வியாழன், 27 டிசம்பர், 2012

'தண்ணென்று ஒரு காதல்..' - கவிதை

 
 
 
 
மையல் கொண்டவன் மனதில் தான் 
 
மையம் கொண்டிருந்ததறிந்துண்
 
மையில் மகிழ்ந்து போன மயில்

தண்ணென்றிருக்கும் நீரையள்ளி
 
தன் நெஞ்சறிய அவன் மீதிறைத்து 

என்னென்னவோ என்றெழுந்த 

எண்ணங்களைப் பகிர்ந்தாள். 

 
 
சென்ற திங்களன்று எனது பக்கத்தில் கவிதை எழுதுங்க... என்ற பதிவில் மேலுள்ள படத்தினை வெளியிட்டு அதற்கேற்ப கவிதை எழுதும்படி கேட்டிருந்தேன்.  பின்னூட்டத்தில் சில கவிதைகள் வந்திருந்தன. இன்று திரு கே.பி. ஜனா அவர்கள் தனது தளத்தில் மேலுள்ள கவிதையை வெளியிட்டு இருக்கிறார். இங்கே எனது பக்கத்திலும் அந்தக் கவிதையை வெளியிடுவதில் மகிழ்ச்சி. 
 
மீண்டும் சந்திப்போம்....
 
நட்புடன்
 
வெங்கட்.
கோவையிலிருந்து....
 
 
 


30 கருத்துகள்:

 1. நல்ல கவிதை... நான்கு முறை படித்தபின் தான் புரிந்தது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   நீக்கு
 2. என்னது...நம்ம ஊரிலிருந்தா....கூப்பிடுங்க...சந்திக்கலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் ஊரில் இரு நாட்கள் இருந்தேன். திட்டமிடாத பயணம் என்பதால் யாருக்கும் முன்கூட்டி தெரிவிக்க இயலவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை நேரம்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!.

   நீக்கு
 4. தான் மையல் கொண்ட மனம்கவர் கள்வனில் மனத்திலும் தான் இருப்பது கண்டுணர்ந்த தையலின் குறும்பின் வெளிப்பாட்டினை பிரதிபலிக்கும் வண்ணம், தாங்கள் கொடுத்திட்ட ஓவியத்திற்கு பொருத்தமாக கவி புனைந்திட்ட திரு ஜனா அவர்களின் கவித்துவம் என்னை வியக்கவைக்கின்றது அதே சமயத்தில், எதையும் நயம்பட உரைக்கும் உங்கள் உள்ளத்தில் புதைந்திருக்கும் கவிதை புனையும் ஆற்றலினை , வெளிப்பாடுசெய்தால் , எங்கள் யாவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது என்னவோ உண்மை. வாழ்க, வளர்க

  வேளச்சேரி நடராசன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்தப்பா [வேளச்சேரி நடராசன்].

   நீக்கு
 5. பழையாற்றில் குளித்தவர் எழுதிய கவிதையல்லவா! தண்ணென்று இருந்தது.

  //நல்ல கவிதை... நான்கு முறை படித்தபின் தான் புரிந்தது...//

  ஒழுங்காக ஸ்கூல் போகாத பையனோ!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஈஸ்வரன் [பத்மநாபன் அண்ணாச்சி]

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. கவிதைதான் எழுதணுமா தலைநகரமே! :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பாணியில் எழுதுங்க மைனரே.... உங்கள் பதிவுக்குக் காத்திருக்கிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆர்.வி.எஸ்.

   நீக்கு
 8. பெண்ணே!

  தாழ்ந்த சாதி என்றென்னைத்
  தள்ளி நின்று பார்க்காதே!
  தாழ்ந்த இடத்தில் தவழ்ந்தோடும்
  தண்ணீர் எந்தச் சாதியடி?
  வீழ்ந்தே ஓடும்! அதைவிட
  வீரன் என்கை பற்றினாலோ
  வாழ்ந்து மறையும் நாள்வரையில்
  வையம் போற்ற வாழ்ந்திடுவோம்!

  அருணா செல்வம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல கவிதை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.

   நீக்கு
 11. பதில்கள்
  1. உங்கள் தளத்தில் வெளியிட்ட கவிதையையும் படிக்கிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 12. படத்துக்கு ஏத்த மாதிரி கவிதையும் சூப்பரா எழுதியிருக்காரு கே.பி.ஜனா. ரெண்டுமே மனசைப் பிடிச்சிட்டது வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   நீக்கு
 13. படத்திற்கு பொருத்தமான் கவிதை. கே.பி.ஜனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   நீக்கு
 14. ஸ்ரீரங்கம் வந்துட்டு ஒரு தொலைபேசி அழைப்புக் கூடச் செய்யாமல் இருந்ததை வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாகக் கண்டிக்கிறேன். நாங்களாவது வந்து பார்த்திருப்போம். :(

  அடுத்தடுத்து விருந்தினர் வருகை, ஏகாதசி தரிசனச் செல்கைனு கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக ஏகத்துக்கும் வேலை தொடர்ந்து இருந்ததால் எதையும் கவனிக்கமுடியவில்லை. மின்சாரம் இருந்தும் இணையத்துக்கு வர முடியாமல் போனதில் உங்க பதிவுகளைக் கவனிக்கலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வந்து பார்த்துட்டேன்! அதனால கண்டிப்பை வாபஸ் வாங்குங்க! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....