திரிவேணி சங்கமம் – காசி
பயணம் – பகுதி 7
அப்துல் கலாமுடன் தொடர்ந்த பயணம் நன்றாகவே ஆரம்பித்தது. முன் பகுதியில் சொன்னது போல வண்டி எண்பது-நூறு என்று பறக்க, வேகத்தினை சிறிதே குறைத்து
தன் பக்கக் கதவைத் திறந்து குட்கா உமிழ்வதும் தொடர்ந்தது. ஓட்டுனர் பக்கத்து இருக்கையில் நான்
அமர்ந்திருந்ததால் அவரிடம் குட்காவின் பாதகங்களைச் சொன்னேன். “என்ன செய்வது பழகிவிட்டது. இதன் காரணமாக
சாப்பிடுவது கூட குறைந்து விட்டது. என் மனைவியும் குழந்தைகளும் கூட விடச்
சொல்கிறார்கள். ஆனால்
முடியவில்லை!” என்றார்.
குழந்தைகள் பேச்சு வந்தவுடன், “உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?” என்று வினவ,
அவருக்கு இரட்டைக் குழந்தைகள் – இரண்டுமே பெண்கள் எனவும், சாஜியா, வாஜியா என பெயரிட்டு
அழைப்பதையும் சொல்லி, தனது அலைபேசியில் அவர்களது புகைப்படங்களைக் காட்டினார். தனது குழந்தையை ”கிச்சு கிச்சு” மூட்டி சிரிக்க
வைத்து அதை பதிவு செய்து, அதையே தனது அலைபேசியின் அழைப்பொலியாக வைத்திருக்கிறார். பலமுறை குழந்தையின் சிரிப்பொலி எங்களுக்குக் கேட்கக்
கிடைத்தது! உடனே எடுத்து
வண்டியை ஓட்டியபடியே பேசினார் அத்தனை முறையும்.
திரும்பும் வழியில் மீண்டும் அதே தேநீர் கடை. அங்கே ”குல்லட்” சாய் குடித்து சற்றே இளைப்பாறிய
பின் பயணம் தொடர்ந்தது. அல்காபாத் – காசி சாலையிலிருந்து சற்றே உள்ளே சென்றால் “சீதாமடி” என்ற
இடத்திற்குச் செல்ல முடியும். இந்த இடம் மிகவும் சிறப்பு வாய்ந்த இடமென்று சொன்னார் ஓட்டுனர். இவ்விடம் பற்றிய அவர் சொன்ன செய்தி கீழே:
[பட உதவி: கூகிள்]
இலங்கையிலிருந்து சீதையை மீட்டு வந்த ராமன் சீதையை கைவிட்ட இடம் இது என்று சொல்கிறார்கள். இங்கே இருக்கும் வால்மீகி ஆஸ்ரமத்தில் தான் லவ குசர்களை சீதை பெற்றார் என்றும் இங்கே தான் பூமி மாதாவின் மடியில் புகுந்ததாகவும் வரலாறு. துன்பங்களை மட்டுமே வாழ்வில் கண்ட சீதா தேவி பூமிக்குள் புகுந்த இடத்தில் தற்போது சீதாதேவிக்கென ஒரு கோவில் அமைந்திருக்கிறது. அலஹாபாத்-காசி வரும் பக்தர்கள் இங்கும் சென்று சீதாதேவியை வழிபட்டு கோவிலில் கிடைக்கும் ஒரு வித ஆனந்த உணர்வினை அனுபவித்து வருவார்கள்.
ஓட்டுனரிடம் கதை கேட்டபடியே அலஹாபாத் வந்து சேர்ந்தோம். இரவு ஒன்பதரைக்கு கேரளாவிலிருந்து வந்திருந்த மூன்று நண்பர்களில் இரண்டு
பேர் தில்லி செல்ல வேண்டும். அதனால் காலை உணவருந்திய அதே ”பாபே தா டாபா”…. நண்பர்களுக்கு அதே ஆலு பராட்டா. நானும் இன்னுமொரு நண்பரும் ”தந்தூரி சப்பாத்தி”யும்
”தம் ஆலு” சப்ஜியும் சாப்பிட்டு தங்குமிடம் திரும்பினோம். நாங்கள் நாளை அலஹாபாத் சுற்ற வேண்டும். நீங்களும் தயார் தானே எங்களுடன் ஊர் சுற்ற?
மீண்டும் அடுத்த பகுதியில் அலஹாபாத் பற்றிய நினைவுகளோடு உங்களைச்
சந்திக்கும் வரை….
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
துன்பங்களை மட்டுமே வாழ்வில் கண்ட சீதா தேவி பூமிக்குள் புகுந்த இடத்தில் தற்போது சீதாதேவிக்கென ஒரு கோவில் அமைந்திருக்கிறது.
பதிலளிநீக்குசிறப்பான படங்கள்.. அருமையான பயணம். பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குநாங்க காசி அலகாபாத் போனப்போ சீதா தேவி பற்றிய இந்த விவரம் தெரிந்திருக்கலியே
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா. இன்னுமொரு முறை போனால் பாருங்கள்.
நீக்குசீதை பூமியில் புகுந்த இடம் - இது எனக்கு புதிய செய்தி. தகவலுக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!
நீக்குஉங்கள் பயணக்கட்டுரைகள் அருமையாக இருக்குமே, நாங்களும் கூடவே பயணிப்பது போல..நிறைய பதிவுகளை விட்டுவிட்டேன் இந்த 5 மாதங்களில்,நிதானமாக படித்துவிட்டு வருகிறேன். ஆனால் ஆரம்பித்ததுமே சீதா தேவியின் கோவில் தரிசனம். நன்றி வெங்கட்,பகிர்வுக்கு.
பதிலளிநீக்குநீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை. மிக்க மகிழ்ச்சி ரமா ரவி.
நீக்குமுடிந்தபோது பழைய பதிவுகளையும் படிக்கிறதாகச் சொன்னதற்கும் நன்றி.
மிக சிறப்பு வாய்ந்த இடம் தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்குமார்.
நீக்குமிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஉங்களது பதிவுகளை பிரிண்ட் போட்டுக் கொண்டு கையோடு எடுத்துப் போக வேண்டும், காசி அதை சுற்றியுள்ள பகுதிகளைப் பார்க்க.குறிப்பாக சீதா தேவி பூமிக்குள் புகுந்த இடத்தைப் பார்க்க ஆசை.
இன்னும் அந்தப் பக்கம் வரவில்லை இன்னும்.
பாராட்டுக்கள்!
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா. வலைச்சர ஆசிரியர் பணி இருந்தபோதும் இங்கே வந்து படித்து, கருத்துரைத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி.
நீக்குஅன்னை மடியில் சீதா புகுந்த இடம் சீதா மடி.
பதிலளிநீக்குஏன் இத்தனை சோகம் சீதாவுக்கு. அந்தக் காலத்திலேயே பிரமாதமான திரைக் கதை வல்லுனராக இருந்திருக்கிறார் வால்மீகி.
படம் வெகு அழகு.
சீதாவுக்கு சோகம் தான்.... எத்தனை எத்தனை விதமான சோகங்கள் அவருக்கு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
ஒவ்வொரு முறை அலைபேசி அடித்த போதும் வண்டியை ஓட்டின படி பேசினாரா ஓட்டுனர்? அருகிலிருந்த நீங்கள் இதைத் தடுக்கவில்லையா வெங்கட்? பாதுகாப்பு முக்கியமில்லையா? சீதாமடி பற்றிய தகவலும். அழகாய் நீங்கள் சொல்லிச் செல்லும் பயண அனுபவமும் இனிமை.
பதிலளிநீக்குமுதல் முறையே அவரை இப்படி செய்யாதீர்கள் என்று சொன்னேன்.... கேட்டாத்தானே!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ்.
சீதா பூமித்தாயின் மடியில் அடைக்கலம் புகுந்த இடத்தைப் பற்றிய பகிர்வும் அனுபவங்களும் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
நீக்குசீதையை ராமர் கைவிட்ட இடம், லவ குச இரட்டையர்களைப் பெற்ற இடம்... டிரைவருக்கு இரட்டைக் குழந்தைகள். அவரோ கவலைப் படாமல் குட்கா போடுகிறார்! அந்த இடத்தோட ராசி போல!. தொடருங்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குநல்லாப்போகுது வெங்கட்ஜி, உங்கள் பதிவு மட்டுமல்ல, இங்கு திருச்சியில் நீடிக்கும் மின்வெட்டும் கூட.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குமின்வெட்டு.... :(((
நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்ற போது பார்த்தேன் மிகவும் அழகான இடம்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்குபுதிய செய்திகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குதங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்குசீதாமடி மைண்ட்ல வெச்சுக்கறேன். பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புதுகைத்தென்றல்.
நீக்குநான் தயார் அலகாபாத் சுற்ற!அது சீதா மடியா?சீதாமரி என்றுதான் எண்ணியிருந்தேன்
பதிலளிநீக்குத.ம.10
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.
நீக்குபுதிய செய்தி... அறிந்து கொண்டேன்... நன்றி சார்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குதகவல்கள் புதிது. தொடருங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குசீதாமடி கோவில் கண்டுகொண்டோம்.
பதிலளிநீக்குஇலங்கையில் நுவரெலியாவில் சீதாஎலியவில் இராவணனால் சிறைபிடித்து வந்தபோது சீதை இருந்த நந்தவனம் என்கிறார்கள் இங்கு சீதாவுக்கு கோயில் அமைந்துள்ளது.
http://ramyeam.blogspot.com/2009/09/blog-post_24.html
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் தகவலுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குதங்களது பதிவினையும் இதோ படிக்கிறேன்....
என்னங்க தாத்தனுக்கு தாத்தன் நடமாடிய பூமியே தெரியாத ஊரிலே இங்கே சீதையை இராமன் கையை விட்டான் நம்ம மனுஷன் எப்படி கண்டுபிடிச்சிருப்பான்
பதிலளிநீக்குஅது சரி இராமனோட வாரிசு லவ-குசா, அவர்களின் வாரிசு?.......
அது தெரியாது ஆனா இராமன் ஏகப் பத்தினி விரதன் தன் துணையை சந்தேகித்து கைவிட்ட இடம் மக்களுக்கு தெரியும்
அது ஆணாதிக்க............
தங்களது வருகைகும் கருத்திற்கும் மிக்க நன்றி அ. வேல்முருகன்...
பதிலளிநீக்கு