எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, October 21, 2012

மாட்டிட்டு முழிக்கிறேன்![பட உதவி: கூகிள்]

சில சமயத்திலே வலிய போய் பிரச்சனையில் மாட்டிக் கொள்வது நம் எல்லோருக்குமே கை வந்த கலை!  [யாருப்பா அது, கல்யாணம் பண்ணிக்கறதையும் அந்த லிஸ்ட்ல சேர்த்துக்கலாமா?ன்னு கேட்கறது.  வீணா வம்புல மாட்டி விடாதீங்கப்பா!] இது வேற விஷயம். இப்படித் தான் பாருங்க, சிலர் வம்புல போய் மாட்டிக்கிட்டு வெளியே வர முடியாம தவிச்சுட்டு இருக்காங்க! சிரிக்காம வெளியே கொண்டு வர வழியைப் பாருங்கப்பா, புண்ணியமா போகும்!காட்டுக்குள்ள இப்படியா பள்ளம் தோண்டி, சிமெண்ட் தொட்டி கட்டி வைப்பீங்க? நான் இப்படி பப்பரக்கான்னு விழுந்துட்டேனே, சீக்கிரம் நல்ல ஹெவியான க்ரேனா கூப்பிடுங்க.சாப்பிட பச்சைப் பசேல்னு புல் இருக்கேஅப்படின்னு வேகமா வந்தா இந்த எலக்ட்ரிக் போல்-ல மாட்டிக்கிட்டேன். 
இப்ப வெளியே எப்படி வரதுன்னு தெரியல! 
நிறைய உணவிருந்தும் சாப்பிட முடியலையே...


எதோ ஒரு வேகத்திலே மேலே ஏறிவந்து மாட்டிக்கிட்டேன்.ப்ளீஸ் என்ன யாராவது இறக்கி விடுங்களேன்.சேறு-சகதி எனக்கு ரொம்பவே பிடிக்கும். 
ஆனா வெளியே வர முடியாம பண்ணிடுச்சே....


ஹலோ நீ எந்த ஊர் மாடு? தலைக்கு கவசமெல்லாம் போட்டிருக்கே?இந்த மரத்தின் பொந்தில் ஏதோ ஸ்பெஷல் உணவு கிடைக்கும்னு நம்பி வந்தேன், மாட்டிக்கிட்டேன்!ஏன், இந்த கொலவெறி! 
உனக்குப் பிடிக்காத பிரட் ஓரங்களை என் மேல் மாட்டி விட்டுட்டியே!நீங்க உட்கார்ந்துக்கணும்னா என்னைத் தான் காப்பாத்தணும்!

என்ன நண்பர்களே படங்களை ரசித்தீர்களா?  இந்தப் படங்கள் அனைத்தும் மின்னஞ்சல் மூலம் வந்தவை!  எடுத்தவர்களுக்கு எனது நன்றிகள். 

என்னது, இந்த படங்கள் வரிசையில் கடைசியா வேற ஒரு படமும் இருந்ததே அது எங்கன்னு கேட்கறீங்களா?நான் வரலைங்க இந்த விளையாட்டுக்கு!

சும்மா கற்பனை குதிரையை தட்டி விடாதீங்க! இந்த வரிசையில் கடைசி படமா இருந்தது நம்ம நாட்டின் ஒரு தலைவர் படம் – அரசியல் வேண்டாம்னு எடுத்துட்டேன்!

அடுத்த ஞாயிறன்று வேறு சில படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

57 comments:

 1. இது போன்ற கற்பனைகலை வெறும் விளையாட்டாக அல்லது கேலியாக் மட்டுமே பார்த்து விட்டு "ஜஸ்ட் லைக் தட்"ஆக போய் விடக்கூடாது என்பதே இதன் மூலம் உணரமுடிகிற ஒன்றாக/

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விமலன்.

   Delete
 2. ரசிக்கவைத்த படங்களின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. படத்திற்கு ஏற்ற
  ஏற்ற இறக்கமாக
  கோர்த்த வாசகங்கள்
  மனதை அள்ளி சென்றது
  அருமை அன்பரே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஏ.ஆர்.ஆர்.

   Delete
 4. யாரது அந்தத் தலைவர் ?

  அப்படின்னு தலையை யாருமே பிச்சுக்கவேண்டியதே இல்லை.

  இன்னிக்கு எல்லாருமே ஏதாச்சும் ஒண்ணுலே
  மாட்டிணுடு தானே இருக்காக....

  இல்லாட்டி, போதுமடா சாமி அப்படின்னு சன்னியாசம் வாங்கிட்டிருப்பாகளே !

  ஆஹா ! சன்னியாசம் அப்படின்னு சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

  மதுரை ...யிலே அவுங்களைச் சொல்றீகளோ !! திருஞான சம்பந்தர் பரம்பரை ?
  ஆனா அவுக அரசியல் கிடையாதே !!

  தல வெடிச்சுடும்டா தலைவா ! சீக்கிரம் சொல்லிப்போடு.
  இல்லாட்டி, ஊட்டு முன்னாடி வந்து உண்ணவிருதம் இருப்போம் அப்படின்னு
  எங்க வூட்டு கிழவி சொல்லுது.

  அவங்களுக்கும் தில்லி பாக்கணும்லே !!


  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. தில்லி பார்க்கணும்னா வாங்களேன்... இங்கேயே அந்த “தலைவரையும்” பார்க்கலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   Delete
 5. படங்கள் நல்லா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அன்புடன் அருணா.

   Delete
 7. போட்ட படங்களை விட போடாத அந்தப் படம்தான் என்னை மாட்டி விட்டுருச்சு.. டென்ஷன்கிட்ட.. என் காதுல மட்டும் சொல்லுங்க யார் அது ???

  ReplyDelete
  Replies
  1. மேலே சுப்பு தாத்தாவுக்கு பதில் சொல்லி இருக்கேன் பாருங்க! தில்லி வந்த அந்த தலைவரைப் பார்க்கலாம்னு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 8. ஆனை மாட்டிட்டு முழிச்சாப் பாவமா இருக்கு. அதை முதல்லே விடுவிக்கணும். அப்புறம் அது எப்படி பிரெட் ஓரங்களை மாலை மாதிரி அந்தப் புறா மேலே போட முடிஞ்சது. அது போஸும் கொடுத்திருக்கே. வளர்ப்புப் புறானு நினைக்கறேன்.

  தலைவர் யாருனு மெயில் மட்டும் கொடுத்திடுங்க. யாருக்கும் சொல்லலை. :))))

  ReplyDelete
  Replies
  1. ஆனை ரொம்பவே பாவம்.... :(

   புறா வளர்ப்பு புறாவா இருக்கலாம்....

   தலைவர் - தில்லியில் இருக்கும் இந்தியத் தலைவர்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மோகன்.

   Delete
 10. ரொம்ப நல்லா( பாவமா) இருக்கு.
  அந்த ப்ரட் மாட்டின புறா என்னா ஒரு லுக் விடுது..:)

  ReplyDelete
  Replies
  1. பாவம் தான்.... :(

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

   Delete
 11. சிலது ரொம்ப பாவமா இருக்கு...

  tm3

  ReplyDelete
  Replies
  1. ரொம்பவே பாவம் தான். அதுவும் அந்த யானை.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும், தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 12. மிருகங்கள் மாட்டிக் கொண்டு முழித்தால் பாவமாக இருக்கிறது.

  சில புகைப்படங்கள் போட்டோ பிளாஷ் மூலம் ஒட்டி வெட்டி பண்ணியிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.


  தலைவர்கள் மாட்டிக் கொள்ளுவதும், மாட்டி விட்டவர்களையே மாட்டி விடப் பார்ப்பதும் நம்மூரில் தினசரி செய்தி ஆகிவ்ட்டது!

  ReplyDelete
  Replies
  1. ஃபோட்டோ ஷாப் வேலையாக இருக்கலாம் என்று சந்தேகம் எனக்கும் உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 13. பார்க்கும்போது ஐயோன்னு ஒரு பதட்டம் வருகிறது. நல்லபடியாக விடுவித்திருப்பார்கள் என நம்புவோம்.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் அனைத்தும் விடுவிக்கப்பட்டு இருக்கும்....

   நம்பிக்கை தானே எல்லாம்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 14. நல்ல பகிர்வு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 15. எல்லா படங்களிலும் அவரும், அவைகளும் எப்படி சிக்கலில் மாட்டிக் கொண்டனர் என்று ஒருவாறு புரிந்து கொள்ள முடிகிறது. அந்த பெரிய பசுமாடு மட்டும் எப்படி அந்த சின்ன இடைவெளியில் எப்படி நுழைந்தது என்று எவ்வளவு யோசித்தும் தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 16. சிரிப்பாவும் இருக்கு, அதேசமயம் வெளியில வந்துடணுமேன்னு கவலையாவும் இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. வெளியில் வந்திருக்கும் நிச்சயமா....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்வர்ணரேக்கா..

   Delete
 17. எல்லாமே ரசிக்கக் கூடியதாக இருந்தன. யானையை நினைத்துக் கவலை ஏற்பட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 18. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி துரைடேனியல்.

   Delete
 19. ரசிப்பிற்குரிய படங்கள் அத்தனையும்.ஆனால் யானையை நினைத்தாலதான் கவலையாக இருக்கின்றது. வெளியே வந்திருக்கும் அல்லவா?

  ReplyDelete
  Replies
  1. யானை வெளியேற்றப்பட்டிருக்கும் என்றே நம்புகிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஜி!

   Delete
 20. சுவாரஸ்யமான பதிவு
  (நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல்
  மணமகன் தாலி கட்டும் புகைப்படத்தையும்
  இணைத்திருக்கலாமோ ?)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 21. Replies
  1. தமிழ் மணம் பதினொன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 22. மன்மோகன் ஜி சோனியா ஜி கிட்ட மாட்டிட்டு முழிக்கிற மாதிரியான படமா சார்

  ReplyDelete
  Replies
  1. நூறு மதிப்பெண்கள். question ஏற்கனவே முகநூலில் வெளியாகிவிட்டது.

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு & சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்]!

   Delete
 23. சுவாரசியமான பகிர்வு படங்களுக்கு கொடுத்திருக்கும் கமெண்டுகளும் ரசிக்கவைத்தன

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 24. சிரிக்க வைத்த படங்கள் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் குணசீலன்.

   Delete
 25. அவர் மருத்துவர் . சிங் . :) வெங்கட்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ராஜு.

   Delete
 26. நல்லாத்தான் இருக்கு, ஆனா ரொம்பப் பாவமா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 27. பார்த்தேன், ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 28. என்னவோ!!! ஏதோன்னு ஓடியாந்தேன்.(பண்டிகை நாளில் வித்தியாசமான சமையலில் ஏதும் ஆகிடிச்சோன்னு ) ஏமாத்திட்டீங்க சகோ. :))

  ஆனாலும் படங்களை ரசித்தேன். :))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....