அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
There is no wine if Grapes are not pressed, no perfume if flowers are not crushed. If you feel any pressure in life, it means God is bringing the best out of you.
******
இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் குறும்படம் சிங்கப்பூரிலிருந்து. Business Management படித்த பெண் வேலை கிடைக்கும் வரை அவர்களது சிறு கடை ஒன்றினை பார்த்துக் கொள்ள வேண்டி வருகிறது. அந்தச் சூழலில் அவர் என்ன தான் படித்திருந்தாலும், கடையில் இருக்கும் போது பணத்தின் உண்மையான மதிப்பினை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்தக் குறும்படத்தில் இந்தியர்களும் உண்டு - ஒரு தமிழர் சந்திரிகா சோப் வாங்குகிறார் - தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளும் பேசுகிறார்கள்! கூடவே ஆங்கிலமும் உண்டு. மனதைத் தொடும் குறும்படம். பாருங்களேன்.
Cash Only - A Business Graduate Learns The True Value Of A $1000 Bill // Viddsee.com - YouTube
என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் குறும்படப் பகிர்வு உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். பதிவு குறித்த உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளலாமே! நாளை மீண்டும் வேறு ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
குறும்படம் பின்னர்தான் பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குமுடிந்த போது பாருங்கள் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பெரியவர் நடிப்பும் அருமை...
பதிலளிநீக்குகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குபிறகு பார்ப்பேன் ஜி
பதிலளிநீக்குமுடிந்த போது பாருங்கள் கில்லர்ஜி.
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குமிக அருமையான குறும்படம்.
பதிலளிநீக்குகொஞ்சம் நீளம். இருந்தாலும் சொல்ல வந்த கருத்தும்
ஆக்கப்பட்ட விதமும் அருமை.
நல்ல தமிழ். இயலாமை, முதுமை,
படிப்பறிவு பட்டறிவு எல்லாமே சொல்லப்
படிகின்றன. மனம் நிறை நன்றி வெங்கட்.
சற்றே நீண்ட குறும்படம் என்பதால் பகிரவா வேண்டாமா என யோசித்தேன் வல்லிம்மா. சொல்ல வந்த விஷயம் நல்லது என்பதால் பகிர்ந்தேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
குறும்படம் மிக அருமை.
பதிலளிநீக்குஎல்லோரும் நன்றாக நடித்து இருந்தார்கள்.
குறும்படம் உங்களுக்கும் படித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்கு