சனி, 14 செப்டம்பர், 2019

காஃபி வித் கிட்டு – பிரியாணி – தொப்பை – முக்தி – வாழை இலை காஃபி வித் கிட்டு – பகுதி – 45

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

இன்றைய தினம் உங்களுடையது. நீங்கள் ஏறவேண்டிய சிகரம் காத்துக் கொண்டிருக்கின்றது… உடனே உங்கள் முதல் அடியை எடுத்து வையுங்கள்! – டாக்டர் சீயஸ்

இந்த வாரத்தின் உலா - காதி க்ராஃப்ட், கனாட் ப்ளேஸ்


ஒரு நண்பருக்கு பரிசளிக்க வேண்டியிருந்தது. வாங்க நேரம் இல்லை. அவர் ஞாயிறன்று மாலை சந்திக்கலாம் என்று அன்று மதியம் தான் அலைபேசியில் அழைத்துச் சொன்னார். சந்திப்பு கனாட் ப்ளேஸில் உள்ள Bikkgane Biryani என்ற உணவகத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருந்தார் – அது ஹைதை பிரியாணி ஸ்பெஷல் உணவகம். வெஜிடபிள் பிரியாணியும் உண்டு! அசைவம் பிரதானம்! தவிர்க்கலாம் எனச் சொல்வதற்குள் மாலை சந்திப்போம் என்று வைத்து விட்டார். அவர் வந்து சேர்வதற்குள் பரிசு ஏதாவது வாங்கி விடலாம் என அருகில் உள்ள காதி கிராஃப்ட் பவன் சென்றேன். விதம் விதமான இயற்கை அழகு சாதனப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன – எங்கே பார்த்தாலும் Organic என்ற பெயருடன் யானை விலை குதிரை விலையில் பொருட்கள்!

தில்லி வாசிகளுக்கு எங்கேயிருந்து தான் பணம் வருகிறதோ? அந்த விலை உயர்வான பொருட்களையும் கூடை நிறைய அள்ளுகிறார்கள்! சரி அவர்களை விட்டு, பரிசுப் பொருட்களுக்கு வருவோம். ஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் என Gift Pack-களும் இருந்தன.  வரப்போகும் நண்பருக்கு அழகு சாதனப் பொருட்களையா பரிசாகத் தர முடியும்? வேறு ஏதாவது கிடைக்குமா எனப் பார்த்தால் பெரும்பாலும் விலை அதிகமாகவே இருந்தது. காதி க்ராஃப்ட் என்று நுழைந்தால் இப்படி எல்லா பரிசுப் பொருட்களும் விலை அதிகமாகவே இருந்தால் எப்படி? யோசித்தபடியே பொருட்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்குள் அந்த நண்பரின் அழைப்பு.  நான் உணவக வாசலுக்கு வந்து விட்டேன் என – சரி பார்த்துக் கொள்ளலாம் என ஒன்றுமே வாங்காமல் வெளியே வந்து விட்டேன் – நண்பர் தனியாகவே வந்திருந்தார்.

அவருக்கு என்னிடம் பகிர்ந்து கொள்ள சில சோகக் கதைகள் இருந்தன! நல்ல வேளை பரிசு வாங்காமல் போனேன்! வாங்கிக் கொண்டு போயிருந்தால் இரண்டு பேருக்குமே கஷ்டமாகி இருக்கும்! எதற்காக பரிசு கொடுக்க நினைத்தேனோ அது நடக்கவில்லை எனும்போது பரிசு எப்படிக் கொடுப்பது? ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனாட் ப்ளேஸில் உள்ள Central Park-ல் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பிறகு இரவு உணவுக்காக முன்பு சொன்ன உணவகம் அருகே வர – அங்கே Waiting List! எனக்கும் அது நல்லதாகவே, பக்கத்திலே இருக்கும் பிகானேர் வாலா உணவகத்திற்குச் சென்று இரவு உணவை முடித்துக் கொண்டு அவர் வழி அவர் போக, என் வழி நான் வீடு திரும்பினேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை – நண்பரின் பிரச்சனைக்கு தீர்வு விரைவில் கிடைக்கட்டும் என அவரைத் தேற்றி அனுப்பி வைத்தேன்.

இந்த வாரத்தின் பார்த்து ரசித்த ஒரு நிழற்படம்:படித்ததில் பிடித்தது – தத்துவம்:


வாழை இலையைப் போல தான் நல்லவர்களின் வாழ்க்கை. மற்றவர்களுக்குத் தேவைப்படும் போது பந்தியிலும் தேவைகள் முடிந்த பிறகு குப்பையிலும் வீசப்படுவார்கள்.

இந்த வாரத்தின் பாடல்: வே மாஹி… - ஹிந்தி பாடல்!

இந்த வாரம் ஒரு ஹிந்தி பாடல். கேசரி படத்திலிருந்து இந்தப் பாடல். ஒரு பஞ்சாபி கிராமம் எப்படி இருக்கும் என்று இந்தப் பாடல் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். பாருங்களேன்.

 


இந்த வாரத்தின் விளம்பரம்:

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக டைட்டன் கைகடிகாரம்! பெரும்பாலானவர்கள் இப்பொழுதெல்லாம் கை கடிகாரமே கட்டுவதில்லையே! நான் கைகடிகாரம் கட்டுவதை விட்டு பதினைந்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. இன்னும் எத்தனை பேருக்கு இந்தப் பழக்கம் இப்போது இல்லை?


பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

2015-ஆம் வருடம் இதே நாளில் பஞ்ச துவாரகா பயணத் தொடரின் ஒரு பகுதியாக முக்தி துவாரகா பற்றி எழுதி இருக்கிறேன். இதற்கு முன்னர் படிக்காதவர்கள் படிக்கலாம்!


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

34 கருத்துகள்:

 1. காஃபிமார்னிங்.  

  ஆமாம்...   ஒவ்வொரு நாளும் இப்போதெல்லாம் மலை ஏறுவது போலதான் இருக்கிறது பணிச்சுமை!

  :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம்.

   பணிச்சுமை - இப்பொழுது எனக்கு அத்தனை பணிச்சுமை இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. அந்த நண்பரின் பிரச்னை தீர நானும் பிரார்த்திக்கிறேன்.

  அந்த வாசகம் தொப்பைக்குபெரும்பாலான சமயங்களில் பொருந்தித்தான் போகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் ப்ரச்சனை தீர உங்கள் பிரார்த்தனை உதவட்டும் ஸ்ரீராம்.

   தொப்பை - :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பாடல் இப்போது கேட்கவில்லை.   அமேசான் பிரேமில் கேசரி இருக்கிறது.  பார்க்கத் தோன்றவில்லை.

  விளம்பரம் நெகிழ்த்தியது.

  "நாரைகள் பாஷை தெரிந்திருந்தால்கொஞ்சம் வம்பு கேட்டிருக்கலாம்: வரியை ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடல் கேட்கலாம் ஸ்ரீராம் - படம் பார்க்காவிட்டாலும்!

   விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நாரைகள் பாஷை - :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. காஃபி வித் கிட்டு பிரமாதம்.
  அந்த நண்பரின் பிரச்சினைகள் சீக்கிரம் தீர என் பிரார்த்தனைகள்.

  அவரைத் தேற்றி அனுப்பினீர்க்ளே அதுவே நட்பின் பெருமை.

  பொன் மொழி சிகரங்களைப் பற்றி அமைந்தது விசேஷம்
  மலைகளோடுதானே பயணிக்கிறோம் இப்போது.

  வாழி இலையில் சாப்பாடு ,மேலே தொப்பை. வாழை
  இலையை எறிந்து விடலாம். தொப்பையை
  நடந்துதான் கரைக்க வேண்டும்.
  கேசரி பாடல் மிக அழகு. இந்த ஹீரோவுக்கு வயதே ஆவதில்லை.
  சுரா கி தில் மேராவிலிருந்து இப்படியேதான் இருக்கிறார்.
  வாழ்க.
  பரினீதியும் மிக அழகு.
  அந்த டைடன் விளம்பரம் மிக நெகிழ்ச்சி. இசையும் நடிப்பும் பிரமாதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் அனைத்து பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. //தில்லி வாசிகளுக்கு எங்கேயிருந்து தான் பணம் வருகிறதோ ?//

  தேவகோட்டை வாசிகளுக்கு வரும் அதே இடத்திலிருந்துதான் ஜி

  நண்பரது பிரச்சனைகள் பனிபோல் விலகிட எமது பிரார்த்தனைகளும்...

  தொப்பை உண்மையான விசயம் ஜி

  காணொளி பிறகு காண்பேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேவகோட்டை வாசிகளுக்கு வரும் அதே இடத்தில் இருந்து தான்.... ஹாஹா.

   காணொளி முடிந்த போது பாருங்கள் கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. இன்றைய பதிவு மிக அருமை.
  இனிமையான வாசகம் அருமை.
  நண்பர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நீங்கள் அருமையான பரிசு தேர்வு செய்து தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
  கேசரி பாடல் அருமை.
  விளம்பரம் நெகிழ்ச்சியாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 7. நண்பருக்கு மகிழ்சி கிடைக்கட்டும்.

  தொப்பையும் உடம்பும் வளர்பது இலகு கரைப்பது மிகுந்த சிரமமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வளர்ப்பது எளிது. கரைப்பது சிரமம். உண்மை மாதேவி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பிரச்சினை நண்பர்களுடன் பகிர்ந்தாலே ளமனசு லேசாகிவிடும்.இதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஐயா.

   நீக்கு
 9. >>> வாழை இலையைப் போல தான் நல்லவர்களின் வாழ்க்கை. மற்றவர்களுக்குத் தேவைப்படும் போது பந்தியிலும் தேவைகள் முடிந்த பிறகு குப்பையிலும் வீசப்படுவார்கள்...<<<

  இளந்தலைமுறையினருக்கு நல்ல அறிவுரை...
  இப்படி சிந்தித்து வழங்கியவர் பாராட்டுக்குரியவர்...

  நீ நல்லவனா இருந்தால் குப்பையில் வீசப்படும் எச்சில் இலைக்குச் சமம்...
  அருமை.. அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 10. கேஸரி படப்பாடல் அருமை.. அழகு.. மனதைத் தொட்டது...

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேசரி பாடல் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. நண்பருக்கு வந்துள்ள பிரச்சனை விரைவில் நீங்கட்டும்...

  மற்ற தகவல்கள் அனைத்தும் சுவாரஸ்யம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 12. பகிர்ந்துகொள்ள சோகக்கதைகள். உங்கள் நண்பரின் மன பாரம் குறைந்திருக்கும். இதைவிட பெரிய பரிசு வேறேது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 13. அருமை தலைவரே. அப்புறம் தில்லி வாசிகள் மட்டுமல்ல திருப்பூர் மற்ற பெருநகர வாசிகள் அத்தனை பேர்களும் வருமானத்திற்கு ஏற்ற செலவு செய்வதில்லை. ஆறு கோழித்துண்டுகள். 200 ரூபாய். கூட்டம் அள்ளுது. நாம் வேடிக்கை பார்த்து விட்டு வந்து விட வேண்டியது தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆறு துண்டு 200 ரூபாய்... அள்ளும் கூட்டம்! வரவுக்கேற்ற செலவு செய்யாத பலர் ஜோதிஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. பஞ்சாப் கிராம பாடலைப் பார்த்து சொக்கிப் போய்விட்டேன். அருமை. அற்புதம். நன்றி வெங்கட்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பஞ்சாப் கிராமப் பாடல் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜோதிஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 15. வணக்கம் சகோதரரே

  காஃபி வித் கிட்டு சுவாரஸ்யம் குறையாமல் இனித்தது. முதல் வாசகம் அருமை. தினமும் சிகரத்தில் ஓரு அடி எடுத்து வைப்பதாக இருந்தால் ஒரு சிகரத்தின் நுனியை தொட்டு விடலாம்.

  நண்பரின் பிரச்சனைகளை தங்களிடம் பகிர்ந்தது அவருக்கு கொஞ்சம் கவலைகள் அகன்றிருக்கும். முழுதுமாக அவருடைய பிரச்சனைகள் தீர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  அசைவ ஓட்டலில் சாப்பிடுவதை தானாகவே தவிர்த்த நேரத்திற்கு ஒரு நன்றிதான் கூற வேண்டும்.

  தொப்பை கருத்தும்,அருமை. சிரமபடாமல் உருவாக்கியதை கரைப்பது கொஞ்சம் சிரமம்தான்.

  வாழை இலை தத்துவம் கறிவேப்பிலைக்கும் பொருந்தும். சாப்பிடும் வரை உபயோகம். நல்லவர்களின் நிலையை வாழை இலை யோடு பொருத்தியது வெகு பொருத்தமாக இருந்தது.

  ஹிந்தி பாடலும், கைகெடிகார விளம்பர படமும் ரசித்தேன்.

  நாரைகளின் படம் அழகாக உள்ளது. வெள்ளை பூக்கள் மாதிரி இருக்கின்றன.

  முக்திதுவாரகா சென்று பார்க்கிறேன். இன்றைய காஃபி சுவையாக மணந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி

   நீக்கு
 16. நல்லதொரு தொகுப்பு. நன்றாக இருக்கிறது.கேசரி படத்தைப் பார்க்கணும். பார்க்கலாம். முடிஞ்சால் பார்க்க ஆவல். நல்லவேளையாக அசைவ உணவு விடுதியைத் தவிர்த்தீர்கள். கேரளத்தில் எங்களுக்கு இம்மாதிரி ஓர் உணவகத்தில் மோசமான அனுபவம். நல்லவேளையாக வெளியே வந்துட்டோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....