எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, June 15, 2012

பராய்த்துறை நாதர்[திருப்பராய்துறை கோவில் கோபுரம்]தமிழகத்தில் தில்லி பதிவர்கள் – ஏக், தோ, தீன் என்ற பதிவில் இந்த கோபுரத்தின் படத்தை வெளியிட்டு, பாடல் பெற்ற சிவஸ்தலம் எது என்ற கேள்வியைக் கேட்டிருந்தேன். இந்த இடம் பசும்பொன் மயிலாம்பிகை உடனுறையும் தாருகாவனேஸ்வரர் திருக்கோவில். காவேரி நதியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்த கோவில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்த திருக்கோவில். 

எப்போது தமிழகம் வந்தாலும் இங்கே செல்லத் தவறுவதில்லை. எனது பெரியம்மாவும் இதே ஊரில் இருப்பதால் அங்கே தங்கி, தினமும் அகண்ட காவிரியில் குளித்து பராய்த்துறை நாதரை வழிபட்டு வருவேன். இத்திருத்தலத்தைப் பற்றிப் பார்ப்போமா?


[பராய் மரம்]

சைவப் பெரியோர்களான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், பட்டிணத்தார் மற்றும் அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப்பெற்ற சிவஸ்தலம். பராய் மரங்கள் நிறைந்த தலமாக இந்த ஊர் இருந்ததால் பராய்த்துறை என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. தலத்தின் தல விருக்ஷமும் பராய் மரமே. இந்த மரத்திற்கு எளிதில் குணப்படுத்தமுடியாத சிலவகை தோல் வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

தலபுராணம்:  இந்த தலத்தில் தவம் செய்து வந்த தாருகாவன முனிவர்கள் மமதையினால், இறைவனை துதிக்க வேண்டிய அவசியமில்லை என இருந்தபோது சிவபெருமான் பிக்ஷாடனார் வேடம் பூண்டு அவர்களின் மமதையையும் அகந்தையையும் அழித்து தாருகாவனேஸ்வரராகக் காட்சி தந்தார் என்று தலபுராணம் சொல்கிறது. 

இறைவன் சுயம்பு லிங்கமாக, தாருகாவனேஸ்வரர், பராய்த்துறை நாதர் என்ற திருநாமங்களுடன் கிழக்கு முகமாகவும், பசும்பொன் மயிலாம்பிகை, ஹேமவர்ணாம்பிகை என்ற திருநாமம் பெற்ற இறைவி தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர்.


[பள்ளி மாணவர்கள் வைத்த கொலு]


[நாங்களும் போஸ் குடுப்போம்ல!]

கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் இருக்கும் நூறுகால் மண்டபத்தில் தான் தற்போது விவேகானந்தர் தொடக்கப்பள்ளி நடைபெறுகிறது. இந்த மண்டபத்தில் நவராத்திரி சமயத்தில் பள்ளி மாணவர்கள் சேர்ந்து வைக்கும் கொலு அருமையாக இருக்கும். சென்ற முறை சென்றபோது எடுத்த சில படங்கள் கீழே. “படம் பிடிக்கிற மாமா வந்துட்டாருடோய்” எனக் கூச்சல் போட்டு அவர்களையும் படம் பிடிக்கக் கேட்டார்கள். டிஜிட்டலில் எடுத்த படங்களைக் காட்டியபோது அவர்களது முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி. 


[கண்களைக் குளமாக்கும் திருக்குளம்]

நூறுகால் மண்டபத்திற்கு எதிரே குளம் உள்ளது. குளத்தினைப் பார்க்கும்போது நமது கண்கள் குளமாவது நிச்சயம். பாசி படிந்து பச்சை நிறத்தில் இருக்கும் தண்ணீரில் பலவண்ணங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள். எப்போது தான் இதற்கு விடிவுகாலமோ :(

ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தின் உள்ளே நுழையும் முன் விநாயகரை தரிசித்து உள்ளே சென்றால் நந்தி மண்டபம்.  பலிபீடம், செப்புக் கவசமிட்ட கொடிமரம், நந்தி இருக்கும் இந்த நந்தி மண்டபத் தூண்களில் தலத்தினைப் பாடிய சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் உருவச் சிலைகளும், திருப்பணி செய்த புண்ணியவானின் உருவச் சிலையையும் காணலாம்.  ராஜகோபுரத்தினை ஒட்டிய சுவற்றில் “இங்கே நின்றால் ஐந்து கோபுரங்களைப் பார்க்கலாம்” என ஒரு இடத்தில் எழுதி இருப்பார்கள். அங்கே நின்று ராஜகோபுரத்தினையும் சேர்த்து ஐந்து கோபுரங்களைக் காண முடிந்தது.

மூலவர் தவிர, உட்பிராகரத்தில் வலம்புரி விநாயகர், சப்தகன்னியர், அறுபத்தி மூவர், சோமாஸ்கந்தர், மகாகணபதி, பஞ்சபூத லிங்கங்கள், ஆறுமுகர், பிக்ஷாடனார், பிரம்மா, துர்க்கை, கஜலக்ஷ்மி, தக்ஷிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், நவகிரகங்கள் ஆகிய மூர்த்திகளும் இங்கே அருள்பாலிக்கின்றார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முதல் நாளில் இத்திருத்தலத்தில் காவிரியில் புனித ஸ்நானம் செய்வார்கள். ஐப்பசி மாதத்தில் முதல் நாளில் இங்கே முதல் முழுக்கு செய்து கடைசி நாளன்று மயிலாடுதுறை காவிரியில் கடை முழுக்கு செய்வது விசேஷம்.

ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த கோவில் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும். கோவிலின் உள்ளே அப்படி ஒரு அமைதி. பிரபலமான கோவில்களில் நிறைந்திருக்கும் சப்தம் இல்லாது இறைவனை நிம்மதியாய், மன அமைதியுடன் தரிசிக்க ஏற்ற இடம் இந்த திருப்பராய்த்துறை.

திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் பதினாறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் கோவிலுக்குச் சென்றால் மனதிற்கு அமைதி கிடைப்பது நிச்சயம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நிறைய பேருந்துகள் இருக்கின்றன.  பெட்டவாய்த்தலை செல்லும் டவுன்பஸ்களும் [No. 8, 97], கரூர், குளித்தலை செல்லும் தனியார் பேருந்துகளும் இங்கே நிற்கும். 

அடுத்த முறை திருச்சி வந்தால் சென்று வாருங்களேன்.

மீண்டும் சந்திப்போம்……

வெங்கட்.
புது தில்லி.

62 comments:

 1. சப்தம் இல்லாது இறைவனை நிம்மதியாய், மன அமைதியுடன் தரிசிக்க ஏற்ற இடம் இந்த திருப்பராய்த்துறை.


  அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

   Delete
 2. கண்டிப்பாக சென்று வருகிறேன், அகண்ட காவிரி என்று சொன்னதும், எனக்கு தமிரபரனில் குளித்த நியாபகம் வந்துவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு. நல்ல கோவில். முடிந்தபோது செல்லுங்கள்.

   Delete
 3. அருமையான பகிர்வு.

  ஆமாம்...பராய் மரங்கள் என்றால் என்ன? வேறு பெயர்கள் உண்டா?

  ReplyDelete
  Replies
  1. பராய் மரத்தின் ஆங்கிலப் பெயரோ/botanical பெயரோ தெரியவில்லை டீச்சர்.

   குட்டிப்பலா என்று கூட சொல்வார்கள். இலைகள் சொரசொரவென்று, கரும்பச்சை நிறத்தில் இருக்கும். மரம் வெள்ளை நிறத்தில் இருக்கும்.
   காய்கள் கூட இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
  2. ஆங்கிலத்தில் Sand-paper tree என்று இதற்குப் பெயர். ஆயுர்வேத tooth-paste களில் பபூல், வேப்ப மரங்களைப் போல் இதுவும் முக்கியமான ஒன்று.

   Delete
  3. ஓ இதைத் தட்டச்ச மறந்துவிட்டேன்.

   வடமொழியில் இதற்கு அக்ஷதாரு என்று பெயர். அதனால் தான் இத்தல ஈசனுக்கு வடமொழியில் தாருகாவனேஸ்வரர் என்று பெயர்.

   Delete
  4. Sand Paper Tree... ஓ இது தான் பராய் மரமா? தகவலுக்கு மிக்க நன்றி சீனு.

   Delete
  5. அக்ஷதாரு.... தாருகாவனேஸ்வரர் - நல்ல பெயர்ப் பொருத்தம்தான்...

   மீண்டும் நன்றிடா சீனு.

   Delete
 4. பலமுறை அவ்வழிச் சென்றும் ஒருமுறை கூட பார்க முடியாமல் போனது வருந்தத் தக்கதே! விளக்கம் அருமை!

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. திருச்சி - கரூர் - கோவை பிரதான சாலையில் இருப்பதால் இந்தக் கோவிலை பலர் பார்த்துக்கொண்டே சென்றிருக்க முடியும். இதுவரை பார்க்க முடியாமல் போனது போகட்டும். சீக்கிரமே அங்குள்ள ஈசனைக் காண அவனருள் புரியட்டும்.....

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவரே.

   Delete
 5. குட்டிப்பலா இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஒருவேளை கேரளாவில் உள்ள கடச்சக்க மரங்களோ? காய்கள் பலாக்காய் போலவே முள்முள் தோலாக இருக்குமோ?

  இதை (கடச்சக்கை) பெல்ஃப்ரூட் என்றும் சொல்வார்கள்.

  ReplyDelete
  Replies
  1. இது அது அல்ல.... மேலே எனது நண்பர் வேங்கட ஸ்ரீனிவாசன் உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருக்கிறார் டீச்சர்.

   பராய் மரத்தின் ஆங்கிலப் பெயர் Sand Paper Tree....

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டீச்சர்.

   Delete
 6. oops.... sorry Bread fruit என்று சொல்வார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஹி...ஹி... இந்த Bread Fruit மரத்துல Bread காய்க்குமா?

   தங்களது தொடர் வருகைக்கு மிக்க நன்றி டீச்சர்.

   Delete
 7. திருப்பராய்த்துறை உறையும் தாருகாவனேஸ்வரர் பற்றி இப்போதுதான் அறிகிறேன். அழகான படங்கள். குப்பைகள் மிதக்கும் குளத்தைப் பார்த்தால் மக்களின் அலட்சியப் போக்கை எண்ணி கோபம்தான் வருகிறது. பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. //குப்பைகள் மிதக்கும் குளத்தைப் பார்த்தால் மக்களின் அலட்சியப் போக்கை எண்ணி கோபம்தான் வருகிறது. //

   ஆமாம் சகோ. பல கோவில்களின் திருக்குளங்களுக்கு இதே நிலை தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 8. பராய்த்துறை மேவிய பரனே போற்றி!
  சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!!

  என்று சொல்லுவார்கள்.

  அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. திருச்சிக்காரரான உங்களுக்குத் தெரியாததா?

   நிறைய பாடல்களும் இந்தப் பராய்த்துறை நாதனின் பெயரில் பாடியிருக்கிறார்கள்....

   தங்களுடைய தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி வை.கோ. சார்.

   Delete
 9. நல்லதொரு ஆலய அறிமுகம். திருச்சிக்குப் பல முறை சென்று வந்திருக்கிறேன். இந்தக் கோயில் பற்றி எனக்குத் தெரியாது. பெயர் மட்டுமே கேள்விப்பட்ட பெயர். இனி செல்லும் போது அவசியம் சென்று தரிசிக்கிறேன். நல்லறிமுகத்திற்கு என் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 10. //அடுத்த முறை திருச்சி வந்தால் சென்று வாருங்களேன்.//

  Thanks for the info.. I will try..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன். எங்கே உங்க பக்கத்தில் பதிவொன்றும் காணோம்...

   Delete
 11. நூறுகால் மண்டபத்திற்கு எதிரே குளம் உள்ளது. குளத்தினைப் பார்க்கும்போது நமது கண்கள் குளமாவது நிச்சயம்.

  superb!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் மிகவும் நெருக்கமான ஊர் ஆயிற்றே திருப்பராய்த்துறை....

   குளம்... :(( வருத்தமே மிஞ்சியது, அதைப் பார்க்கும்போது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.

   Delete
 12. பேருந்து எண்கள் வரை தெளிவாக சொன்ன விரிவான பகிர்வு.

  குளம் பார்த்தால் நம் கண்ணில் நீர் வரும் போல் உள்ளது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.

   Delete
 13. மிக நல்ல பதிவு. திருப்பராய்த்துறை கேள்விப்பட்டிருக்கிறேன். அழைத்துச் சென்று பராய்த்துறை நாதரை தரிசிக்க வைத்து விட்டீர்கள். நன்றி.

  குழந்தைகளைப் பற்றிய பகிர்வும் படமும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. குழந்தைகளின் முகத்தில் சந்தோஷத்தைப் பார்த்ததால் அந்தப் படத்தினையும் [முன்பே எடுத்ததாக இருந்தாலும்] இப்போது பகிர்ந்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 14. கோவில் விவரணம்,தலபுராணம் என்று அசத்தி விட்டீர்கள்.ஸ்வாமி சித்பவானந்தாவின் குருகுலம் இருப்பது அங்குதானே?

  ReplyDelete
  Replies
  1. ராமகிருஷ்ண தபோவனம், குடில் எல்லாமே இங்கு தான் இருக்கிறது. சிறப்பாக நடக்கும் குருகுலம்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 15. குளத்தினைப் பார்க்கும்போது நமது கண்கள் குளமாவது நிச்சயம். பாசி படிந்து பச்சை நிறத்தில் இருக்கும் தண்ணீரில் பலவண்ணங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள். எப்போது தான் இதற்கு விடிவுகாலமோ :(

  எல்லா கோவில் குளங்களிலும் இதே பிரச்னைதான்.

  ReplyDelete
  Replies
  1. //எல்லா கோவில் குளங்களிலும் இதே பிரச்னைதான்.//

   உண்மை. எப்போது தான் மனிதர்கள் மாறுவார்களோ....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

   Delete
 16. அருமையான பகிர்வு...படங்கள் பளிச் வெங்கட்ஜி..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் படங்களை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி ரெவெரி.

   Delete
 17. இதுவரை அறியாத திருத்தலத்தை
  படங்களுடம் மிக அழகாக அறிமுகம் செய்துள்ளீர்கள்
  கோயில் தெப்பம்தான் மனத்தை சங்கடப்படுத்துகிறது
  கோவிலின் பெருமைக்கு முன்னோர்கள் காரணம்
  இதுபோன்ற அசுத்தங்களுக்கு நாம்தான் காரணம் என்கிற
  உணர்வு எப்போது மக்களுக்கு தோன்றப்போகிறதோ தெரியவில்லை
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. //கோவிலின் பெருமைக்கு முன்னோர்கள் காரணம்
   இதுபோன்ற அசுத்தங்களுக்கு நாம்தான் காரணம் என்கிற
   உணர்வு எப்போது மக்களுக்கு தோன்றப்போகிறதோ தெரியவில்லை//

   இது மக்களுக்குத் தோன்றுவதற்குள் நாம் இழக்கப்போகும் விஷயங்கள் நிறைய எனத்தோன்றுகிறது. இன்னும் ஒரு கோவிலுக்கும் சென்றிருந்தேன். அங்கேயும் இதே நிலை தான்.... :(

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணிஜி.

   Delete
 18. Replies
  1. தமிழ்மணம் வாக்கிற்கும் மிக்க நன்றி ரமணிஜி.

   Delete
 19. தல வரலாறும்
  விளக்கமும் அறிந்துகொண்டேன் நண்பரே..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 20. -//ஏழாம் நூற்றாண்டில் கட்டப் பட்ட//.... அட!
  -எல்லாக் கோவில்களிலுமே குளங்கள் திருப்பணிக்குக் காத்திருக்கின்றன போலும்!
  -//கோவிலின் உள்ளே அபபடி ஒரு அமைதி..... //அதுதான் சிறப்பே. கூட்டம் நிறைந்த கோவில்களில் அது மிஸ்ஸிங். பார்க்க வேண்டிய இடம்.

  ReplyDelete
  Replies
  1. அமைதியை நாடியே கோவிலுக்குச் செல்கிறோம். அங்கேயும் கும்பலும், சத்தமும் என்றால் பிடிப்பதில்லை.... :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 21. திருப்பராய்த்துறையில் உள்ள இராமகிருஷ்ணர் தபோவனம் பற்றியும் குருகுலம் பற்றியும் குறிப்பிடவில்லையே என்று எழுத நினைத்தேன். சென்னை பித்தன் முந்திக்கொண்டுவிட்டார். திருசிய்க்குப் பக்கத்தில் உள்ள ஊர்களில் இந்த குருகுலமும் அதன் கண்டிப்பும் மிகவும் பிரபலம். வீட்டிற்கு அடங்காத பிள்ளைகளை (சிறுவயதில் குளித்தலையில் சில வருடங்கள் வாழ்ந்த நானும் அதில் அடக்கம்) அங்கே அனுப்புவதாகச் சொல்லி மிரட்டுவது வழக்கம். பழைய நினைவுகளை அசை போடுகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. குருகுலம் பற்றி பிறிதொரு பகிர்வில் குறிப்பிடலாம் என எழுதவில்லை. கண்டிப்புக்குப் பெயர்போனது அந்த குருகுலம். அடங்காத பிள்ளைகளை அங்கு அனுப்புவதாக மிரட்டுவது இன்னமும் தொடர்கிறது! :)

   பழைய நினைவுகளை அசை போட வைத்துவிட்டதா இப்பகிர்வு....

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சூரி.

   Delete
 22. Hi Mr.Venkat,
  Thanks for dropping by my blog and leaving a comment...
  So true about Gandhiji's letter to Hitler. That's how Gandhiji is...
  In Tamil there's a saying 'Vaazhapazhathula Oosi Ethra Maadhiri'! Isn't it like that?!!!
  Glad you liked my post.
  Isn't that your first visit to my blog? Welcome...
  Do drop by often.. I'd love your visits n comments...
  You've got a lovely post here on Thirupparaithurai.
  Here's my post on the same place - My Travelogue - Thirupparaithurai

  ReplyDelete
  Replies
  1. Hi Bhusha,

   Thanks for the Comments. I have been reading your blog since October and i had commented in one or two of your posts. Your writing is good. Keep writing.

   I will read your post on Thirupparaithurai....

   Delete
 23. மிக நல்ல விரிவான பதிவு. நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவைக்கவி.....

   Delete
 24. அன்பு நண்பருக்கு
  திருப்பராய்த்துறை நாதனை பற்றிய நல்ல செய்திகளை எழுதி உள்ளீர்கள். அருமையாக இருந்தது. அந்த தபோவனம் மற்றும் குடில்களை பற்றி சில வரிகளை குறிப்பிட்டு இருக்கலாம் என நினைக்கிறேன்.வாழ்த்துகள் வளர்க உங்கள் பணி / பாணி.
  அன்புடன்
  விஜய்

  ReplyDelete
  Replies
  1. தபோவனம் மற்றும் குடில் பற்றி வேறொரு பதிவில் நிச்சயம் பகிர்ந்து விடுகிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் சார்.

   Delete
 25. ஆலய தர்சனம் கிடைத்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 26. ப‌ராய்த்துறை உறை ஈச‌னையும் ப‌ராய் ம‌ர‌ம் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ளையும் ஒருசேர‌ அறிய‌த்த‌ந்த‌மைக்கு ந‌ன்றி ச‌கோ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிலாமகள்....

   Delete
 27. இராமகிருஷ்ணர் தபோவனம் நடத்தும் மற்றொரு பள்ளி/குருகுலம் மதுரைக்கு அருகே சோழவந்தானில் உள்ளது சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. //இராமகிருஷ்ணர் தபோவனம் நடத்தும் மற்றொரு பள்ளி/குருகுலம் மதுரைக்கு அருகே சோழவந்தானில் உள்ளது//

   எனக்கும் புதிய தகவலிது.... தகவலுக்கு நன்றி சூரி.

   Delete
  2. இவ்வாலயம் ஒரு பரிகாரத்தலம்! சிறப்புமிகு ஆலயங்களில் ஒன்றின் பெருமையினை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ!
   கிருஷ்ணரின் பரிபூரண அருளால் மென்மேலும் ஆன்மீகப் பதிவுகள் இட உறுதுணையாய் நிற்க வேண்டுகிறேன். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சகோ!

   Delete
  3. தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அட்சயா....

   முன்பும் சில பதிவுகள் எழுதி இருக்கிறேன். வரும் நாட்களிலும் தரிசித்த கோவில்கள் பற்றிய பதிவுகள் வெளிவரும்....

   Delete
 28. நூறுகால் மண்டபத்திற்கு எதிரே குளம் உள்ளது. குளத்தினைப் பார்க்கும்போது நமது கண்கள் குளமாவது நிச்சயம். பாசி படிந்து பச்சை நிறத்தில் இருக்கும் தண்ணீரில் பலவண்ணங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள். எப்போது தான் இதற்கு விடிவுகாலமோ //

  மக்கள் எல்லோரும் நம் கோவில் நம் திருக்குளம், என்று விழிப்புணர்வு பெற்றால் அல்லாது நடக்காது.

  ReplyDelete
  Replies
  1. மக்கள் விழிப்புணர்வு பெறுவது தான் எப்போது என்று தெரியவில்லை.... :(

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....