எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, October 24, 2012

கறை நல்லது
சமீபத்தில் சென்னை வந்தபோது தில்லியிலிருந்து துரந்தோ வண்டியில் பயணம். அதில் தில்லியிலிருந்து சென்னை வரை தான்  டிக்கட் தருவார்கள்.  நடுநடுவே சில பெரிய ரயில் நிலையங்களில் நின்றாலும் அங்கு பயணிகள் ஏற முடியாது நிறுத்துவது சுத்தம் செய்வதற்கும், தண்ணீர் பிடிப்பதற்கும், உணவுப் பொருட்களை ஏற்றுவதற்கும் தான்..

தில்லியிலிருந்து சென்னை வரும் துரந்தோ விரைவு வண்டி துக்ளாகாபாத் கூட தாண்டவில்லை நின்றுவிட்டது. எல்லா IRCTC ஊழியர்களும் இறங்கி இஞ்சினை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள். “என்ன ஆயிற்று?” என்று கேட்ட எனக்கு ”எருமை மாட்டிடுடுச்சு” என்று வந்தது பதில். சரி வழக்கம்போல் நேரம் தவறிப் போகப் போகிறது என்ற நினைவுடனே அமர்ந்திருந்தேன். இரண்டு மணி நேரம் தாமதமாகத் தான் சென்னை வந்தது.

சமீபத்தில் IRCTC ஒப்பந்த ஊழியருடன்ஒரு நேர்காணல் பதிவில் மேலே சொன்னதுபோல் எழுதியிருந்தது உங்களுக்கு நினைவிலிருக்கலாம். அந்த பயணத்தின் போது மொத்தம் எட்டு பேர் பயணம் செய்யக்கூடிய இடத்தில் மூன்று பேர் தான் இருந்தோம். ஒரு லோயர் பர்த்தில் நான், மற்றொரு லோயர் பர்த்தில் ” வுக்கும் வுக்கும் வித்தியாசம் தெரியாது என் பெயரை உடைத்தெறியும், எப்போதும் சத்தமாகவே பேசிய ஒரு வங்காளி மற்றும் சைட் லோயர் பர்த்தில் உத்திரப் பிரதேசத்தினைச் சேர்ந்த, ராமகிருஷ்ணா மிஷனில் இருக்கும் ஒரு மத்திய வயது இளைஞர் [இவர் பற்றி தனிப் பதிவு வந்தாலும் வரலாம் என இப்போதே வாசகர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்!]

அதில் சொன்னது போல, வண்டி தாமதமாக சென்று கொண்டிருந்தது. எந்த தொந்தரவும் இல்லாது புத்தகங்கள் படிக்க நினைத்திருந்த எனக்கு விதி வங்காளி அவரது பெயரை சௌகரியத்துக்காக சக்ரபோர்த்தி [Chakraborty] என வைத்துக் கொள்ளலாமா? – ரூபத்தில் வந்து சிரித்தது எனக்கு அப்போது தெரியவில்லை.

தில்லியில் ஆரம்பித்தது அவர் தொல்லை. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு லேட்டா வந்த கணவனிடம் வாசலிலேயே நிறுத்தி வைத்து கேள்விகளால் துளைக்கும் மனைவி மாதிரி, கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டே வந்தார். வண்டி எப்ப சென்னை போய் சேரும்?, சென்னையிலிருந்து கட்படி [காட்பாடி-யைத் தான் இப்படிச் சொல்கிறார் என்பது புரிய இந்த மரமண்டைக்கு கொஞ்சம் நேரம் பிடித்தது தனிக் கதை!] போக என்ன வண்டி கிடைக்கும், ராத்திரி முழுக்க இருக்கும் வண்டிகள் என்னென்ன?, உங்க ஊர் ஏன் இப்படி குப்பையா இருக்கு? [என்னவோ அவர்களுடைய கொல்கத்தா ரொம்ப சுத்தம் மாதிரி!],  இந்த ரயில்வே டைம்டேபிள்-ல வண்டி போகும் விவரங்கள் எப்படிப் பார்க்கிறது? என பல கேள்விகள்.

நானும் பொறுமையா அவரது எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டே வந்தேன்.  என்னிடம் கேள்வி கேட்ட நேரம் போக, மீதி நேரமெல்லாம், அவரது அலைபேசியில், எல்லா வங்காளிகளின் வழமை போல, சக்ரபோர்த்தியும் சத்தமாக வங்காள மொழியில் பேசியபடி வந்தார்.  சிலச் சில வார்த்தைகள் புரிவதால் அவரது மனைவியிடம் திட்டு வாங்கி சமாளிக்கிறார் என்பது மட்டும் புரிந்தது!

ராத்திரி தூங்கற நேரமும், சாப்பிடற நேரமும் தவிர, எல்லா நேரமும் என்னை படிக்க விடாமல் கேள்வி மேல கேள்வி கேட்டது மட்டுமில்லாது, திடீர்னு "நான் ஷூ கழட்டி உள்ள வைச்சுட்டேன், பாத்ரூம் போக உங்க செருப்பு போட்டுட்டுப் போகவா?"ன்னு கேட்டுட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் என் செருப்பைப் போட்டுகிட்டு போனவரை  அதிர்ச்சியோடு பார்த்துட்டுத்தான் இருக்க முடிந்தது!  அவர் திரும்பி வந்தபின்  செருப்பை என் காலை விட்டு கழட்டவேயில்லை நான் ஒவ்வொரு முறையும் என் செருப்பைப் போட்டுப்பாரோன்னு!  ஆனா, அவர் என்னை ஏளனமாப்  பார்த்துட்டு, பக்கத்து ராமகிருஷ்ணா மிஷன் ஆளோட செருப்பை போட்டுகிட்டுப் போனார்.

இவர் தொல்லையிலிருந்து தப்பிக்க வேறு வழியில்லாது, படிக்கவும் முடியாது தூங்கலாம் என படுத்தேன்.  எப்ப தூங்கணும்னு நினைக்கிறோமோ அப்ப தூக்கம் வரவே வராது!  கண்ணை இறுக்கமா மூடி எப்படியோ தூங்கினேன்.  எவ்வளவு நேரம் தூங்கி இருப்பேன்னு தெரியல! திடீர்னு என் மேல மழைச்சாரல் அடிக்கற மாதிரி உணர்வு. ஜன்னல் திறந்திருந்ததால, ஏதோ மழைதான் பெய்யுதோன்னு நினைச்சா தண்ணீர் மாதிரியும் தெரியல! கொஞ்சமா மூக்கடைப்பு இருந்ததால, வாயை லேசா திறந்தே தூங்கிட்டேன் போல!  சாரல் நாக்குலயும் பட்டுச்சு டேஸ்ட் பார்த்தா கோக் டேஸ்ட்!

என்னடா கோக் மழைதான் பெய்யுதோன்னு எழுந்தா, நம்ம சக்ரபோர்த்தி அண்ணன் கோக் பாட்டிலும் கையுமா இருக்கார்! கோக் பாட்டில் வாங்கினவர், அதை ஒரு குலுக்குக் குலுக்கி மூடியைத் திறந்திருக்கார்! அது அப்படியே மடை திறந்த வெள்ளம் போல பொங்கி தூங்கிட்டு இருந்த என் மேலே மழையாகவும் வாய்க்குள் துளியாகவும் விழுந்துருக்கு! கோபத்துடன் நான் சக்ரபோர்த்தியை எரித்து விடுவது போல் பார்க்க, அவரோ கருமமமே கண்ணாயினார்’ மாதிரி அவர் சட்டையில் விழுந்த கோக்கை தனது கைலி கொண்டு துடைத்துக் கொண்டிருந்தார்.  நான் எழுந்து போய் முகத்தினை கழுவிக்கொண்டு வந்தால் இன்னமும் துடைக்கும் படலம் தொடர்ந்து கொண்டிருந்தது!

அப்போது அவர் கேட்ட கேள்வி தான் எல்லாக் கேள்விகளுக்கும் ஹைலைட்டே!  அப்படி என்னதாங்க கேள்வி கேட்டுட்டாருன்னு கேட்கறீங்களா

சட்டையில் பட்ட கோக் கறை போகுமா?

சிரிக்கறதா, அழறதான்னு தெரியல எனக்கு. சர்ஃப் எக்ஸெல் சோப் பவுடர் விளம்பரத்தில் வர குட்டிப் பையன் மாதிரி சக்ரபோர்த்திக்கு பதில் இப்படிச் சொன்னேன்!

"கறை நல்லது"!

மீண்டும் வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை...

நட்புடன்,

வெங்கட்
புது தில்லி.


64 comments:

 1. அருமை வெங்கட். உங்களுக்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பால் ஹனுமான் ஜி!

   Delete
 2. ஹா ஹா அடுத்தவங்க கஷ்டம் நாம படிக்கும்போது எவ்வளவு ஹேப்பியா இருக்கு. பிகாஸ் அது உங்க நகைச்சுவை தாளிச்ச எழுத்தால..

  பாத்ரூம் போக உங்க செருப்பு போட்டுட்டுப் போகவா?

  சட்டையில் பட்ட கோக் கறை போகுமா?

  கேள்வியின் நாயகனே.. உன் கேள்விக்கு பதில் ஏதய்யா..

  கலக்கிட்டிங்க வெங்கட்

  ReplyDelete
  Replies
  1. //ஹா ஹா அடுத்தவங்க கஷ்டம் நாம படிக்கும்போது எவ்வளவு ஹேப்பியா இருக்கு. பிகாஸ் அது உங்க நகைச்சுவை தாளிச்ச எழுத்தால..//

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 3. சில நேரங்களில் இப்படித்தான் சக்ரபோர்த்தி போன்ற இம்சைகளிடம் நானும் மாட்டியிருக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகை?

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 4. "கறை நல்லது"!


  எரிச்சலான பயணம் போல !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 5. நம்மைச் சுற்றி நடுக்கும் விஷயங்களை கவனிப்பது ஒரு புறம்...அதை சுவாரஸ்யமாக விவரிப்பது மற்றொரு கலை..அந்த வங்காளி 'சக்ரபோர்த்தி' உண்மையிலேயே interesting character தான் ..Hats off to you Venkat for showing us such characters..ஒரு பிரபலமானவராக இருந்திருந்தால் இதை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக போட்டு காசு பார்த்திருப்பார்கள்!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குமார்.

   அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவே தான் இந்த வலைப்பூ! புத்தகம் போடுவதல்லாம் நமக்கு சரி வராது... :)

   Delete
 6. விதி விளையாடிவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 7. ரொம்ப நல்லவரா கீறாரே இவரு :)

  நீங்களும் காப்பி குடிக்கும் போது.. சரி வேண்டாம் விடுங்க

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன் குமார்!

   Delete
 8. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி!

   Delete
 9. நல்ல கேள்வி...? நல்ல பதில்...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 10. கரைகள் படுகிற இடததையும்,நேரத்தையும் பொறுத்தது அது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன்.

   Delete
 11. கறை நல்லதுதான் போல. உங்களுக்கு ஒரு பதிவை தேத்த உதவியிருக்கே!

  ReplyDelete
  Replies
  1. //உங்களுக்கு ஒரு பதிவை தேத்த உதவியிருக்கே!//

   க்ர்ர்ர்ர்ர்ர்... :)


   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 12. நல்ல அனுபவம். அவர் மீது கோபம் கொள்ள வேண்டியதில்லை. ஒரு பதிவுக்கு கருப் பொருளாய் வந்து விட்டதால். இன்று தமிழ் மணத்தில் பிரச்சினை போல் தெரிகிறது. ஓட்டு போட இயலவில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!.

   தமிழ் மணம் இப்போது சரியாகிவிட்டது. இணைத்து விட்டேன்.

   Delete
 13. 'கறை நல்லது' - பிரமாதமான பதிவு!

  இதையே ஸர்ப்-எக்செல் விளம்பரமாகப் போட்டு விடலாம்!

  அவர்களுக்கு அனுப்பிப் பாருங்களேன்!

  பாராட்டுகள் வெங்கட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 14. இடுக்கண் வருங்கால் நகுக! நீங்கள் அனுபவித்த துன்பத்தையும் நகைச்சுவையாகப் பதிந்த விதம் அருமை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 15. அது என்ன எங்க திட்டு வாங்கினாலும் மனைவி ஞாபகம் வந்துவிடுகிறது எல்லா ஆண்களுக்கும் .
  பயணத்தில் இது போன்ற அனுபவங்கள் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

  ReplyDelete
  Replies
  1. //அது என்ன எங்க திட்டு வாங்கினாலும் மனைவி ஞாபகம் வந்துவிடுகிறது எல்லா ஆண்களுக்கும் .//

   ம்ம்ம்ம்... அதானே!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 16. //அப்போது அவர் கேட்ட கேள்வி தான் எல்லாக் கேள்விகளுக்கும் ஹைலைட்டே! அப்படி என்னதாங்க கேள்வி கேட்டுட்டாருன்னு கேட்கறீங்களா?

  “சட்டையில் பட்ட கோக் கறை போகுமா?”//

  அவர் கேட்ட கேள்வியிலேயே அவரின் சட்டையில் பட்ட கோக் கறை போகுமா போகாதா என்ற ”அ க் க றை” நன்கு தெரிகிறது. ;)))))

  சூப்பர் பதிவு வெங்கட்ஜி! மகிழ்ச்சி!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துரைக்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி!

   Delete
 17. நிம்மதியாகப் பயணம் செய்ய
  ரிசெர்வேசன் கிடைத்தால் மட்டும் போதாது
  என நினைக்கிறேன்
  சுவாரஸ்யமான (? ) பதிவு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 18. Replies
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 19. ithukkellam oru yokam venum anna! :) (srry for english cmmt)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் யோகம் தான் அடிச்சுருக்கு எனக்கு! :)

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தக்குடு!

   Delete
 20. பயணம் செய்வதில் எவ்வளவு அனுபவங்கள் கிடைக்கிரது இல்லியா?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 21. கறை நல்லது...சுவாரஸ்யமான பதிவு
  ...நான் சமீபத்தில் பார்த்த குறும்படத்தின் கருவும் இதே...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா அப்படியா? என்ன குறும்படம் ரெவெரி அது! நானும் பார்க்கிறேன் - லின்க் இருந்தா அனுப்புங்க!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 22. ஹா...ஹா. எப்படித்தான் சமாளித்தீர்களோ.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 23. Replies
  1. தமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு நன்றி பால் ஹனுமான் ஜி!

   Delete
 24. மஹா பொறுமை வெங்கட்.நல்ல வேளை ''பான்'' மழை பொழியாமல் விட்டாரே.:(

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... பான் மழை பொழியாமல் விட்டாரே... தப்பித்தேன் நான்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 25. ஒவ்வொரு பயணங்களிலும் எழுத இப்படியொரு (படிக்கிற எங்களுக்கு மட்டும்) சுவாரஸ்ய அனுபவங்கள் உங்களுக்கு மட்டும் எப்படி ஏற்படுதுன்னே தெரியலை. லக்கிமேன் ஸார். எல்லாத்தையும்(?) பகிருங்க.

  ReplyDelete
  Replies
  1. நானே ஏற்படுத்திக்கொண்டவை அல்ல! எனக்குன்னு மாட்டறாங்க! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

   Delete
 26. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   பதிவுலகில் மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துகள்.

   Delete
 27. இப்படிப் பட்ட உங்கள் பய(ய)ணங்கள் தொடர வாழ்த்துகள்.அப்போதுதான் நாங்கள் வாய்விட்டு சிரிக்க முடியும்.

  உங்கள் எரிச்சல் அனுபவம் எங்களுக்குக் குளிர்ச்சியாக..

  இருந்தாலும் அந்த செறுப்புக் கதை.. பரதன் மாதிரி தலைக்கு மேல் வைத்துக்கொள்ளா முடியாது. அப்பவும் எடுத்து விடுவார்.தலைக்கடியில் வைத்திருப்பீர்கள் என்று நினைத்தேன். ஹா ஹா ஹா..நீண்ட நாட்களுக்குப் பின் மிகவும் ரசித்துச் சிரித்த பதிவு இது.

  ReplyDelete
  Replies
  1. தலைக்கடியில் வைத்துக்கொள்ளும் சில வட இந்தியர்களைப் பார்த்திருக்கிறேன் ஆதிரா! :)

   சிலர் ரயில்களில் செய்யும் விஷயங்களை வைத்தே இன்னும் சில பதிவுகள் எழுதலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆதிரா.

   Delete
 28. கறை நல்லது. மிக சுவையாக இருந்தது.
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete
 29. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 30. //அவர் சட்டையில் விழுந்த கோக்கை தனது கைலி கொண்டு துடைத்துக் கொண்டிருந்தார். நான் எழுந்து போய் முகத்தினை கழுவிக்கொண்டு வந்தால் இன்னமும் துடைக்கும் படலம் தொடர்ந்து கொண்டிருந்தது!//

  அந்தாளைச் சும்மாவா விட்டுட்டு வந்தீங்க?? நீங்க ரொம்ப நல்லவருங்க :-))

  ReplyDelete
  Replies
  1. //அந்தாளைச் சும்மாவா விட்டுட்டு வந்தீங்க?? நீங்க ரொம்ப நல்லவருங்க :-))//

   ஹி ஹி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 31. மகா பொறுமைசாலி தான் நீங்க.கல்கத்தாவை ஒரு முறை ஹூப்ளி ஆற்று நீரால் கழுவி விட்டால் நல்லது. 1940-லேயே இருந்த மாதிரி ஊரே அப்படி ஒரு அழுக்கு.இதில் நம்ம ஊர் குப்பை என்கிறாரா? சுத்தம்.

  ReplyDelete
 32. //கல்கத்தாவை ஒரு முறை ஹூப்ளி ஆற்று நீரால் கழுவி விட்டால் நல்லது//

  என்னோட வங்காளி நண்பர்கள் கிட்ட இந்த ஐடியா சொல்றேன்! :)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

  ReplyDelete
 33. வெள்ளந்தி மனிதர்கள் நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....