அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட ஆறு வருட வரலாறு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
ஒவ்வொருவருக்கும் மற்றவர்களின் குறைகளெல்லாம் “பளிச்.. பளிச்” சென்று தெரிகிறது. ஆனால் அவரவரின் குறைகள் எத்தனை பைனாகுலர் வைத்துத் தேடினாலும் மங்கலாகக் கூட தெரிவதேயில்லை.
******
ஒரு மாதம் முன்பு கூட இப்படி ஒரு எண்ணமே இல்லை!! என்னிடம் அடுத்த மின்னூல் வெளியிடும் அளவுக்கு பதிவுகள் ஒன்றுமில்லை என்று தான் நினைத்தேன். தோழியின் 'நீங்க ஏன் போடக்கூடாது' என்ற அந்த கேள்வியால் தான் யோசிக்கத் தொடங்கினேன்? அப்புறம் என்ன! சரசரவென்று, வரிசையாக வந்து கொண்டே இருந்தது!
எல்லாம் தயார் செய்து விட்டேன். அதனால் வேலை எளிதாக இருக்கும் என்று நினைத்தேன்!! நாம் நினைத்தது போல் வரணும் என்றால் கொஞ்சம் அடுத்தவரை தொந்தரவு செய்து தான் ஆகணும்🙂 இல்லையா!!
வேறு யாரும் அல்ல! என் கணவர் தான். உரிமையோடு தாராளமாகச் சொல்லலாம். திட்டினாலும் வாங்கிக் கொள்ளலாம்.🙂 அதே போல் கொஞ்சம் மகளையும் தொல்லை செய்தேன்.🙂
எல்லாம் சேர்ந்து உருவானது தான் என் அடுத்த மின்னூலான 'Adhi's kitchen Recipes'. இதை Amazon 'pen to publish4' contest-க்காக எழுதியுள்ளேன். எத்தனையோ பேர் பங்கேற்கும் இந்த போட்டியில் என் சமையல் புத்தகத்துக்கு வரவேற்பு இருக்குமா என்று தெரியாது. 🙂 ஆனாலும் எனக்குத் தெரிந்ததை சிறப்பாக செய்து தைரியமாக பங்கேற்கிறேன்!!
இந்த மின்னூலில் 25 வகையான உணவுகளின் செய்முறைகளை பகிர்ந்து கொண்டுள்ளேன். மின்னூலில் இருக்கும் சிறப்பம்சமாக என் சேனலில் உள்ள ஒரு சில ரெசிபிக்களுக்கு, குறிப்பிட்ட அந்த ரெசிபியில் இணைப்பையும் தந்துள்ளேன். வாசித்து தெரிந்து கொண்டது போக அப்படியே அந்த ரெசிபியின் இணைப்பை சொடுக்கி அதை வீடியோ செய்முறையாகவும் பார்க்கலாம்.
புத்தகம் உருவாக காரணமாயிருந்த தோழி Bhuvana Govind-க்கும், புத்தக வடிவமைப்பை செய்த என்னவருக்கும், அட்டைப்பட வடிவமைப்பு செய்த மகளுக்கும் இந்த நேரத்தில் என் அன்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இது எனது ஐந்தாவது மின்னூல்! எங்களது அனைத்து மின்னூல்களுக்கான சுட்டிகளின் தொகுப்பும் கீழே உள்ள சுட்டி வழி பார்க்க முடியும். விருப்பமிருப்பவர்கள் அந்தச் சுட்டி வழி மின்னூல்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்!
இதுவரை வெளிவந்த எங்களது மின்புத்தகங்கள்…
இன்றைய பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டங்கள் வாயிலாக தெரியப்படுத்துங்கள். மீண்டும் வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை...
நட்புடன்
ஆதி வெங்கட்
இன்றைய வாசகம் நினைவுபடுத்தும் இன்னொரு வாசகம்.. மற்றவர் குற்றங்களுக்கு நாம் எப்போதுமே நீதிபதி. நம் குற்றங்களுக்கு வக்கீல்!
பதிலளிநீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குமற்ற மின் நூல்கள் போலவே இந்த மின்நூலும் வெற்றி அடைய வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
பதிலளிநீக்குமின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குவாழ்த்துக்கள் மேடம்.
பதிலளிநீக்குவிரைவில் வாங்கி வாசிக்கிறோம்.
பள்ளி தொடங்கியது எங்களுக்கு நல்லதாய் போய்விட்டது.
இது போன்ற நல்ல புது நூல்கள் கிடைப்பதுதான் அது.
வாழ்த்தியமைக்கு நன்றி அரவிந்த்.
நீக்குHappy to see your book in contest Adhi. Goodluck to win. ராமருக்கு உதவின அணில் போல சிறு பங்காற்றிய என்னையும் இங்கு குறிப்பிட்டமைக்கு நன்றிப்பா
பதிலளிநீக்குஎன்றும் நட்புடன்,
Bhuvana Govind
வாழ்த்தியமைக்கு நன்றி அப்பாவி தங்கமணி.
நீக்குமின்னூல்களுக்கு வாழ்த்துக்கள் ஆதி.
பதிலளிநீக்குபாராட்டுக்கள் வெற்றிகள் தொடரட்டும்.
வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குஐந்தாவது மின்னூலுக்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன்.
நீக்குதொடரட்டும் மின்நூல்கள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி.
நீக்குபுதிய மின்னூலுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்கு//ஒவ்வொருவருக்கும் மற்றவர்களின் குறைகளெல்லாம் “பளிச்.. பளிச்” சென்று தெரிகிறது. ஆனால் அவரவரின் குறைகள் எத்தனை பைனாகுலர் வைத்துத் தேடினாலும் மங்கலாகக் கூட தெரிவதேயில்லை.//
பதிலளிநீக்குஎல்லோரும் மற்றவர்களின் முதுகைப் பார்க்கலாம். ஆனால் அவரவரது முதுகை பார்க்க முடியாது. அது போன்றே குறைகளும். ஆகவே மற்றவர் உதவி தேவை.
Jayakumar
வாசகம் குறித்த உங்கள் கருத்துகளுக்கு நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.
நீக்குவெற்றி அடைய வாழ்த்துகளும்... பாராட்டுகளும்...
பதிலளிநீக்குவாழ்த்தியமைக்கு நன்றி குமார்.
நீக்குமின்னூல் வெளியீட்டுக்கும் அது பரிசு பெறவும் வாழ்த்துகள். தொடர்ந்து பல மின்னூல்கள் வெளிவரவும் வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குவாழ்த்தியமைக்கு நன்றி கீதாம்மா.
நீக்குமிக மகிழ்ச்சியும் , வாழ்த்துக்களும் ...
பதிலளிநீக்குவாழ்த்தியமைக்கு நன்றி அனுப்ரேம் ஜி.
நீக்கு