எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, January 12, 2012

ஜான்சியில் ரயில் இஞ்சின்:


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி-27]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26) 

பத்து மணி அளவில் ஓர்ச்சாவிலிருந்து கிளம்பிய நாங்கள் 12 மணிக்கு ஜான்சி வந்தடைந்தோம்.  எங்களுடைய இந்த கல்விச் சுற்றுலாவில் முக்கியமான பகுதியாக ஒரு பெரிய தொழிற்சாலைக்குச் செல்வதும் ஒன்று.  முன்பே இரு பகுதிகளில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் தனியார் தொழிற்சாலை சென்றது பற்றியும் எழுதியிருக்கிறேன். 

இப்போது நாங்கள் சென்றது ஜான்சி நகரத்தில் இருக்கும் அரசு தொழிற்சாலையான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்-இன் ஒரு யூனிட்டிற்கு.  இந்த யூனிட்-இல் அவர்கள் தயாரிப்பது ரயில் இஞ்சின்கள் மற்றும் ட்ரான்ஸ்ஃபார்மர்கள். இஞ்சின்களின் சக்கரங்கள் செய்வது முதல் ஒவ்வொரு பகுதியும் எப்படிச் செய்கிறார்கள், எப்படி இணைக்கிறார்கள், தரத்தினை எப்படிச் சோதிக்கிறார்கள் என்றெல்லாம் எங்களுடன் ஒவ்வொரு பகுதியாய் வந்து எங்களுக்குப் புரியும் பாஷையில் சொல்லிக் கொண்டு வந்தார் ஒரு பொறியியலாளர்.

இந்திய ரயில்வே தனக்குத் தேவையான ரயில் இஞ்சின்களை அவர்களது சொந்த தொழிற்சாலைகளிலேயே தயாரித்துக் கொள்கிறது. இருந்தாலும் சில சமயங்களில் இவர்களுக்கும் இஞ்சின்கள் தயாரிக்க ஆர்டர்கள் தருகிறார்கள்.  இந்த தொழிற்சாலையில் எல்லா பகுதிகளையும் சுற்றிப் பார்க்க எங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனது.  ஒவ்வொரு இடமும் நிறைய விஷயங்களை எங்களுக்குச் சொல்லித் தந்தது. 

அங்கிருந்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்து விட்டு கிளம்பினோம்.  நாங்கள் அடுத்ததாய் சென்றது ஜான்சி நகரத்தில் இருந்த ஒரு பழமை வாய்ந்த கிறிஸ்துவ தேவாலயத்திற்கு.  1956-ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த தேவலாயத்திற்கு எல்லோரும் சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பினோம். ஜான்சி ரயில் நிலையத்திற்கு வந்து ஒரு மணி நேரம் காத்திருந்தோம்.  நாங்கள் தில்லி செல்ல போபால்-தில்லி ஷதாப்தியில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.  அருமையான பயணச் சுற்றுலாவினை முடித்த திருப்தியில் அவரவர் இருக்கையில் அமர்ந்தோம். என் பக்கத்தில் வந்து அமர்ந்தது ஒரு வட கொரியா நாட்டினைச் சேர்ந்த ஒரு ஆசிரியர்.  ஜான்சியிலிருந்து அவர் செல்லும் ஆக்ரா வரை என்னுடன் பேசியபடி வந்தார்.  இந்திய உணவு வகைகள், படிப்பதில் இந்தியர்கள் காட்டும் ஆர்வம், இங்கு இருக்கும் அரசியல்வாதிகள் என்று பலதரப்பட்ட தளங்களில் பயணித்தது எங்கள் பேச்சு. 

தன்னுடைய தாய்க்கு இந்தியாவைச் சுற்றிக் காட்டுவதற்காக அழைத்து வந்திருக்கிறாராம்.  கொரிய பாஷையில் சில வார்த்தைகளை எழுதிக் காட்டினார்.  ஒன்றுமே புரியவில்லை.  சீன பாஷை போன்றே இவர்களும் எழுதுகிறேன் என்று படம் வரைகிறார்கள்….  இரண்டு-மூன்று மணி நேர பயணத்திற்குள் இப்படி வரையக் கற்றுக்கொள்வது கடினம் என்பதால் மேலே செல்லவில்லை….  J

இரவு பத்தரை மணிக்கு புது தில்லி ரயில் நிலையம் வந்தடைந்தோம்.  எல்லோரும் அவரவர் இலக்கினை நோக்கி பயணம் செய்யும் முன் பரஸ்பர இரவு வணக்கங்களும் சொல்லிக்கொண்டோம்.  அடுத்த நாள் மீண்டும் வகுப்பறைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழ, “நாளை வருவதை நாளை பார்த்துக்கொள்வோம், இப்போதைக்கு நான்கு நாள் பயணம் பற்றிய இனிய நினைவுகளை சுமப்போம்” என வீடு திரும்பினேன்.

இப்படியாக இந்த நான்கு நாள் பயணத்தில் நான் சந்தித்த, சிந்தித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.  உங்கள் அனைவருக்கும் இந்தப் பயணக் குறிப்புகள் பிடித்திருக்கும் என நினைக்கிறேன். 

நான்கு நாட்கள் சென்றதை இருபத்தி ஏழு பகுதிகளாய் பிரித்து எழுதி இருக்கிறேன்.  பார்த்த அனைத்தையும் எழுத முயன்றாலும், நினைவில் இல்லாத சிலவற்றை விட்டுவிட்டேன். 

என்னுடன் இந்தப் பயணத் தொடரில் கூடவே பயணம் செய்த அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள். மீண்டும் சந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்.

டிஸ்கி:  இந்த பயணத் தொடர் முடிந்துவிட்டதே என்பதில் எனக்கும் வருத்தம் தான்…  இப்போது தான் மீண்டும் ஒரு பயணம் தொடங்கி இருக்கிறதுஇதுவும் மத்தியப் பிரதேசம் தான்…  ஜபல்பூர் மற்றும் பாந்தவ்கர்[ட்].  இது பற்றிய குறிப்புகள் இன்னும் சில நாட்கள் கழித்து எழுதுவேன்

43 comments:

 1. நாங்களும் தான் பயணம் போகிறோம்; ஆனால், இது போன்று விவரமாக அதே நேரம் சுவையாக எழுதுவது கடினம்.

  பயிற்சி வகுப்பு எப்படி இருக்கிறது. இந்த முறை ஜபல்பூரா? எப்போது பயணம் துவங்குகிறது?

  அந்தத் தொடருக்காக இப்பொழுதே தயார்.

  ReplyDelete
 2. பயணக்கட்டுரை மிகவும் இனிமையாகவே இருந்தது. நாங்களும் உங்களுடன் கூடவே வந்தது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தியது.

  கடைசி நாளில் எங்கள் ஜான்சி BHEL Unit க்கு, வருகை தந்ததற்கு, முன்னாள் BHEL ஊழியர் என்ற முறையில் நன்றி கூறிக்கொள்கிறேன். vgk

  ReplyDelete
 3. Nice series of articles.

  Waiting for another oppertunity to read your similar series.

  Thanks for sharing

  ReplyDelete
 4. மத்திய பிரதேசம் என்றால் போபால் ஜான்சி மேப்பில் மட்டும் பார்த்த எனக்கு உங்கள் பதிவுகளால் நிறைய இடங்களை பார்த்த உணர்வு ...நான்கு நாட்கள் பார்த்ததை 27 பாகங்கள் என்பது நல்ல விரிவான பகிர்வு ...மிக்க நன்றி ...

  ReplyDelete
 5. Excellent. Pl continue to write about ur next trip.

  ReplyDelete
 6. பயணக்கட்டுரை சுவாரசியமாகவே இருந்தது. எல்லாவற்றையும் நினைவில் வைத்து சொல்லி இருக்கீங்களே. நன்றி

  ReplyDelete
 7. “நாளை வருவதை நாளை பார்த்துக்கொள்வோம், இப்போதைக்கு நான்கு நாள் பயணம் பற்றிய இனிய நினைவுகளை சுமப்போம்”

  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 8. சுவாரஸ்யமா அமைஞ்சது பயணம்..

  ReplyDelete
 9. இத்தனை நாட்களாக நாங்களும் உங்களுடனே பயணம் செய்தார் போன்ற உணர்வு வெங்கட்,அவ்வளவு அழகாக தெளிவாக இருந்ததது உங்க கட்டுரை.

  அடுத்த பயணத்திற்காக காத்திருக்கிறோம்.

  நன்றி.

  ReplyDelete
 10. பயணக் கட்டுரை சுவாரஸ்யம் நண்பரே

  ReplyDelete
 11. நாங்களும் உங்களுடன் பயணித்ததைப்போல பயணக்கட்டுரை இருந்தது. இனி வரும் தொடரும் அதுப்போல் அமைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. வேங்கட ஸ்ரீனிவாசன் said...
  //பயிற்சி வகுப்பு எப்படி இருக்கிறது. இந்த முறை ஜபல்பூரா? எப்போது பயணம் துவங்குகிறது?//

  சீனு அண்ணா ”மஹா கெளஷல் எக்ஸ்ப்ரஸ்” மூலம் நேற்று இரவு கிளம்பி ஜபல்பூருக்கு தான் பயணம் செய்து கொண்டிருக்கிறார். இன்று மாலை சென்றடைவார் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 13. தாங்கள் மிகவும் அனுபவித்து எழுதிச் சென்றதால்
  நாங்களும் மிகவும் ரசித்துப் படித்து மகிழ்ந்தோம்
  அனைத்து இடங்களும் படங்களுடன்
  மிகத் தெளிவாக விளக்கிப்போனதால்
  மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது
  நிச்சயம் அங்கு செல்லும் போது எங்களுக்கு
  மிகவும் பயன்படும்
  தொடர்பதிவுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 14. மிகவும் நன்றாக இருந்தது.

  ReplyDelete
 15. பயணக் கட்டுரை சுவாரஸ்யம் நண்பரே...பாராட்டுக்கள்...

  ReplyDelete
 16. சுவாரஸ்யமாய் எங்களையும் அழைத்துப் போனதற்கு நன்றி. அடுத்த பயணத்திற்கும் நாங்க ரெடி.
  கொரியா பாஷைல சொல்லணும்னா..
  gwan-gwang-gaek

  ReplyDelete
 17. பயணமற்ற ஒரு பயணத்தை எங்களுக்கு
  இருந்த இடத்திலேயே காண்பித்த பெருமை நண்பரே.
  அழகான தொடர்.
  மத்தியப் பிரதேசத்தில்
  மையம் கொண்டு விட்டோம் போங்கள்.

  ReplyDelete
 18. ஒரு பயணக் கட்டுரையை திறம்பட அற்புதமாக கொடுத்த உங்களுக்கு உடனே அடுத்த அஸைன்மெண்ட் கொடுத்துட்டோம். மத்தியப் பிரதேசம் - இரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 19. பயணத்தினை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் தங்களது அன்பு உறவுகளுக்கும், இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. உளாம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்..பயணக் கட்டுரை சூப்பர்..இப்படி எழுதத் தெரியாமல் ஸ்கூல் டேஸில் நிறைய பயணங்களை மிஸ் பண்ணியிருக்கிறேன்..அயல் நாடு செல்ல வாழ்த்துக்களுடன்,

  ஆர்.ஆர்.ஆர்.

  ReplyDelete
 21. உங்களின் பயண நினைவுகளை சுவாரஸ்யமாகவும் மற்ற‌வர்களுக்கு பயன்படும் விதத்திலும் பகிர்ந்து கொன்டதற்கு அன்பு நன்றி!!

  உங்களின் அடுத்த பய‌ணம் இனியதாக இருக்க அன்பு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 22. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: பயிற்சி வகுப்பெல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருக்கு சீனு... இந்த முறை ஜபல்பூர் மற்றும் பாந்தவ்கட் என்ற இரு இடங்களுக்குச் சென்று வந்தேன்....... அது பற்றிய குறிப்புகள் இன்னும் சில நாட்களில் தருகிறேன்....

  உனது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு....

  ReplyDelete
 23. @ வை. கோபாலகிருஷ்ணன்: என்னுடனே பயணம் செய்தமைக்கு மிக்க நன்றி சார்.... உங்கள் அலுவலகத்தின் ஒரு பகுதிக்குச் சென்றது எனக்கும் மகிழ்ச்சி...

  உங்களது தொடர் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 24. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன்....

  ReplyDelete
 25. @ பத்மநாபன்: நான்கு நாட்கள் பயணத்தினை 27 பகுதிகளாக எழுதி விட்டேன். இப்போது அடுத்த பயணம் முடித்து, இன்றுதான் வந்தேன். சில நாட்கள் கழித்து இந்தப் பயணம் பற்றிய குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறேன்....

  உங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன்....

  ReplyDelete
 26. @ மோகன் குமார்: உங்களது தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி மோகன்....

  அடுத்த பயணத் தொடர் இன்னும் சில நாட்களில்.....

  ReplyDelete
 27. @ லக்ஷ்மி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....

  ReplyDelete
 28. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....

  ReplyDelete
 29. @ அமைதிச்சாரல்: தங்களது வருகைக்கும் பயணத்தொடரினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி....

  ReplyDelete
 30. @ ராம்வி: தங்களது தொடர் வருகைக்கும் பதிவுகளுக்குத் தந்த ஆதரவிற்கும் மிக்க நன்றி ரமா ரவி....

  ReplyDelete
 31. @ K.s.s.Rajh: தங்களது வருகைக்கும் கட்டுரையை ரசித்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 32. @ ராஜி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி ராஜி....

  ReplyDelete
 33. @ ரமணி: தங்களது தொடர் வருகைக்கும் தொடர்ந்த நல்லாதரவிற்கும் மிக்க நன்றி ரமணி சார்....

  ReplyDelete
 34. @ பழனி. கந்தசாமி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.....

  ReplyDelete
 35. @ ரெவெரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 36. @ ரிஷபன்: தங்களது தொடர் வருகைக்கும் பதிவுகளுக்குத் தந்த ஆதரவிற்கும் மிக்க நன்றி சார்....

  அட கொரியன் பாஷை கூட தெரியுமா உங்களுக்கு! சகலகலா வல்லவர் சார் நீங்க....

  ReplyDelete
 37. @ மகேந்திரன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.....

  ReplyDelete
 38. @ ஈஸ்வரன்: தங்களது தொடர் வருகைக்கும் இனிமையான கருத்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணாச்சி.... மத்தியப் பிரதேசம் இரண்டாம் பாகம் விரைவில்.....

  ReplyDelete
 39. @ வே. சுப்ரமணியன்: உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் நண்பரே....

  ReplyDelete
 40. @ ஆர். ஆர். ஆர்.: //இப்படி எழுதத் தெரியாமல் ஸ்கூல் டேஸில் நிறைய பயணங்களை மிஸ் பண்ணியிருக்கிறேன்..// அட.... உங்களுக்கு எழுதத் தெரியாதுன்னு சொல்றதை நான் நம்ப மாட்டேன்... :)

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....

  ReplyDelete
 41. @ மனோ சாமிநாதன்: //உங்களின் பயண நினைவுகளை சுவாரஸ்யமாகவும் மற்ற‌வர்களுக்கு பயன்படும் விதத்திலும் பகிர்ந்து கொன்டதற்கு அன்பு நன்றி!!// தங்களது தொடர் வரவிற்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி....

  ReplyDelete
 42. உங்களின் பயணத்தில் பல இடங்களையும் கண்டுகொண்டோம்.

  மிக்க நன்றி.

  அடுத்து காத்திருக்கின்றோம்.

  பயணங்கள் இனிதாய் தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 43. @ மாதேவி: தங்களது தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோதரி.... அடுத்த பயணத்தொடர் சீக்கிரம் தொடங்கும்.....

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....