அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
சிலர் அன்பை வார்த்தையால் உணர்த்தலாம்; சிலர் அன்பை உணர்வுகளால் உணர்த்தலாம்; ஆனால்! சிலர் அன்பு புரியாது. அதை காலம் உணர்த்தும்போது தான், கண்கள் கலங்கும்.
******
சென்ற வாரத்தில் ஆதி மஹோத்ஸவ் நிகழ்விற்கு சென்று வந்தது குறித்து உங்களுடன் ஆதி மஹோத்ஸவ் - தில்லி ஹாட் - கண்காட்சி - ஓவியங்கள் பதிவின் வழி பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். இதோ இந்த ஞாயிறில் அதே நிகழ்வில் எடுத்த வேறு சில படங்கள் உங்கள் பார்வைக்கு - நிழற்பட உலாவாக…
என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
படங்கள் அழகு. விவரங்கள் சுவாரஸ்யம். மாஸ்க்குடன் மத்தளக்காரன்!
பதிலளிநீக்குபுலியின் ஓவியம் டாப்.
படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்கு//மாஸ்க்குடன் மத்தளக்காரன்// - :)
புலியின் ஓவியம் எனக்கும் பிடித்தது - எத்தனை தெளிவு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படங்கள் அனைத்தும் அருமை
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மதுரைத் தமிழன்.
நீக்குஎல்லா படங்களுமே அழகு ஜி. பையனின் போஸ் ஸூப்பர்.
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கைவினைப் பொருட்கள் மிக அழகு. தட்டும் டம்ளரும் எழிலாக இருக்கின்றன. கொஞ்சம் விலையையும் போட்டிருக்கலாம்.
பதிலளிநீக்குஎங்க ஊரில் ஒல்லியா இருப்பவனை, தேவாங்கு என்பார்கள். அந்தச் சிலையை யார் வாங்குவார்கள்?
படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.
நீக்குதட்டும் டம்ளரும் சேர்த்து - ரூபாய் 500/- - சிறிய தட்டு 200/- ரூபாய். டம்ளர் ஒவ்வொன்றும் 150 ரூபாய். சில கைவினைப் பொருட்களை படம் எடுத்ததோடு சரி. பொதுவாகவே இந்த மாதிரி இடங்களில் விலை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். தில்லியில் மீனாகரி வேலைப்பாடு செய்த எவர்சில்வர் பாத்திரங்களுக்கென்றே கடைகள் உண்டு - அங்கே இதைவிட குறைவான விலையில் கிடைக்கும்.
தேவாங்கு - உங்கள் ஊரில் மட்டுமல்ல, எங்கள் பகுதியில் கூட அப்படித்தான். யார் வாங்குவார்கள் - அதற்கென்று சிலர் இருக்கலாம்! :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படங்கள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்கு//இயக்குபவரின் மகன் இப்போதே இயக்க ஆரம்பித்து விட்டான்! அப்படி ஒரு ஆர்வம்!//
குழந்தை படம் மனம் கவர்ந்த படம்.
படங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குகுழந்தையின் படம் - எனக்கும் பிடித்த படம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவாசகம் உண்மை. அன்பு காட்டுவதும், பெறுவதும் ஒரு கலையோ என தோன்றுகிறது. அந்த சிலரின் அன்பை பிறர் புரிந்து கொள்ளும் போது, அந்த சிலருக்கு கிடைக்கும் ஆதாயந்தான் என்ன? ஒரு சில கண்ணீர் துளிகளுக்கு அவ்வளவு நாள் காத்திருப்பவரின் மனம் வாழ்நாள் முழுக்க என்ன பாடுபட்டிருக்கும் என்பதுதான் வேதனை..
அனைத்து படங்களும் அழகாகவும், அருமையாகவும் உள்ளது. சில ஓவியங்கள் உண்மையோ என திகைக்க வைக்கிறது. கைவினைப்பொருட்கள் அனைத்தும் அவ்வளவு அழகு. தயாரித்தவர்கள் நல்ல கலை உணர்வுடன் திறமையாக பாடுபட்டுள்ளனர்.
மத்தளம் வாசிக்கும் சிறுவன் முகம் அவ்வளவு அழகு. கண்களின் தீர்க்கம் கவர்கிறது. நல்ல ஒளிமயமான எதிர்காலம் அவனுக்கு அமைய பிரார்த்திக்கிறேன்.
மீனாகரி என்றால் என்ன? கற்கள் பதிப்பதா? தட்டும், தம்ளார்களும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது. அருமை.
கழுத்தணி அழகாக உள்ளது. இதை கழுத்தில் அணிந்து சுமக்கும் பெண்கள் கண்டிப்பாக பணிவுடன் நிலம் பார்த்துதான் நடப்பார்கள். ஹா.ஹா.ஹா. அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குவாசகம் மற்றும் பதில் பகிர்ந்த படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
மீனாகரி என்பது ஒரு வகை வேலைப்பாடு. எவர்சில்வர் பாத்திரங்கள்/உலோகப் பொருட்கள் மேலே இந்த கைவேலைப்பாடு செய்கிறார்கள். கற்கள், மார்பிள் பொடி என சிலவற்றைக் கொண்டு செய்யப்படும் வேலை இது. இணையத்தில் எப்படிச் செய்வது என்று சில காணொளிகள் உண்டு.
//பணிவுடன் நிலம் பார்த்து தான் நடப்பார்கள்// - ஹாஹா...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
உலா அழகு
பதிலளிநீக்குஉலா உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குபடங்கள் அற்புதம்...
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குகலைப்பொருட்கள் ஒவ்வொன்றும் அழகு. புலி ஓவியம், ஓவியர் சந்திரனை நினைவு கூர்ந்திட வைத்தது: https://tamilamudam.blogspot.com/2014/08/2014-18.html . வாசகம் நெகிழ்வு.
பதிலளிநீக்குஓவியர் சந்திரன் குறித்த பதிவு மீண்டும் ஒரு முறை சென்று பார்த்தேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
அன்பு வெங்கட்,
பதிலளிநீக்குஆதி மஹோத்சவ் என்றதும்
ஆதியைப் பற்றி ஒரு பதிவோ என்று நினைத்து விட்டேன்.)))
வண்ணங்களைக் கண்ணில் தேக்க வைத்த
படங்கள். இரு வாரிசுகள்!! மேளம் கொட்ட,
காட்சி காணொளி காட்ட என்று.
அமோக வாழ்வு பெறட்டும்!!!
இவ்வளவு அழகான கைவினைப் பொருட்களைத் தூசி
இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நம் ஊரிலும் இந்தக் கண்காட்சிகள் வரும் நானும்
வாங்கி சுவரில் மாட்டி வைப்பேன்.
இப்போது எங்கேயோ!!!
தனியாக ஒரு ஷோ கேஸ் செய்து உள்ளே வைக்க வேண்டும்.
பல டும் டும் களில் இதெல்லாம் ஒரு திட்டம். இன்றைய ஞாயிறுக்கான
கண்காட்சி மிக இனிமை அன்பு வெங்கட் மிக
நன்றிமா.
ஆதியைப் பற்றி ஒரு பதிவோ - :)
நீக்குபதிவின் வழி சொன்ன விஷயங்களும் பகிர்ந்த படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.
வீட்டில், இந்த மாதிரி பொருட்களில் தூசி இல்லாமல் பார்த்துக் கொள்வது கொஞ்சம் கடினமான வேலை தான். தினம் தினம் பராமரித்துக் கொண்டிருக்க வேண்டும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படங்கள் அத்தனையும் அழகு,அதற்கான வாசகங்களும்தான்
பதிலளிநீக்குபடங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்ல பகிர்வு. டெல்லி ஹாட்டில் நேரில் உலாவிய மகிழ்ச்சி
பதிலளிநீக்குசூப்பர் வாழ்க வளமுடன்
டில்லி விஜயராகவன்
பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி விஜயராகவன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அழகிய காட்சிகள் ..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.
நீக்கு