மே மாதத்தில் திருச்சியிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் அருகிலிருக்கும் எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்ற போது அருகிலிருக்கும் ஒரு சிறப்பு வாய்ந்த, மிகவும் புகழ்பெற்ற திருவாமாத்தூர் தலத்திற்கும் சென்று வந்தோம்.. அழகிய இத்திருக்கோவிலுக்கு சென்றதன் மூலம் நிறைய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.
இத்தலத்தில் அருள்பாலிக்கும் இறைவன் அழகியநாதர், அபிராமேஸ்வரர் என்ற பெயர்களாலும், இறைவி அழகியநாயகி, முத்தாம்பிகை என்ற திருநாமங்களாலும் அழைக்கப்படுகிறார்கள். ஸ்ரீஇராம பிரான் இராவண சம்ஹாரத்திற்கு இலங்கை செல்லும்போது இத்தலத்திலுள்ள சுயம்பு மூர்த்தியான இறைவனை அபிமானத்தோடு வழிபட்டதால் இறைவனுக்கு ”அபிராமேஸ்வரர்” என்ற பெயர் விளங்கப்பெற்றதாம்.
தலவிருக்ஷம் வன்னி. இத்தலத்தினைப் போற்றி திருஞானசம்பந்தர் இரு பதிகங்களும், திருநாவுக்கரசர் இரு பதிகங்களும், சுந்தரமூர்த்தி நாயனார் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். தவிர இராமலிங்க அடிகள், இரட்டைப் புலவர்கள் கலம்பகம் என்ற பாடலிலும், அருணகிரிநாதர் திருப்புகழிலும் இத்தலத்தினைப் போற்றி பாடல்கள் பாடியுள்ளார்கள்.
கொம்பு பெற்ற ஆவினங்கள்:
ஆதிகாலத்தில் இவ்வுலகில் வாழ்ந்த ஆவினங்களுக்குக் கொம்புகள் இல்லாத காரணத்தினால் சகமிருகங்களின் மூலம் அடிக்கடி தாக்கப்பட்டு உயிரிழந்தன. அதனால் ஆவினங்கள் யாவும் கூடி தங்கள் இனத்தினைச் சேர்ந்த நந்திதேவரையும் காமதேனுவையும் நோக்கிக் கடுந்தவம் புரிந்தன. தவத்தினை மெச்சி அவர்கள் முன் தோன்றிய நந்திதேவரும், காமதேனுவும், ஆவினங்களின் கவலை தோய்ந்த முகத்தினைப் பார்த்து “உங்கள் கவலைக்குக் காரணம் என்னவோ?” என வினவினர்.
சக மிருகங்களிடம் தாங்கள் படும் இன்னல்களை விளக்கிக் கூறி தங்களது பாதுகாப்பிற்கென கொம்புகள் வேண்டும் எனவும், தங்கள் சார்பாக நந்திதேவரும் காமதேனுவும் இறைவனிடம் வேண்டி கொம்புகள் பெற ஆவன செய்ய வேண்டும்படி கேட்டுக்கொண்டன. நந்திதேவரும் காமதேனுவும் இத்தலத்தின் இறைவனை வேண்ட, ஆவினங்கள் தங்களது தற்காப்பிற்க்காக கொம்புகள் பெற்றன. ஆவினங்களுக்குக் கொம்புகள் தந்த இத்தலம் ஆமாத்தூர் எனவும் திருவாமாத்தூர் என்றும் அழைக்கப்பட்டது.
ஆவினங்களுக்குக் கொம்புகள் தந்த இத்தல இறைவனை வழிபடும் அன்பர்களுக்கு, பிறவா நிலை எனும் முக்தியை நந்திதேவரும், இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான பொருட்செல்வத்தினை காமதேனுவும், அருட்செல்வத்தினை தல இறைவனான அபிராமேஸ்வரரும் வழங்குவார்கள் என்பது நம்பிக்கை.
அழகியநாயகிக்குத் தனிக்கோவில்:
சிறந்த சிவபக்தரான பிருங்கி ரிஷி சக்தியைத் தவிர்த்து சிவனை மட்டுமே வழிபடவேண்டும் என்ற குறிக்கோளை உடையவர். இதனை அறிந்த சக்தி பிருங்கி ரிஷி வழிபட வரும் நேரத்தில் இறைவனின் இடப்பக்கம் அமர்ந்து கொள்கிறார். உடனே பிருங்கி ரிஷி இறைவனை வேண்டி வண்டு ரூபமெடுத்து இறைவனை மட்டுமே வலம்வந்து வழிபாடு செய்கிறார். இதனால் கோபம் கொண்ட சக்தி, முனிவரின் உடலிலிருந்து சக்தியை இழக்கும்படிச் செய்ய, முனிவர் பலமிழந்து கீழே விழுந்து விடுகிறார்.
கீழே விழுந்துவிட்டாலும், இறைவனை மட்டுமே வழிபாடு செய்ய, இறைவனும், இவருக்கு ஒரு ஊன்றுகோலைத் தர, இறைவனை மட்டும் வழிபடுவது தொடர்கிறது. கோபம் கொண்ட சக்தி பிருங்கி முனிவரை வன்னிமரமாக மாறும்படி சாபமளித்துடன் இறைவனிடமும் கோபம் கொண்டு அவரை விட்டு விலகி மேற்கு நோக்கி தனியே கோவில் கொண்டுள்ளார்.
மேற்கு நோக்கிக் குடிகொண்டிருக்கும் அன்னையின் கோவிலும் மிகவும் புகழ்பெற்ற கோவில். இந்தக் கோவிலில் திருவட்டப்பாறை என ஒன்றிருக்கிறது. திருவட்டப்பாறை பற்றிய கதையைப் பார்க்கலாம்.
திருவட்டப்பாறை வரலாறு:
முன்னொரு காலத்தில், ஒரு குடும்பத்தில் அண்ணன் – தம்பி இருவர், தாய்-தந்தையர் முக்தியடைந்த பிறகு தனித்திருந்தனர். தாய்தந்தையர்களின் பெரும் சொத்து அனைத்தையும் அண்ணன் விற்று தங்கமாக்கி, ஒரு கைத்தடிக்குள் மறைத்து வைத்திருந்தான். அப்பாவியான தம்பி, ஊர் மக்களிடம் முறையிடவே, பஞ்சாயத்து கூடியது. ஊர்ப் பெரியவர்கள் நியாயம் கேட்க, அண்ணனோ “என்னிடம் எந்த சொத்தும் இல்லை” என சாதித்தான். இறுதியில் திருவாமாத்தூர் அழகியநாயகி கோவிலிலிருக்கும் சத்தியப்பாறையான வட்டப்பாறையின் முன் அண்ணன் தன்னிடம் சொத்து ஏதுமில்லையென சத்தியம் செய்யவேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்ட்து.
ஊரே கூடி நிற்க, நயவஞ்சக எண்ணம் கொண்ட அண்ணன், தனது தம்பியிடம் “தம்பி, இந்தத் தடியை நீ வைத்திரு, நான் சத்தியம் செய்துவிட்டு வந்து தடியை வாங்கிக்கொள்கிறேன்!” எனச் சொல்லி தங்கம் மறைத்து வைத்த தடியை தம்பியிடம் கொடுத்து விட்டு “என்னிடம் எந்த சொத்தும் இல்லை” என வட்டப்பாறையின் முன் சத்தியம் செய்தான். சத்தியம் செய்தபிறகு, அண்ணனுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது போகவே, ஊராரும் அண்ணன் உண்மை தான் சொல்கிறான் என விலகவே தம்பி மனமுடைந்து “இறைவா, நீயும் என்னைக் கைவிட்டுவிட்டாயே என்று அழுது புலம்பினான்.
அண்ணன் அங்கிருந்து விலகி தனது தடியுடன் எட்டு கிலோமீட்டர் கடந்து தும்பூர் என்ற இடத்திற்கு வரும்போது “வட்டப்பாறை என்னை என்ன கொத்திவிடுமா?” என ஏளனமாக கேட்டு, கைக்கொட்டி சிரித்தான். வெகுண்ட இறைவன் கருநாகப்பாம்பாக உருவம் கொண்டு, அண்ணனைத் தீண்ட, அவன் அங்கேயே இறந்து விழுந்தான். அண்ணனைத் தீண்டிய கருநாகத்தின் தலைப்பகுதி இன்றளவும் தும்பூரில் “நாகத்தம்மன்” என்ற பெயரில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். அந்த நாகத்தின் வால்பகுதி திருவாமாத்தூரில் அருள்பாலிக்கும் முத்தாம்பிகையின் மார்பினை அலங்கரிக்கிறது.
இப்போது திருவட்டப்பாறை இருந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. திருவட்டப்பாறை கோவிலின் உள்ளே எடுத்து வைத்து விட்டார்கள். புகழ்பெற்ற புராண வரலாறு பெற்ற இத்திருத்தலத்தின் லிங்கேஸ்வரரை தரிசித்தால் தீராத சிக்கல்கள், ஓயாத பிரச்சனைகள் ஆகியவைகளுக்கு எளிய தீர்வு கிடைக்கும் என நம்புகிறார்கள்.
மிகவும் சிறப்பான கோவில் சென்று நல்ல தரிசனம் கிடைத்தது. பல விஷயங்களும் தெரிந்து கொள்ள முடிந்தது. நாங்கள் தரிசித்த கோவில் பற்றியும், தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. மீண்டும் வேறொரு கோவில் பற்றிய பதிவில் சந்திக்கும்வரை….
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
மிகவும் சிறப்பான கோவில் பற்றிய அருமையான தகவல்கள்..
பதிலளிநீக்குபகிர்வுகளுக்குப் பாராட்டுக்களும் நன்றியும் , வாழ்த்துகளும் ...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குஅனைத்து தகவல்களும் படங்களும் அருமை, வெங்கட்ஜி. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குபிரிஞ்சி முனிவரா... ஒ... பிருங்கியா? பசி நேரத்துல படிச்சதால வந்த வினை. நல்லவேளை... ஆவினத்துக்கு கொம்பு தந்த இறைவனும் இறைவியும் வேண்டுற நமக்கு கொம்பு தராம பொருட்செல்வம் + அருட்செல்வத்தை தர்றாங்களே... சந்தோஷம். ஆலயத்தை நினைவில் வைத்துக் கொள்கிறேன். இயலும் போது தரிசிக்கிறேன். திருவட்டப் பாறை கதை அருமை.
பதிலளிநீக்கு//வேண்டுற நமக்கு கொம்பு தராம //
நீக்குஅதான் ஏற்கனவே “நான்” என்ற கொம்பு, நம்மில் பலருக்கு இருக்கே... :(
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.
ஆவினங்களுக்குக் கொம்புகள் தந்த இத்தல இறைவனை வழிபடும் அன்பர்களுக்கு, பிறவா நிலை எனும் முக்தியை நந்திதேவரும், இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான பொருட்செல்வத்தினை காமதேனுவும், அருட்செல்வத்தினை தல இறைவனான அபிராமேஸ்வரரும் வழங்குவார்கள் என்பது நம்பிக்கை.
பதிலளிநீக்குஅறிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிங்க.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.
நீக்குதிருவாமாத்தூரில் இருக்கும் கோயிலைப்பற்றிய மிக அரிய விஷயங்களை அறிய முடிந்தது. ஆச்சர்யமாக இருந்தது. திருச்சியில் 3 வருடங்கள் இருந்தும் உச்சிப்பிள்ளையார் கோயிலும் சமயபுரத்தம்மன் கோயிலும் வெக்காளியம்மன் கோயிலையும் மாறி மாறி கூட்டிச்சென்ற அம்மா ஏன் இந்த கோயிலுக்கு கூட்டிச்செல்லவில்லை என்று இருக்கிறது. முக்தி கிடைக்க இந்த கோயிலுக்கு கண்டிப்பாக செல்லவேண்டும் என்று தோணுகிறது. மிக அருமையாக ஸ்தல வரலாறு வட்டப்பாறையம்மன் அண்ணன் தம்பி - அண்ணன் எல்லா சொத்துகளையும் தடியில் அடக்கி தம்பி கிட்ட கொடுத்துட்டு சத்தியம் செய்துவிட்டு பின் தம்பி தெய்வத்திடம் முறையிட கருநாகமாக மாறி தீண்டிய தலைப்பகுதி இன்னமும் வழிபாட்டுத்தலமாக இருப்பதும் வால் பகுதி அம்மனை அலங்கரிப்பதையும்...
பதிலளிநீக்குவண்டு ரூபத்தில் பிருங்கி ரிஷி சிவனை மட்டும் வழிபட சக்தி கோபம் கொண்டு அவர் சக்தியெல்லாம் எடுத்துக்கொண்டு சிவனிடமும் கோபித்துக்கொண்டு தனிக்கோயில் அமைத்துக்கொள்ள....
மற்ற மிருகங்களின் தொல்லைகளால் அவதிப்பட்ட ஆவினங்கள் காமதேனு, நந்திதேவரிடம் தவம் இருந்து முறையிட ஆவினங்களுக்கும் கொம்புமுளைத்த கதையும் எல்லாவற்றையும் மிக அழகாய் தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள் வெங்கட்...
இறைவன் உங்களுக்கும் உங்கள் மனைவி, குழந்தைக்கும் என்றும் எல்லா நலன்களும் தரட்டும்...
அருமையான பகிர்வு.. அன்புநன்றிகள்பா...
இக்கோவில் விழுப்புரம் அருகிலிருக்கிறது. அடுத்த முறை தமிழகம் வரும்போது செல்ல முயலுங்கள் சகோ. அமைதியாய், தரிசிக்க முடியும் ஒரு ஸ்தலமிது. மற்ற ஸ்தலங்கள் போல இங்கே கூட்டம் இருப்பதில்லை....
நீக்குதங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி.....
வெளித்தெரியாமலிருக்கும் இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில்களின் அறிமுகம் நல்ல விஷயம். பிருங்கி மகரிஷி பற்றி கேதார கெளரி நோன்பில் படித்தது... திருவட்டப்பாறை மதியால் எதையும் வெல்லலாம் என்ற அகம்பாவத்தை உடைத்து இறை சக்தியை புலப்படுத்துகிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் சிறப்பான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.
நீக்குபாடல் பெற்ற ஸ்தலமான திருவாமாத்தூர் பற்றியும் ஸ்தலபுரானமும் நேர்த்தியாக கூறியுள்ளீர்கள்.அறியாத திருக்கோவிலைப் பற்றி விளக்கங்களுடன் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குIndha sthalathu iraivanaip patri thirugnaana sambandhar "kundeavaar silai naanalaarvar enath thodangum paadalaip paadiyullaar. En thagappanaar miga nandraaga paaduvaar.
பதிலளிநீக்குதங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவித்யா மோஹன்.
நீக்குஎல்லாமே எனக்குப் புதுத்தகவல்கள்!!!!
பதிலளிநீக்குநான் கண்டது .0000001 சதம்கூட இருக்குமான்னே சந்தேகம்:(
பகிர்வுக்கு நன்றிகள்.
//நான் கண்டது .0000001 சதம்கூட இருக்குமான்னே சந்தேகம்:(//
நீக்குஉங்களுக்கே இப்படியென்றால், நான் எல்லாம் எம்மாத்திரம். அந்த கடைசியிலிருக்கும் ஒன்றுக்கு முன் பத்து சூன்யம் இடவேண்டும்!
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
அருமையான பல புதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி வெங்கட்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால் ஹனுமான்.
நீக்குஆவினங்களைப் பாருங்கள். நேரடியாக இறைவனிடம் வேண்டாமல் தங்கள் பிரதிநிதிகளிடம் வேண்டி இறைவனுக்கு தூது அனுப்பியிருக்கிறார்கள். த்ரோ பராபர் சானல்! தெய்வமாய் இருந்தாலும் சக்திக்குத்தான் என்ன கோபம் வருகிறது!
பதிலளிநீக்குThru Proper Channel... :)))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஆமத்தூர் கோவில் பற்றிய சிறப்பான பதிவு.அருமையான தகவல்கள்.பகிர்வுக்கு ந்ன்றி வெங்கட்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி.
நீக்குஎத்தனை தகவல்கள் பா. நன்றி வெங்கட்.நேரத்தை வீணாக்காமல் தெய்வத்தலங்களைத் தரிசனம் செய்வது துளசியின் வழக்கம். நீங்களும் தரிசனம் செய்த கையோடு பதியவும் செய்கிறீர்கள். இதுதாமெங்களைப் போன்றவர்களுக்கு உபயோகம். மிகவும் நன்றி.
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
இறைவிக்குக் கோபம் வருவதில் அதிசயமே இல்லை. சதிபதிகளுக்குள் பேதம் கூடாது. நமக்கே அப்படி என்றால் அவர்கள் அர்த்தநாரீஸ்வாரர்கள் இல்லையா,. பிரிக்க முற்படும் எவர் மீதும் கோபம் வரத்தான் செய்யும்.!!!!!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்குமிகவும் பிரசித்தமான திருவாமாத்தூர் கோயில் தர்சிக்கக் கிடைத்ததில் பாக்கியம் பெறுகின்றோம்.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு.
தலவரலாறுகள், சிறப்புக்கள் அனைத்தும் அறிந்துகொண்டோம். நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குபயனுள்ள பதிவு! நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமன் ஐயா.
நீக்குஅன்பு நண்பரே
பதிலளிநீக்குசிறிய இடைவெளிக்குபின் மீண்டும் தங்களின் வலைகளை படித்து என்னுடைய கருத்துக்களை அனுப்புகிறேன். "திருவாமாத்தூர் – கொம்பு பெற்ற ஆவினங்கள்" மிகவும் அருமையான பதிவு. அடியேன் அந்த ஊருக்கு சென்று உள்ளேன். மிகவும் அருமையான ஸ்தலம். தொடரட்டும் உங்கள் பணி.
வாழ்த்துக்கள்.
விஜய்
ஓ நீங்களும் இவ்வூருக்குச் சென்று இருக்கிறீர்களா.... மிகவும் நல்ல கோவில்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!
திருவாமாத்தூர் தல புராணம் தெரிந்து கொண்டேன். திருவட்டப்பாறை கதையை வேறு எங்கோ வேறு மாதிரி படித்ததாக நினைவு. பகிர்வுக்கு நன்றி! உங்கள் குலதெயவம் கோயிலைப் பற்றியும் எழுதி இருக்கலாம். (எனது BLOGGER Dash board வழியாக உங்கள் தளத்திற்குள் வர இயலவில்லை. எனவே Google வழியாக வந்தேன்)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!
பதிலளிநீக்குஇப்பதிவு அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி வெளியிட்டது. இப்போது மீண்டும் என்னைத் தொடர்பவர்களின் டாஷ்போர்டில் தெரிகிறது - சில சமயங்களில் பிளாக்கர் இப்படித்தான் விளையாட்டு காட்டுகிறது.
தேடிப் பிடித்து பதிவினைப் படித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி.
படிக்காத பதிவு, தெரியாத தகவல்கள், அறியாத கோயில். அறிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குஇந்தக் கோவில் பற்றி பதிவு மூலம் நீங்களும் அறிந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
அழகான கோவில். கணவர் போய் இருக்கிறார் இந்த கோவிலுக்கு நான் போனது இல்லை.
பதிலளிநீக்குஇன்று தரிசனம் செய்து கொண்டேன்.
பதிவு வழி கோவில் தரிசனம் உங்களுக்கும்.... நன்றி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.