செவ்வாய், 5 ஜனவரி, 2021

கதம்பம் - ஃப்ரூட் கேக் - நெக்லஸ் பரிசு - மில்க் சாக்லேட் - Wall Hangings - தீயல்அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


புத்திசாலியாக இருந்தாலும்…  சில இடங்களில் முட்டாளாய் நடி! வாழ்க்கை நிறைய கற்றுக் கொடுக்கும்!


******


Fruit cake! (No oven! No white sugar! No maida! No butter! No egg!) - 28 டிசம்பர் 2020:கோதுமை மாவும், நாட்டுச் சர்க்கரையும், எண்ணெயும், உலர்பருப்புகளும் சேர்த்து செய்த கேக் இது. மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது. பண்ணும் போது வீடியோ எடுக்க விட்டு விட்டோமே என்று நினைத்துக் கொள்கிறேன்.🙁 வீடியோ எடுப்பதென்றால் அதற்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டும்! அன்று அதற்கெல்லாம் நேரமில்லை!! 


அதனால் ரெசிபியை இப்போது டைப் பண்ணிக் கொண்டிருக்கும் குக்கரி புத்தகத்தில் எழுதியுள்ளேன். 


படத்தை மட்டும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


இனிப்பான பரிசு - 29 டிசம்பர் 2020:சஹானா இணைய இதழ் தீபாவளி போட்டிகளில் இரண்டில் பங்கேற்று, ரெசிபி போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்தது பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். அதில் சஹானாவின் சார்பில் Trophy-உம் E certificate-உம் முன்பே கிடைத்து விட்டது.


Sponsor ஆன Madhura boutiqueன் சார்பில் ரூ 600 மதிப்புள்ள கிஃப்ட் வவுச்சருக்கு உண்டான பரிசு வாங்கிக் கொள்ளும் படி மின்னஞ்சல் வந்தது. அவர்கள் தளத்தில் சென்று தேர்வு செய்ததை இன்று கொரியர் மூலம் கிடைக்கப் பெற்றேன்.. அழகான German silver necklace set.


சஹானா இணைய இதழுக்கும், Madhura boutique நிறுவனத்தாருக்கும் இந்த நேரத்தில் என் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


மில்க் சாக்லேட் - காணொளி - 2 ஜனவரி 2021:


புத்தாண்டை இனிப்புடன் ஆரம்பிக்கலாம் என Adhi's kitchen YouTube channel-இல் இந்த வார காணொளியாக பகிர்ந்துள்ளேன்.. செய்முறை மிகவும் எளிது..வாயில் போட்டால் நொடிகளில் கரையும்.. பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன். காணொளிக்கான சுட்டி கீழே!


மில்க் சாக்லேட்


ரோஷ்ணி கார்னர் - Wall Hanging - காணொளி - 2 ஜனவரி 2021:


மகளின் சேனலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு காணொளி.. பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்.


Wall Hangings


வீதி உலா - மாங்காய் இஞ்சி தீயல் - 3 ஜனவரி 2021:


நேற்றைக்கு கடைத்தெரு வரை சென்று வரும் வேலையிருந்தது. வழக்கம் போல் நாங்கள் மட்டுமே முகக்கவசம் அணிந்து கொண்டிருந்தோம். சனிக்கிழமை என்பதால் கோவிலுக்குச் செல்லும் கும்பல்!! எல்லாமே சகஜமாகி விட்டதோ என்று தான் தோன்றியது!!! அது தான் இல்லையே??


வண்டியில் சென்று கொண்டிருந்த ஒருவர், ஒருநிமிடம் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி நடுரோட்டில் எச்சில் உமிழ்ந்து விட்டு செல்கிறார்! என்னவென்று சொல்வது??


கலர்க்கோலம்!


கோலம் போடும் கலர்களில் ஒரு சில தீர்ந்து விட்டது..அதையும் நேற்று வாங்கிக் கொண்டேன். மார்கழி முழுவதும் பெரும்பாலும் எல்லாக் கடைகளிலுமே இங்கே கலர் கோலப் பொடி கிடைக்கும்.


மாங்காய் இஞ்சித் தீயல்!இது மாங்காய் இஞ்சி சீசன் என்பதால் அக்கா ஒருவரிடம் கால் கிலோ 30 ரூபாய் என்று சொல்லவே  வாங்கிக் கொண்டேன். அதை இன்று தீயல் அல்லது குழம்பு செய்து சாப்பிட்டோம்.  Rakesh Ragunathan சாரின் யூட்டியூப் தளத்தில் ரெசிபி பார்க்கவே நிச்சயம் செய்யணும் என்று முடிவெடுத்து விட்டேன்.🙂 மணமும், சுவையும் ஜோர்.  வீடே மாங்காய் இஞ்சியின் மணம். இதே ரெசிபியை சாதா இஞ்சியிலும் செய்யலாம்.


மாங்காய் இஞ்சி தீயல்


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் கதம்பம் பதிவின் வழி பகிர்ந்த விஷயங்கள் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டங்கள் வாயிலாகச் சொல்லுங்களேன்.


நட்புடன்ஆதி வெங்கட்

16 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. கதம்பம் பகிர்வின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதிவுகள் அருமை மேடம்.
  பரிசு பெற்றதற்கு மீண்டும் வாழ்த்துக்கள்.
  மாங்காய் இஞ்சி தீயல் சொல்லிக்கொடுத்த யூட்டியூப் லிங்க் இருந்தா பகிரவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யூட்யூப் லிங்க் பதிவிலேயே இருக்கிறது அரவிந்த்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. கதம்பம் நன்று. தாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பரிசு அழகு. வெற்றிக்கு வாழ்த்துகள். ஊக்கம் அளிக்கும் சஹான இணைய இதழுக்குப் பாராட்டுகள்.

  தங்களது மார்கழிக் கோலங்களை ரசித்து வருகிறேன். 2 அல்லது 3 தொகுப்பாக இங்கும் பதிந்திடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி. கோலங்கள் இதுவரை இரண்டு பகுதிகள் வெளியிட்டு இருக்கிறேன். வரும் ஞாயிறில் மூன்றாம் பகுதியும் வெளியிடுவேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. நல்லதொரு பகிர்வு. சஹானாவில் மேன்மேலும் பரிசுகள் பெற வாழ்த்துகள். பரிசு நன்றாய் இருக்கிறது. தீயல் தெரியும். சி.வெ., முருங்கைக்காயில் பண்ணுவார்கள்/பண்ணி இருக்கேன். மாங்காய் இஞ்சித் தீயல் புதுசு. தெரிந்து கொண்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இஞ்சித் தீயல் - அட உங்களுக்கும் புதியதா கீதாம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அப்பாவி தங்கமணி

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. கதம்பம் அருமை. தங்கள் திறமையை சஹான இணையம் வெளி கொண்டு வருகிறது. பரிசு 🎁 super.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு
 8. கதம்பம் மிக அருமை. பழ கேக் முகனூலில் பார்த்தேன்,.

  ரோஷ்ணியின் வால் ஹேங்கிங்க்ஸ் அருமையும் அழகு. அம்மா மகள் இருவரின்
  கைவண்ணங்களும் வளரட்டும்.

  மாங்காய் இஞ்சித் தீயல் பார்த்து வைத்துக் கொண்டேன்.
  உள்ளிதீயல் செய்வார்கள் இது புதிதாக
  இருக்கிறது. மனம் நிறை பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   மாங்காய் இஞ்சித் தீயல் - நன்றிம்மா. முடிந்தால் செய்து பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....