அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட முகநூல் இப்படியும் பயன்படும் - விளம்பரம்/குறும்படம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
நம்பிக்கை என்பது மரத்தின் நிழல் போன்றது. எதை நினைக்கிறோமோ அதையே பிரதிபலிக்கும் - ஆபிரகாம் லிங்கன்.
******
எனது மின்னூல்களுள் ஒன்றான “அந்தமானின் அழகு” நூலுக்கு சென்ற மாதத்தில், முகநூலில் கிடைத்த விமர்சனங்கள் மொத்தம் ஏழு! அதில் இரண்டு விமர்சனங்களை முன்னரே பகிர்ந்து கொண்டிருந்தேன். இன்று மேலும் ஒரு விமர்சனம் - விமர்சனம் எழுதிய சஹானா கோவிந்த் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. வாருங்கள் அவரது வார்த்தைகளில் எனது மின்னூல் பற்றி படிக்கலாம்!
******
அந்தமானின் அழகு:
அமர்க்கள ஆரம்பம்
ஆரம்பமே அமர்க்களமாய் பயண முஸ்தீப்புகளை சுவைபட சொல்லி ஆரம்பிக்கும் நூலின் ஆசிரியர், இடை இடையே பயண டிப்ஸ் கொடுப்பது சூப்பர்.
காலாபானி
அந்தமான் சிறை பற்றிய பகிர்வு மனதில் பாரத்தை ஏற்றியது. அப்படி வாங்கிய சுதந்திரம் இன்று எப்படி துச்சமாய் பிரயோகிக்கப் படுகிறது என்ற நினைவும் எழாமல் இல்லை.
கார்பின்'ஸ் கோவ்
Cove என்றால் சிறிய வளைகுடா என்ற அர்த்தம் வரும். அதைப் பெயரிலேயே கொண்ட இந்த கடற்கரையின் அழகை நாமும் உடன் நின்று, மிளகாய் பஜ்ஜியுடன் ரசித்த உணர்வை தந்தது எழுதியவரின் வர்ணனை.
கலவை
கவிதா ரீஜெண்ட், கட்டபொம்மன் உணவகம், புராதான மணிக்கூண்டு, ஹனுமான் கோவில் தரிசனம், புயல் அறிவிப்பு, கடல் வாழ் உயிரின காட்சியகம் பார்த்தது, அங்குள்ள ஸ்கூப்பா டைவிங் போன்ற விளையாட்டுகளுக்கான கட்டண விவரம், ராஸ் தீவு (போஸ் தீவு) பெயர் காரணம், கண்ணாடி படகில் பயணித்த அனுபவம், கடல் விளையாட்டுகள், சொகுசு படகில் பயணித்த அனுபவம், இயற்கை அழகு கொஞ்சும் ரிசார்ட் பற்றிய விவரம், எலிபண்ட் கடற்கரையில் பருகிய பிளாக் டீ, இயற்கை செதுக்கிய பாலம் பற்றிய பகிர்வு, லக்ஷ்மன்பூர் கடற்கரையில் ரசித்த சூரிய அஸ்தமனம், சீதாப்பூர் கடற்கரையில் சூரிய உதயக் காட்சி என கலவையாய் பல பகிர்வுகளை சொல்லி, அந்த இடத்திற்கு சொல்லும் ஆவலை அதிகரிக்க செய்கிறது இந்த நூல்.
இன்னும் இன்னும்
பரத்பூர் கடற்கரையின் மிதவைப் பாலம், பனானா ரைடு, கப்பலில் இருந்து ரசித்த சூரிய அஸ்தமனம், நண்பரின் மணநாள் கொண்டாட்ட கலாட்டா, பழங்குடியினரை காக்கும் சட்ட திட்டங்கள், அங்கு செல்லும் நாம் கடைபிடிக்க வேண்டிய அது தொடர்பான கட்டுபாடுகள், ஆனாலும் அவர்களை பார்க்க இயலாமல் ஏமாற்றம் என பலவும் விரிவாய் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
சதுப்பு நில காடுகள்
Mangrove forest பற்றியெல்லாம் பள்ளி நாளில் படித்திருந்த போதும், கல்லூரி சுற்றுலாவில் பிச்சாவரம் boat house சென்ற போது அதன் நினைவே வரவில்லை, வயசு அப்படி. இந்த நூலில் சதுப்பு நில காடு பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் வாசித்து தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
இயற்கை குகைகள்
இது பற்றி வாய் வார்த்தையாய் எப்போதோ கேட்ட நினைவு மட்டுமே, இதில் இந்த இயற்கை குகைகள் பற்றி விரிவாய் பகிர்ந்து இருக்கிறார் ஆசிரியர். வரலாறு ஆசிரியராய் இருந்திருக்க வேண்டியவர் என்ற உணர்வு தோன்றியது 😊
ஸ்கூபா டைவிங்
தொட்டி தண்ணீரை பார்த்தே பயம் கொள்ளும் நான், வாய்ப்பிருந்தும் இதை முயற்சித்து பார்த்ததில்லை என்ற வருத்தம், ஆசிரியரின் நண்பர் மகள் பகிர்ந்த அனுபவத்தில் இன்னும் அதிகரித்தது என்றே சொல்லலாம். இன்னுமொரு வாய்ப்பு கிடைத்தால் பார்ப்போம்.
Sum up
நூலின் இறுதியில் ஒரு sum up போல, பார்த்த இடங்கள், பார்க்காத இடங்கள், செலவு விவரம், குழுவினரின் பார்வையில் இந்த பயணம் பற்றிய பதிவுகள் என விரிவாய் பகிர்ந்தது சூப்பர்
மொத்தத்தில், பயண விரும்பிகள் வாசிக்க வேண்டிய ஒரு நூல். நேரில் சென்ற உணர்வை தந்த எழுத்துக்கு, வெங்கட் அவர்களுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்.
Amazon பக்கத்திலும் எனது review மற்றும் ஸ்டார் rating பகிர்ந்து இருக்கிறேன், இன்னும் நிறைய பேரை இந்த நூல் சென்றடைய அது உதவும் என்ற நம்பிக்கையில்.
நன்றி
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
*******
இந்த நூலை வாசிக்க விருப்பம் இருந்தால் அமேசான் தளத்தில் இந்தச் சுட்டி வழி படிக்கலாம். என்ன நண்பர்களே, இந்த நாளின் பதிவின் வழி பகிர்ந்த விஷயங்கள் உங்களுக்குப் பிடித்திருந்ததா? உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே? நாளை வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
அப்பாவி அழகாக விமர்சனம் செய்திருக்கிறார். அவர் சொல்வதுபோல இந்நூல் நிறையபேரை சென்றடைய வேண்டும். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅப்பாவி தங்கமணியின் விமர்சனம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவாசகம் அருமை. தங்களது பதிவில் பயணக்கட்டுரையாக வந்த அந்தமான் பயணம் குறித்த தொகுப்பாகிய அந்தமான் அழகு என்ற மின்னூலுக்கு சகோதரி சஹானா கோவிந்தா அவர்கள் எழுதிய விமர்சனம் நன்றாக உள்ளது. அருமையான முறையில் எழுதியுள்ளார். அழகாக விமர்சனம் எழுதிய அவருக்கும், அந்தமான் தீவு பயணத்தில் நாங்களும் உங்களுடன் பயணித்த வகையில் சிறப்பாக ஒவ்வொரு இடத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்... பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குவாசகம் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பயணக் கட்டுரைகள் இங்கே வெளிவந்த போது தொடர்ந்து கருத்துரைத்தமைக்கு நன்றி. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சார்.
பதிலளிநீக்குலிங்கன் அவர்களின் வாசகம் சிறப்பானதும் தத்ரூபமாகவும் உள்ளது.
சபானா அவர்களின் விமர்சனம் சிறப்பாகவும் அணைத்தையும் உள்ளடக்கியதாகவும் நூலை வாசிக்க தூண்டும் வகையிலும் உள்ளது.
மேலும் பல மின் நூல்களை வெளியிடுங்கள் சார்.
வணக்கம் அரவிந்த். வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குவிமர்சனம் குறித்த தங்களுக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சகோதரி சஹானா கோவிந் அவர்களின் விமர்சனம் மிகவும் அருமையான முறையில் எழுதியுள்ளார். அவர்களுக்கு நன்றி, மேலும், அந்தமான் தீவு பயணத்தில் நாங்களும் பயணித்த வகையில் சிறப்பாக ஒவ்வொரு இடத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள் வெங்கட் ஜி.
பதிலளிநீக்குபயணத்தில் உடன் இருந்த தங்களுக்கும் இந்தப் பதிவு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி ரங்கராஜன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சிறப்பாக விமர்சனம் செய்துள்ளார். வாழ்த்துகள்
பதிலளிநீக்குவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வலைப்பூவில் முன்பு படித்த நினைவுகளைத் தூண்டிவிட்ட விமர்சனம் அருமை .
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.
நீக்குசஹானா கோவிந்த அவர்களுடைய எளிமையான விமர்சனத்திற்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீபதி அண்ணாச்சி.
நீக்குவிமர்சனம் படித்ததும், உங்கள் இடுகைகளைப் படித்த நினைவு வந்துவிட்டது.
பதிலளிநீக்குவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
விமர்சனம் அருமை...
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஜி...
விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
எனது விமர்சனத்தை உங்கள் தளத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாவி தங்கமணி.
நீக்குஅருமையான விமர்சனம்
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஐயா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குசஹானா விமரிசனம் அருமை. அவங்க எழுதுவதற்குக் கேட்பானேன்!
பதிலளிநீக்குவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.