திங்கள், 15 அக்டோபர், 2012

திரிவேணி சங்கமம் – பாலுடன் ஜிலேபி


திரிவேணி சங்கமம் காசி பயணம் பகுதி 8

இப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்: பகுதி 1 2 3 4  5 6 7

காலையில் தங்குமிடம் அருகிலிருக்கும் புறாக்கள் ஹூம் ஹூம்என குரல் கொடுக்க துயிலெழுந்தோம். விரைந்து தயாராகி கீழே வரவும், ஓட்டுனர் அப்துல் கலாம் சலாம்சொல்லவும் சரியாக இருந்தது.  மீண்டும் பயணம் தொடங்கியது.  நாங்கள் சொல்லுமுன்னரே கலாம் சொல்ல ஆரம்பித்தார். “சாப், இங்கே ஒரு ஆங்கிலேயர் கட்டிய பழைய பாலம் இருக்கிறது.  அதைப் பார்த்து விட்டு பாபே தா தாபாசெல்லலாம்என்று.  அவருக்கும் தெரிந்து விட்டது – ”சாப்பிடாம இவங்க எங்கேயும் கிளம்பமாட்டாங்கப்பா!”

நூறு வருடங்களுக்கு முன்னரே ஆங்கிலேயர் காலத்தில் இந்த இரும்பு பாலம் யமுனையின் குறுக்கே கட்டப்பட்டது.  கர்சன் பாலம் என்று அழைக்கப்படும் இப்பாலத்தில் கீழே சாதாரண வாகனங்களும் மேலே இரயில்களும் செல்லும்படியாக அமைக்கப்பட்ட பழைய பாலம்.  மிகவும் பழமையான இப்பாலத்தைக் கடந்து சென்றபிறகு, சாலைப் போக்குவரத்திற்கான  சமீபத்தில் கட்டப்பட்ட புதிய பாலமும் இருக்கிறது.  அதையும் பார்த்து, சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.  அதன் பிறகு தான் சாப்பிடச் சென்றோம்.

சொல்ல மறக்குமுன், இந்த இரும்புப் பாலம் போலவே தில்லியிலும் மிகவும் பழைய பாலம் யமுனையின் குறுக்கே இருக்கிறது.  கீழே மட்டும் பார்த்து விட்டால் தில்லியில் சாக்கடையாக ஓடும் யமுனையைக் கண்டு கண்ணீர் வரக்கூடும்!நேற்று ஆலு பராட்டா சாப்பிட்டாயிற்று. அதனால் இன்று வேறு என்ன இருக்கிறது எனக் கேட்க, “பியாஜ் பராட்டா, பனீர் பராட்டா, கோபி பராட்டா, மூளி பராட்டாஎன்று அடுக்கிக்கொண்டே வர, நாங்கள் பியாஜ் பராட்டா கொண்டு வரச் சொன்னோம்.  அலஹாபாத்-ல் காலையிலே சாப்பிடுவது என்ன தெரியுமா.  சூடான பாலுடன் ஜிலேபி.  ஜிலேபியை பாலில் முக்கி முக்கி சாப்பிடுவார்கள்.  நானும் ருசித்துப் பார்த்தேன்.  ஒரு அசட்டு தித்திப்பு!

வண்டி நேரே சங்கமத்தினை நோக்கிச் சென்றது.  செல்லும் வழியில் தான் பன்னிரண்டு வருடங்களுக்கொரு முறை நடக்கும் கும்பமேளா மைதானம் இருக்கிறது.  அடுத்த வருடம் தான் கும்பமேளா.  அந்த சமயத்தில் மைதானம் முழுவதும் கடைகளாலும், மக்களாலும் நிரம்பி வழியும் எனச் சொல்லிக் கொண்டு வந்தார் கலாம்.  கரையோரம் வாகனங்கள் நிறுத்துமிடம் வந்ததும் நிறுத்தி, எங்களை அனுப்பினார். உடனே நிறைய படகுக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர்.  சுமார் 10 பேர் அமர்ந்து போகக்கூடிய படகு.  பாதுகாப்பிற்கென எந்தவித ஏற்பாடுகளும் கிடையாது.  விசைப்படகுகளும் இல்லை.  எல்லாமே மனிதர்கள் கடினமாக உழைத்து துடுப்புப் போடும் படகுகள் தான்.  ஒரு பக்கத்திலிருந்து கங்கையும், மறு பக்கத்திலிருந்து யமுனையும் கீழே கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதியும் சங்கமிக்கும் இடத்தினை தான் திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறார்கள். 

நம்மைச் சூழ்ந்து கொள்ளும் படகோட்டிகள் மனதிற்குத் தோன்றியபடி வாடகை சொல்கிறார்கள்.  ஒரு ஆளுக்கு இத்தனை என்று வரையறை ஒன்றும் வகுத்திருக்கவில்லை போல.  அரசாங்கமும் எந்தவித முயற்சியும் எடுத்திருப்பதாய்த் தெரியவில்லை.  எங்களுக்குச் சங்கமம் சென்று வரவேண்டுமே தவிர அங்கே எந்த பூஜையும் செய்ய வேண்டியதில்லாததால், தனிப் படகு வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். 
கரையிலிருந்து படகில் அழைத்துச் சென்று மூன்று புண்ணிய நதிகளும் சங்கமிக்கும் இடத்திற்குச் சென்று நிறுத்தி, அங்கே சங்கமிக்கும் நதிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாய் ஒரு தொன்னையில் விளக்கேற்றி, பூக்கள் போட்டு நதியில் விடலாம்.  பத்து ரூபாய்க்கு மூன்று தொன்னைகள்!  இரண்டு பேரும் ஆளுக்குப் பத்து ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டு புறப்பட்டோம்.  சங்கமத்தில் நாங்கள் கண்டதை அடுத்த பகுதியில் சொல்லட்டா?

மீண்டும் அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

40 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 2. நதியில் பூ பல்லக்கா அழகா இருக்குமே தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   நீக்கு
 3. தயிருடனும் ஜிலேபி சாப்பிடுவார்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தயிருடனும் சாப்பிடுவதுண்டு....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

   நீக்கு
 4. இருமுறை தில்லிக்கு வந்தும் நிறைய இடங்கள் பார்க்க முடியவில்லை.
  நீங்கள் எழுதுவதைப் படிக்க, படிக்க மீண்டும் வந்து ஒன்று விடாமல் பார்க்க வேண்டும் போல இருக்கிறது!

  திரிவேணி சங்கமம் கட்டாயம் வரை வேண்டும்.

  உங்களுடைய பதிவுகளை படித்து விட்டு என் கணவரிடமும், பிள்ளையிடமும், இங்கெல்லாம் போக வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிறேன்.


  பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடியும் போது வாருங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   நீக்கு
 5. //சூடான பாலுடன் ஜிலேபி. ஜிலேபியை பாலில் முக்கி முக்கி சாப்பிடுவார்கள். நானும் ருசித்துப் பார்த்தேன். ஒரு அசட்டு தித்திப்பு!// ஆஹா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கே.பி. ஜனா சார்.

   நீக்கு
 6. படகு வாடகை எவ்வளவு என்று பேசினீர்கள் என்று சொல்லவில்லையே?! நிர்ணயம் ஏதும் இல்லா நிலையில் எவ்வளவு ஆகிறது என்று தெரிந்து கொள்ளலாமே என்றுதான்... ஏதோ நாளைக்கே அங்கே போகப் போகிறவன் மாதிரி கேட்கிறேனே என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்கள் 500 ரூபாய் கொடுத்தோம்... :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. இந்த வருடம் பிப்ரவரியில் அலகாபாத் போன போது கும்பமேளா க்ரவுண்ட் முழுவதும் ஆயிரகணக்கில் டெண்ட்கள். தினம் எப்படி இவ்ளோ இனிப்புகள் வடக்கே சாப்பிடுகிறார்களோ தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தினம் தினம் இனிப்பு சாப்பிடுவது பழக்கமாகிவிட்டது!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா ஜி!

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 9. அடுத்த பகுதியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   நீக்கு
 11. பயணப் பதிவுகள் நன்று.சங்கமத்தை பார்க்க அரசாங்க ஏற்பாடு எதுவும் இல்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. சுற்றலாப் பயணிகளுக்கு வசதிகள் செய்யவேண்டியது அரசின் கடமை இல்லையா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடமை உணர்ந்து செயல்படும் அரசு எங்கேயும் இல்லை முரளி!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. சுவாரஸ்யம்

  பொதுவா வெங்கட் Photograpphy என இருக்கும் இம்முறை மிஸ்ஸிங்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்பயணத் தொடரின் எந்த புகைப்படத்திலும் அது இருக்காது! ஏனெனில் புகைப்படங்கள் எடுத்தது கேரள நண்பர்கள்.... :) நான் கேமரா கொண்டு செல்லவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.

   நீக்கு
 13. பயனுள்ள பயணக்கட்டுரை! பகிர்விற்கு நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   நீக்கு
 14. திரிவேணிசங்கமம் கண்டு கொண்டோம்.

  பதிலளிநீக்கு
 15. நானும் படகில் சென்றது போல் உள்ளது.
  பதிவு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா செல்வம்....

   நீக்கு
 16. அலஹாபாத் போயும் திரிவேணி சங்கமம் பார்க்காத ஆசாமி நான்! :-(
  அதனாலென்ன, உங்க புண்ணியத்தில் பார்த்தாச்சு! :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை...

   நீக்கு
 17. நீங்கள் எழுதியதைப் படித்த பிறகு ஜிலேபியை பாலில் போட்டு சாப்பிட்டுப் பார்க்க வேன்டுமென்று தோன்றுகிறது! பயண அனுபவத்தைப் பகிர்ந்துள்ள விதம் அருமை!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ மேடம்.....

   நீக்கு
 18. திரிவேணி சங்கமத்திற்கு நேரில் சென்று வந்த உணர்வு. நன்றி அய்யா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   நீக்கு
 19. அருமை. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   நீக்கு
 20. //அலஹாபாத்-ல் காலையிலே சாப்பிடுவது என்ன தெரியுமா. சூடான பாலுடன் ஜிலேபி. ஜிலேபியை பாலில் முக்கி முக்கி சாப்பிடுவார்கள். நானும் ருசித்துப் பார்த்தேன். ஒரு அசட்டு தித்திப்பு!//

  அலஹாபாத்திலும், காசியிலும் எங்கு பார்த்தாலும் ரோட்டோரத்தில் இந்த ஜாங்கிரிக்கடைகள் தான். தூங்கியெழுந்ததுமே ’பல் தேய்க்கும் பக்ஷணம்’ போல இதைப்பிழிவதும், வாங்கி சாப்பிடுடவ்துமே பலருக்கும் வேலை.

  நல்ல பகிர்வு ... வெங்கட்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   தூங்கி எழுந்ததும் பல் தேய்க்கும் பக்ஷணம்... :) ஆமாம்...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....