வெள்ளி, 7 டிசம்பர், 2012

ஃப்ரூட் சாலட் – 24 – கார்கில் 2 கன்யாகுமரி – குறுஞ்செய்தி வயது 20 – சூப்பர் சிங்கர்

இந்த வார செய்தி:

சில நாட்கள் முன்னர் எனது நண்பர் அருண் பரத்வாஜ் கார்கிலிலிருந்து கன்யாகுமரி வரை இரண்டு மாதங்களில் ஓடியே கடக்க இருப்பதை எழுதி இருந்தேன். சென்ற வாரம், அதாவது சென்ற வெள்ளிக்கிழமை நண்பர் அருண் கன்யாகுமரியைச் சென்றடைந்தார். 

கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி கார்கிலில் ஆரம்பித்தது அருணின் ஓட்டம். இடைவிடாது 61 நாட்கள் ஓடி, நவம்பர் மாதம் 30 ஆம் தேதி அன்று மாலை 04.50 மணிக்கு அவர் கன்யாகுமரியின் கடற்கரையை வந்து சேர்ந்தார்.  இந்த 61 நாட்களில் அவர் கடந்த தூரம் 4000 கிலோ மீட்டருக்கு மேல்.

இந்தியாவின் வரலாற்றிலேயே இந்த தூரத்தினை ஓடியே கடந்திருப்பது இவர் மட்டுமே.  செல்லும் வழியெல்லாம், பள்ளி மாணவர்கள், கிராமத்தினர், வழிப் போக்கர்கள், வண்டி ஓட்டுனர்கள் என எல்லோரிடமிருந்தும் தனக்குக் கிடைத்த அன்பினை மகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார் அருண்.

நண்பர் அருண் பரத்வாஜ் அவர்களுக்கு உங்கள் சார்பிலும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

இந்த வார முகப்புத்தக இற்றை:

ஒரு தேனியிடம் ஒரு பறவை கேட்டது. ‘ஓய்வில்லாத கடின உழைப்பின் மூலம் நீ தேனைத் தயாரிக்கிறாய். ஆனால் மனிதன் அந்தத் தேனை உன்னிடமிருந்து திருடி விடுகிறான். அதற்காக நீ வருந்துவதில்லையா?அதற்குத் தேனி பதிலளித்தது. இல்லவே இல்லை! மனிதன் என்னிடமிருந்து தேனை மட்டும் தான் திருட முடியும். ஆனால் தேனை உண்டாக்கும் கலையை ஒரு போதும் அவன் என்னிடமிருந்து திருடமுடியாது!


இந்த வார குறுஞ்செய்தி

குறுஞ்செய்தி பற்றிய ஒரு தகவல்.  குறுஞ்செய்திக்கு 03.12.2012 அன்று 20 வயது முடிந்துவிட்டது.  முதன் முதலில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி ஒரு கணினியிலிருந்து அலைபேசிக்கு அனுப்பப் பட்டது. செய்தி என்ன தெரியுமா? “Merry Christmas’.  சரி இன்றைய குறுஞ்செய்தியைப் பார்க்கலாம்!

DIFFICULTIES ARE AN ATTEMPT BY GOD TO CHANGE OUR MINDS. BUT PRAYERS ARE AN ATTEMPT BY US TO CHANGE GOD’S MIND!

ரசித்த புகைப்படம்: விளக்கம் வேண்டுமா என்ன?
  
ரசித்த பாடல்

மூன்றாம் பிறை படத்தில் வரும் பூங்காற்று புதிரானது யாருக்குத்தான் பிடிக்காது?  நான் ரசித்த இப்பாடலை நீங்களும் மீண்டுமொரு முறை பார்த்து/கேட்டு ரசிக்க இங்கே தந்திருக்கிறேன். கானகந்தர்வன் யேசுதாஸ் குரலில் இனிமையான பாடல் இதோ!

ரசித்த காணொளி: சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர் என தொடர்ந்து விஜய் டி.வி.யில் கண்டுகளித்துக் கொண்டிருக்கும் ரசிகப் பெருமக்களுக்கு, இந்த சூப்பர் சிங்கர் பாடலையும் கேட்டு ரசிங்கன்னு சொல்லிக்கிறேன்....  :)படித்ததில் பிடித்தது:
-           
கழுதையும் கோழியும்: கழுதை ஒன்று வைக்கோல் களத்தில் இருந்தபோது பசித்த சிங்கம் அங்கு வந்தது. ‘நான் எல்லாம் கழுதையை அடித்துச் சாப்பிடுகிற வம்சம் இல்லை, என்ன பண்ணுவது பசிக்கொடுமை!என்று கழுதையைத் தாக்க வந்தது. அப்போது கோழி கூவியது. சிங்கத்துக்கு, கோழியின் ‘கொக்கரக்கோ!என்றால் ஒரு அலர்ஜி. அதைக் கேட்ட மாத்திரத்தில் பிடரியெல்லாம் சிலிர்த்து உள்ளுக்குள் என்னமோ பண்ணும். நாராசமாக இருக்கும். அந்த இடத்தை விட்டு உடனே விலகிப் போய்விடும்.

இந்த முறை கோழி விசேஷ அபசுரமாக ஏறக்குறைய சுருட்டி ராகத்தில் கூவ, சிங்கம் தன் முன் பாதங்களால் காதை மூடிக்கொண்டு, பின் பாதங்களில் ஓடிப்போனது. இதைப் பார்த்து கழுதை தைரியமடைந்து, ‘சிங்கம் பயந்தாரிஎன்று அதை உற்சாகமாக விரட்டியது. சிங்கம், கோழி கூவல் நின்றதும் திரும்பி, கழுதையை ஒரு அறை அறைந்து கொன்று உண்டு பசியாறியது.

நீதி: தைரியம் வேண்டும் தான்; அசட்டு தைரியமல்ல!

-          சுஜாதாவின் நீதிக்கதைகளிலிருந்து.


மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


 

48 கருத்துகள்:

 1. இனிமையான ஃப்ரூட் சாலட்... அருமையான புகைப்படம்... காதுக்குக் குளிர்ச்சியான பாடல்...

  த.ம. 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால ஹனுமான் ஜி!

   நீக்கு
 2. தேனை உண்டாக்கும் கலையை ஒரு போதும் அவன் என்னிடமிருந்து திருடமுடியாது!’//

  ஆனாலும் கொஞ்சம் சீனியைப் போட்டு என்னவெல்லாம் முயற்சிக்கிறான் பனுஷப்பயலுக சாரி மனுஷப் பயலுக...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   நீக்கு
 3. எறும்பிடமும் ,தேனியிடமும் நாம் சுறுசுறுப்பை கற்று கொள்ளவேண்டும்.நல்ல கதம்பமாக தொகுத்து இருக்கிறீர்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.

   நீக்கு
 4. தோழர் அருண் பரத்வாஜ் அவர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லிக்கொள்கிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுமதி.

   நீக்கு
 5. ப்ரூட் சாலட் சுவையாக இருந்தது. தேனியின் கதையை என் முக நூலில் பகிர்ந்தேன். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   முக நூலில் பகிர்ந்தமைக்கும் தான்....

   நீக்கு
 6. ஃப்ரூட் சாலட்-யாருக்குத்தான் பிடிக்காது? ரசித்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 7. அருண் பரத்வாஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். கன்யாகுமரி கடல் அவரை எவ்வளவு அமைதியாக வாழ்த்துகிறது பார்த்தீர்களா?

  //ஆனால் தேனை உண்டாக்கும் கலையை ஒரு போதும் அவன் என்னிடமிருந்து திருடமுடியாது!’//

  பாவம் தேனீ. மனிதனைப் பற்றி அதற்குத் தெரிந்தது அவ்வளவுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 8. கமல்னா மூன்றாம் பிறை கமல் தான்.புகைப்படம் ஜூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   நீக்கு
 9. \ஃப்ரூட் சாலட்டில் எததனை பழங்களின் சுவையை அறிய முடிகிரது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   நீக்கு
 10. பதில்கள்
  1. Done... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன் குமார்.

   நீக்கு
 11. நீதிக்கதை நன்று. இது சுஜாதா எழுதிய புத்தகமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்பலம் மின் இதழில் அவ்வப்போது எழுதிய கதைகள். 2005-ல் உயிர்மை பதிப்பகம் அதைத் தொகுத்து 130 கதைகள் அடங்கிய புத்தகமாக வெளியிட்டார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை ஜி!

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.

   நீக்கு
 13. வெல்டன் அருண்!

  குறுஞ்செய்தி அருமை

  புகைப்படம் ரசிக்க வைத்தது


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 14. வாராவாரம் வரும் ப்ரூட் சாலடில் எதைப்பற்றி சொல்ல? எதை விட?
  குட்டி சூப்பர் சிங்கருக்கு ஒரு "ஓஹோ!"
  நீதிக் கதை அருமை.
  மகுடம்: தேனீயின் ஸ்டேட்மெண்ட் தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 16. கன்னியாகுமரி வரை ஓடிவந்து சாதனை படைத்த அருண்பரத்வாஜை வாழ்த்துகிறேன். அவரது பயண அனுபவங்களை ஒரு பதிவாக இடுங்கள்.

  புகைப்படம் அருமை. குறுஞ்செய்து குறித்த தகவல் புதிது. கமல்ஹாசனின் மூன்றாம் பிறை பாடலின் இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது முதல் வருகை என்னை மகிழ்வித்தது நண்பரே.

   வலைச்சரம் மூலம் எனது தளத்திற்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. அதற்கு சுசீலாம்மாவுக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்திரைவீதிக்காரன். தொடர்ந்து சந்திப்போம்.

   நீக்கு

 17. சாதனை படைத்த அருண்பரத்வாஜை வாழ்த்துகிறேன். அவரது பயண அனுபவங்களை விபரம் அறிந்து ஒரு பதிவாக இடுங்கள்.

  பதிலளிநீக்கு
 18. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவரே.

  பதிலளிநீக்கு
 19. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

  பதிலளிநீக்கு
 20. ஹைலைட் அந்தப் பாப்பாதான் . என்ன குரல் .என்ன பHஆவம்.
  சூப்பரோ சூப்பர்.
  அருண் பரத்வாஜின் மனோதிடத்தை மிகவும் பாராட்டுகிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.
  சிங்கக் கதை சுஜாதா சொல்லி நீங்கள் கொடுத்த சிங்கக் கதை எல்லோருக்கும் நல்ல அறிவுரை.நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 21. புரூட் சாலட்டை ரசித்துப் புசித்தேன்
  அருமையான குறுஞ் செய்தியை
  குறித்துவைத்துக் கொண்டேன்
  பகிர்வுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 22. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹாரி.

   நீக்கு
 23. // தேனி பதிலளித்தது. ’இல்லவே இல்லை! மனிதன் என்னிடமிருந்து தேனை மட்டும் தான் திருட முடியும். ஆனால் தேனை உண்டாக்கும் கலையை ஒரு போதும் அவன் என்னிடமிருந்து திருடமுடியாது!’//

  இதை நான் மிகவும் ரஸித்தேன், வெங்கட்ஜி.
  சிந்திக்க வேண்டிய விஷய்ம் தான்.

  பதிலளிநீக்கு
 24. ரசிப்பிற்கு மிக்க நன்றி வை.கோ. ஜி!

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 25. நண்பர் அருண் பரத்வாஜ் அவர்களுக்கு நாங்களூம் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்.

  தேனை உண்டாக்கும் கலையை ஒரு போதும் அவன் என்னிடமிருந்து திருடமுடியாது!’//

  உண்மைதான். ஆனால் தேன் இல்லாத திரவத்தை தேன் என்று விற்க தெரியும்.

  குழந்தை பாடல் அருமை. என் பேரனும் நிறுத்தாமல் இந்த குழந்தை போல் பாடுவான். குழந்தை என்னமாய் ரசித்து பாடுகிறாள் குழந்தைக்கு வாழ்த்துக்கள்.

  பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 26. //ஆனால் தேன் இல்லாத திரவத்தை தேன் என்று விற்க தெரியும்.//

  உண்மை தான்...

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....