”நவராத்திரி முடிந்து
விஜயதசமியும் கொண்டாடி தீபாவளியும் வரப்போகுது, இப்ப நவராத்திரி
கொலு பற்றிய பதிவா?” என்று என்னை
முறைத்துப் படிக்கும் நண்பர்களுக்கு, கொஞ்சம் பொறுமை காக்க விண்ணப்பம் செய்கிறேன்.
நவராத்திரி
சமயத்தில், முதல் மூன்று
நாட்கள், நம் மனதின்
அழுக்கினைக் களைந்து நற்கதியைப் பெற துர்க்கை அம்மனை துதிக்கவும், அடுத்த மூன்று நாட்கள், நமக்குத் தேவையான அளவுக்குக் குறையில்லா செல்வம் பெறவும், அதற்கடுத்த மூன்று நாட்களில்
கல்வியின் அதிபதியாம் கலைமகளைப் போற்றி நல் மதியைப் பெறவும் வழி செய்துள்ளனர் நம்
முன்னோர்கள். ஒன்பதாம் நாளான
சரஸ்வதி பூஜை அன்றே நாம் ஆயுத பூஜையும் கொண்டாடுகிறோம்.
இந்த நவராத்திரி
சமயத்தில் பொம்மைகளை அலங்காரமாய் படிகளில் வைத்து "கொலு" வைப்பது நமது
தமிழகத்தின் பழக்கம். பரம்பரை பரம்பரையாக
கொலு வைத்திருக்கும் சிலர் வீட்டில் நூறு ஆண்டுகள் ஆன பழமையான பொம்மைகளைப் பார்க்கும்போது அப் பொம்மைகளின் கலையழகு நம்மை மயக்க வைக்கும். கொலு பொம்மைகளை அடுக்குவதற்குக் கூட
வழிமுறைகளை சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர் நம் முன்னோர்கள்.
சாதாரணமாக கொலு
வைக்கும்போது ஒன்பது படிகளில் கொலு வைப்பார்கள். அப்படி வைக்க முடியாதவர்கள் ஒற்றைப் படையில், 3, 5 அல்லது 7 படிகளில்
கொலு வைக்கலாம். ஒன்பது படிகள்
வைப்பதற்குக் காரணம் துர்க்கா தேவியை வழிபட கீர்த்தனம், ஸ்மரணம், பாதஸேவனம், அர்ச்சனம் போன்ற ஒன்பது முறைகள் இருக்கின்றன.
எந்தெந்த படிகளில்
என்னென்ன பொம்மைகள் வைக்கவேண்டும் என்பதும் காலகாலமாக தொடர்ந்து வந்து
கொண்டிருக்கிறது.
· கடைசி படியில்
விலங்குகள், பறவைகள், பூச்சிகள் போன்ற உயிரினங்கள் பொம்மைகள்.
· அதற்கடுத்த மேல்
படியில் சாதாரண மனிதர்களின் பொம்மைகள்.
· அதற்கும் மேல்
படியில் சாதுக்கள், மகான்கள்
போன்றவர்களின் பொம்மைகள்.
· அதற்கும் மேல்
படியில் ஆண்டவனின் அவதாரங்கள் – தசாவதாரம் – பொம்மைகள்.
· எல்லாவற்றிற்கும்
மேலான படியில் அம்பாள், சிவன், விஷ்ணு, லக்ஷ்மி
போன்றவர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
இன்னொரு தத்துவமும்
இந்த கொலு மூலம் விளக்கப்படுகிறது. மனிதர்கள் நல்ல எண்ணங்களோடு அடுத்தவர்களுக்கு நல்லது செய்து வாழ்ந்தால், சாதுக்கள், மகான்கள்
போன்றவர்களின் நிலைக்கு உயர்ந்து, படிப்படியாக மனிதப்
பிறப்பின் முக்கிய நோக்கமான பகவானின் திருவடிகளை அடைய முடியும். அப்படி இல்லாது, கெட்ட எண்ணமும், தீய செயல்களும்
செய்தால் தனது நிலையிலிருந்து தாழ்ந்து விலங்குகள் நிலைக்குச் சென்று விடுவார்கள்
என்ற உயர்ந்த தத்துவமும் இக்கொலு மூலம் சொல்லப்படுகிறது.
சாதாரணமாக கொலு
பொம்மைகள் மண்ணால் செய்யப்பட்டு வந்தது. சில காலமாக POP என்று அழைக்கப்படும் Plaster
of Paris அல்லது காகிதக் கூழ்
கொண்டு பொம்மைகள் தயாரிக்கிறார்கள். பல வித இராசயனப் பொருட்கள் மற்றும் வண்ணங்களை இதற்கு பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். நெய்வேலியை அடுத்த பன்ருட்டி இரண்டு விஷயங்களால் நிறைய பேருக்குத் தெரியும் – ஒன்று பலாப் பழம் மற்றொன்று முந்திரிப் பருப்பு. இதில்லாது
மூன்றாவதாக கொலு பொம்மைகளும்
இங்கே அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு தெரு முழுவதுமே கொலுவிற்கான மண்
பொம்மைகளை செய்து
பிழைக்கிறார்கள்.
தில்லியில் உள்ள
எனது நண்பர், ஒரு சிறப்பான
கொலுவினைக் காண என்னை அழைத்தார். நவராத்திரி சமயமான
முதல் ஒன்பது நாட்களிலும் செல்ல முடியவில்லை. விஜயதசமி அன்று காலையில் புறப்பட்டு தில்லியை அடுத்த குர்காவ்ன் பகுதியில்
இருக்கும் திரு ரமேஷ் சாரி என்பவரது இல்லத்திற்குச் சென்றோம். அங்கு அவரும் அவரது துணைவி சௌம்யா ரமேஷ் அவர்களும் அமைத்திருந்த கொலு அவ்வளவு
அற்புதமாக இருந்தது.
கொலுவில்
வைத்திருந்த அத்தனை பொம்மைகளுமே பித்தளையால் செய்யப்பட்டவை. முதல் படியில் புன்னை
மரத்தடியில் குழலூதும் கிருஷ்ணர், பக்கத்திலேயே ராதை
பொம்மை. பார்த்துக் கொண்டே இருக்கலாம். மரத்தில்
அமர்ந்திருக்கும் பறவை, மரத்திலுள்ள இலைகள்
என அத்தனை அழகு.
சாதாரணமாக
ராமர்-சீதை அமர்ந்திருக்க, அருகில் இலக்குவன்
நின்று கொண்டும், அனுமன் கீழே
அமர்ந்திருக்கும் படத்தினை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். இங்கே பார்த்தது – ராமர்-சீதை சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, ஒரு புறம் இலக்குவனும், மறுபுறம்
சத்ருக்னனும் நின்றிருக்க, ராமர் பாதத்தின்
அருகே ஒரு புறத்தில் அனுமனும், மற்றொரு புறத்தில்
பரதனும் அமர்ந்திருக்கிறார்கள்.
இதற்கான விளக்கமும்
திருமதி ரமேஷ் சொன்னார்கள் – பதினான்கு வருட
வனவாசம் முடிந்து ராமர் திரும்பி வர தாமதமானதால் பரதன் அக்னிக்குள் பிரவேசிக்க
ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்க, அங்கே சீதையும்
அக்னிக்குள் பிரவேசிக்க, பரதன் அக்னிக்குள்
புகாமல் அனுமன் விரைந்து வந்து தடுத்து நிறுத்துகிறார். ராமனும் சீதையும் அயோத்தி திரும்ப, அவரது பாதுகைகளை ஒரு பக்கத்தில் அமர்ந்து பரதன் அணிவிக்கிறார். அந்தக்
காட்சியைத் தான் இச்சிலை மூலம் வடித்திருக்கிறார்கள்.
தசாவதர சிலைகளும், லக்ஷ்மி, சரஸ்வதி, பிள்ளையார், பாவை விளக்குகள், என ஒவ்வொன்றும் கலைநயத்தோடு கண்ணைப் பறித்தன. மொத்தத்தில் ஒரு சிறப்பான கொலு பார்த்த உணர்வு கிட்டியது. கொலுவில் வைத்திருந்த பொம்மைகளின் அழகை நீங்களும் ரசிக்க, நான் எடுத்த புகைப்படங்களை ஆங்காங்கே இணைத்திருக்கிறேன்.
தமிழகத்திலிருந்து
தொலைவில் இருந்தாலும், பாரம்பரியத்தினை
விட்டுக் கொடுக்காது நவராத்திரி சமயத்தில் சிறப்பாக கொலு வைத்திருக்கும் திரு
ரமேஷ் மற்றும் திருமதி சௌம்யா ரமேஷ் அவர்களுக்கும் எல்லாம் வல்லவன் நல்லாசி
வழங்கட்டும்.
நவராத்திரி
முடிந்தாலும் பரவாயில்லையென இப்பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அனைவருக்கும் எல்லாம் வல்லவனின் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
மீண்டும் வேறொரு
பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை...
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
தமிழகத்திலிருந்து தொலைவில் இருந்தாலும், பாரம்பரியத்தினை விட்டுக் கொடுக்காது நவராத்திரி சமயத்தில் சிறப்பாக கொலு வைத்திருக்கும் திரு ரமேஷ் மற்றும் திருமதி சௌம்யா ரமேஷ் அவர்களுக்கும் எல்லாம் வல்லவன் நல்லாசி வழங்கட்டும்..
பதிலளிநீக்குவாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்கு//கொலுவில் வைத்திருந்த அத்தனை பொம்மைகளுமே பித்தளையால் செய்யப்பட்டவை. //
பதிலளிநீக்குஆஹா.... அழகு அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுது!!!!!
அந்த புன்னைமரக்கண்ணன் கொள்ளை அழகு. மற்றவர்களுமே ஜொலிக்கிறாங்க.
எதைச் சொல்ல எதை விட?
ரமேஷ் தம்பதியருக்கு இனிய பாராட்டுகளும் பகிர்வுக்கு உமக்கு நன்றிகளும்.
புன்னை மரக் கண்ணன் கொள்ளை அழகு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
Arumai unga friend veettu kolu
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன் குமார்.
நீக்குஅழகான கொலு. விளக்கங்களும் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஅத்தனையும் பித்தளையா என்று வாய் திறக்கத் தோன்றுகிறது. பளபளவென்று பாலீஷ் ஏற்றி அருமையாக வைத்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஅதுவும் அந்த பட்டாபிஷேக பரதனின் வினயம் அருமை.
மிகப் பிரமாதமான கொலுவுக்கு அழைத்துச் சென்ற உங்களுக்கும் கொலுவைத்த சாரி தம்பதிகளுக்கும் மனம் நிறைந்த நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்குகொலு ரொம்ப அழகு. பித்தளை பொம்மைகள் அழகோ அழகு ரமேஷ் தம்பதியருக்கு வாழ்த்துகள் காணக்கொடுத்த உங்களுக்கு நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.
நீக்குகொலு ரொம்ப அழகாருக்கு. அத்தனையும் பித்தளையா?. இதைத் துலக்கி பளபளன்னு ஆக்கணும்ன்னா எட்டுக்கை வேணுமே!! அதுக்கே சௌம்யாவுக்கு ஷொட்டு வைக்கணும் :-)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
நீக்குகொலுப்படிகளில் எப்படி பொம்மைகளை வைக்க வேண்டும் என்ற விளக்கம் அருமை. படங்களும் மனசை மயக்கிச்சு. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான் வெங்கட்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.
நீக்கு//கொலுவில் வைத்திருந்த அத்தனை பொம்மைகளுமே பித்தளையால் செய்யப்பட்டவை. //
பதிலளிநீக்குபார்வைக்கு அற்புதமாக காட்சியளித்திருக்குமே.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.
நீக்குநவராத்திரி முடிந்து போட்ட பதிவில் அற்புதமான ஒரு கொலுவை நீங்கள் ரசித்ததோடு நிற்காமல் புகைப்படம் எடுத்து அதை பதிவில் போட்டு,எங்களையும் ரசிக்க வைத்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குராமன், சீதை, இலக்குமணன், சத்ருக்கனன், அனுமன், பரதன் பொம்மைகள் கொள்ளை அழகு!
திரு ரமேஷ், மற்றும் திருமதி சௌம்யா ரமேஷ் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.
நீக்குஅழகான கொலு..அருமையான விளக்கம்.எல்லா பித்தளை பொம்மைகளுமே மிக அழகு அதுவும், அந்த தசாவதார பொம்மைகளைவிட்டு பார்வையை அகற்ற முடியவில்லை..நல்லதொரு பதிவுக்கு நன்றி வெங்கட்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி.
நீக்குவெங்கலத்தில் வெங்கட் பார்த்த கலகல கொலு. சூப்பர்ப். :-)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மன்னை மைனரே.
நீக்குபதிவில் அழகும் அர்த்தமும் கொலு வீற்றிருக்கின்றன...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கே. பி. ஜனா சார்.
நீக்குஅனைத்தும் பித்தளை என்பது புதுமையாகவும் வியப்பாகவும் இருக்கிறது!
பதிலளிநீக்குபகிர்விற்கு நன்றிகள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்]
நீக்குவித்தியாசமான கொலுஅழகான பொம்மைகள்;அழகான பகிர்வு.த.ம.9
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.
நீக்குமிக அருமையான விளக்கங்களுடன் அருமையான பதிவு. நிறைய விளக்கங்கள், அழகான படங்கள். நவராத்திரிப் பதிவு இது தாமதம் என்கிறீர்கள். நான் இனி மேல்தான் போட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன்! :))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்...
நீக்குநீங்க இனிமே தான் போடப் போறீங்களா! நல்லது.. :)
Very nice, informations.
பதிலளிநீக்குthanks for sharing
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன்.
நீக்குஅழகான கொலு விளக்கத்துடன்...
பதிலளிநீக்குநன்றி...
tm12
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குரசித்தேன். உங்களுடைய புது பதிவுகள் டேஷ்போர்டில் தெரிகிறது. ஆனால் கிளிக் செய்தால் பதிவு தெரிவதில்லை. உதாரணம் - திருவாமாத்தூர் – கொம்பு பெற்ற ஆவினங்கள்:
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
நீக்குதிருவாமாத்தூர் பற்றிய பதிவு - அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிட்ட பதிவு. சில சமயங்களில் பிளாக்கர் தன்னிச்சைப்படி பழைய பதிவுகளை மீண்டும் என்னைத் தொடர்பவர்களின் டாஷ்போர்டில் காண்பிக்கிறது. :)
புதிய பதிவுகள் க்ளிக் செய்தால் திறக்கும்! பழைய பதிவுகள் எனில் நீங்கள் அதை க்ளிக் செய்தால் உங்கள் டாஷ்போர்ட் மீண்டும் காண்பிக்கும்!
சில விஷயங்கள் ஏன் நடக்கிறதென்று புரிவதில்லை - அதில் இந்த பிளாக்கர் விளையாட்டும் ஒன்று!
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/2.html) சென்று பார்க்கவும்...
நன்றி...
தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குசூப்பரான காஸ்ட்லி கொலு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.
நீக்குஅனைத்தும் ஜொலித்துக்கொண்டிருக்கின்றன.அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு
பதிலளிநீக்குதிரு ரமேஷ், மற்றும் திருமதி சௌம்யா ரமேஷ் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிவு கொடுத்த தங்களுக்கு பாராட்டுக்கள், வெங்கட்ஜி.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி!
நீக்குபொம்மைகள் அழகு. பித்தளையில் அனைத்து கொலு பொம்மைகள் முதல்முறையாகப் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குசில படங்கள், சீரியல் லைட் வெளிச்சத்தில் அத்தனைத் தெளிவாக இல்லாததுபோல இருக்கு. (எனக்குத்தான் அப்படித் தோணுதோ என்னவோ)
//அத்தனையும் பித்தளையா?. இதைத் துலக்கி பளபளன்னு ஆக்கணும்ன்னா எட்டுக்கை வேணுமே!!//
@அமைதிக்கா, இப்பல்லாம் பித்தளை, வெள்ளி போன்றவை கறுக்காமலிருக்க, வாங்கும்போதே ஏதோ கோட்டிங் செய்து கொடுக்கிறாங்களே. கியாரண்டியும் உண்டு. துளசி டீச்சர் பதிவிலும் இதுபற்றி பார்த்த ஞாபகம். மேலேயுள்ள கொலு பொம்மைகள் கையால் துலக்கப்பட்டதாகவும் இருக்கலாம்.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.
பதிலளிநீக்கு