வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

அடுத்த மின்னூல் - சம்மர் ஸ்பெஷல் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தில்லி உலா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


தராசிற்கு நியாயமெல்லாம் தெரியாது - எந்தப் பக்கம் கனமிருக்கிறதோ அந்தப் பக்கம் சாய்ந்து விடும் - அப்படித்தான் சில மனிதர்களும்!


******







கோடைக்காலம் வந்துவிட்டால் நம் முன்னோர்கள் கொளுத்துகின்ற வெயிலையும் வீணாக்காமல் வத்தல்/வடாம், ஊறுகாய் என்று செய்து சேமித்து வைத்திருப்பார்கள். இது அவசரத்திற்கு நிச்சயம் உதவும்.


அம்மா வருடம் தவறாமல் வடாம், விதவிதமான ஊறுகாய் என்று தயாரிக்க ஆரம்பித்து விடுவார். நானும், தம்பியும் அம்மாவுக்கு ஒத்தாசை செய்வோம். அம்மா இவற்றை விற்பனையும் செய்வார். ஏறக்குறைய 25  வருடங்களுக்கு முன்பே அம்மா செய்த வடாம் அமெரிக்கா வரை பயணப்பட்டு இருக்கிறது! உறவு வட்டத்திலும், நட்பு வட்டத்திலும் அம்மாவின் தயாரிப்பு பிரபலம்.


அம்மாவுக்கு  ஒத்தாசையாக கரண்டியால் மொண்டு விட, முறுக்கு நாழியில் பிழிந்து தர, காய்ந்ததை எடுத்து போட, எடை போட்டு, பாக்கெட் பண்ண என்று இந்த வேலைகள் எல்லாமே எனக்கும், தம்பிக்கும் அத்துப்படி...🙂


திருமணமான பின்  நானே எனக்காக வடாம் போட நினைத்த போது, மேலே கூறிய வேலைகள் தான் எனக்கு தெரிந்ததே தவிர, என்ன அரிசியில் தயாரிக்கணும்? எவ்வளவு போடணும்? என்று சுத்தமாகத் தெரியலை..🙂 கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு அம்மா அப்போது இல்லை! எழுதி வைக்கவும் இல்லை!


பின்பு மாத இதழ்களிலும், பெரியவர்கள் சிலரிடம் கேட்டுக் கொண்டு, நானே எனக்காக ஒரு செய்முறையும் பழகிக் கொண்டேன். இன்னமுமே அம்மா செய்தது போன்ற  கூழ் வடாம் செய்முறை இப்போது வரை தெரியலை!


அம்மாவுக்கு என் சமர்ப்பணமாகவும்,  எனக்கான சேமிப்பாகவும், என் மகளுக்கும் உதவலாம் என்ற நோக்கில் 'சம்மர் ஸ்பெஷல்' என்ற இந்த புத்தகத்தை அமேசான் மூலம் வெளியிட்டுள்ளேன். தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே!


சம்மர் ஸ்பெஷல் (ஆதியின் அடுக்களையிலிருந்து - நூல் 4


இதில் வத்தல்/வடாம், ஊறுகாய்கள், ஜூஸ், ஜிகர்தண்டா, ஃபலூடா என்று கோடைக்காலத்துக்கே உரிய 25 வகை உணவுகளின் செய்முறைகளைப் பகிர்ந்துள்ளேன். அம்மாவை நினைத்துக் கொண்டு கண்கள் குளமாக இந்த புத்தகத்தை எழுதினேன் என்று தான் சொல்லணும்.


ஆதியின் அடுக்களையிலிருந்து தொடரில் இது நான்காவது சமையல் புத்தகம். இந்த நூலை அமேசான் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து வாசிப்பதுடன், உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.  நூல் குறித்த உங்கள் எண்ணங்களையும், பதிவு குறித்த எண்ணங்களையும் பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளலாமே!  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…



நட்புடன்,



ஆதி வெங்கட்

16 கருத்துகள்:

  1. அடடே...   அம்மா வடாம் முதலானவை தயாரித்து விற்பனை எல்லாம் செய்திருக்கிறாரா?   

    நாங்களும் சில வடாம் வகைகள் வீட்டிலேயே செய்து கொள்வதுண்டு.

    மின்நூலுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சம்மர் ஸ்பெஷல்...சிறப்பு. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. மின் நூலுக்கு வாழ்த்துக்கள் மேடம்.
    சீசன் வாரியாக இப்படி சமயல் நூல்கள் தயாரித்து கலக்க ஆரம்பித்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நானும் வித விதமாய் வடாம் . வத்தல் போட்ட நாட்களை நினைத்து கொள்கிறேன்.

    //ஏறக்குறைய 25 வருடங்களுக்கு முன்பே அம்மா செய்த வடாம் அமெரிக்கா வரை பயணப்பட்டு இருக்கிறது! உறவு வட்டத்திலும், நட்பு வட்டத்திலும் அம்மாவின் தயாரிப்பு பிரபலம்.//
    அம்மாவின் கை பக்குவம் வந்து விட்டது ஆதி.

    //அம்மாவை நினைத்துக் கொண்டு கண்கள் குளமாக இந்த புத்தகத்தை எழுதினேன் என்று தான் சொல்லணும்.//
    அம்மாவின் ஆசிகள் உங்களுக்கு இருக்கும்.
    மேலும் மேலும் சமையல் புத்தகங்கள் வர வேண்டும் வாழ்த்துக்கள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. 'சம்மர் ஸ்பெஷல்' ..நூல் ஆஹா மிக மகிழ்ச்சியும் , வாழ்த்துக்களும் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

      நீக்கு
  6. மின்னூலுக்கு வாழ்த்துகள், ஏற்கெனவே முகநூலிலும் படிச்சேன். எங்க வீட்டில் என் மன்னி, வடாம், இலை வடாம், ஊறுகாய் போட்டு விற்பனை செய்திருக்கார். ஊறுகாய்க்கான காய்கள் எல்லாம் வீட்டிலேயே கிடைச்சுடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....