எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, October 5, 2012

ஃப்ரூட் சாலட் – 15: மனைவி – சமையல் எரிவாயு


இந்த வார செய்தி:  இந்த வாரம் தனது திருவாயைத் திறந்து மாட்டிக்கொண்டிருக்கிறார் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜைஸ்வால்.  ஒரு கவியரங்கத்தினை ஆரம்பித்து வைத்த அமைச்சர் நிலக்கரி ஊழல் பற்றிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் “Issues are like old wives that lose charm as they grow old” என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். மகளிர் சங்கங்களும் அமைப்புகளும் எதிர்ப்புக் குரல் எழுப்பியவுடன் சமாளிக்க முடியாது, “மன்னிக்க வேண்டுகிறேன்என்று குரல் கொடுத்த்தோடு, தான் கூறியதை ஊடகங்களும், பத்திரிக்கைகளும் திரித்து விட்டன என்று சொல்கிறார்.இந்தியா உலக டி-20 கோப்பைக்கான போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய மகிழ்ச்சியில் நான் கூறிய வார்த்தைகளை வேறு விதமாக மாற்றிவிட்டார்கள் என்று சமாளிக்கிறார்.  தேவையில்லாது பேசிவிட்டு மாட்டிக்கொள்வது இவருக்கு புதிதல்ல.  முன்பும் சில விஷயங்களில் இப்படி முத்து உதிர்த்து செமையாக வாங்கிக் கொண்டிருக்கிறார்.  இது இவருக்கு பழகி விட்ட்து போலும்.  மலையாளத்தில் “வடி கொடுத்து அடிவாங்குவதுஎன்று ஒரு சொலவடை உண்டு, தானே ஒரு கழியைக் கொடுத்து அடி என்று சொல்வது எனப் பொருள் அதற்கு!  சரியான உதாரணம் இது தான் என நினைக்கிறேன். 

இந்த விஷயம் இத்தோடு முடிந்து விடப்போவதில்லை.  சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விட்டன.  உருவ எரிப்புப் போராட்டங்களும் நட்த்தப்பட்டு இருக்கிறது.  வாதங்களும் – எதிர் வாதங்களும் நடந்து கொண்டே இருக்கிறது. சில நாட்களில் வேறு பிரச்சனை வெளி வரும் வரை இந்தப் பேச்சினை மீண்டும் மீண்டும் ஊடகங்களும் போட்டி போட்டுக்கொண்டு முன்னே வைத்திருப்பார்கள். பிறகு “காணாமல் போனவர் பற்றிய அறிவிப்புமாதிரி ஆகிவிடும்! அதுதானே இங்கு வழக்கம்.... 

இந்த வார முகப்புத்தக இற்றை:

முகப்புத்தகத்தில் பார்த்த இற்றை.  சும்மா லைக் செய்து விட்டுப் போக முடியவில்லை.  நீங்களும் படிக்க இங்கே பகிர்ந்துள்ளேன்.“இவர் பெயர் நாகராஜன், கடலூரைச் சேர்ந்த இவர் சிதம்பரதுல MSC., Software Engineering final year படிக்கும் இவர் ஒரு புதிய சமையல் எரிவாயுவை கண்டுபிடித்து இருக்கிறார். இரண்டு பக்கம் அடைக்கப் பட்ட தகர டப்பாவில் தவிடு போட்டு மூடி அத சூடு படுத்தினால், காஸ் உருவாகி அந்த டப்பால செட் பன்ன சின்ன குழாய் மூலமா வெளியேறுகிறது.  அதை தீக்குச்சியால் கொளுத்தியபோது நீல நிரத்துல எரிகிறது.  இந்த எரிவாயுவை சிலிண்டர்களில் அடைத்து அடுப்பெரிக்கப் பயன்படுத்த முடியும் எனக் கூறுகிறார் திரு நாகராஜன். 

மாற்றுத்திறனாளி ஆன திரு நாகராஜனின் கண்டுப்பிடிப்பு, “வருடத்திற்கு ஆறு சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் கிடைக்கும்என்ற அறிவிப்பு வெளிவந்திருக்கும் நிலையில் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் எனத் தோன்றுகிறது. 

இந்த வார குறுஞ்செய்தி

குழந்தை பிறந்த முதல் பன்னிரண்டு மாதங்கள் அது பேசவும் ந்டக்கவும் கற்பிக்கிறோம். அடுத்த பன்னிரண்டு மாதங்கள் அது ஓரிடத்தில் உட்காரவும் வாயை பொத்தவும் கத்துகிறோம்” - பிலிஸ் டில்லர்.

ரசித்த புகைப்படம்:  இந்த வாரத்தில் நான் ரசித்த புகைப்படம் என்று வாரா வாரம் ஒரு புகைப்படத்தினை உங்களுடன் தொடர்ந்து பகிர இருக்கிறேன்.  இந்த வாரம் – “உடற்பயிற்சி உடலுக்கு நல்லதுஎன்று சொல்லாமல் சொல்லும் படம்!ராஜா காது கழுதைக் காதுதலைநகர் தில்லியின் பேருந்து ஒன்றில் – மூத்த குடிமக்களுக்கான இருக்கையில் இளைஞர் ஒருவர் அமர்ந்திருக்க, பக்கத்தில் 70 வயது இளைஞர் நின்று கொண்டிருந்தார்.  அவரின் பக்கத்தில் இருந்த இன்னுமொருவர், இளைஞரை எழுப்ப முயல, 70 வயது இளைஞர் சொன்ன பதில்!  - இன்னும் நிக்க முடியுது, நடக்க முடியுது – இப்பவே முடியலன்னு ஒக்காந்துட்டா ஒரேடியா ஒக்காந்துடுவோம்! அதனால நான் நின்னுட்டே வரேன்!”.  That’s the Spirit!

இந்த வாரக் காணொளிஇந்தக் காணொளி எனது மின்னஞ்சலுக்கு வந்தது – நிச்சயம் ரசிக்க முடியும் என நம்புகிறேன்.
மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

60 comments:

 1. புதிய எரிவாயு பெரிய அளவில் தயார் செய்யும் பொழுது என்னவித ஆபத்துகள் வரும் ?? என்ன பக்கவிளைவுகள்

  ReplyDelete
  Replies
  1. இது முகப்புத்தகத்தில் வந்த செய்தி. வந்திருந்ததை தந்திருக்கிறேன். பக்க விளைவுகள், ஆபத்துகள் பற்றி ஒன்றும் செய்தி இல்லை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக்.

   Delete
  2. இவர் பற்றிய மேலதிக விவரங்கள் கிடைக்குமா?

   Delete
  3. எரிவாயு பற்றிய மேலதிக விவரங்கள் சேகரிக்க முயற்சிக்கிறேன்.... கிடைத்தால் நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன் அப்பாதுரை ஜி!

   Delete
 2. 70 வயது இளைஞர் சொன்ன பதில்! - இன்னும் நிக்க முடியுது, நடக்க முடியுது – இப்பவே முடியலன்னு ஒக்காந்துட்டா ஒரேடியா ஒக்காந்துடுவோம்! அதனால நான் நின்னுட்டே வரேன்!”. That’s the Spirit!

  ரசிக்கவைத்தது !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. Replies
  1. வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 4. பெரியவர் சொன்னது டக்கர்!!!!!

  தனிமடல் பார்க்கவும்:-)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   தனி மடல் கண்டேன். ரசித்தேன். மாலையில் பதில் எழுதுகிறேன்.... :)

   Delete
 5. :) நாய் சூப்பரா விரிப்பெல்லாம் விரிச்சு வச்சில்ல செய்யுது..

  நாகராஜனுக்கு வாழ்த்துகள்..நம்ம ஊருலயும் கண்டுபிடிப்புகள் இப்படி இயற்கை முறையில் வரது அவசியம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி...

   குரு சொல்றத அப்படியே ஃபாலோ பண்ணுது போல! :)))

   Delete
 6. வணக்கம் பாஸ் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் தளத்திற்கு வருகின்றேன் எப்படி சுகம்?

  இந்தவாரம் நீங்கள் ரசித்த புகைப்படம் அருமை செமையாக இருக்கு

  ReplyDelete
  Replies
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை. மிக்க மகிழ்ச்சி K.s.s. Rajh.

   Delete
 7. சாலட்டை இப்போதே முதல்முறை சுவைத்தேன்..சுவை பிடித்தது..

  ReplyDelete
  Replies
  1. இது பதினைந்தாம் பகிர்வு - ஃப்ரூட் சாலட் வரிசையில்.... முதல் முறை சுவைத்ததற்கு நன்றி மதுமதி....

   சென்னையில் தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

   Delete
 8. படங்களுடன் பகிர்வு சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்குது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 9. புதிய எரிபொருள் பற்றி செய்தி ஆறுதலாக இருந்தது.
  பிலிப் டில்லரின் குறுஞ்செய்தி ரொம்ப சரி!

  70 வயது இளைஞரின் பதில் என்னைபோன்றவர்களுக்கு 'என்னைப்போல் ஒருவர்' என்று என்ன வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 10. அனைத்தும் அருமை. பாராட்டுக்கள் வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 11. //“Issues are like old wives that lose charm as they grow old”//

  Issues are like retired husbands (??)...அப்படின்னு சொல்லியிருந்தால் ஒருபய கேட்டிருப்பானா! கேட்பதற்கு நாதியுண்டா!

  மாற்றுத் திறனாளி திரு நாகராஜனுக்கு ஒரு பெரிய ‘ஓ’ போடுவோம்.
  (ஆனால் தவிட்டுக்கு எங்க போறது!)

  யோகா செய்யும் பட்டியாருக்கு ஒரு ஜட்டியாரப் போட்டு விடுங்கப்பு!

  //70 வயது இளைஞர் சொன்ன பதில்! - இன்னும் நிக்க முடியுது, நடக்க முடியுது – இப்பவே முடியலன்னு ஒக்காந்துட்டா ஒரேயடியா ஒக்காந்துடுவோம்!//

  அது! That’s the Spirit!
  (தமிழ்நாட்டுல என்னன்னா spirit-ஐ அடிச்சுட்டு 30 வயது கிழவன் ரோட்டுல தவழறான்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி [ஈஸ்வரன்].... :))

   Delete
 12. ஆகா... அந்த 70 வயது இளைஞரும், உடற்பயிற்சி செய்யும் நாயும் ப்ரூட் சாலட்டை ரம்யமாக்கிடுசுசு. சூப்பரு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

   Delete
 13. சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ள தெரியும் இது என்ன பார்பத செய்யும் நாயா ?

  வழக்கம் போல அருமைங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 14. ருசியான சாலட்.

  இந்த எரிவாயுவைப்பத்தி மேலும் விவரங்கள் கிடைச்சிருந்தா நல்லாருந்துருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. எரிவாயு பற்றிய மேலதிக விவரங்கள் சேகரிக்க முயற்சிக்கிறேன்.... கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன்...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 15. படங்களுடன் கூடிய பதிவு அற்புதம்!நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 16. - சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது என்பது இதுதானா...?!

  - இற்றை பிரமாதமான பாசிட்டிவ் செய்தி.

  - குறுஞ்செய்தி... உண்மை! உண்மை!!

  - பொருத்தமாகக் காத்திருந்து படம் எடுத்திருக்கிறார்களே... அட!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 17. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.

   Delete
 18. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சமுத்ரா.

   Delete
 19. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது பகிர்வு... நன்றி சார்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

  வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_5.html) சென்று பார்க்கவும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.....

   வலைச்சர அறிமுகம் பற்றிய தகவலுக்கு நன்றி.

   Delete
 20. இற்றை என்றால் என்ன?
  பல்சுவை விருந்து!
  த.ம.10

  ReplyDelete
  Replies
  1. ஆங்கிலத்தில் Update என்பதைத் தான் தமிழில் இற்றை எனச் சொல்கிறார்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 21. மிக அருமையான சிரிக்க வைக்கும் பதிவு சகோ.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இக்பால் செல்வன்.

   Delete
 22. உங்கள் பக்கத்திலிருந்து 'சமையல் கேஸ்' செய்தியை இந்த வார எங்கள் பாசிட்டிவ் செய்திகளுக்கு உபயோகப் படுத்தியிருக்கிறேன். முன்னரே அனுமதி கேட்காமல் போட்டு விட்டு அனுமதி கேட்பதற்குக் கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!! :))

  ReplyDelete
  Replies
  1. ம்ம்.... நான் கோபித்துக் கொள்வேன் என்று நினைக்கிறீர்களா! :)))

   பயன்படுத்தியதற்கு நன்றி ஸ்ரீராம்....

   Delete
 23. மாற்றுத்திறனாளி ஆன திரு நாகராஜனின் கண்டுப்பிடிப்புக்கு வாழ்த்துக்கள்.

  70 வயது இளைஞர் சொன்ன பதில்! - இன்னும் நிக்க முடியுது, நடக்க முடியுது – இப்பவே முடியலன்னு ஒக்காந்துட்டா ஒரேயடியா ஒக்காந்துடுவோம்!//

  உண்மை உண்மை! ஓடிக் கொண்டு இருந்தால் நீர் நன்றாக இருக்கும், தேங்கி விட்டால் நன்றாக இருக்காது. அது போல் அவர் பதில் அருமை. நமக்கு ஒரு பாடம்.

  காணொளி அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் சிறப்பான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 24. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.

   Delete
 25. அற்றைத் திங்கள் அந்நிலவு தெரியும்... இற்றை இன்றுதான் தெரியும்... நன்றி. :-)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   முகப்புத்தகம் என்பதற்கே “முகரக்கட்டைப் புத்தகம்” என்று எழுதியவர் ஆயிற்றே நீங்கள்.... :)

   Delete
 26. தங்கள் பழக்கலவை புருட் சலட் நன்றாக உள்ளது. நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிகக் நன்றி வேதா. இலங்காதிலகம் அவர்களே.

   Delete
 27. பழக்கலவை இனிப்பும் புளிப்புமாய் ருசிக்கிறது. எரிவாயு தயாரிக்கும் இளைஞரின் முயற்சி பெரிதும் ஊக்குவிக்கப்படவேண்டியது. ஆனால் தவிட்டை சூடுபடுத்தவும் எரிபொருள் தேவைப்படுகிறதே...

  குழந்தை வளர்ப்பு பற்றி பிலிஸ் டில்லர் சொல்லியிருப்பது மெத்தச் சரி. அதைத்தானே பலரும் செய்கிறோம்.

  உடற்பயிற்சிப் புகைப்படம் ரசிக்கவைத்தது. காணொளி இன்னும் காணவில்லை. பிறகு பார்ப்பேன்.

  பாராட்டுகள் வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 28. ப்ரூட் சாலட் சுவை அருமை.யோகா செய்யும் நாயின் படம் அருமை.
  புதிய எரிபொருள் கண்டுபிடித்த நாகராஜுக்கு வாழ்த்துக்கள்.அட!அவருக்கும் உங்கள் பெயர்.

  ReplyDelete
  Replies
  1. //அட!அவருக்கும் உங்கள் பெயர்.//

   அது எனது அப்பாவின் பெயர்... :)

   என் பெயர் வெங்கட்.... :)))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 29. நாகராஜுக்கு வாழ்த்துக்கள்.

  அட! நாயாரைப் பார்த்துத்தான் நாங்களும் உடற் பயிற்சி செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். :))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....