ஞாயிறு, 5 ஜனவரி, 2020

அந்தமானின் அழகு – நிழற்பட உலா – பகுதி மூன்று



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

உங்கள் இலக்குகளை அதிபயங்கர உயரத்தில் வைத்து, அதில் தோல்வியடைந்தாலும், உங்களின் தோல்வி மற்றவர்களின் வெற்றியை விட உயரத்தில் இருக்கும் -  ஜேம்ஸ் கேமரூன்.
 
அந்தமான் சுற்றுலாப் பயணத்தின் போது எடுத்த சில படங்களை நிழற்பட உலாவாக, இரண்டு பதிவுகள் வெளியிட்டு இருந்தேன். அப்பதிவுகளை பார்க்காதவர்கள் வசதிக்காக, இதோ இங்கே அப்பதிவுகளின் சுட்டி…



அந்தமான் – போர்ட் ப்ளேயர் நகரிலிருந்து கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணி நேர பயணத்தில் இருக்கும் ஒரு இடம் டிக்லிபூர்! கடல் வழியேயும், சாலை வழியேயும் பயணம் செய்யலாம் என்றாலும் சாலை வழிப் பயணத்தில் சில ஸ்வாரஸ்யங்கள் உண்டு – முதலாம் ஸ்வாரஸ்யம் – பழங்குடி மக்கள் வசிப்பிடம் வழியாகச் செல்வதால் கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் தொலைவுள்ள பயணம், பல வண்டிகள் கொண்ட குழுவாக மட்டுமே செல்ல முடியும்! புகைப்படம் எடுக்கவோ, வழியில் வாகனங்களை நிறுத்தவோ, பழங்குடியினருடன் பேசவோ யாருக்கும் அனுமதி இல்லை. கூடவே பயணத்தின் போது வழியே சில இடங்களில் கடல்/நீர்நிலைகள் குறுக்கிடுவதால் பேருந்தில் இறங்கி பெரிய படகொன்றில் ஏறிக் கொள்ள வேண்டும் – நீங்கள் வந்த பேருந்தும் அதே படகில் ஏற்றிக் கொள்வார்கள்.  கரை வந்ததும், பேருந்து/வாகனங்கள் கீழே இறங்க, பயணிகளும் கப்பலிலிருந்து கீழே இறங்கி வந்து பேருந்தில் ஏறிக் கொள்ள வேண்டும் – இந்த மாதிரி மூன்று நான்கு இடங்களில் வாகன மாற்றம் உண்டு! ஸ்வாரஸ்யமான விஷயம் இந்தப் பயணம் இல்லையா? 

எங்கள் பயணத்தில் நாங்கள் போர்ட் ப்ளேயரிலிருந்து டிக்லிபூர் வரை செல்லாவிட்டாலும், 100 கிலோமீட்டர் அந்தப் பாதையில் பயணித்தோம்! விவரங்கள் பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன். இந்த ஞாயிறில் நிழற்பட உலாவாக மேலும் சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு…


படம்-1:  ஏதோ சூரியன் உதயம் ஆகப் போகுதாம் - எல்லாரும் வந்துருக்காங்க பார்க்க.... நானும் பார்க்கலாம்னு இங்கே உட்கார்ந்து இருக்கேன்...


படம்-2:  சூரியனின் கிரணங்கள் - கடல் அலைகளைத் தழுவிக் கொண்ட போது... கொஞ்சம் கூசியது - கண்களைதான் சொன்னேன்!


படம்-3: வீழ்ந்து விட்டேன் என்று நினைத்து விடாதீர்கள்... என்னாலும் பயனுண்டு... என்னை பின்புலத்தில் வைத்து எத்தனை நிழற்படங்கள் எடுக்கிறார்கள் தெரியுமா? 


படம்-4: எனக்குள்ளும் உயிருண்டு என்று எங்களுக்குச் சொன்ன ஒரு உயிரினம்! என்னவென்று பெயர் தெரியாத உயிரினம்.  


படம்-5: தீவுக்குள் ஒரு குறுகிய சாலை - பச்சைப் பசேலென! அங்கேயே இருந்து விடலாம் என்று நினைக்க வைத்த சிறு தீவு ஒன்றின் சாலை...


படம்-6: நான் அழகா இருக்கேன்ல! நானும் மென்மையானவள் தான்...  தொட்டு என்னை கலைத்து விடாதீர்கள் மனிதர்களே!


படம்-7: கடல் நீரில் சாகசம்... முன்னால் நீங்கள் அமர்ந்து கொள்ள, பின்னால் நின்று கொண்டு செலுத்தும் அந்த இளைஞருக்கு அப்படி ஒரு உற்சாகம் - நாள் முழுவதும் சாகஸம் செய்கிறாரே!


படம்-8: நான் கலர்ஃபுல்லா இருக்கேன் பார் என்று பார்க்க வைத்த ஒரு நண்டு! சற்றே தொலைவில் இருந்து Zoom செய்து எடுத்த படம்...



படம்-9: என்னையும் கலைப்பொருளாக மாற்றிய நிழற்படம்! நன்றி என்று சொல்கிறதோ இந்த இலை - வீழ்ந்தாலும் எனக்கும் மதிப்புண்டு!


படம்-10: மேடு பள்ளம் எல்லாம் ஏறி இறங்கி வந்தது - அசதியா இருக்கு - கொஞ்சம் உடற்பயிற்சி செய்யவா? என்று சொல்கிறாரோ இச்சிறுமி!


படம்-11: தீவுக்குள் இப்படி ஒரு அழகிய சிறு வீடு! இங்கேயே இருந்து விடலாமா என்று எனக்குள் எண்ணம் விதைத்த சிறு வீடு!


படம்-12: அந்தமானிலும் அலையாத்திக் காடுகள் உண்டு! அப்படி ஒரு அலையாத்திக்காட்டுக்குள்...


படம்-13: இப்படி ஒரு படகில் உலா போகலாம் வரீங்களா? நான் ரெடி.. நீங்க ரெடியா? என்று கேட்கிறதோ இப்படம்...


படம்-14: பேருந்தினை ஏற்றிக் கொள்ள காத்திருக்கும் கப்பல்... அக்கரையில் இருந்து உன் வழி தன் வழி...


படம்-15: காற்றைக் கிழித்துக் கொண்டு போகலாம் என்று தானே நினைத்தீர்கள்... நீரையும் கிழித்துக் கொண்டு போக என்னால் முடியும்! என்று சொல்லும் படகு...


படம்-16: அக்கரையிலிருந்து இக்கரைக்கு வந்தாச்சு - அரசுப் பேருந்து... படகிலிருந்து வரும் பயணிகளுக்கான காத்திருப்பில்...


படம்-17: வண்டிகள், ஆட்கள், பொருட்கள் என இக்கரைக்கும் அக்கரைக்கும் பயணிக்கும் கப்பல் ஒன்று - மொத்த பயணமே சில நிமிடங்கள் தான் என்றாலும் நாள் முழுவதும் இப்படியே பயணிக்க அந்த ஓட்டுனருக்கு அலுத்துப் போகாதோ?


படம்-18: படகு ரெடி... நானும் ரெடி... ஆனால் ஆட்களைத் தான் காணோம்... என்ன செய்ய? என்று இடுப்பில் கை வைத்தபடி காத்திருக்கிறாரோ இந்த படகோட்டி.


படம்-19: எனக்கான கைகளைத் தேடி இன்னும் எத்தனை தூரம் பயணிக்க வேண்டுமோ? காத்திருந்த வளையல்கள் - படகில் பயணித்து, பேருந்திற்காக காத்திருந்த ஒரு பயணி வைத்திருந்த வளையல்கள்...


படம்-20: பல சமயங்களில் நாம் சூழ்நிலைக் கைதிகள் தான் - இந்த ஒற்றைப் படகைப் போல! எங்கேயும் வெளியேற முடியாத படகொன்று!

நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

34 கருத்துகள்:

  1. பயண விவரங்கள் = படகில் பஸ்சிலுமாய்ப்பயணிப்பது தமிழ்ப்பட கடத்தற்படக் காட்சி கிளைமேக்ஸ் போல இருக்கிறது!  ஹா..  ஹா.. ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்பட கடத்தல் காட்சி - ஹாஹா... நல்ல கற்பனை தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. முதல் படத்திலிருக்கும் செல்லம் முதல் அனைத்துப் படங்களும் அருமை.   விவரக்குறிப்புகளும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நினைத்தேன் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. முதல் படத்துச் செல்லமும் உடல் பயிற்சி செய்யப் போகும் குழந்தையும் அழகோ அழகு. இம்மாதிரிக் கார்கள், பேருந்துகள் முதலியன கோவாவில் கூடப் படகு போன்றதொரு நடுத்தரமான கப்பலில் ஏற்றிச் செல்வார்கள். இந்தப் பயணம் கோவா போனப்போ நான்கைந்து முறை செய்திருக்கோம். வண்ணங்களில் வேடிக்கை காட்டும் நண்டு மாதிரி இது வரை பார்த்ததில்லை. பட்டுப் போன மரம் என்றாலும் ஏதோ ஓவியம் போலக் காணப்படுகிறது. படம் அவ்வளவு அழகாய் வந்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் ஒவ்வொன்றும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. படங்கள் அழகு ஜி
    வர்ணனையும் பொருத்தம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் அதற்கான வர்ணனையும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. படங்களில் செல்லம், சிறுமி, காட்டுக்குள் வீடு, ஒற்றை படகு ஆகியவை நன்றாக இருந்தன. நீங்கள் உயரம் கூடியவர் ஆகையால் நின்று எடுக்கும் படங்கள் சரியான கோணத்தில் சில சமயம் கிடைப்பதில்லை. நீங்கள் இதுவரை செல்லாத ஒரு மாநிலம் அல்லது UT லட்சத்தீவுகள் என்று நினைக்கறேன். கூடிய சீக்கிரம் சென்று வாருங்கள். ILP வேண்டி வரும். Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நின்று எடுக்கும் படங்கள் சரியான கோணத்தில் இல்லை - தங்கள் கவனிப்பில் மகிழ்ச்சி. பல சமயங்களில் நானும் இப்படி உணர்ந்திருக்கிறேன் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஒற்றைப்படகு லேசான சோகம். அதற்கும் நாள். மனிதர்களின்
    சில நேரங்கள் இப்படி. சீக்கிரமே படகுக் குழாமுக்குப் போகட்டும்.
    மற்ற எல்லாப் படங்களும் மிக அக்கறையோடு எடுத்திருக்கிறீர்கள்.
    பழைய பாட்டு வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்
    ஓடமும் ஒரு நாள் வண்டியிலேறும்.
    நினைவுக்கு வந்தது.
    வெளினாடுகளில் இது பார்த்திருந்தாலும் நம் ஊர் என்றால் தனி மகிழ்ச்சி.
    இந்த ஊரில் தனித்திருப்பவர்கள் அதிகம்.
    அந்தச் சிறுகுடில் மிக அழகு.

    நண்டு, கம்பீர நாய்,
    அலைகள், உங்கள் காப்ஷன்ஸ் எல்லாமே மிக நன்று வெங்கட்.
    உங்கள் வழியே எங்கள் பயணம் சிறக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

      ஒற்றைப் படம் கொஞ்சம் சோகம் தான் மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அருமையான புகைபடங்கள் எடுத்த விதம் அழகு. என்னை கவர்ந்தது அந்த சிறு குடிலும்,ஒற்றை படகும்..எனக்கும் அந்தமான் செல்லவேண்டும் என்ற எண்ணம் உண்டு.பார்க்கலாம்.நாங்களும் பய்ணிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அந்தமான் பயணம் விரைவில் அமையட்டும் மீரா பாலாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அத்தனை படங்களும் அழகு.
    உடற்பயிற்சி செய்யும் குழந்தை அழகு.

    செல்லம் அழகாய் படுத்துக் கொண்டு எல்லாவற்றையும் கவனிப்பது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா... செல்லத்தின் படம் பலருக்கும் பிடித்திருக்கிறது இல்லையா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. அழகான படங்களுடன்
    அரிய தகவல்கள்...

    நீங்கள் சொல்வது போல இதிலிருந்து அதற்கு மாறி அதிலிருந்து இதற்கு மாறி...

    அதுவும் ஒரு இனிமை தானே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் - மாறி மாறி படகிலும் பேருந்திலும் பயணிப்பதும் ஒரு இனிய அனுபவம் தான் துரை செல்வராஜூ ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. படங்களும் படங்களுக்கு கீழே எழுதி இருக்கின்ற விடயங்களும் வாசிக்கும் போது சிறப்பாக இருந்தது. இவ்வாறு போகின்ற இடங்களிலெல்லாம் எடுக்கின்ற புகைப்படங்களை பதிவு இட்டால் நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் அதற்கான விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கௌசி ஜி. என் பதிவுகளுக்கு நீங்கள் புதியவர்கள் என்பதால் இங்கே இருக்கும் முந்தைய பயணக் கட்டுரைகள் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நிறைய பதிவுகள் உண்டு. முடிந்தால் வாசித்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  15. ஒவ்வொரு படமாக நின்று நிதானித்து ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌசி.

      நீக்கு
  16. படங்கள் ஒவ்வொன்றும் அழகு. அவைகளுக்கு மேலும் அழகு சேர்க்கிறது தாங்கள் தந்திருக்கும் தலைப்பு. பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  17. பல கதைகள் சொல்லும் அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....