எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, December 28, 2012

ஃப்ரூட் சாலட் – 27 – புத்தகத்தின் வயது 169 - பெண் குழந்தை


இந்த வார செய்தி:சில வருடங்கள் முன் வெளிவந்த புத்தகம் கிடைக்கிறது என்றாலே நமக்கு மகிழ்ச்சி. அதுவே 169 வருடம் பழைய புத்தகம் ஒன்று இருக்கிற செய்தி தெரிந்தால்...  திருப்பதியில் இருக்கும் டாக்டர் கே.வி. ராகவாச்சார்யா என்பவரிடம் 1843-ஆம் வருடம் கைகளால் செய்யப்பட்ட தாளில் இந்தியன் இங்க் கொண்டு பதிப்பித்த “நானய்யாஎன்பவர் எழுதிய மஹாபாரதாபுத்தகத்தின் முதல் பிரதி இருக்கிறதாம்.

இவரிடம் இருக்கும் புத்தகத்தில் ஆந்திர மஹாபாரதத்தின் ஆதி பர்வாஎனும் அழைக்கப்படும் முதல் பகுதி இருக்கிறது. இத்தனை வருடங்கள் ஆனாலும் எழுத்துகள் தெளிவாக இருக்கின்றனவாம். புத்தகத்தினை வெளியிட்டவர்கள் பூம்பாவை ச்ருங்காரம்  மற்றும் அப்பாஸ்வாமி.  வெளியிட்ட பதிப்பகம் சைதாபுரம் உமாபதி கல்வி களஞ்சியம்.  இந்தப் புத்தகம் வெளியிட்ட போது வர்த்தமான தாரங்கினி எனும் சென்னை நாளிதழில் விளம்பரம் கூட வெளியிட்டிருக்கிறார்கள். புத்தகத்தின் ஒரு பிரதியை வைத்திருக்கும் டாக்டர் ராகவாச்சார்யா, அப்போதைய பார்க் டவுன் பகுதியிலிருந்த ஹிதயத்துல்லா புத்தகக் கடையில் வாங்கியதைப் பதிவு செய்கிறார்.

நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு புத்தகம் தான்.

[செய்தி: தி ஹிந்து வலைப்பக்கத்திலிருந்து]

இந்த வார முகப்புத்தக இற்றை:ஒரு தம்பதியினர் கல்யாண நாள் அன்று வினோதமான ஒரு முடிவு எடுத்தார்கள். அடுத்த நாள் காலை அவர்களது அறையை யாராவது தட்டினால் கதவைத் திறக்கக் கூடாது என்பது அவர்கள் எடுத்த முடிவு. காலை கணவனின் பெற்றோர்கள் வந்து கதவைத் தட்ட, கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு கதவைத் திறக்கவில்லை. கணவனின் பெற்றோர்களும் சென்று விட்டனர்.  சிறிது நேரத்தில் மனைவியின் பெற்றோர்கள் கதவைத் தட்டி அழைக்க, கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மனைவியின் கண்களிலிருந்து கண்ணீர். என்னால் கதவைத் திறக்காது இருக்க முடியாது. ஏற்கனவே அவர்களை நான் பறிகொடுத்த உணர்வு எனச் சொல்லி கதவைத் திறந்து விட்டார்.

அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்தார்கள். முதலில் ஆண் பிறகு பெண். பெண் குழந்தை பிறந்த போது கணவருக்கு மகிழ்ச்சி. சந்தோஷத்தில் பெரிய விழாவே கொண்டாடினார். வியந்த நண்பர்களிடம் சொன்னார் காரணத்தினை – ‘இவள் தான் எனக்காகக் கதவைத் திறக்கப் போகிறவள்!

இந்த வார குறுஞ்செய்தி


WHEN THE MIRROR OF LIFE GETS DIRTY WITH THE FOG OF REALITY, TRY WIPING IT OUT WITH YOUR FAITH.  YOU CAN SEE THE CLEAR REFLECTION OF YOUR DREAMS.  

ரசித்த புகைப்படம்: துளி கூட கவலையில்லாத நிலை! இந்த நிலை எல்லோருக்கும் அமைந்து விட்டால் சுகம் தான். 
  
ராஜா காது கழுதை காது

தலைநகர் தில்லியில் கல்லூரிப் பெண்ணிற்கு நடந்த கொடுமையான விஷயம் பற்றி தில்லியில் பலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். பலர் அதை அரசியலாக்கவும், அதன் மூலம் பலன் பெறவும் பயன்படுத்துகிறார்கள். பேருந்து ஒன்றில் ஒரு மூத்த பெண்மணி கூறியது இங்கே.

‘இவனுக்கெல்லாம் தூக்குத் தண்டனை கொடுக்கக் கூடாது. குடுத்தா உடனே துன்பம் போயிடும். இரண்டு கைகளையும், கால்களையும் வெட்டி, பிறகு கண்களையும் பறித்துக் கொண்டு அப்படியே விடவேண்டும். வாழ்நாள் முழுவதும் துன்பம் அனுபவிப்பான். அது மற்றவர்களுக்கும் பாடமாக அமையும்.”’

ரசித்த காணொளி:

சமீபத்தில் ஹம் ஏக் ஹே சதா கே லியே!எனும் காணொளியைப் பார்த்தேன். இந்தியாவின் பல பிரபலங்கள் பங்கு பெறும் இந்தக் காணொளி நன்றாக இருக்கிறது. நிச்சயம் ரசிக்க முடியும். இதோ இந்த வாரத்தின் ரசித்த காணொளியாய் உங்களுக்காக! சற்றே நீளமாக இருந்தாலும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.படித்ததில் பிடித்தது:மை!

ஒரு சமயம் எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், ‘எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட ‘மை தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் பெருமையில் எழுதுகிறார்கள். வேறு சிலர் பொறாமையில் எழுதுகிறார்கள். சிலர் தற்பெருமையைத் தொட்டு எழுதுகிறார்கள். ஆனால் தொடக்கூடாத மை மடைமை, கயமை, பொய்மை, வேற்றுமை.

நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் மனதைத் தொடும்படியாக எழுத வேண்டும்.

எழுத்தாளர்கள் நீக்க வேண்டிய மைகள் – வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடைமை, அறியாமை. இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் கடமையாகவும் உரிமையாகவும் கொள்ள வேண்டும்என்று குறிப்பிட்டார்.

இடம், பொருள், ஏவல் அறிந்து அதற்கேற்றபடி பேசுவதில் கலைவாணர் வல்லவர் என்பதை இந்த உரையின் மூலம் அறியலாம்.

22.12.2012 - தினமணி, சிறுவர்மணி.

மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


32 comments:

 1. நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு புத்தகம் பற்றியும் ,

  இடம், பொருள், ஏவல் அறிந்து அதற்கேற்றபடி பேசுவதில் வல்லவர் கலைவாணர் பற்றிய பகிர்வும் அருமை ...

  சத்தான ஃப்ரூட் சாலட் ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 3. புத்தகம் பற்றிய தகவல் + படம் அருமை. அரிய பொக்கிஷம்தான்! முகப்புத்தக இற்றை மனதில் இடம் பிடித்தது. கற்பழிப்பு விஷயத்தில் ‘குற்றம் செய்பவர்களின் ‘லுல்லா’வை வெட்டி விட வேண்டும்’ என்கிற சுஜாதா சாரின் கருத்துத்தான் எனக்கும் இருந்தது. அந்தப் பெண்மணி கோபத்துடன் சொன்ன விஷயம் மிகமிகச் சரியே என்று இப்போது மனதுக்குப் படுகிறது! சுவையான ப்ரூட் சாலட் மறுபடி வெங்கட்டிடமிருந்து! மறுபடி மறுபடி தொடரட்டும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   சுஜாதா சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன்!

   Delete
 4. ஃப்ரூட் சாலட் இந்த வாரம் ருசி கூடுதல்..

  கலைவாணர் கலைவாணர்தான் :-))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 5. ஃப்ரூட் சாலட் ரொம்ப ருசியா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 6. கலைவாணரின் ‘மை’ அருமை. அவர் எங்கள் ஊர்க்காரர் என்பதில் எங்களுக்குப் பெருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி [ஈஸ்வரன்].

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 8. அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 9. Replies
  1. ரசிப்பிற்கு மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 10. காலத்துக்கும் நிற்க வல்லதாய் கலைவாணர் பேச்சு ... நமக்கெல்லாம் பாலபாடமும்! முகப் புத்தக இற்றையில் அருமையான குறுங்கதை! குறுஞ்செய்தி நல்ல அறிவுரை. வளர்ச்சியில் வீழ்ந்து விடுகிறதே அம்மனோநிலை!(ரசித்த படம்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 11. 169 வருடமும் பாதுகாத்த கைகளும் மனசும் போற்றப்பட வேண்டியவை!

  ReplyDelete
  Replies
  1. உண்மை...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 12. கலைவாணர் பற்றிய குறிப்பு பெஸ்ட். யேசுதாஸ் தொடங்கிப் பின் வளரும் பாட்டு ..நீளம்தான். ரசிக்க வைகிறது. இப்போது அந்தப் பெண் பிழைத்தால் போதும் என்கிறவரை நிலமைவந்து விட்டதே. அந்தக் கொடூரம் செய்தவர்களை பஸ் பெண்மணி சொன்னது போல செய்தால் கூடத் தவறில்லை. குழந்தைகுட்டி மஹா க்யூட். நன்றி வெங்கட். சத்தான ஃப்ரூட்சாலட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 13. கலைவாணர் அவர்களின் உரை எல்லா எழுத்தாளர்களும் பின்பற்ற வேண்டியது.
  யேசுதாஸ் பாடல் அருமை.

  இன்னொருமுறை ஒரு பெண்ணைப் பற்றி தப்பாக நினைக்கக் கூடக் கூடாது. நெருங்கவே பயப்பட வேண்டும். அப்படிப்பட்ட தண்டனையை கொண்டு வர வேண்டும். மரண தண்டனை கூடாது என்பதுதான் என் எண்ணமும்.

  சுவையான சாலட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 14. நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் மனதைத் தொடும்படியாக எழுத வேண்டும்.//

  கலைவாணர் கருத்து மிக அருமை.
  எல்லோருக்கும் பயன் தரும் சொல்லையே எல்லோரும் சொல்லவேண்டும். எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைதான்.
  ஃப்ருட் சாலட் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 15. கலைவாணர் பற்றி செய்தி மிக அருமை. அவரின் புத்திசாலிதனம் அழகா நகைசுவையாக வெளிவரும்..
  ரசித்த புகைப்படம் - ரசிக்கவும் ஏங்கவும் வைக்கிறது குழந்தை பருவத்தை நினைத்து!!
  ப்ரூட் சாலட் - செம டேஸ்டி!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சமீரா....

   Delete
 16. ’மை’ பற்றி கலைவாணர் கூறியுள்ளது மிகவும் அரு’மை’. ;)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....