எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, October 31, 2012

கார்கில் டு கன்யாகுமரி
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓடு கண்ணா ஓடு என்ற தலைப்பில் எனது நண்பர் திரு அருண் பரத்வாஜ் பற்றி நான் எழுதிய பகிர்வு உங்களுக்கெல்லாம் நினைவில் இருக்கலாம்.  இல்லையெனில் இங்கே கிளிக்கிடுங்கள்.  இப்போது மீண்டும் அவரைப் பற்றிய ஒரு செய்தியோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

கார்கில் என்றதும் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது கார்கில் போரும், அதில் உயிரிழந்த சக மனிதர்களும். கூடவே அங்குள்ள பனி படர்ந்த மலைகளும் தான்.  கடல் மட்டத்திலிருந்து சுமார் 2676 மீட்டர் உயரத்தில் இருக்கும் கார்கிலிலிருந்து இந்தியாவின்  தென்கோடியில் இருக்கும் கன்யாகுமரி வரையுள்ள தூரம் சற்றேறக்குறைய 4000 கிலோ மீட்டர். 

ஒரு வாகனம் மூலம் சாலை வழிப் பயணம் செய்தால் சுமார் மூன்று அல்லது நான்கு நாட்களில் இந்த்த் தொலைவினை நீங்கள் கடக்க முடியும்.  ரயில் மூலம் என்றால் ஜம்மு வரை சாலை வழி வந்து அங்கிருந்து ரயில் மூலம் சென்னை வழியாக கன்யாகுமரி வந்தடையலாம்.  அதுவே உங்களை மொத்த தூரத்தினையும் ஓடிக் கடக்கச் சொன்னால் உங்களது பதில் நிச்சயம் வேற வேலை இல்லை?’ என்பதாகவோ,என்னால முடியாதுப்பா’ என்றோ இருக்கலாம். கொல்கத்தாவினைச் சேர்ந்த திரு ஆதிராஜ் சிங், இதே கேள்வியை நண்பர் அருண் பரத்வாஜ் அவர்களிடம் கேட்டபோது, உடனே, சற்றேனும் யோசிக்காது, சரி என்று சொல்லி விட்டார். ஜம்மு காஷ்மீர் சாலை ஒன்றில் இருந்த ஒரு விளம்பரப் பலகையில்கார்கிலிலிருந்து கன்யாகுமரி வரை ஒரே இந்தியா” என்று எழுதியதைப் பார்த்தவுடன் இந்த ஓட்ட்த்திற்கான வித்து தோன்றியது.  விளம்பரதாரர்கள், ஏற்பாடுகள் எல்லாம் செய்து முடித்து, இந்த அக்டோபர் மாதத்தின் முதல் தேதியில் கார்கிலிலிருந்து ஓட ஆரம்பித்து விட்டார் அருண். 

நடுங்க வைக்கும் குளிர் பிரதேசமான கார்கிலில் பிராண வாயு பற்றாக்குறை, நடுங்கும் குளிர் என்ற பிரச்சனைகள் இருந்தாலும், அக்டோபர் மாதம் முதல் தேதியில் தனது ஓட்டத்தினை ஆரம்பித்த அருண், லே-லடாக் போன்ற பகுதிகளைக் கடந்து, கடந்த திங்கள் கிழமை [22.10.2012] அன்று தில்லி வந்து சேர்ந்தார். 

திங்கள் அன்று மதியம் இந்தியா கேட் பகுதியில் அவரைச் சந்தித்துப் பேசியபோது அறுபது நாட்களுக்குள் நிச்சயம் கன்யாகுமரியைச் சென்றடைந்து விடுவேன் என்று நம்பிக்கையோடு கூறினார்.  பயணத்தின் போது இவருக்குத் துணையாக வரும் வாகனங்களில் ஒன்று உறைந்து போன தண்ணீரால் பழுதாகிவிட, “எதுவும் அருணின் முயற்சியைத் தோற்கடிக்கக் கூடாது” என்று தொடர்ந்து சென்றிருக்கிறார்கள்.  நிறைய தண்ணீர் குடித்தபடியே பயணத்தினைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் அருண்.

உயரங்களில் தினம் ஒன்றுக்கு 50 கிலோ மீட்டரே ஓட முடிந்திருக்கிறது.  ஆனால் ஞாயிறு அன்று ஒரே நாளில் 83 கிலோ மீட்டர் ஓடி சாதனை புரிந்திருக்கிறார்.  தினமும் வீட்டினருகே இருக்கும் பூங்காவில் மூன்று நான்கு சுற்று சுற்றுவதற்கே மூச்சிரைக்கும் என் போன்றவர்களுக்கு இடையில் இப்படியும் ஒரு சாதனை மனிதர்.

இவரைப் பார்த்து ஏளனம் செய்யும் மனிதர்களுக்கு, ‘என் குழந்தைகளுக்கு நல்லதொரு மாதிரியாக இருக்கிறேன்’ அது போதும் என்கிறார். இது வரை பல குழந்தைகளை ஓட்டப் பந்தயங்களில் ஓட பயிற்சி செய்யச் சொல்லி உற்சாகம் தந்திருக்கிறார்.  இந்தப் பயணத்தின் போது சந்தித்த பல குழந்தைகளுக்கு ஓட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கி வந்ததாகச் சொல்லும் இவருக்கு ஒரு வருத்தமும் இருக்கிறது.  ஓடுவதையே ஒரு கேரியராகச் செய்ய இந்தியாவில் வழியில்லை போதிய ஸ்பான்ஸர்ஸ் கிடைப்பதில்லை என்றும், வாழ்க்கை ஓடுவதற்கு, ஓடுவதைத் தவிர பணி செய்வதும் அவசியம் என்று சொல்கிறார், இந்தியாவின் திட்டக் கமிஷனில் பணி புரியும் அருண் பரத்வாஜ்.

பாராட்டுக்குரிய இந்த நண்பர், தனது 43-வது வயதில் இன்னமும் இளமையாக இருப்பதற்குக் காரணமே தனது 31- வயதில் ஆரம்பித்த இந்த ஓட்டம் தான் எனச் சொல்கிறார்.  சிறு வயதில் புற்று நோய் வந்து பத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைப் பெற்ற இவரை பாராட்டுவோம். 

நவம்பர் மாத இறுதியில் கன்யாகுமரி வந்தடையும் இவரை நமது தமிழக மக்களின் சார்பில் வாழ்த்துவோம்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


68 comments:

 1. oru saathanai manitharai ariya seythamaikku mikka nantri!


  nalla pakirvu!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 2. அருண் பரத்வாஜ் அவர்களுக்கு பாராட்டுகள். அவரது ஓட்டம் சிறப்படையட்டும். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆதி.... :)))

   பின் குறிப்பு: இது என்ன புதுசா கமெண்ட்-லாம் இங்கேயே வருது! :))

   Delete
  2. சும்மா தான்.... ரொம்ப நாளாச்சு கமெண்ட் போட்டு...:)

   Delete
  3. ரெண்டு பேரும் (வேறு வேறு இடத்தில் இருப்பதால்) பதிவிலேயே பேசிக்கிறீங்களோ?

   Delete
  4. சீனு... க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

   Delete
 3. படிக்கப் படிக்கப் பிரம்மிப்பாய் உள்ளது... நிச்சயமாய் சாதனை மனிதர் தான்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 4. இங்க என்ன நடக்குது பின்னூட்டத்துல.. :))

  ReplyDelete
  Replies
  1. குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் லெட்டரிலேயே கணவன் மனைவி பேசிப்பாங்க. இப்ப லெட்டெர் போய் எல்லாம் எலக்ட்ரானிக் ஆகிவிட்டதால் இவங்கப் பதிவிலேயே பேசிக்கறாங்கப் போலிருக்கு!

   Delete
  2. ஏம்ப்பா..... பின்னூட்டம் கூட போடக் கூடாதா...:)

   Delete
  3. முத்துலெட்சுமி, சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்]:

   ”என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே!”

   Delete
 5. சிறு வயதில் புற்று நோய்க்காக பல அறுவை சிகிச்சைகள் செய்யபட்டிருந்தும், ஓடு கண்ணா ஓடு என்று ஓடும் திரு அருண் அவர்களுக்கு சாதனையை நல்லபடியாக முடிக்க வாழ்த்துக்கள்.
  அவரை அறிமுகம் செய்த உங்களுக்குப் பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 6. பாராட்டப்படவேண்டிய சாதனை மனிதர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 7. அருண் பரத்வாஜ் அவர்கள் மிகவும் பாராட்டிற்குரியவர். சாதனையாளர் என்பதில் சந்தேகமேயில்லை. அனைவரும் அவருடைய வெற்றிப் பயணம் சாதனைப் பயணமாய் அமைய வாழ்த்துவோம்.

  ReplyDelete
  Replies
  1. இரண்டு நாட்கள் முன், மத்தியப் பிரதேசத்தின் முரேனா பகுதியைக் கடந்து விட்டார் இவர்.

   நிச்சயம் பாராட்டுக்குரியவர் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 8. சாதனையாளருக்குப் பாராட்டுகள்! அவரது சாதனை ஓட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்! நல்லதொரு பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 9. திரு அருண் பாரத்வாஜ் அவர்களை பற்றி படிக்க பிரம்மிப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 10. Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்]

   Delete
 11. அன்பு நண்பரே
  மிகவும் அருமையான செய்திகள். அருண் பாரதவாஜ்க்கு வாழ்த்துக்கள்.
  தொடரட்டும் உங்கள் பணி
  விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 12. பிரமிப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது. அருண் பரத்வாஜுக்கு நாலாயிரம் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கே. பி. ஜனா சார்.

   Delete
 13. அட! வாசிக்கவே பிரமிப்பா இருக்கே!!!!!!

  ReplyDelete
  Replies
  1. பிரமிப்பு தான்...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 14. சாதனை படைக்கும் அருண் பரத்வாஜ் அவர்களுக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 15. அவருடைய முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்... நல்ல விஷயம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆயிஷா ஃபாரூக்.

   Delete
 16. இவரைக் கிண்டல் செய்கிறார்களா? ஏன்?

  தொடர்ந்து ஓடி சாதனை செய்வார் என்று நம்புவோம்.

  ReplyDelete
  Replies
  1. //இவரைக் கிண்டல் செய்கிறார்களா? ஏன்?//

   வேற வேலையில்லையா என்று தான்!

   அக்டோபர் 1 - ஆம் தேதி ஆரம்பித்த ஓட்டம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 27-ஆம் தேதி ஒரே நாளில் 84 கிலோ மீட்டர் ஓடியிருக்கிறார்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை ஜி!

   Delete
 17. ரொம்பவும் பிரமிப்பாக‌ இருக்கிற‌து! நோயை முறியடித்து சாதனை செய்யத் துடிக்கும் இந்த இளைஞரை மனதார பாராட்டுகிறேன். இந்த இளைஞரைப்பற்றி பதிவெழுதிய உங்களுக்கும் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ மேடம்.

   Delete
 18. சிறு வயதில் புற்று நோய் வந்து பத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைப் பெற்ற இவரை பாராட்டுவோம்.

  நிஜமாகவே பிரமிக்க வைக்கிறார்.. சின்ன விஷயத்திற்கு சோர்ந்து போகும் நமக்கு இவர் ஒரு பாடம்.

  ReplyDelete
  Replies
  1. //சின்ன விஷயத்திற்கு சோர்ந்து போகும் நமக்கு இவர் ஒரு பாடம்.//

   உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 19. பதிவினிலும் நல்லதொரு ஓட்டம். நல்லதொரு மெஸ்ஸேஜ். பாராட்டுக்கள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி!

   Delete
 20. கார்கில் என்றதும் இன்னொன்றும் நினைவு வருகிறது... ஒரு ராணுவ அதிகாரி எச்சரிக்கை அளித்திருந்தும் அன்றைய அமைச்சகம் அதை கவனிக்காமல் விட்டு விட்டது.
  அது சரி, கோவை2தில்லி என்ன தில்லி2கோவை ஆகிவிட்டாரா...

  ReplyDelete
  Replies
  1. கார்கில் நிறைய விஷயங்களை நினைவு படுத்துகிறது....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி! நேரில் பேசுவோம்....

   Delete
 21. வியப்பாக இருக்கிறது.great !!!!!!!!!!

  @ஆதி

  ஒரு நாலு நாள் கோவை பக்கம் போயிட்டிங்கன்னா உடனே பதிவுல தலைநகரத்தை பாக்கணும்னு தோணிடுத்து போல.ஆர்வக் கோளாறை சரி பண்ணிட வேண்டியதுதான் :-) சம்ர்த்தாக இருக்கவும் :-)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 22. பிரமிப்பாக இருக்கிறது. மலைக்க மட்டுமே முடிகிறது! :))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 23. அவரது துணிவும் முயற்சியும்
  பாராட்டுக்குரியவை
  பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 24. Replies
  1. தமிழ்மணம் எட்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 25. மிக அருமையான பதிவு வெங்கட். அவர் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்

  பின்னூட்டங்களை ( ரோஷினி அம்மா, நீங்கள், சீனு) மிக ரசித்தேன்

  காலை அவசரத்தில் ஓட்டு போட்டுட்டு ஓடிட்டேன் இப்போதான் பதிவை படிச்சேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன் குமார்.

   Delete
 26. நல்லதொரு மனிதரை அடையாளப்படுத்தியதற்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 27. நல்லதொரு மனிதரை அடையாளப்படுத்தியதற்கு நன்றிஜி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரெவெரி.

   Delete
 28. படிக்கும் போதே உற்சாகம் பிறக்கிறது...

  அருண் பரத்வாஜ் அவர்களின் தகவலுக்கு நன்றி...
  tm10

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், தமிழ் மணம் பத்தாம் வாக்கிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 29. பாராட்டுக்குரிய திரு ஆதிராஜ் சிங்,பற்றிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி.

   ஆதிராஜ் சிங் - அருண் பரத்வாஜ் குழப்பமாகி விட்டதோ!

   Delete
 30. கார்கில் முதல் கன்னியாகுமரி வரை ஓடும் திடமான உடலுக்கும், மன உறுதிக்கும்- அதுவும், புற்று பாதித்து மீண்டு வந்தவர் என்பதால் ஆச்சர்யத்துடன் பாராட்டுகள். தொடங்கிய காரியம் திறனே முடிக்க என் பிரார்த்தனைகள்.

  பெர்சனலாக, எனக்கு நடைப்பயணம், ஓட்டம், சைக்கிள் பயணங்கள் போன்றவற்றில் அதிக ஆர்வமும், நம்பிக்கையும் இல்லை. செய்பவர்களின் மன-உடல் உறுதிக்கு சான்று என்பதை தவிர, இதுபோன்ற திண்ணமான உடலும், ஆரோக்கியமும் பெற வேண்டும் என்ற ஆர்வத்தை வேண்டுமானால் மக்களிடம் - குறிப்பாக சிறுவர்களிடம் விதைக்கலாம். ஆனால், ஒற்றுமை வளர்கிறது, விழிப்புணர்வு வருகிறது என்பதெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், அதற்காக முயற்சியெடுப்பவர்களை ஏளனம் செய்ய மாட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....