திங்கள், 1 பிப்ரவரி, 2021

லாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - புவனா சந்திரசேகரன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட புன்னகை - ஜப்பானிய குறும்படம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நாம் எவ்வளவு நன்மைகள் செய்திருந்தாலும், இறுதியில், இந்த சுயநல உலகம் நம்மைப் பார்த்துக் கேட்கும் ஒற்றைக் கேள்வி - நீ என்னத்த பெருசா செஞ்சுட்ட!


******
#சஹானா_புத்தகவாசிப்புப்போட்டி - ஜனவரி 2021, போட்டியில் இந்த மாதத்திற்கு என தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து மின்னூல்களில் எனது மின்னூலான ”லாக்டவுன் ரெசிபிஸ்”-உம் ஒன்று.  அதற்கு புவனா சந்திரசேகரன் அவர்கள் முகநூலில் எழுதிய வாசிப்பனுபவம்/விமர்சனம்-ஐ இங்கேயும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  வாருங்கள்… அவர் வார்த்தைகளில் மின்னூல் குறித்து படிக்கலாம்.


*****


#சஹானா_புத்தகவாசிப்புப்போட்டி- ஜனவரி 2021

நூல்: லாக் டவுன் ரெசிப்பீஸ்

ஆசிரியர்: ஆதி வெங்கட்.

முதலில் பொறுமையாகவும் எளிமையாகவும் நல்ல நல்ல ரெசிப்பிகளை அனைவருக்கும் புரியும் வகையில் எழுதி நமக்கு உதவியிருக்கும் ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். 


வகை வகையான ரெசிப்பிகள்! பாரம்பரிய உணவுவகைகள், புதுமையான உணவுவகைகள், இன்றைய இளைஞருக்குப் பிடித்தவை, உடல்நலத்துக்கேற்றவை என்று எல்லாமே கொட்டிக் கிடக்கின்றன. 


பிடி கொழுக்கட்டை தெரிந்தது தானே என்று எண்ணவிடாமல் அதிலேயே புதுமையான வகையில் அவல் பிடிகொழுக்கட்டை, உப்பு உருண்டை, சிறுதானிய பிடிகொழுக்கட்டை வகைகள் மனதைக் கவர்ந்தன. 


சூரத் கி கமன், குஜராத் ஸ்பெஷல் டோக்ளா. கூடவே ஸ்வீட் கார்ன் பால்ஸ் மற்றும் பக்கோடா, ரவை கலந்த அவுல் கட்லெட் என்று அத்தனை வகைகளையும் ருசியாகச் செய்யச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். 


பூரி லட்டு இன்ட்ரஸ்ட்டிங்கா இருந்தது. மோஹன லாடு என்றும் எங்கள் வீட்டில் பெரியவர்கள் சொல்வார்கள். 


சுவையான, ஹெல்தியான ரெசிப்பிகளுக்கு நன்றி. இளைய தலைமுறையினர் இதைப் பார்த்து எளிதாக செய்து விடலாம். 


மசாலாக் காரப் பொரியுடன் இளம் வயது நினைவுகளைச் சொன்னது நன்றாக இருந்தது. எங்கள் ஊர் பாலிகா  பஜார் நடுவிலே வந்ததை இரசித்தேன். அங்கே பல வருடங்களுக்கு முன்பு சுற்றிய அனுபவங்கள் நினைவுக்கு வந்தன. 


நல்ல ரெசிப்பிகளைப் பயனுள்ள முறையில் தெளிவாக விளக்கி எழுதிய ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். 


அட்டைப்படமும் நன்றாக இருக்கிறது. 


புவனா சந்திரசேகரன்,

25/01/2021.


இதுவரை இந்த மின்னூலை தரவிறக்கம் செய்யாதவர்கள் கீழ்கண்ட சுட்டி வழி தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 


லாக்டவுன் ரெசிப்பீஸ்


எனது மற்றும் என்னவரது அனைத்து மின்னூல்களுக்கான சுட்டி கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது.  அதன் வழியே சென்று உங்களுக்குப் பிடித்த மின்னூல்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்!


இதுவரை வெளிவந்த எங்களது மின்புத்தகங்கள்…


என்ன நண்பர்களே, புவனா சந்திரசேகரன் அவர்கள் எழுதிய வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  நாளை மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


18 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. காலை வணக்கம் சகோதரரே

  அருமையான பதிவு. வாசகம் அருமை. சிறப்பான பல உணவுகளை அறிமுகப்படுத்தி, அனைவருக்கும் பயனுள்ள முறையில் தொகுத்து தந்திருக்கும் தங்களது லாக்டவுன் ரெசிபீஸ் என்ற மின்னூலுக்கு அழகாக விமர்சனம் செய்துள்ளார் திருமதி புவனா சந்திரசேகரன் அவர்கள். வாழ்த்துகள்

  சமையல் வகைகளை சிறப்பாக செய்தது மட்டுமின்றி, இந்தப் புத்தகத்தை உருவாக்கி பல பரிசுகள் பெற்றிருக்கும் சகோதரிக்கும், ஊக்குவித்த சஹானா இணைய இதழுக்கும், மனமார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.. பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   பதிவும் வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. //


  //நீ என்னத்த பெருசா செஞ்சுட்ட//

  என்னிடம் பலனடைந்த அனைவரும் கேட்டு விட்டனர்.

  வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல முறை கேட்ட வாசகம் - :) இதுவும் கடந்து போகும்! நாம் செய்வதை செய்துகொண்டே இருக்கலாம் கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறார் புவனா சந்திரசேகரன்.
  அட்டைபடம் அழகு.
  வாழ்த்துக்கள் ஆதி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட்டைப்படமும் விமர்சனமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அப்பாவி தங்கமணி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   நீக்கு
 7. சிறப்பான விமர்சனம் ....நானும் இந்த மின்னூலை வாசித்துவிட்டேன் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம்.

   நீக்கு
 8. படிச்சேன் முகநூலிலும், இப்போ இங்கேயும். அருமையான தொகுப்பு. வெற்றி பெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....