இந்த வார செய்தி: மத்தியப் பிரதேச
அரசு கடந்த இரண்டு மாதங்களாக ஒரு புதிய திட்டத்தினைச் செயல்படுத்தி வருகிறது.
குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களிலிருக்கும் வயதானவர்கள் [60 வயதுக்கு
மேற்பட்டவர்கள்] தனது அந்திமக் காலத்தில் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வர ”முக்ய மந்த்ரி தீர்த் தர்ஷன் யோஜ்னா” என்று தொடங்கியிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் சமய வேறுபாடின்றி பல
முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் செல்ல இருக்கிறார்கள்.
பத்ரிநாத்,
கேதார்நாத், ஜகன்னாத் புரி, த்வாரகாபுரி, ஹரித்வார், அமர்நாத், வைஷ்ணோதேவி, ஷிர்டி,
திருமலா-திருப்பதி, அஜ்மீர் ஷெரீஃப், வாரணாசி, அமிர்தசரஸ், ராமேஸ்வரம்,
ஷ்ரவணபெளகுலா, வேளாங்கண்ணி மற்றும் நாகப்பட்டினம் என்று முதல் பட்டியல் வெளி
வந்திருக்கிறது. இன்னும் பல தலங்களையும்
சேர்க்க இருக்கிறார்கள்.
முதல் கட்டமாக 1000 பேர் கொண்ட குழுவினை ரயில் மூலம் ராமேஸ்வரத்திற்கு அழைத்துச்
சென்றிருக்கிறார்கள். சிறப்பு ரயிலில் வயதானவர்களை பயணத்தின் போது கவனித்துக்
கொள்ள ஊழியர்களையும், மருத்துவர்களையும் கூடவே அனுப்பி இருக்கிறது. இது போன்று ஒவ்வொரு வாரமும் ஒரு வண்டி மத்தியப்
பிரதேசத்தின் தலைநகரிலிருந்து கிளம்பி வயதானவர்களை அழைத்துக் கொண்டு தரிசனம்
செய்வித்து திரும்புவார்கள்.
இரண்டாம்
பயணமும் 977 பயணிகளுடன் அஜ்மேர் ஷெரிஃப் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வயதானவர்கள் இத்திட்டத்தில் பயன் பெற
விண்ணப்பங்கள் மத்தியப் பிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடைக்கும். டிசம்பர்
மாதத்திற்குள் மொத்தம் 20 பயணங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிகிறது.
அவர்களாகவே பணம் போட்டு செல்ல முடியாதவர்களுக்கு இந்த ஏற்பாடு!
இந்த வார முகப்புத்தக இற்றை:
அம்மா....
முடியாத பாசம்
உனக்காக அழும் விழிகள்
நீ மட்டும் சாய்ந்து கொள்ள
ஒரு தோள்
உனக்கு பசிக்காமல்
பார்த்துக் கொள்ளும்
ஒரே ஒரு தேவதை....
இந்த வார குறுஞ்செய்தி:
Everybody thinks of changing
humanity, and nobody thinks of changing himself – Leo Tolstoy
ரசித்த புகைப்படம்: மரங்களை
வெட்டிக் கொண்டே இருக்கிறோம். அது மனிதர்களுக்கு மட்டும் கஷ்டத்தினை கொடுக்காது. விலங்குகளுக்கும் தான் கஷ்டம்.
பாருங்களேன்..... [யாரும் அடிக்க
வராதீங்கப்பா.... இது முகப்புத்தகத்தில்
வந்த படம். பார்த்தவுடனே விலங்குகளின் கஷ்டம் புரிந்தது. அதனால் பகிர்ந்து
கொண்டேன்.
இந்த வாரக் காணொளி: இந்தக் காணொளி எனது மின்னஞ்சலுக்கு வந்தது – உங்கள் ரசனைக்காய் இங்கே. BBC தயாரிப்பில்
உருவான ஒரு காணொளி இது. என்ன அழகாய்
ஆடுகின்றன பறவைகள். நீங்களும் பார்த்து ரசியுங்களேன்.
படித்ததில் பிடித்தது:
வடு...
வார்த்தைகளாலான
அணுகுண்டு
வெடிக்கும்போது
அதிக சப்தத்தை
மௌனமாக
ஏற்படுத்துகிறது
அணுகுண்டு
சிதைத்தெறியும்
அனைத்தையும் விட
அதிகச் சிதைவினையும்
மிக ஆழமான
பள்ளத்தையும்
ஏற்படுத்துகிறது
அணுகுண்டு
வெடிப்பிலும்
பயங்கரமான வார்த்தை
வெடிப்பு
உயிர்ச் சேதமற்ற
மரணங்களையும்
ஏற்படுத்துகின்றது.
-
லாவண்யா சுந்தரராஜன் [இவர்
தில்லியில் இருக்கும் தமிழ்ப் பதிவர்]. இரண்டு கவிதைத் தொகுப்புகள் இது வரை
வெளியிட்டு இருக்கிறார்.
மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
அணுகுண்டு வெடிப்பிலும்
பதிலளிநீக்குபயங்கரமான வார்த்தை வெடிப்பு
உயிர்ச் சேதமற்ற
மரணங்களையும் ஏற்படுத்துகின்றது.//
உணர்ந்து எழுதிய கவிதை !
ருசியான ஃப்ரூட் சாலட் !!!
தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.
நீக்குப்ரூட் சாலட் அனைத்தும் அருமை. மரம் வெட்டுவது பற்றிய படம் சிரிப்பை வரவழைத்தாலும் சிந்திக்க வைக்கிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குபாவம் பசங்க. லைன்கட்டி நிக்குது பாருங்க!
பதிலளிநீக்குஆமாம் டீச்சர்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
tha.ma 2
நீக்குநாய்களின் கஷ்டமும்
நீக்குஒழுக்கமும் மனம் கவர்ந்தது
சுருக்கமான கவிதையாயினும்
நீக்குநிறைவான கவிதை -அம்மா
வாழ்த்துக்கள்
தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு நன்றி.
நீக்குபடத்தினை ரசித்து கவிதையையும் ரசித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி ரமணி ஜி!
புரூட் சாலட் அசத்தல்
பதிலளிநீக்குஅந்த டான்ஸை எத்தனை முறை
பார்த்தாலும் சலிக்காது போலிருக்கு
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
காணொளி மிகவும் நன்றாக இருந்தது. நானும் இது வரை பத்து முறைக்கும் மேல் பார்த்து விட்டேன்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
இந்த முறை ஃப்ரூட் சாலட் சூப்பர்ப்...
பதிலளிநீக்குநன்றி...tm3
தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும், தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குமத்தியப் பிரதேச அரசின் செயல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
பதிலளிநீக்குஇற்றை-அம்மா- அம்மம்மா..
டால்ஸ்டாயின் கூற்று முற்றிலும் உண்மை. எல்லோரும் சொர்க்கத்துக்குப் போக விரும்புவார்கள் யாரும் சாக விரும்புவதில்லை போல! :))
ரசித்த புகைப்படம் சிரிக்க வைத்தது
லாவண்யா சுந்தர ராஜனின் கவிதை நன்றாக இருக்கிறது 'தீயினால் சுட்டபுண்...'
தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஒவ்வொரு பகுதியை ரசித்து கருத்துரைத்த உங்களுக்கு ஒரு பூங்கொத்து!
இந்த வார ஃப்ரூட் சாலட்டில் நீங்கள் ரசித்த படம் என்னையும் ரசிக்க வைத்தது. எங்கே போனாலும் எல்லாவற்றிற்கும் வரிசைதான் போலிருக்கிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!
நீக்குதீர்த்தயாத்திரை ரொம்ப நல்ல விசயமாத்தெரியுது . உழைத்து கடைசி காலத்தில் ரெண்டு இடம் பாக்காம இருக்கமேன்னு பலருடையவருத்தத்தைப் போக்கற விசயம்..
பதிலளிநீக்குஉண்மை முத்துலெட்சுமி. பார்க்க நினைத்தாலும் வறுமை இடங்கொடாத இவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.
சுவையான சாலட். எல்லா விஷயங்களுமே ருசிக்க வைத்தது.முதல் செய்தி தகவல்--அற்புதமான ஏற்பாடு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.
நீக்குGood initiative by M.P Govt. I think elders will really like this trips
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன் குமார். நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது இத்திட்டம்.
நீக்குதனி தனியா எப்படி சொல்ல தெரியல..அனைத்தையும் மிக ரசித்தேன்...அதிலும் பறவைகளின் நடனம் அழகோ அழகு !!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிகமிக நன்றி கௌசல்யா.
நீக்குமத்திய பிரதேசம் போல நம்மூரில் எப்போது வரும்?
பதிலளிநீக்குமுகப் புத்தகத்தில் யார் எழுதிய கவிதை இது? நீங்களா?
பாவம், நம்மால் நாய்களும் வரிசையில்!
டால்ஸ்டாய் வார்த்தைகள் ரொம்பவும் நிஜம்.
வடு நம்முள்ளத்திலும் ஆழப் பதிந்து விட்டது.
எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு முதலிடம் பிடிக்கிறது காணொளி
சூப்பர் ப்ரூட் சால்ட்!
//முகப் புத்தகத்தில் யார் எழுதிய கவிதை இது? நீங்களா?//
நீக்குகவிதைக்கும் நமக்கும் எட்டாத் தூரம் ரஞ்சனிம்மா. நமக்கு ரசிக்க மட்டுமே தெரியும்!
தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி.
வார்த்தைகளாலான அணுகுண்டு
பதிலளிநீக்குவெடிக்கும்போது
அதிக சப்தத்தை
மௌனமாக ஏற்படுத்துகிறது.. அசத்தல் வரிகள்.
தட்டிக்கொடுப்பது போன்ற அம்மாவின் படமும் வரியும் அருமை.
வரிசையான படமும் அனைத்துமே அசத்தல்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.
நீக்குகாணொளி - நடனம் - நன்றாக இருக்கிறது!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கே.பி. ஜனா சார்.
நீக்குஅருமையான சாலட்...
பதிலளிநீக்குஉனது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்]
நீக்குலாவண்யா அவர்கள் எழுதிய கவிதை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது. முகப்புத்தகத்தில்சுட்ட படம் புன்னகையை வரவழைததது. அம்மா பற்றிய கவிதை... சூப்பர்ப். ரசிக்க வைக்கத் தவறாத ப்ரூட் ஸாலட்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கணேஷ்.
நீக்குm.p.அரசின் மிக நல்ல திட்டம் பற்ரிச் சொன்னீர்கள்.படம் சூப்பர்!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.
நீக்குத.ம11
பதிலளிநீக்குதமிழ் மணம் பதினொன்றாம் வாக்கிற்கு நன்றி குட்டன்.
நீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.
நீக்குஃப்ரூட் சாலட் சுவைக்கின்றது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குArumai.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி துரைடேனியல்.
நீக்குருசியான சாலட்..
பதிலளிநீக்குஅவரவர் கஷ்டம் அவரவருக்கு.. லைன் கட்டி நிக்கிறதைச் சொல்றேன் :-))
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
நீக்குமத்திய பிரதேச அரசின் சேவை பாராட்டுக்குரியது சார்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.
நீக்குகாணொளி அற்புதம்! சுவைமிகுந்ததாய் இருந்தது சாலட்! பகிர்விற்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்குப்ரூட் சாலட் yummy...கவிதை nice...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக மிக நன்றி ரெவெரி.
நீக்குFruit Salad உண்மையில் பல்சுவை பதிவு தான்... புகைப்படம் நாளைய நிலையை திறம்பட உணர்த்துகிறது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆயிஷா ஃபாரூக்.
நீக்குமத்தியப் பிரதேச அரசின் நடவடிக்கை... இத்தனை பின்னூட்டங்களுக்குப் பிறகு என் கருத்தை பின்னூட்டமிட அச்சமாக இருக்கிறது. நல அரசு ஒன்று செய்யவேண்டியவை ஏராளம் இருக்கின்றன. ம.பி. அரசின் இந்த அறிவிப்புக்கும் தமிழகத்தின் இலவசங்களுக்கும் வேறுபாடு இல்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக உயிரோடு போராடிவரும் மக்கள் வசிக்கும் போபாலும் அங்கேதான் இருக்கிறது.
பதிலளிநீக்குகாணொளி அருமை. இது குறித்து கூடுதல் தகவல் - தி பிளானெட், தி ஓஷன் என இரண்டு ஆவணப்படங்கள். மிக அருமை என்று சொல்வதெல்லாம் மிகக்குறைவு. உயிரினங்களைப் பற்றிய அற்புதமான ஆவணங்கள் இவை. இவற்றிலிருந்து கட்-பேஸ்ட் செய்ததுதான் இந்தக் காணொளி. முழுப்படத்தையும் தரவிறக்கிப் பாருங்கள்... நான் பல மாதங்களுக்கு முன்பே இவற்றை பதிவிறக்கி வைத்திருக்கிறேன். மனது கனமாக இருக்கும்போது அவ்வப்போது பார்த்துக்கொள்வதுண்டு.
போபால்.... :( உண்மை. இன்னும் எத்தனை எத்தனையோ போபால்களும், பிரச்சனைகளும் இருக்கிறது...
பதிலளிநீக்குகாணொளி பற்றிய கூடுதல் தகவலுக்கு நன்றி. முழுப்படத்தையும் தரவிறக்கம் செய்து பார்க்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!
//அணுகுண்டு
பதிலளிநீக்குவெடிப்பிலும்
பயங்கரமான
வார்த்தை வெடிப்பு
உயிர்ச் சேதமற்ற
மரணங்களையும்
ஏற்படுத்துகின்றது.//
அருமையான வரிகள்.
உண்மை தான் என
நன்கு உணர முடிகிறது.
பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
வெங்கட்ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி.
நீக்குஃப்ரூட் சாலட் படமும் காணொளியும் அற்புதம் :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை லக்ஷ்மணன் ஜி!
நீக்கு