எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, October 7, 2012

பாசம்.....அவ்வப்போது நண்பர்களிடமிருந்து வந்த புகைப்படங்களை சேமித்து வைப்பது எனது வழக்கம்.  அப்படி வந்த சில புகைப்படங்களில் சிலவற்றின் கீழே www.myindiapictures.com என்று எழுதியிருக்கவே அங்கே சென்று பார்த்தேன்.  அதில் சில நல்ல படங்கள் இருக்கின்றன.  அவற்றிலிருந்து சில படங்களை பாசம் என்ற தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளேன் இந்த வார படங்களாய்.....  இதோ படங்கள் உங்கள் பார்வைக்காய் காத்திருக்கின்றன.


[தான் நனைந்தாலும் தன் மகன் நனைந்து விடக்கூடாது என்னும் தாயுள்ளம்....]


[வயிற்றிலும், தோளிலும், கையிலும் சுமந்த தாயை, 
அவருக்கு முடியாத போது சுமக்கும் மகன்....]


[நல்ல படிக்கணும் கண்ணு....  வீடில்லை எனிலும் பரவாயில்லை... 
நிச்சயம் படிப்பு இருக்கணும் கண்ணு...][நாய்க்குட்டி நனையாம கொண்டு போயிடணும்....][என் உயிர் போனாலும் பரவாயில்லை .....
இந்த சின்னஞ்சிறு குட்டிகளின் உயிர் காப்பாத்தினா போதும்....]


படங்களை எடுத்த முகம் தெரியாத நண்பர்களுக்கும், அவற்றை சேகரித்து வைத்திருக்கும் இணைய தளத்திற்கும் மனமார்ந்த நன்றிகள். என்ன நண்பர்களே படங்களை நீங்களும் ரசித்தீர்களா?  மீண்டும் அடுத்த ஞாயிறன்று வேறு சில படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


48 comments:

 1. பாசமழையில் குளிர்வித்த படங்களின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. நல்ல உயிருள்ள படங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 3. அந்தக் குழாய்வீட்டை சென்னையின் பல பகுதிகளில் இன்னும் பார்க்கிறோம் வெங்கட்ஜீ! :-)

  ReplyDelete
  Replies
  1. குழாய் வீடு - வீராணம் திட்டத்திற்காக வைத்திருக்கும் குழாய்கள் - நெய்வேலியிலிருந்து சென்னை வரும் வழியில் நிறைய இருந்தது. இப்போது இருக்கிறதா தெரியவில்லை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை ஜி!

   Delete
 4. பாசம் அன்பை மையமாகக் கொண்ட படங்கள் அருமை.நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 5. எல்லாம் நல்லா இருக்கு..
  வீடில்லைன்னாலும் படிக்கனும்..பார்க்கவே கஷ்டமா இருக்கு.. ஹ்ம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

   Delete
 6. Replies
  1. வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மோகன்குமார்.

   Delete
 7. ஆமா படங்களை ரொம்பவே ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 8. பொருத்தமான தலைப்பு. நெஞ்சை நெகிழ வைக்கும் படங்கள். அந்த மூன்றாவது படம் (சாலையோரக் குழாயில் குடும்பம்) உண்மையிலேயே யோசிக்க வைத்தது. நல்ல தொகுப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி ஜி!

   Delete
 10. ரசித்தேன். அந்தக் கடைசி இரண்டும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர். உங்களுக்கு கடைசி இரண்டும் தான் பிடிக்கும் என போடும்போதே நினைத்தேன்... :)))

   Delete

 11. இதயம் வேண்டுமய்யா..

  இதயம் இருந்தாலும் அதில்
  ஈரம் வேண்டுமய்யா..

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 13. அருமையான படங்கள்! பகிர்விற்கு நன்றீ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி. இந்தப் படங்களுக்கு நீங்கள் உங்கள் தளத்தில் எழுதிய கவிதையும் ரசித்தேன்.

   Delete
 14. கடைசி இரண்டு படங்களும் அருமை இல்லை? கண்ணிலேயே நிற்கும்! பொதுவாக எல்லா படங்களுமே சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 15. நெஞ்சில் ஈரம் இருந்தால்- தூக்கும்\
  சுமையும் சுகமாய்த் தெரியும்.
  நெஞ்சிலே நஞ்சு இருந்தால்,
  பஞ்சும் பாரமாய்த் தெரியும்.

  அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ் ?
  அழகாகச் சொல்லவில்லையா நம் முன்னோர் ?

  மீனாட்சி பாட்டி.
  www.menakasury.tumblr.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் நற்கருத்திற்கும் மிக்க நன்றி மீனாட்சி பாட்டி.

   Delete
 16. மிகச்சிறந்த படங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  [இங்கு நேற்று இரவு முதல் இன்று பகல் இரண்டு மணி வரை மின்தடை நீடித்து விட்டதாலும், அடிக்கடி இதுபோல ஆவதாலும் உடனுக்குடன் தங்கள் பதிவுப்பக்கம் வர முடியாமல் போகிறது, வெங்கட்ஜி. Just for your infn,]

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   திருச்சியில் பல மணி நேரம் மின் தடை.... :( ரொம்பவே கஷ்டம் தான்.

   Delete
 17. Replies
  1. நன்றி அன்புடன் அருணா ஜி!

   Delete
 18. படங்கள் அத்தனையும் அருமை வெங்கட்.
  ஆற்று வெள்ளத்தில் கழுத்தளவு தண்ணீரில் கூடை சுமக்கும் பெண்ணும்,குழந்தையைச் சுமக்கும் அம்மாவும் அற்புதம்.வாழ்த்துகள் மா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 19. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் !!!!!..மிகச் சிறப்பான
  பகிர்வு .மிக்க நன்றி பகிர்வுக்கு மேலும் தொடர வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 20. உயிருள்ள படங்கள்தான்!
  த.ம.9

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 21. நேசம சொல்லும் படங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 22. Replies
  1. வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 23. படங்கள் பாசப் பிணைப்புடன் நெகிழவும் வைக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 24. அட.. போட வைக்கும் ரகங்களாய்ப்படங்கள்.

  ஒவ்வொண்ணும் அருமைன்னாலும் குழாயில் வசிக்கும் குடும்பப்படம் சிந்திக்கவும் வைக்குது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....