ஞாயிறு, 31 ஜனவரி, 2021

புன்னகை - ஜப்பானிய குறும்படம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ஒரு அன்பான புன்னகை என்பது கருணையின் உலகளாவிய மொழியாகிறது - வில்லியம் ஆர்தர் வார்ட்.


******


பொதுவாகவே மேற்கத்திய மக்களுக்கு ஒரு பழக்கம் - எதிரே வருபவர்கள் தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ - அவர்களைக் கடக்கும் போது ஒரு புன்னகை வீசிச் செல்வதுண்டு - நல்லதொரு பழக்கம் அது - வட இந்தியாவில் கூட ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எதிரே வருபவர் தெரிந்தவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் “ராம் ராம் ஜி/ராம் ராம் சா” என்று சொல்லிச் செல்வதுண்டு.  அப்படி புன்னகை புரிவதால் அவர்கள் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை.  புன்னகைக்கு ஒரு மிகப் பெரிய சக்தி இருக்கிறது. அடுத்தவர்களை ஒரு வித பாசத்துடன் எதிர்நோக்க வைக்கும் சக்தி புன்னகைக்கு உண்டு.  நம் ஊரில் இப்படி புன்னகைத்தால் உடனே சந்தேகமும் கோபமும் வந்து ஒட்டிக் கொள்கிறது - “எதுக்குடா என்னைப் பார்த்து நீ சிரித்தாய்?” என்று சண்டைக்கு வந்து விடும் அபாயம் உண்டு - ஒன்றிரண்டு முறை இந்த மாதிரி புன்னகையோ,  வணக்கமோ செய்ததுண்டு - அதன் பிறகான அவர்களின் பார்வையே கொஞ்சம் கலங்க வைக்கும்! 


சரி எதற்கு இன்றைக்கு இந்த விஷயம்?  இந்த ஞாயிறில் நாம் பார்க்கப் போகும் குறும்படம் இந்த விஷயத்தினையே சொல்கிறது - குழந்தைகளைப் போல புன்னகையைக் கடத்துவோம் என்று சொல்கிறது.  ஜப்பானிய குறும்படம் இது.  மிகவும் குறைவான நேரமே (1.55 நிமிடங்கள்) எடுக்கக் கூடிய குறும்படம் - பார்க்கலாமே!


காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என இணையம் அடம் பிடிக்கலாம்! அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்! 


புன்னகை


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் குறும்படப் பகிர்வு உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளலாமே!  நாளை மீண்டும் வேறு ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


16 கருத்துகள்:

 1. நல்ல குறும்படம்.  நல்ல பாடம்.  நான் கூட சமீப காலங்களில் புன்னகையை மறந்திருக்கிறேன் என்பது மனதில் வருகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   மறந்திருக்கும் புன்னகை - மீண்டும் நினைவு கொள்ளுங்கள் ஸ்ரீராம். எல்லாம் இனிதாகவே நடக்கட்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. இனிய காலை வணக்கம் அன்பு வெங்கட்.
  எத்தனை அருமையான வாசகம்!!!
  வாழ்வின் மிகக் கஷ்டமான காலங்களில் ஒரு வசந்தம் போல வருவது இந்தப் புன்னகை.

  அதை நீங்கள் கொடுத்திருக்கும் குறும்படம்
  அற்புதமாக விளக்குகிறது.
  கண்களும் ,இதழ்களும்,முழுமுகமுமாக விரியும் புன்னகைக்குத் தான்

  என்ன விலை கொடுத்தாலும் போதாது. இன்னொருவரின்
  மனதை அல்லவா மலர வைக்கிறது.
  மிக நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் வல்லிம்மா.

   வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   குறும்படம் - மனதைத் தொடும் விதமாக அமைந்திருக்கிறது. உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்த விதமாக அமைந்ததில் மகிழ்ச்சி ஜனா ஜி.

   நீக்கு
 4. குறும்படம் குழந்தைகள் வழியே அறிவுரை சொல்கிறது அருமை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   நீக்கு
 5. உண்மை அண்ணா, ஒரு புன்னகை பெரிய மகிழ்வைக் கொடுக்கலாம். நம்பிக்கையைக் கொடுக்கலாம்.
  நம்மூரில் நீங்கள் சொல்வது போல பார்ப்பதுண்டு. மகிழ்வையும் காட்டியிருக்கிறார்கள்.. கடைகளில் கதவைத் திறந்து வரவேற்கும் ஊழியர்கள் இனிய அதிர்ச்சியைக் காட்டுவார்கள். . நம்மையும் யாரோ கவனிக்கிறார்கள் என்று .
  குறும்படம் பார்க்க வேண்டும். நன்றி அண்ணா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம்/பதிவு குறித்த உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி கிரேஸ்.

   குறும்படம் முடிந்த போது பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. வாசகம் அருமை. குறும்படம் சூப்பர்.
  இங்கும் எதிரேபார்பவர்களை "ஹலோ சொல்வார்கள் இன்றைய பொழுது நன்றாக இருகட்டும்" என்று வாழ்த்துவார்கள்.

  புன்னகை பூத்த முகத்தைப்பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும் நல்ல விஷயம்.
  சார் புன்னகை மன்னர் என்று பெயர் வாங்கி இருக்கிறார் எல்லோர் கிட்டேயும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   “புன்னகை மன்னர்” - நல்ல விஷயம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. குறும்படம் அருமை. புன்னகைப் பூங்கொத்தும் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

   நீக்கு
 8. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....