வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

சினிமா - Gubbaare - நானா படேகர்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட ராஜா ராணி - கதை கேளு கதை கேளு பதிவினை படித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


பிரார்த்தனையும் நம்பிக்கையும் கண்ணுக்குத் தெரியாத விஷயங்கள்… ஆனால் நிகழவே முடியாது என்று சொல்லும் எந்த விஷயத்தையும் நிகழ்த்திக் காட்டும் வலிமை உடையவை அவை.


******







சமீபத்தில் ஒரு காஃபி வித் கிட்டு பதிவில் எனக்கு நானா படேகர் அவர்களின் நடிப்பு பிடிக்கும் என்று சொல்லி இருந்தேன்.  அது உங்களுக்கும் நினைவில் இருக்கலாம்.  சமீப நாட்களில் அவரது படங்கள் எதுவும் வெளிவரவில்லை என்று தோன்றுகிறது.  2007-ஆம் ஆண்டு “Dhதஸ் கஹானியா(ன்)”  என்று ஒரு படம் வந்தது - ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாத பத்து கதைகளை ஆறு இயக்குனர்கள், பல நடிகர்கள் நடிக்க எடுக்கப்பட்ட படம் அது.  அதில் வரும் மற்ற கதைகளை விட்டு விடுங்கள் - நாம் இன்றைக்கு பார்க்கப் போவது அதில் ஒரு கதையாக நானா படேகர் நடித்த “Gubbaare” என்ற படம். இந்த ஹிந்தி வார்த்தைக்கு அர்த்தம் Baloon!  அது சரி Baloon எனும் ஆங்கில வார்த்தைக்கு ஈடான தமிழ் வார்த்தை என்னவென்று யாரேனும் சொல்லுங்களேன்! எத்தனை யோசித்தும் மனதுக்கு இதற்கு இணையான தமிழ் வார்த்தை இருக்கிறதா என்பது தோன்றவில்லை. 


ஒரு பேருந்து - அதில் ஒரு இளம் கணவன் - மனைவி! பேருந்தில் பயணிக்கும் போதே இருவருக்கும் ஏதோ வாக்குவாதம் - கணவனும் மனைவியும் வேறு வேறு இருக்கைகளில் தனித்தனியே உட்கார்ந்து வருகிறார்கள். அதே பேருந்தில் நானா படேகரும்!  அவர் கைகளில் நிறைய பலூன்கள்.  அவரும் சண்டை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்த அந்த இளைஞனின் மனைவியும் பேசிக் கொள்கிறார்கள். நானா படேகர் தனக்கும் தனது மனைவிக்கும் இடையேயான ஊடல்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வருவார்!  முப்பத்தி ஐந்து வருட திருமண வாழ்க்கையில் எட்டு வருடங்களுக்கு மேல் ஊடலிலேயே போய் விட்டது என்று சொல்லி, அந்த இளம்பெண்ணுக்கு அறிவுரை சொல்லுவார்.  தனது மனைவிக்கும் தனக்கும் ஊடல் வந்தால் 11 பலூன்களும் Sorry Greeting Card-உம்   வாங்கிக் கொடுத்து அவரை சமாதானப் படுத்துவேன் என்றும் - நான் ஊடல் கொண்டால் எனக்குப் பிடித்த இனிப்பு செய்து, அதனுடன் Sorry Greeting Card-உம் மனைவி தருவார்  என்றும் தனது கதையைச் சொல்லிக் கொண்டு வருவார்.  


ஒரு இடத்தில் பேருந்து நிற்க, நானா படேகர் பலூன்களுடன் இறங்கி விடுவார்.  Sorry Greeting Card பேருந்திலேயே மறந்து வைத்து விடுவார்.  அதை எடுத்துக் கொண்டு அந்த இளம்பெண் அவரின் பின்னாலேயே செல்ல அங்கே பார்க்கும் காட்சி - யாருமே எதிர்பார்க்காத விதத்தில் இருக்கும். பிறகு இளம் தம்பதியர் என்ன செய்தார்கள் என்பதைச் சொல்வார்கள் காட்சியாக.  இந்தப் படத்தினை பார்க்காதவர்கள் இருந்தால் பாருங்களேன்.  முழு திரைப்படத்தில் இந்தப் பகுதி மட்டும் 11 நிமிடம் தான்.  அந்தப் பதினோறு நிமிட படம் கீழே!


மேலே காணொளியில் பார்க்க முடியவில்லை எனில் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம்.  


Gubbare 


Life is too short!  So do not waste it in silly fights! என்ற கருத்தைச் சொல்லும் இந்தப் படம் உங்களுக்கும் பிடித்ததா?

என்ன நண்பர்களே, படத்தினைப் பார்த்து ரசித்தீர்களா? நிச்சயம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  நான் பார்த்து ரசித்த இந்தப் படத்தினை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டமாக பகிர்ந்து கொள்ளுங்களேன்.  நாளை வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி.



12 கருத்துகள்:

  1. நினைத்த முடிவுதான்!  நானா படேகர் அற்புதமான நடிகர்.   இணைந்து இருக்கும் காலங்களில் கோபங்களைக் காட்டாமல், ஊடல் என்று பேசிக்கொள்ளாமல் இருக்காமல் மனதில் இருப்பதை கணவன் மனைவி ஒருவருக்கொருவர் வெளியில் சொல்லி விடவேண்டும் என்று வல்லிம்மாவும் தனது பதிவுகளில் அடிக்கடி சொல்வார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைத்த முடிவு... இப்படி ஒரு முடிவு என்பதை பலரும் யூகித்திருக்க மாட்டார்கள் என்பதே என் எண்ணம் ஸ்ரீராம்.

      //ஊடல் என்று பேசிக்கொள்ளாமல் இருக்காமல் மனதில் இருப்பதை கணவன் மனைவி ஒருவருக்கொருவர் வெளியில் சொல்லி விட வேண்டும்// வல்லிம்மா சொல்வது சரியான விஷயம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் சார்.
    காணொளியை விரைவில் பார்க்கிறேன்.
    நானா படேகர் படங்கள் அதிகம் பார்த்ததில்லை.
    தமிழில் காலா என்ற சூப்பர் ஸ்டார் படத்தில் வரும்போது தான் பார்த்திருக்கிறேன்.
    அவர் நடிப்புத்திறமை பற்றி பிறகு நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.
    சீக்கிரம் அவர் பழைய படங்களை பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அரவிந்த்.

      நானா படேகர் - கொஞ்சம் ஓவர் ஏக்டிங் என்று சிலர் சொல்வதுண்டு. ஆனாலும் சில படங்கள் மிகவும் சிறப்பாகச் செய்திருப்பார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. எதிர்ப் பார்க்காத முடிவு... நானா படேகர் அருமையான நடிப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. உண்மைக்காதல் இடுகாட்டிற்கும் இழுத்து வரும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  5. வாசகம் உண்மை. Video 👌 அருமை. எதார்த்தமாக உள்ளது. நடிப்பு என்று நினைவாக இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  6. அன்பு வெங்கட்,
    மனம் உருகிக் கண்ணீர் வந்து விட்டது.
    பல காரணங்கள்.. ச்சோட்டி சி பாத். ஏன் மனம் அவ்வளவு சினம்
    கொள்கிறதோ.
    என் பெயரும் இங்கே வந்துவிட்டது. நன்றி.

    இதுதான் விஷயம். முதலில் ஸாரி சொல்வதே உத்தமம்.
    மனம் தளிர் போன்றது. அனாவசிய சமாச்சாரங்களுக்காக

    அதை நோகடிக்க வேண்டாமே.
    நானா படேக்கர் எனக்கு மிக மிகப் பிடிக்கும்.
    அப்படியொரு சிறந்த நடிப்பு. இயல்பான
    முக bhaவம்,
    வெகு நாட்கள் ஆச்சு அவர் படம் பார்த்து.

    அன்பு வெங்கட் என்றும் நலமுடன்
    இருக்க ஆசிகள்.

    பதிலளிநீக்கு
  7. கோபத்தில் மெளனம் கடைபிடித்த நாட்களை நினைத்தால் வருத்தம் ஏற்படுகிறது.
    ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்டு மறப்பது நல்லது.
    எனக்கு பிடித்த நடிகர் நானா படேகர்.
    பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....