செவ்வாய், 5 ஜூன், 2018

கதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் - தேர்


இன்றைய உணவு!!!


மண்பாத்திரத்தில் செய்த கறிவேப்பிலைக் குழம்பு, ஜவ்வரிசி வடாம், கோவைப் பயணத்தில் தோழி வாங்கித் தந்த பப்படம்!!

திங்கள், 4 ஜூன், 2018

குஜராத் போகலாம் வாங்க – ஓட்டுனரின் படபடப்பு – பிறந்த நாள் பரிசு



இரு மாநில பயணம் – பகுதி – 47

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகத்திலிருந்து வெளியே வரும்போதே ஓட்டுனர் முகேஷ் கொஞ்சம் படபடப்புடன் தான் இருந்தார் – ஒரு வாரமாக எங்களுடனேயே பயணித்து அவரும் கொஞ்சம் தளர்ந்திருந்தார். எங்கள் அடுத்த திட்டம் என்ன என்று கேட்க, ரிலையன்ஸ் மெகா மார்ட் அழைத்துச் செல்லக் கேட்டுக் கொண்டோம். அவரது படபடப்பு என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. மெகா மார்ட் சென்று வாகன நிறுத்துமிடத்தில் இறக்கிவிட நண்பர்கள் முன்னே சென்றார்கள். நான் கொஞ்சம் பின் தங்கி, முகேஷிடம் என்ன விஷயம் சொல்லுங்க, என்று கேட்க, “இல்லை இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும் அதான்!” என்று சொல்லி காரணத்தினையும் சொன்னார் – அவரது மகன்களுக்கு – இரட்டைக் குழந்தைகள் – அன்று பிறந்த நாள் – அதனால் கொஞ்சம் சீக்கிரம் போனால் கொண்டாட வசதியாக இருக்கும் என்று சொன்னார்.

ஞாயிறு, 3 ஜூன், 2018

தலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 3



தலைநகரில் எங்கள் வீட்டின் வெகு அருகிலேயே திருமலா திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் பெருமாள் கோவில் பிரஹ்மோத்ஸவ நிகழ்விலிருந்து சில புகைப்படங்கள் தொடர்கின்றன. ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் வீதி உலா, உற்சவங்கள், ஹோமங்கள், வீதி உலாவில் கோலாட்டம் என உற்சாகக் கொண்டாட்டம் தான். திருவிழா முழுவதிலும் கலந்து கொள்வது முடியாத விஷயம். மாலை நேரம் அலுவலகத்திலிருந்து வந்த பிறகு மாலை நேர வீதி உலாவில் மட்டும் பங்கு கொள்ள முடிந்தது.  கோலாட்டம் ஆடுவதற்காகவே குழுவாக ஆந்திராவிலிருந்து தலைநகருக்கு வந்திருந்தார்கள். 

சனி, 2 ஜூன், 2018

தமிழகத்திலிருந்து தஹிக்கும் தலைநகருக்கு……



சூரிய அஸ்தமனக் காட்சி - திருவரங்கத்திலிருந்து....

மூன்று வாரங்கள் தலைநகரிலிருந்தும் வேலைப்பளுவிலிருந்தும் தப்பித்து குடும்பத்துடன் தமிழகத்தில் இருந்த பின்னர் இந்த வாரம் தலைநகர் திரும்பி இருக்கிறேன். கடைசி ஒரு வாரம் தமிழகத்தில் தினம் தினம் மழை கொஞ்சம் பெய்ததால் வெய்யிலின் கொடுமை அவ்வளவு தெரியவில்லை -  தலைநகரின் சூடு அனுபவித்த எனக்கு தமிழகத்தின் வெய்யில் அவ்வளவு அதிகமாகத் தெரியவில்லை. மூன்று வாரங்கள் தமிழகத்தில் – விழுப்புரம், திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்குச் சென்று வர முடிந்தது இந்தப் பயணத்தில். தலைநகரிலிருந்து நேரே விழுப்புரம் – அப்பாவின் சதாபிஷேக விழாவில் கலந்து கொண்டு பின்னர் திருச்சி. நடுவே சிவகங்கை பயணம் – இரண்டு நாட்களுக்கு!

வெள்ளி, 1 ஜூன், 2018

குஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்



இரு மாநில பயணம் – பகுதி – 46

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!



Dastan Auto World – விண்டேஜ் வில்லேஜ் கார்கள் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியான விண்டேஜ் வில்லேஜ்-லியே சாப்பிடலாம் எனச் சொன்னதற்கு “விலை அதிகம்” என்று கேரள நண்பர்கள் சொல்ல, மீண்டும் நகரத்திற்குள் வந்து முதல் நாள் சாப்பிட்ட அதே உணவகத்திலேயே சாப்பிட்டோம். தொடர்ந்து ஒரு வாரத்தில் மூன்று நான்கு முறை இங்கே வந்து விட்டதால், சிப்பந்திகளுக்குக் கூட எங்களை அடையாளம் தெரிந்து விட்டது! ஏதோ கொஞ்சம் சப்பாத்தி, இரண்டு சப்ஜி, ராய்தா, சாலdட், பாப்பட் [அப்பளம்], Chசாச்ch என சாப்பிட்டதற்கே 1800 ரூபாய் ஆனது – விண்டேஜ் வில்லேஜ் சாப்பாட்டுக்கான தொகையை [ஒருவருக்கு 240/-] விட இங்கே அதிகம்! கண் கெட்ட பிறகு சூரிய உதயம் – நண்பர்கள் உணவுக்கான Bill பார்த்த போது – அங்கேயே சாப்பிட்டு இருக்கலாம் என்றார்கள்! சரி பரவாயில்லை – அடுத்து எங்கே!