எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, December 23, 2012

துளசி – கோபால் கல்யாண விழா
கார்த்திகை மாதத்தில் வரும் கைசீக ஏகாதசி, மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி போலவே சிறப்பு வாய்ந்தது. அம்ருதம் பெறுவதற்கு சமுத்திரத்தினைக் கடைந்த போது ஸ்ரீஹரி, தன்வந்திரி பகவானாக ஸ்வர்ண கலசத்தோடு தோன்றினார். அப்படித் தோன்றிய போது அவரது கண்களிலிருந்து விழுந்த துளி தான் துளசியாக தோன்றியதாம். 


ஸ்கந்த புராணத்தில் துளசியும் கோபாலும் விவாஹம் செய்து கொள்வது பற்றி எழுதி இருக்கிறதாம். இது பற்றி ஒரு பதிவு கூட இராஜராஜேஸ்வரி அவர்கள் எழுதி இருக்கிறார்கள். அதனால் அந்த விவரங்களை நான் இங்கே தரப் போவதில்லை!


இன்று ஞாயிற்றுக் கிழமை. அதனால் புகைப்படங்கள் போட வேண்டுமே என யோசித்த போது இந்த வருட கைசீக ஏகாதசியின் அடுத்த நாளான உத்தான துவாதசி அன்று நண்பரின் வீட்டில் துளசி-கோபால் விவாஹம் செய்தபோது எடுத்த புகைப்படங்கள் நினைவுக்கு வந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

என்ன நண்பர்களே புகைப்படங்களை ரசித்தீர்களா? கூடவே தில்லியில் நடந்த ஒரு ராதா கல்யாணத்தில் எடுத்த புகைப்படத்தினையும் இணைத்துள்ளேன்!
மீண்டும் அடுத்த வாரம் மேலும் சில புகைப்படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை!நட்புடன்வெங்கட்.

புது தில்லி.

38 comments:

 1. நல்லதொரு படப் பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. eppadi anne...

  ovvoru naalum ovvoru vithamaaka.....

  vaazhthukkal sako!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 3. ராதா கல்யாண வைபோகமே! படங்கள் ஜோர்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 4. படங்களும் பதிவும் அருமை அய்யா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களே.....

   Delete
 5. அருமையான பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 6. எமது பதிவு பற்றியும் குறிப்பிட்டமைக்கு இனிய நன்றிகள் ..

  காய்கறி அலங்காரத்தில் தம்பதியர் படம் அருமை .. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. அட! சிலையா நின்னாக்கூட துளசியும் கோபாலும் ஒரு தனி அழகு:-)

  கண்ணால சமாச்சாரம் பற்றிய பழசு ஒன்னு இங்கே! அதிலே படங்கள் ஒன்னும் இல்லாததால் இந்தப் பதிவுக்கும் அந்தப் பதிவுக்கும் முடிச்சுப் போட்டுட்டேன்:-)

  http://thulasidhalam.blogspot.co.nz/2005/11/blog-post_16.html

  ReplyDelete
  Replies
  1. துளசி விவாஹம் பத்தி நீங்க நிச்சயம் அழகா எழுதி இருப்பீங்கன்னு நினைச்சேன். அதுனால தான் நான் படங்களோடு நிறுத்திக்கிட்டேன். :)

   உங்களை நினைத்துக் கொண்டு தான் படங்களையே பகிர்ந்தேன் எனது தளத்தில்....

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 8. அழகான படங்கள் .புதிய செய்திகள். துளசி போலத் தூய்மையான பக்தை இருக்க முடியுமா. பக்கத்துவீட்டில் பிருந்தாவிவாகம் என்று நம் வீட்டிலிருந்து நெக்கி கிளை ஒன்றும் எடுத்துப் போவார்கள். தாத்பர்யம் என்ன என்றும் தெரியாது. மாடத்தோடு துளசியை வைத்து பஞ்சு மாலைகளால் அலங்கரித்துக் கண்ணனுடன் அவளை இணைப்பார்கள் சாஸ்திரிகள் வந்து நடத்திக் கொடுப்பார். மிக ஆசரமாக நடக்கும்.
  ராதகல்யாணம் வேற. ம்ம்ம் நல்ல விருந்துதான்.நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. துளசிச் செடியோடு கூடவே நெல்லியின் இலையும் வைப்பார்கள். எதற்கு என்பதற்கு விளக்கம் யாராவது சொன்னால் புரியும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 9. கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து படங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 10. அழகாருக்காங்க துள்சியும் கோபாலும்.. பகிர்வு அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்....

   Delete
 11. ரொம்ப நல்லா இருக்கு ப்டங்களும் பகிர்வும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 12. துளசி கோபால்னதும் நான் ஒண்ணு நினைச்சு வந்தா.. ம்ம் அசத்திட்டிங்க

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 13. எங்கள் ஊரிலும் உத்தான துவாதசி (கார்த்திகை துவாதசி) அன்று துளசிக்கும் கிருஷ்ணனுக்கும் திருமணம் பண்ணுவார்கள். துளசி மாடத்தின் பக்கத்தில் நாம் கார்த்திகை தீபம் ஏற்றுவது போல நிறைய விளக்குகள் ஏற்றி வைப்பார்கள்.நெல்லி கிளை ஒன்றையும் வைப்பார்கள். ஆனால் அதன் தாத்பர்யம் என்ன என்று தெரியவில்லை.

  துளசி டீச்சரின் அறுபது நிறைவு படங்கள் என்று முதலில் நினைத்து விட்டேன். எல்லோருமே அப்படித்தான் என்று நினைக்கிறேன்.

  எப்படியோ உங்கள் பதிவு மூலம் அவர்களையும் நினைத்தாயிற்று!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 14. துளசி டீச்சரின் அறுபது நிறைவு படங்கள் என்று முதலில் நினைத்து விட்டேன். எல்லோருமே அப்படித்தான் என்று நினைக்கிறேன்.

  எப்படியோ உங்கள் பதிவு மூலம் அவர்களையும் நினைத்தாயிற்று!//

  நானும் ரஞ்சனிநாராயணன் அவர்கள் மாதிரி தான் நினைத்தேன்.
  துளசி, கோபால் திருமணம் பகிர்வும், படங்களும் அழகு, அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 15. இணையத்தில் பெருமாள் படங்களைக் கொண்ட ஒரு பதிவைப் பார்த்ததும் குஷியாயிட்டேன், கலக்கல் படங்கள்!! மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயதேவ் தாஸ்.

   என் வலைப்பூவையும் தொடர்வதற்கும் நன்றி நண்பரே....

   Delete
 16. வித்தியாசமான காய்கறி பழங்களால் ஆன மாலை ,ரசித்தேன் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.

   Delete
 17. http://jaghamani.blogspot.com/2012/12/blog-post_10.html /

  துளசி பூஜை

  மஹாவிஷ்ணு நெல்லி மரமாகத்தோன்றியவர் என்பதால் துளசியுடன் திருமணம் .................

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 18. நெல்லி மரம் விஷ்ணு ரூபமாம். துளசி லட்சுமி அம்சம். இதனால் ரெண்டு செடிகளையும் இணைத்து துளசி கல்யாணம் செய்வார்கள்னு அம்மம்மா சொல்வாங்க. (அம்மம்மா பர்மனண்டா நெல்லி செடிக்கு கீழேயே துளசி செடி நட்டு வெச்சிருந்தாங்க :) )

  இங்கே ஆந்திராவிலும் துளசி கல்யாணம் செய்வாங்க. படங்கள் அருமை

  ReplyDelete
  Replies
  1. மேலதிக தகவல்களுக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

   Delete
 19. எல்லாப்படங்களும் அழகோ அழகு. மகிழ்ச்சிப்பகிர்வு. ;)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....