ஞாயிறு, 5 நவம்பர், 2017

திருவையாறு கோவில் ஓவியங்கள் – புகைப்பட உலா



ஐயாறப்பர் கோவில் என அழைக்கப்படும் திருவையாறு கோவிலுக்கு சமீபத்திய தமிழகப் பயணத்தின் போது சென்று வந்தேன். பெரிய கோவில், அழகிய சிற்பங்கள் தவிர நிறைய ஓவியங்களும் இருந்தன.  சில ஓவியங்கள் காலங்களைக் கடந்து இருக்கின்றன என்றாலும் பெரும்பாலானவை கவனிப்பின்றி, பராமரிப்பின்றி உருக்குலைந்து போய் இருக்கின்றதைப் பார்க்கும்போதே மனதில் வலி! இருக்கும் சில ஓவியங்களையாவது புகைப்படமாக ஆவணப் படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த ஓவியங்கள் அழியாமல் இருக்கும் என்பது அந்த ஐயாறப்பருக்கே வெளிச்சம்.

சனி, 4 நவம்பர், 2017

சே குவேராவும் தமிழக இளைஞர்களும் – யாருக்கு விடுதலை?


தமிழகத்தில் இருந்த போது சில பேருந்து பயணங்கள். ஒவ்வொன்றிலும் சில அனுபவங்கள். பொதுவாகவே இளைஞர்கள் சே குவேராவின் படம் போட்ட T-Shirt அணிவதைப் பார்ப்பதுண்டு. இந்த முறை திருப்பராய்த்துறை செல்லும் ஒரு 97-ஆம் நம்பர் பேருந்தில் பார்த்த சிறுவன் அரை ட்ராயரில் சே குவாராவின் படத்தினை ப்ரிண்ட் செய்திருந்தார்கள்! ரெடிமேட் ஆடை. அவரின் முகம் இருந்த இடம் தொடையிலும், தொடைகளுக்கு நடுவிலும்! இப்படி ஒரு மரியாதை செய்வதைத் தவிர்த்திருக்கலாம். அந்த சிறுவனுடன் அவனது நான்கு ஐந்து நண்பர்களும் பேருந்தில் பயணித்தார்கள். எனது இருக்கையின் அருகேயே நின்று கொண்டு பேருந்தில் தங்கள் பயணத்தை ரசித்தபடி, Comments செய்த படி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் போட்டி வேறு, மேலுள்ள கம்பி பிடிக்க முடியாது – அத்தனை உயரமில்லை, பக்கவாட்டு கம்பிகளைப் பிடிக்காமல் நிற்க வேண்டும் என்ற போட்டி!

வெள்ளி, 3 நவம்பர், 2017

பிட்டூ சுமந்த கதை – காஷ்மீரிலிருந்து தரம்ஷாலா!



இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 3

முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் வசதிக்காக - பகுதி-1 பகுதி-2


பிரதான சாலைக்கு பின் சாலை! 

தரம்ஷாலா – மலைப்பகுதி என்றால் சாலைகள் எல்லாமே ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும், அந்த மலைப்பகுதியில் இறங்கி தங்குமிடம் தேட வேண்டும் என்பது கொஞ்சம் சவாலான விஷயம் தான் – அதுவும் முதுகுச் சுமையோடு. நாங்கள் ஐந்து பேர் என்பதால், மூன்று பேர் எங்கள் உடைமைகளை வைத்துக்கொண்டு ஓரிடத்தில் காத்திருக்க, மற்ற இருவர் தங்குமிட வேட்டையைத் துவங்கினோம். வட இந்திய நகரங்களில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் பின்னிரவு தூங்கி நண்பகலில் விழிப்பவர்கள்! காலை நேரங்களில் சாலைகளில் நடமாட்டம் குறைவாகத் தான் இருக்கும். தங்குமிடங்கள் சிலவற்றின் வாசல் கம்பிக் கதவுகள் பூட்டி இருக்க, உள்ளே சிப்பந்திகள் நல்ல உறக்கத்தில்! கதவைத் தட்டினாலும் எழுந்திருக்கவில்லை. ஹிமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலாத் துறையுடைய தங்குமிடம் இருக்க அவர்கள் சொன்ன அறை வாடகை எங்களுக்கு ஒத்து வராது என்பதால் அங்கிருந்து புறப்பட்டோம்.

வியாழன், 2 நவம்பர், 2017

டும் டும் டும் கல்யாணம் – ஒரு புகைப்பட உலா!


மூன்று நாட்கள் முன்னர் ஒரு அழைப்பு – ”எங்கள் வீட்டில் கல்யாணம், நீங்க கண்டிப்பா வரணும்” என்று சொல்ல, கூப்பிட்டா வராம இருப்பேனா? நிச்சயம் வந்துடறேன் என்று சொல்லி விட்டேன். என்னிக்கு கல்யாணம்? மூன்று நாட்கள் கழிச்சு – அதாவது நவம்பர் 1-ஆம் தேதி! அட இவ்வளவு லேட்டா கூப்பிட்டா எப்படி? என்று சொல்ல முடியாது! கல்யாணம் நண்பரோட வீட்டிலாச்சே…. நேத்திக்கு கல்யாண வீட்டுக்கு போய் வந்தாச்சு! நம்ம போனா ஒரு வேலை இருக்கவே இருக்கு – புகைப்படம் எடுப்பது! அலுவலகத்திலிருந்து நேராக அங்கே சென்றதால் கையில் கேமரா கிடையாது! அலைபேசி கேமரா! அதில் எடுத்த படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு!

புதன், 1 நவம்பர், 2017

எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!



இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 2

முதல் பகுதி படிக்காதவர்கள் வசதிக்காக - பகுதி-1


படம்: இணையத்திலிருந்து...

தரம்ஷாலா செல்வதற்கு Lakshmi Holidays என்ற நிறுவனத்தின் Volvo பேருந்தில் தான் முன்பதிவு செய்திருந்தோம். நாங்கள் அனைவரும் பேருந்து புறப்படும் என்று சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே புறப்படும் இடத்தில் காத்திருக்க பேருந்து அங்கே இல்லை. தில்லியில் ஒரு பழக்கம். யாருமே சொன்ன சொல்லை காப்பதில்லை! பேருந்து இங்கே இல்லையே, முன்னரே புறப்பட்டு போய்விட்டதோ என்று நினைக்க வேண்டியிருந்தது. இணையத்தின் மூலம் முன்பதிவு செய்தபோது கொடுத்திருந்த தொடர்பு எண்ணில் அழைத்து மீண்டும் கேட்க, அவர் சொன்ன பதில் – கவலைப்படாதீங்க, பேருந்து நீங்கள் நிற்கும் ஆர்.கே. ஆஷ்ரம் பகுதியிலிருந்து புறப்படாது! அப்புறம் எங்கே இருந்து தான் பேருந்து புறப்படும்? அங்கே எப்படிச் செல்வது என்பது தான் அடுத்த கேள்வி!