செவ்வாய், 26 ஜனவரி, 2021

கதம்பம் - தேங்காய் பன் - மெஹந்தி - அபியும் நானும் - இளையராஜா - வருமா வராதா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட லாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம்/ வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


If you’re a giver, remember to learn your limits - because the takers don't have any.


******
தேங்காய் பன் - 17 ஜனவரி 2021:
கோவையின் அவினாசி சாலையில் உள்ள மூன்று பள்ளிகளில் படித்திருக்கிறேன். ரேஸ்கோர்ஸ் பகுதியிலிருந்து அவினாசி சாலைக்கு நடந்தே சென்று விடுவோம். கல்லூரியும் அவினாசி சாலை வரை நடந்து சென்று அங்கிருந்து 2-ஆம் நம்பர் பேருந்தில் பாலிடெக்னிக்கில் இறங்க வேண்டும்.


இப்படி அவினாசி சாலை என் வாழ்வில் பெரிதும் இடம்பெற்ற இடம். அங்கே உள்ள B.J. Bakery-இல் என்றாவது அம்மா பள்ளியிலிருந்து என்னையும், தம்பியையும் அழைத்து வரும் சமயம் தேங்காய் பன் வாங்கித் தந்து சுவைத்திருக்கிறேன் 🙂 ருசியாக இருக்கும் அதில் எங்கோ ஒன்று தான்  டூட்டி ஃப்ரூட்டி போன்றவை தென்படும்.🙂 இது என் மனதின் பசுமையான நினைவுகளில் ஒன்று!!


Adhi's kitchen சேனலில் இந்த வார காணொளியாக 'தேங்காய் பன்' தான் செய்து காண்பித்திருக்கிறேன். பெரிய Process தான்.  பார்த்தால் தெரியும். அதற்கான இணைப்பு இதோ.


தேங்காய் பன்


காணொளியைப் பார்த்து விட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.


ரோஷ்ணி கார்னர் - 17 ஜனவரி 2021: 

மகளின் Roshni's creative cornerல் இந்த வாரம் மெஹந்தி போட்டு காண்பித்திருக்கிறாள்.


மெஹந்தி டிசைன்


காணொளியைப் பார்த்து விட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.


மீண்டும் பள்ளிக்கு - அபியும் நானும் - 19 ஜனவரி 2021:

'அபியும் நானும்' திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் கேரக்டர் நினைவிருக்கிறதா? அது போல தான் இங்கே நம்ம வீட்டில். மூன்று வயதில் மகளை ப்ளே ஸ்கூலில் சேர்க்கவே இப்ப என்ன அவசரம்!! இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்!! என்றார் என்னவர்.🙂


பெரும்பாலும் எல்லா விஷயங்களுக்குமே பயப்படும் நான், ஒரு சில விஷயங்களில் தடாலென்று முடிவெடுத்து செயலில் இறங்கி விடுவேன்🙂

 

திடீரென ஒரு நல்ல நாளில் எங்கள் பகுதியில் உள்ள ப்ளே ஸ்கூலுக்கு மகளை அழைத்துச் சென்றேன் - விசாரிப்பதற்கு தான்!!! விண்ணப்பம் பூர்த்தி செய்யச் சொன்னார்கள். செய்து கொடுத்தேன். பர்ஸிலிருந்து 500 ரூபாயை எடுத்து கொடுத்து நாளை வரும் போது மீதியை கொடுத்து விடுகிறேன் என்று சொன்னேன். பள்ளி முடிய இன்னும் ஒரு மணிநேரம் இருக்கவே  மகளை அங்கேயே விட்டுவிட்டு வந்து விட்டேன்.🙂


அடுத்த நாள் முதல் என்னென்ன கொண்டு வர வேண்டும் என்று கேட்டு வந்தேன். கடைக்குச் சென்று மகளுக்கு வாட்டர் பாட்டில், பென்சில் பாக்ஸ், ஸ்கூல் பேக் என்று எல்லாவற்றையும் வாங்கி வந்த பின்னர் கணவருக்கு ஃபோன் செய்து மகளை ப்ளே ஸ்கூலில் சேர்த்து விட்டதாகச் சொன்னேன். :))


இன்று எதற்கு இந்த கதை என்கிறீர்களா? ஏறக்குறைய பத்து மாதங்களுக்கு பின்னர் மகள் இன்றிலிருந்து மீண்டும் பள்ளிக்குச் சென்றிருக்கிறாள். முதன்முதலாக பள்ளிக்குச் செல்லும் மனநிலையில் தான் இருக்கிறாள்.


தடையேதுமின்றி தொடர்ந்து பள்ளிக்குச் சென்று வர கடவுள் தான்  அருள் புரிய வேண்டும்.


தேன்சிந்தும் பூஞ்சோலை -  இளையராஜா - 22 ஜனவரி 2021:


ஏறக்குறைய பத்து மாதங்களாக செல்லம்மா...செல்லம்மா!! புட்ட பொம்மா..புட்ட பொம்மா!! காந்தக் கண்ணழகி!! போன்ற பாடல்களை மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்த வீட்டில்…


ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்....தேவன் தந்த வீணை..பாடும் வானம்பாடி...என்று இளையராஜாவும் அவரின் தேன் சிந்தும் பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்கிறது...🙂 


இன்று கூட இதோ Hello FM 106.4 ல் ரெட்ரோ வெள்ளிக்காக ஒலிபரப்பப்படும் கானங்களை கேட்டுக் கொண்டே தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்..🙂


பகல் நேரங்கள் எனக்கே எனக்காக  கிடைக்கவே, மடிக்கணினியும் ஃப்ரீயாக இருக்கவே, இரண்டு நாட்களாக என் அடுத்த  மின் புத்தகத்துக்கான எடிட்டிங், முன்னுரை, என்னுரை என்று எல்லாவற்றையும் முடித்து வைத்தேன்..🙂 முன் அட்டையை வடிவமைத்து விட்டால் வேலை முடிந்து விடும்...வரும் வாரத்தில் புத்தகம் வெளிவரலாம்.


சக மனிதர்கள் - 22 ஜனவரி 2021:


காலையில் மகளை பள்ளிக்கு வழியனுப்பச் சென்றேன். என்னைப் பார்த்த ஒருவர் "ஏதோ ஊரில் ஸ்கூலே மூடிட்டாங்களாம்! நிறைய பேருக்கு வந்துடுச்சாம்! நீ எப்படித் தான் அனுப்பறியோ புவனா?? பயங்கர ட்ராஃபிக் வேற! சைக்கிள்ல எப்படி போறா! என்று தொடர்ந்து கேள்விகள்..🙂 


பதிலேதும் சொல்லாமல் எல்லாவற்றுக்கும் ஒரு புன்னகையை மட்டும் அளித்தேன்.


அடுத்து என்னைப் பார்த்து 'இப்படி இளைச்சிட்டியே!!! முகம் எல்லாம் வத்திப் போயிடுச்சு!!' என்றார்...🙂  இதற்கும் ஒரு புன்னகை..🙂


இன்று அவர் பேசிய ஒரே பாஸிட்டிவான விஷயம் இது தான் என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து என் வேலைகளைத் தொடர்ந்தேன்.

நேற்று வெளியே செல்லும் வேலையிருக்கவே சென்று வந்தேன். நான் பயணித்த பேருந்தில் சுற்றும்முற்றும் திரும்பிப் பார்த்தேன்... வழக்கம் போல் நான் மட்டுமே முகக்கவசம் அணிந்திருந்தேன்...🙂


வீட்டிற்குத் திரும்பும் போது ஆட்டோவில் பயணித்து வந்தேன்..ஓட்டுனரின் அருகில் கொடி போல் காற்றாடிக் கொண்டு வந்தது அவரின் முகக்கவசம்..🙂


உங்களிடம் என் கேள்வி இது தான்...


இதிலெல்லாம் வராதா??? அந்த தொற்று??.


என்ன நண்பர்களே, இன்றைய நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பகிர்வினை ரசித்தீர்களா?  பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டங்கள் வழி பகிர்ந்து கொள்ளலாமே!  மீண்டும் வேறொரு பதிவு வழி சந்திக்கும் வரை…


நட்புடன் 


ஆதி வெங்கட்


24 கருத்துகள்:

 1. தேங்காய் பன்  எனக்கும் மிகவும் பிடிக்கும்.  அவ்வப்போதுபேக்கரியில் புதுசாகக் கண்ணில் பட்டால் ஒன்று வாங்கிச் சுவைப்பேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேங்காய் பன் - உங்களுக்கும் பிடித்த உணவென்று அறிந்து மகிழ்ச்சி ஸ்ரீராம். நிறைய பேருக்குப் பிடித்திருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. தேங்காயப் பன் எனக்கும் மிகவும் பிடிக்கும் ஆதிவெங்கட் அதை பற்றி பதிந்து ஆசையை தூண்டிவிட்டார்கள் #என்னம்மா இப்படி பண்ணிறீங்களேம்மா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //என்னம்மா இப்படி பண்ணிறீங்களேம்மா// ஹாஹா... செய்முறை தான் சொல்லிட்டாங்களே! செஞ்சு அசத்திட மாட்டீங்களா மதுரைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. ஆஹா இதில் எனக்கு ரோஷினுக்கும் ஒரே டேஸ்ட் போல இருக்குதே எனக்கு மிகவும் பிடிச்ச பாடல் இது சமைக்கும் போது தினமும் ஒலிக்கு பாடால் செல்லம்மா...செல்லம்மா!! புட்ட பொம்மா..புட்ட பொம்மா!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரும்பாலும் நானும் பாடல் கேட்டபடியே வேலை செய்வதுண்டு. ஆனால் இப்போதெல்லாம் அமைதியாக இருக்கவே மனம் விரும்புகிறது மதுரைத் தமிழன். எப்போதாவது அலைபேசி வழி பாடல்கள் கேட்பதுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. கதம்பம் உங்களுக்கும் பிடித்தட் விதமாக அமைந்ததில் மகிழ்ச்சி அப்பாவி தங்கமணி.

   நீக்கு
 5. தேங்காய் பன் - தலைப்பைப் பார்த்துத்தான் வந்தேன். எனக்கு மிகவும் பிடித்தமானது. பஹ்ரைன்ல இதைத் தேடிப்கொண்டு பேக்கரிக்குச் சென்றிருக்கிறேன். இன்னொன்று, சூடா இருக்கும் ப்ரெட், பன். ப்ரெட்டை கட் பண்ண வேண்டாம் என்று சொல்லி வாங்கிவருவேன். அங்கெல்லாம் சுத்தம் சுத்தம்.

  பள்ளி ஆரம்பித்தது நன்று. எல்லாம் நல்லபடியாக அமையட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேடிச் சென்று வாங்கி சுவைத்த தேங்காய் பன் - ஸ்வாரஸ்யம் தான் நெல்லைத் தமிழன். நமக்குப் பிடித்த உணவுக்காகத் தேடிச் சென்று உண்பது ஒரு வித ரசனை தான். அனைவரும் இப்படிச் செய்து விடுவதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பழைய நினைவுகள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நினைவுகளை மீட்டெடுத்துப் பார்ப்பது ஒரு வித சுகம் தான் கில்லர்ஜி.

   நீக்கு
 7. தேங்காய் பன் நன்றாக வந்து இருக்கிறது.

  தேங்காய் பன் எங்களுக்கு பிடிக்கும் (எனக்கும் என் குழந்தைகளுக்கும்) என்று வாங்கி தருவார்கள். அவர்களுக்கு பிடிக்காது.
  ரோஷ்ணியின் மெஹந்தி டிசைன் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா உங்களுக்கும் தேங்காய் பன் பிடிக்குமா கோமதிம்மா! நெய்வேலியில் இருந்தவரை இப்படியான பொருட்களை அதிகம் உண்டதில்லை - வீட்டில் எதைச் செய்து தருகிறார்களோ அது தான் - பேக்கரிக்குச் சென்று வாங்கி உண்டதெல்லாம் இல்லை என்றே சொல்லலாம்! அதிக பட்சமாக ஜூரம் வந்தால் ப்ரெட் வாங்கித் தந்ததுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 9. கதம்பம் அருமை...

  ரோஷ்ணி ஓவியத்தின் திறன் கைகளில்... சிறப்பு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பகிர்வின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   நீக்கு
 10. தேங்காய் பன் என்பதை நாங்கள் திருச்சியில் தேங்காய் பஃப் என்போம். எனக்கும் மிகவும் பிடிக்கும். பெரும்பான்மையான மனிதர்களுக்கு மற்றவர்களின் உற்சாகத்தை குறைப்பதில் ஒரு அலாதி இன்பம். அவரை சரியாக ஹாண்டில் பண்ணீருக்கிறீர்கள். பராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

   நீக்கு
 11. நல்லதொரு அருமையான பதிவு ஆதி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. தேங்காய் பன்னெல்லாம் மதுரையில் ராஜா பார்லியில் வாங்கிச் சாப்பிட்டவை. இப்போல்லாம் அந்த நினைப்பே இல்லை. ஆதியின் முகநூல் பதிவைப் பார்த்துத் தான் நினைத்துக் கொண்டேன். ஒரு முறை வாங்கணும்! :) ரோஷ்ணி நல்லபடியாகப் பள்ளிக்குப் போய் வருவாள் என நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....