அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட குறும்படப் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
Life is not being rich, being popular, being highly educated or being perfect. It is about being real, being humble and being kind.
******
#சஹானா_புத்தகவாசிப்புப்போட்டி - ஜனவரி 2021, போட்டியில் இந்த மாதத்திற்கு என தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து மின்னூல்களில் எனது மின்னூலான ”லாக்டவுன் ரெசிபிஸ்”-உம் ஒன்று. அதற்கு சஹானா இணைய இதழின் ஆசிரியரும் தோழியுமான சஹானா கோவிந்த் என்கிற அப்பாவி தங்கமணி முகநூலில் எழுதிய வாசிப்பனுபவம்/விமர்சனம்-ஐ இங்கேயும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. வாருங்கள்… அவர் வார்த்தைகளில் மின்னூல் குறித்து படிக்கலாம்.
*****
லாக் டவுன் ரெசிபீஸ் - ஆதி வெங்கட்
25 சமையல் குறிப்புகளில் எதைச் சொல்ல எதை விட, எல்லாமும் நாவிற்கும் கண்ணிற்கும் விருந்தே. இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த சிலதை இங்கு விரிவாய் பகிர்கிறேன்.
இட்லி மாவு போண்டா
சுலபமா செய்யணும் அதே நேரம் சுவையாவும் இருக்கணும் என நினைக்கும் என்னை போன்றவர்களுக்கு ஏற்ற ஒரு ரெசிபி. அதுவும் இப்போது போன்ற மழை காலத்தில் இது தேவாமிர்தம்.
பலாக்கொட்டை கட்லட்
கட்லட் யாருக்குத் தான் பிடிக்காது. பலாக்கொட்டை வைத்து கட்லட் நானெல்லாம் யோசித்ததே இல்லை, நல்ல ஐடியா பிள்ளைகளை சாப்பிட வைக்க. சூப்பர்
சிறுதானிய முருங்கை பக்கோடா
உடலுக்கும் நல்லது, அதே நேரம் பிள்ளைகளை சாப்பிட வைக்க சுலபம், இதை விட வேறென்ன வேண்டும் இது பிடிக்க. ஆனால் எனக்கு இந்த ரெசிபி மிகவும் ஸ்பெஷல், ஏனெனில் "சஹானா" இதழில் வெளிவந்த முதல் ரெசிபி இது தான் ❤️
முள்ளுத் தேன்குழல்
பெரிய முன்னேற்பாடுகள் ஏதுமின்றி, சுலபமாய் வீட்டில் உள்ள பொருட்கள் வைத்தே செய்ய இயலும் இந்த முள்ளு தேன்குழல் எனக்கு பிடித்தவற்றில் ஒன்று.
அவல் கட்லட்
கேட்டாலே செய்யணும்னு தோணுது இல்லையா? நிச்சயம் செஞ்சு பாருங்க, சுவையான சத்தான ரெசிபி தான்.
வாழைப்பூ வடை
வாழைப்பூ எல்லாம் அவ்ளோ சுலபமா வீட்டில உள்ளவங்கள சாப்பிட வெக்க முடியாது. ஆனா இப்படி செஞ்சு குடுத்தா நிச்சயமா சாப்பிடுவாங்க. சத்தும் ஆச்சு, சுவையும் ஆச்சு.
Last but not least....
ரவை குழிப்பணியாரம்
என்னது உப்புமாவா என ஓடும் பிள்ளைகள் கூட, அதே ரவையில் இது போல பணியாரம் செய்து கொடுத்தா மகிழ்ச்சியா சாப்பிடுவாங்க. செஞ்சு பாருங்க, சுவைத்து சொல்லுங்க.
மொத்தத்தில், ஆதியின் ரெசிபி எல்லாமும் சூப்பர். ஆதி வெங்கட் அவர்களின் ஸ்பெஷல் என்னன்னா, சுவையை மட்டும் பாக்காம, அவங்க சொல்ற ரெசிபிக்களில் சத்தும் இருக்கற மாதிரி சொல்லுவாங்க.
Also, செய்வன திருந்தச் செய் வகையறா, So சொல்றதை மேலோட்டமாக சொல்லாம, எல்லாமும் தெளிவா செஞ்சு பாத்து விளக்கமா எல்லாருக்கும் புரியர மாதிரி இருக்கும் இவரின் சமையல் குறிப்புகள். Amazon review- லயும் நான் இதே தான் சொல்லி இருக்கேன்.
நன்றி ஆதி, ஒரு நல்ல snack recipe book கொடுத்ததுக்கு!
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
www.amazon.com/author/sahanagovind/
******
இதுவரை இந்த மின்னூலை தரவிறக்கம் செய்யாதவர்கள் கீழ்கண்ட சுட்டி வழி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எனது மற்றும் என்னவரது அனைத்து மின்னூல்களுக்கான சுட்டி கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது. அதன் வழியே சென்று உங்களுக்குப் பிடித்த மின்னூல்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்!
இதுவரை வெளிவந்த எங்களது மின்புத்தகங்கள்…
என்ன நண்பர்களே, சஹானா கோவிந்த் அவர்கள் எழுதிய வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
அப்பாவி அழகாய் விமர்சனம் செய்திருக்கிறார். திருமதி வெங்கட்டுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குபடிச்சேன், முகநூலிலும். இட்லி மாவு போண்டா, ரவை பணியாரம்/குழி ஆப்பம் எல்லாம் இங்கே அடிக்கடி இருக்கும். வாழைப்பூவை நான் அடைக்குச் சேர்ப்பேன். வடையாகப் பண்ணினதில்லை. எல்லாமே சுவையான செய்முறைக்குறிப்புகள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
பதிலளிநீக்குஅழகிய விமர்சனம் ஜி
பதிலளிநீக்குவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குஅருமையான விமர்சனம்...
பதிலளிநீக்குவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குஎனது விமர்சனத்தை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குமின்னூலை விமர்சித்த உங்களுக்கும் நன்றி அப்பாவி தங்கமணி.
நீக்குசுவையான பதிவு. நன்றி
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.
நீக்குசுவையான விமர்சனம் சார்.
பதிலளிநீக்குபுத்தகம் பலரை சென்றடைய வாழ்த்துக்கள்.
சஹானா கோவிந்த் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.
நீக்குமின்னூலுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்கு