ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

மாட்டிர் புத்லா – குர்னியின் களிமண் பொம்மைகள் – நிழற்பட உலா


நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறின் காலையில் உங்களை இப்பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு வாசகத்துடன் துவங்கலாம்…

அன்புக்கு விலையில்லை! அதைத் தருவது தான் பெறுவதற்கு வழி! தந்தவருக்கும் லாபம்! பெற்றவருக்குக் லாபம்! – புத்தர்.
                                        
Ghகுர்னி – மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் இருக்கும் ஒரு இடம் தான் இந்த இடம். ஜலங்கி நதியின் கரையோரத்தில் இருக்கும் இந்த இடம் ”மாட்டிர் புத்லா” என அழைக்கப்படும் களிமண் பொம்மைகளுக்குப் பிரசித்தி பெற்றது. மாட்டி/மிட்டி என்றால் மண் என்று அர்த்தம். ஹிந்தி/பெங்காலி இரண்டிலுமே! கிருஷ்ணாநகர் பொம்மைகள் என்றும் அழைக்கப்படும் இந்த பொம்மைகளை சுமார் 500 கலைஞர்கள் தயாரிக்கிறார்கள்.  கொல்கத்தாவிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த இடமும் இந்த பொம்மைகளும் மிகவும் புகழ்பெற்றவை. சமீபத்தில் பெங்காலி நண்பர் ஒருவர் இந்தப் பொம்மைகள் பற்றிச் சொல்லியதோடு அடுத்த முறை அங்கே சென்று உங்களுக்காக சில பொம்மைகள் வாங்கி வருகிறேன் என்று சொன்னார் – உங்கள் வீட்டு கொலுவில் வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன்! கொலு வரப் போகிறது ஆனால் அடுத்த வருட கொலுவில் தான் அவர் கொடுக்கும் பொம்மைகளை வைக்க வேண்டும்! மாட்டிர் புத்லா – சில களி மண் பொம்மைகளை இந்த வாரத்தின் நிழற்பட உலாவாகப் பார்க்கலாம் வாருங்கள்.

நண்பர்களே, இன்றைய பதிவு/நிழற்படங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  நாளை வேறொரு பதிவில் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி

30 கருத்துகள்:

 1. களிமண்ணில் இவ்வளவு அற்புதமான பொம்மைகளா?  வாழ்க அந்தக் கலைஞர்கள்.   வளர்க அவர் திறமை....


  Good Morning.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

   கலைஞர்களின் திறமை பிரமிக்க வைக்கிறது தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. உயிருள்ள மனிதர்கள் போல அருமையாக வடித்திருக்கிறார்கள்.
  அனேக பொம்மைகள் வட இந்திய கிருஷ்ண பக்தர்கள் போல தோன்றுகிறது.
  துளசிதாஸ் போல.
  வல்லபாசாரியார் போல ஒரு பொம்மை. அனைத்துமே அழகு.
  நம் ஊர்ச் செட்டியார் போல் அந்த ஊர் பனியா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைத்து பொம்மைகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பொம்மையெல்லாம் பார்த்தாச்சு. தூங்கிட்டு அப்புறமா வரேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா..... தூக்கம் முக்கியம். அதை முதல்ல கவனிங்க கீதாம்மா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பொம்மைகள் மாதிரி இல்லை ஏதோ ஓவியங்கள் போலவே தெரிகிறது ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே அதே கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. வெகு நேர்த்தியான சிற்பங்கள் போலிருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நெல்லைத் தமிழன். வெகு நேர்த்தியான சிற்பங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  அழகான பொம்மைகள். களிமண்ணில் இவ்வளவு கலை நுட்பங்களுடன் செய்ய முடிந்ததை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

  முதல் பொம்மை துறவியும், கிருஷ்ணரும் மிகப் பிரமாதமாக இருக்கிறது. அடுத்தடுத்தும் அப்படியே.! ஆகா.! என்ன அழகு என வியக்க வைக்கிறது.

  கடைசியில் பொருட்களை விற்கும் பொம்மைகளிலும் இயல்பான என்ன ஒரு நேர்த்தி! அழகான பொம்மைகள் அனைத்தையும் மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிற்பங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. இன்றைய வாசகம் அருமை. அன்பு மிக மிக அற்புதமான உணர்வு பூர்வமான அனுபவம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஐயா.

   நீக்கு
 8. பொம்மைகளாகத் தெரியவில்லை. உண்மையாகவே தெரிகின்றன. அந்த அளவிற்கு கைவண்ணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் அழகான பொம்மைகள் தான். இன்னும் சில பொம்மைகள் படம் இருந்தாலும் இங்கே பகிரவில்லை முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. செய்த பொம்மைகளை சேதமில்லாமல் காக்கவேண்டுமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்யாமலே இருக்கலாம் எனச் சொல்கிறீர்களா? ஹாஹா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 10. முதல் படமான ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் மனதைக் கவர்கிறார். எத்தனை அழகு! நான்காவது படம் தத்ரூபம். பாம்பாட்டி ஊதும் மகுடி! அற்புதமான பொம்மைகள். பொம்மைகள் என்றே சொல்ல முடியாது. எல்லாமே அருமை. நேற்று ராத்திரி அவசரம் அவசரமாகப் பார்த்தது. இப்போத் தான் நன்கு ரசித்துப் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தூங்கி எழுந்து மீண்டும் வந்து, பார்த்து ரசித்தமைக்கு நன்றி கீதாம்மா. இந்த வகை பொம்மைகள் நண்பர் கொண்டு வந்தால் படம் எடுத்து பகிர்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. உங்க வீட்டில் என்னென்ன பொம்மைகள் நவராத்திரியில் இடம்பிடிக்கப் போகின்றன என்பதை அடுத்த வருஷம் தெரிஞ்சுக்கலாம். :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதாம்மா.... அடுத்த வருடம் தான் வைக்கணும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. தத்ரூபமான உருக்களை சமைக்கும் கலைஞர்கள். நவராத்திரிக்கு ஏற்ற பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

   நீக்கு
 13. மிக அருமையான பொம்மைகள்.

  படம் 2,5 மற்றும் கடைசிப் படத்திலிருப்பது போன்ற மனிதர் பொம்மைகளை நான் இதுவரையில் பார்த்ததில்லை. நன்று.

  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த பொம்மைகள் அங்கே மிகவும் பிரபலம் ராமலக்ஷ்மி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. படங்கள் எல்லாம் தத்ரூபமாக இருக்கிறது.
  செய்த கலைஞர் வாழ்க!
  களி மண் பொம்மை படங்கள் எல்லாம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 15. மண்பொம்மைகள் என்று சொல்ல முடியாது.மிகவும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....