அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த வருடத்தில் நாம் அடைந்த சோதனைகள் தீர்ந்து வரும் வருடத்தில் நல்ல விஷயங்கள் நடக்க எனது பிரார்த்தனைகள்.
நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
ஒருவரையொருவர் அன்பினால் தாங்குங்கள்! கோபம், வெறுப்பு, கௌரவம், போட்டியென இல்லாமல் ஒவ்வொருவரையும் தட்டிக் கொடுத்தும் விட்டுக் கொடுத்தும் வாழ்ந்து பாருங்கள்! வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்! முயற்சி செய்து தான் பாருங்களேன்!
******