனைக்குக் காரணம் தான் குடிப்பது தான் என்பது இப்போது புரிந்து விட்டதாம்.  

அதனால் “அப்துல் நாளையிலிருந்து குடிக்காதடா!” என்று அவருக்கு அவரே அறிவுரை சொல்லிக் கொள்ள, நான் சும்மா இருக்காமல், “அது சரி அப்துல், அது ஏன் நாளையிலிருந்து குடிக்காம இருக்கணும், நல்ல முடிவு எடுத்துருக்கீங்க, அதை இன்னிக்கே செயல்படுத்துங்களேன்…. இன்னிலிருந்தே குடிக்காம இருக்கலாமே” என்று கேட்க, அவர் சொன்ன பதில், “இல்லை சார் நேத்திக்கே வாங்கி வச்சுட்டேன்… அதுனால நாளைல இருந்து குடிக்க மாட்டேன்!” என்ன ஒரு கடமை உணர்வு! 

இதைக் கேட்டுக் கொண்டிருந்த பெரியவர் சொன்னார் – இப்பதானே நாளைக்கு வேணும்னு வாங்கிட்டு வந்த! என்று சொல்ல, அப்துல் சொன்ன பதில்…. நாளைக்கும் இதே தான் சொல்வேன் – ”நாளை முதல் குடிக்க மாட்டேன்!”

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

34 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. முடியவே முடியாது...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு

  2. நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று சபதம் போடுவதை விட இன்று முதல் பாட்டில் வாங்க மாட்டேன் என்று சபதம அவர் எடுத்து இருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி எடுத்தால் குடிக்க முடியாதே... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. ஹஹஹஹஹ் நாளை மொட்டையாக என்பதே கிடையாதே!! தினமும் நாளை வரும்.. இவராவது குடிக்காமல் இருப்பதாவது!! பழைய பாடல் தான் நினைவுக்கு வருகிறது! "நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்...இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும்,
    ஊத்திக்கிறேன் கொஞ்சம்! அப்துலுக்குத் தமிழ் தெரியாம போச்சே!!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்துல் அவர்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கலாம் என நினைத்தால் கையில் கத்திரிக்கோல் இருக்க எதையாவது சொல்லி, காதை இழக்க நான் தயாராக இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. நீங்கள் எழுதியது நான் படித்த ஒன்றை நினைவுபடுத்திவிட்டது. எம்.எஸ்.வி அவர்கள், கண்ணதாசனிடம், அது ஏன் 'நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம்'னு எழுதியிருக்கீங்க.. 'இன்று முதல் குடிக்கமாட்டேன்' என்பதுதானே சரி என்று அந்தப் பாட்டுக்கு மெட்டுப்போட்டபோது சொன்னாராம். அதுக்கு கண்ணதாசன், 'இல்லடா விசு. குடிகாரன் எப்போதும் நாளைலேர்ந்துதான் குடியை நிறுத்துவேன் என்பான். அதுனாலதான்' என்றாராம். இது 'சிகரட்' நிறுத்தணும்னு நினைக்கறவங்களுக்கும் பொருந்தும் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் படித்த விஷயத்தினை நினைவு கூர்ந்து இங்கே பொருத்தமாய் பகிர்ந்து கொண்டது நல்ல விஷயம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. விநாயகரின் 'இன்று போய் நாளை வா' போல் என்றென்றும் நின்று நிலைக்கும் வசனம் 'நாளை முதல் குடிக்க மாட்டேன்'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்றும் நிலைத்திருக்கும் வசனம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  8. சத்தியமாகச் சொல்கிறேன் நாளை முதல் குடிக்க மாட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  11. நல்லவேளை ஞாபகமூட்டினீர்கள். நானும் தலை கொடுக்கவேண்டும்.இரண்டுமாதம்ஆகிவிட்டது இன்னும்தாமதித்தால்சிகையலங்காரக்கலைஞருக்கு கோபம் வந்து விடும்.

    இராயசெல்லப்பாநியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... உங்களுக்கு நினைவூட்ட இப்பதிவு பயன்பட்டதே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.

      நீக்கு
  12. ”நாளை முதல் குடிக்க மாட்டேன்!”//
    வார்த்தையை கடைபிடித்தால் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  13. குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு. ம்ம்! கடவுள் அவருக்கு வைராக்கியத்தை கொடுக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  14. ‘இன்று ரொக்கம் நாளை கடன்’ என்று கடைகளில் எழுதி வைத்திருப்பார்கள்.அதுபோலத்தான் இதுவும் என நினைக்கிறேன்.
    எழுதுபவன் கண்ணையும் காதையும் திறந்து வைத்திருக்கவேண்டும் என்பார்கள். அதை சரியாக செய்துகொண்டு இருக்கிறீர்கள். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதுபவன் கண்ணையும் காதையும் திறந்து வைத்திருக்க வேண்டும்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  15. நாளை முதல் குடிக்க மாட்டேன்...
    அப்ப திருந்த சான்ஸே இல்லை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....